Jump to content

மிஸ் பண்ணக்கூடாத திக் திகில் பயணம்! - யூ டர்ன் விமர்சனம் #Uturn


Recommended Posts

மிஸ் பண்ணக்கூடாத திக் திகில் பயணம்! - யூ டர்ன் விமர்சனம் #Uturn

 
மிஸ் பண்ணக்கூடாத திக் திகில் பயணம்! - யூ டர்ன் விமர்சனம் #Uturn
 

கண்ணாடியும் ஃப்ரெஞ்சு தாடியுமாக என்ட்ரியான அந்த இளைஞரை 'யாரு சாமி நீங்க? எங்க இருந்து வந்தீங்க?' என ஆச்சரியமாக பார்த்தது கன்னட திரைப்பட உலகம். இன்று அதே இளைஞர் தமிழில் காலெடுத்து வைத்திருக்கிறார். 'லூசியா' என்ற மேஜிக்கல் படம் கொடுத்த பவண்குமாரின் பை-லிங்குவல் படமான 'யூ'டர்ன்' நம்மையும் அப்படி கேட்க வைக்கிறதா?

சமந்தா - யூ டர்ன்

இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு ஆங்கில இதழில் இன்டெர்னாக சேரும் சமந்தாவுக்கு வீட்டிலிருந்து கல்யாண பிரஷர், அலுவலகத்திலிருந்து வேலை பிரஷர். தன்னை நிரூபித்தாகவேண்டிய கட்டாயத்தில் ஒரு வித்தியாச அசைன்மென்ட்டை கையிலெடுக்கிறார். வேளச்சேரி பாலம் பற்றிய அசைன்மென்ட் அது. 'ஓ... பாலம் கட்டினதுல ஊழலா?' - இல்லை. 'பாலத்துக்குக் கீழே ஏதாவது சட்டவிரோதமா நடக்கிறத பத்தின கதையா?' - இல்லை. இது பவண்குமார் படமாயிற்றே. யூகிக்கவே முடியாத பல யூ-டர்ன்கள் அடித்து போகும் வழியெல்லாம் திக்திக் தருணங்களை பரிசளித்து இறுதியாக ஓரிடத்தில் முடிகிறது அந்தச் சாலை. அதுவென்ன என்பதை நீங்கள் திரையில் பார்ப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

 

 

ரக்‌ஷனாவாக சமந்தா. பொதுவாக த்ரில்லர்களில் ஹீரோக்கள் துப்பறிய, அவர்களின் வேலைக்கு நடுவே கால் செய்து, 'என்ன பண்ற? சாப்பிட்டியா?' என தொணதொணக்கும் வேஷம்தான் ஹீரோயின்களுக்கு! இதில் அப்படியே ரிவர்ஸ்! படத்தில் சமந்தா இல்லாத காட்சிகளை யோசித்துப் பார்த்து சொல்வது கூட கஷ்டம்தான். ஆனால், ஒரு த்ரில்லருக்கான அத்தனை வெயிட்டையும் தனது ட்ரேட்மார்க் சிரிப்போடு தாங்கியிருக்கிறார். ஒரு பக்கம் மட்டும் நெளிந்து முன்னால் விழும் தலைமுடி கொள்ளை அழகு. சிரிப்பு, பயம், சோகம் என காட்சிக்குக் காட்சி உணர்ச்சிகளை மாற்றவேண்டிய ரோல். சூப்பராக செய்துகாட்டுகிறார் சாம்!

 

 

'என்ன பண்ற, சாப்பிட்டியா?' என்ற ரோல் இதில் ராகுல் ரவீந்திரனுக்கு! பார்க்க அமெரிக்க மாப்பிள்ளை போல இருந்தாலும் வரும் காட்சிகளில் தன் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். சமந்தா - ராகுலுக்கு இடையிலான சைலன்ட் மோட் அன்பு ரசிக்கவைக்கிறது. படம் முழுக்க சமந்தாவோடு பயணிப்பது போலீஸ்காரரான ஆதிதான். துடிப்பான ஆறடி போலீஸ்காரரை கற்பனை செய்துபார்த்தால் ஆதிதான் ஞாபகத்துக்கு வருவார். அவ்வளவு கச்சிதமான கேஸ்ட்டிங். யூ-டர்ன் போட்டு போட்டு தொடங்கிய இடத்திற்கே வந்தாலும் சளைக்காமல் திரும்ப எழுந்து ஓடுக்கொண்டே இருக்கிறார். 

யூ டர்ன்

பூமிகா, நரேன் போன்றவர்களின் நடிப்பெல்லாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. 'அடுத்தென்ன இதானா?' என்ற ரேஞ்சுக்கு ஈஸியாக நடித்துவிட்டுச் செல்கிறார்கள். நடிப்பில் குறையின்றி எல்லாரும் சிறப்பாக செய்திருந்தாலும் ஆங்காங்கே நான் சிங்க்கில் இருக்கும் டப்பிங் கொஞ்சம் தார் ரோட்டிலிருந்து விலகி ப்ளாஸ்டிக் ரோடில் பயணித்து திரும்ப யூ-டர்ன் அடிப்பது போல இருக்கிறது. 

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் சட்சட்டென மாறும் காட்சியமைப்புகள்தான். பின்னணி இசையில் மட்டுமல்ல, எடிட்டிங்கிலும் திகில் கிளப்பமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சுரேஷ் ஆறுமுகம். சாலை பற்றிய கதை என்பதால் ரெட் லைட் படம் முழுக்க டாலடிக்கிறது. அந்த மூட் செட்டாவதற்கு நிறைய மெனக்கெட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிகித் பொம்மிரெட்டி. முக்கியமாக லாக்கப்பில் நடக்கும் அந்த சீக்வென்ஸ் வேற லெவல்! ஒளிப்பதிவு, எடிட்டிங்கோடு ஒப்பிட்டால் இசையமைப்பாளர் கொஞ்சம் அடக்கி வாசித்ததுபோல இருக்கிறது.

 

 

'ஏதோ நடக்கப்போகுது' என நம் முதுகில் ஜில்லென பயத்தை படரச் செய்வதில் வெற்றி கண்டிருக்கிறது திரைக்கதை. தேவை இல்லாத காட்சிகள் இல்லை. பாடல்கள் இல்லை. அதனால் நான் ஸ்டாப் பஸ் போல விர்ரென வழுக்கிச் சென்று முடிவை அடைகிறது. ஒன்றிரண்டு இடங்களில் அடுத்தக் காட்சிகளை கணித்துவிடலாம்தான். ஆனால், அடுத்தடுத்த திருப்பங்கள் அதை மறக்கச் செய்கின்றன. 

ஆதி - யூ டர்ன்

லூசியாவின் வெற்றிக்குக் முக்கியக் காரணம் அதன் Rawness தான். ஆனால் இதில் அது மிஸ்ஸாகிறது. அதுவும் பை - லிங்குவல் என்பதற்காக திணிக்கப்பட்ட வசனங்கள் நாடகத்தன்மையை கொடுக்கின்றன. கன்னட யூ-டர்னின் ரீமேக்தான். அதற்காக கேரக்டர் பெயர்கள், வசனங்கள் கூட மாற்றாமல் அப்படியேவா தருவது? 

குறைகளைத் தாண்டி 'யூ-டர்ன்' வின்னராவதற்கு ஒரு பெரிய காரணமுண்டு. நாம் அன்றாடம் கடந்து செல்லும் ஒரு சிறு விஷயத்திற்குப் பின்னால் இவ்வளவு பெரிய கதையை பயம் வரும்வகையில் சொல்லலாம் என்ற மேக்கிங்தான் அது!

https://cinema.vikatan.com/movie-review/136826-u-turn-movie-review.html

Link to post
Share on other sites

திரை விமர்சனம்: யூ டேர்ன்

 

 
u%20turn

சென்னையின் முக்கிய பகுதி யான வேளச்சேரியில் இருக் கிறது அந்த மேம்பாலம். அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் அதை கடந்துசெல்கின்றனர். அவர் களில் சிலர், சாலை விதிகளை மதிக் காமல் ‘யூ-டேர்ன்’ அடிக்கிறார்கள். இவ்வாறு விதி மீறுபவர்களை சந்தித்து சிறப்புக் கட்டுரை எழுத விரும்புகிறார் செய்தியாளர் சமந்தா. அப்படி விதிமீறிய ஒருவரை பேட்டி எடுக்கச் செல்லும்போது, எதிர் பாராதவிதமாக அவர் இறந்து கிடக் கிறார். போலீஸின் சந்தேகக் கண், சமந்தா மீது விழுகிறது. அவரை அழைத்துவந்து விசாரிக்கத் தொடங்குகின்றனர். ஆனால், இறந் தவர் தற்கொலை செய்துகொண்ட தாக உடற்கூறு ஆய்வு தெரிவிக் கிறது. ஆனால், உண்மை அது அல்ல. அந்த மேம்பாலத்தில் அத்து மீறியவர்கள் அடுத்தடுத்து பலியா கும் அதிர்ச்சிகரமான தொடர்ச்சி தெரியவருகிறது. அதன் மர்மப் பின்னணியை நோக்கி விறுவிறுப் பாகப் பயணிக்கிறது திரைக்கதை.

‘லூசியா’, ‘யூ-டேர்ன்’ ஆகிய கன்னடப் படங்களை இயக்கி வெற்றி கண்டவர் பவன்குமார். கதையிலோ, காட்சி அமைப்பிலோ பெரிய மாற்றங்கள் எதையும் செய் யாமல் 'யூ-டேர்ன்' படத்தை கச்சித மாக தமிழில் மறுஆக்கம் செய்திருக் கும் அவரை வரவேற்கலாம்.

 

அக்காவின் சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப்பையும், அவர் பரிந்துரைக்கும் காதணிகளையும் அணிந்துகொண்டு ரொமான்ஸ் மன துடன் அலுவலகம் வருகிறார் சமந்தா. அதுமுதல், நடக்கும் ஒவ் வொரு நிகழ்வும் தங்களுக்கே நடப்பதுபோல பார்வையாளர் களை உணரவைத்துவிடுகிறது இயக்குநரின் பிடிமானம் விலகாத கதை சொல்லல். அதேபோல, கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர் களைத் தேர்வு செய்த விதத் திலும் ‘அட!’ போட வைத்து விடுகிறார்.

மேம்பால வழக்கு ஃபைலை மூடிவிட்டு மற்ற வழக்குகளைப் பார்க்கும்படி மூத்த அதிகாரி கண்டிப்புடன் கூறினாலும், தன் தனிப்பட்ட ஆர்வத்தில் அந்த வழக்கை கையில் எடுத்து துறுவ ஆரம்பிக்கிறார் ஆதி. அவரும், சமந்தாவும் மொத்தப் படத்தையும் தூண்போல தாங்குகின்றனர். மிகை யற்ற எல்லைக்குள்ளும், கதாபாத் திரத்தை உணர்ந்தும் கடைசிவரை வெளிப்படுகிறது அவர்கள் இரு வரது நடிப்பு. குறிப்பாக, விசா ரணை அறைக்குள் சமந்தா காட்டும் பய உணர்ச்சிகள், பின்னர் தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் உடல் நடுங்கும் நிலையில் சுருண்டுகிடப்பது என காட்சிக்குக் காட்சி, பய உணர்ச்சியை நமக்குக் கூட்டிவிடுகிறார்.

சமந்தா, ஆதிக்கு அடுத்த இடத் தில் ‘ஆடுகளம்’ நரேன், ‘கத்துக் குட்டி’ நரேன், பூமிகா ஆகியோரும் பளிச்சென்று கவனம் ஈர்க்கின்றனர்.

சமந்தா - ராகுல் இடையிலான மெல்லிய காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் பிரதான கதைக்கு பெரிதாக உதவவில்லை.

பின்னணி இசையில் அதிகமும் மிரட்டாத பூர்ணசந்திர தேஜஸ்வி, ஒரு திரில்லர் மற்றும் திகில் கதைக்கு ஏற்ற மனநிலையை உருவாக்கும் ஒளிப்பதிவை அளித்த நிகேத் பொம்மி, சிக்கல்கள் இல்லாத கதையை கச்சிதமாகத் தொகுத் திருக்கும் சுரேஷ் ஆறுமுகம் ஆகிய மூவரது தொழிநுட்பப் பங்களிப்பும் படத்துக்கு முதுகெலும்பு.

ஆவி, அமானுஷ்யம் ஆகிய வற்றை சித்தரித்த விதத்திலும், முழு அழுத்தம் தரும் விதமாக ஓர் அமானுஷ்யக் கதையில் சமூக விழிப்புணர்வைக் கடத்திய விதத்திலும் ‘யூ-டேர்ன்’ தமிழ் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைக்கும்.

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24960592.ece?utm_source=HP&utm_medium=hp-cinema

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நான் உந்தப் படத்தை நேற்று பார்த்தேன்...வேறு எந்தப் படத்திலும் சமந்தா இவ்வளவு அசிங்கம் இல்லை?...ஆனால், படம் சுப்பரோ சுப்பர்

Link to post
Share on other sites
  • 4 weeks later...

தரமான பிரதி கிடைத்தமையால் நேற்று இரவு இத் திரைப்படத்தை பார்த்தேன்.

ஊகிக்க முடியாத திரைக்கதையும் திருப்பங்களாலும் படம் விறுவிறுப்பாக இருந்தது. எல்லா இடமும் U ஆக முடிவது சுவாரசியமாக இருந்தது. ஆனாலும் இறுதியில் பேய்ப்படமாக முடித்ததில் கொஞ்சம் ஏமாற்றம் வந்தது.

ஒன்றும் செய்ய இல்லை என்றால் பொழுது போக்குவதற்காக ஒரு முறை பார்க்கலாம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, நிழலி said:

தரமான பிரதி கிடைத்தமையால் நேற்று இரவு இத் திரைப்படத்தை பார்த்தேன்.

ஊகிக்க முடியாத திரைக்கதையும் திருப்பங்களாலும் படம் விறுவிறுப்பாக இருந்தது. எல்லா இடமும் U ஆக முடிவது சுவாரசியமாக இருந்தது. ஆனாலும் இறுதியில் பேய்ப்படமாக முடித்ததில் கொஞ்சம் ஏமாற்றம் வந்தது.

ஒன்றும் செய்ய இல்லை என்றால் பொழுது போக்குவதற்காக ஒரு முறை பார்க்கலாம்.

உண்மைதான் நிழலி ஊகிக்கவே முடியாதபடி கதையின் நகர்வுகள் இருந்தன. கடைசியில் பேய்க்கதையாக்கிவிட்டார்கள். இந்தப்படத்தில் பேயைத் திணிக்காமல் வேறுமாதிரி முடிவைக் கொடுத்திருக்கலாம் அல்லது தொடரக்கூடிய மாதிரி ஒரு சாப்டரை குளோஸ் பண்ணி இன்னொன்றை ஆரம்பிப்பதுபோல் தொடர்ந்திருக்கலாம். நல்ல விறுவிறுப்பான படம் சமந்தாவின் நடிப்பு சூப்பர்

Link to post
Share on other sites
On 9/16/2018 at 5:11 PM, ரதி said:

நான் உந்தப் படத்தை நேற்று பார்த்தேன்...வேறு எந்தப் படத்திலும் சமந்தா இவ்வளவு அசிங்கம் இல்லை?...ஆனால், படம் சுப்பரோ சுப்பர்

நானும் பார்த்தேன்.. :innocent:

நாங்கள் தாத்தாவானது மாதிரி,  சமந்தாவும் பாட்டியாகிவிட்டார்..! :)

காலத்தின் கோலம்..!! 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கன்னடாவில் வந்த போது (streaming platform ) ஒன்றில் பார்த்திருந்தேன், அப்போதே பரவலான வரவேற்பைப் பெற்றிருந்த படம், சமந்தாவை விட ஷரதா நன்றாக நடித்திருந்தார் ,( எனக்கு சமந்தாவை பிடிக்கும் நல்லாவே அது வேறு:) தமிழில் பூமிகா சகிக்கவே முடியல்ல,

(  தமிழில் சமந்தாவின் கதலனாக நடித்தவர் சின்மையின் கணவர் :) என நினைக்கிறேன்) 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.