Jump to content

மிஸ் பண்ணக்கூடாத திக் திகில் பயணம்! - யூ டர்ன் விமர்சனம் #Uturn


Recommended Posts

மிஸ் பண்ணக்கூடாத திக் திகில் பயணம்! - யூ டர்ன் விமர்சனம் #Uturn

 
மிஸ் பண்ணக்கூடாத திக் திகில் பயணம்! - யூ டர்ன் விமர்சனம் #Uturn
 

கண்ணாடியும் ஃப்ரெஞ்சு தாடியுமாக என்ட்ரியான அந்த இளைஞரை 'யாரு சாமி நீங்க? எங்க இருந்து வந்தீங்க?' என ஆச்சரியமாக பார்த்தது கன்னட திரைப்பட உலகம். இன்று அதே இளைஞர் தமிழில் காலெடுத்து வைத்திருக்கிறார். 'லூசியா' என்ற மேஜிக்கல் படம் கொடுத்த பவண்குமாரின் பை-லிங்குவல் படமான 'யூ'டர்ன்' நம்மையும் அப்படி கேட்க வைக்கிறதா?

சமந்தா - யூ டர்ன்

இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு ஆங்கில இதழில் இன்டெர்னாக சேரும் சமந்தாவுக்கு வீட்டிலிருந்து கல்யாண பிரஷர், அலுவலகத்திலிருந்து வேலை பிரஷர். தன்னை நிரூபித்தாகவேண்டிய கட்டாயத்தில் ஒரு வித்தியாச அசைன்மென்ட்டை கையிலெடுக்கிறார். வேளச்சேரி பாலம் பற்றிய அசைன்மென்ட் அது. 'ஓ... பாலம் கட்டினதுல ஊழலா?' - இல்லை. 'பாலத்துக்குக் கீழே ஏதாவது சட்டவிரோதமா நடக்கிறத பத்தின கதையா?' - இல்லை. இது பவண்குமார் படமாயிற்றே. யூகிக்கவே முடியாத பல யூ-டர்ன்கள் அடித்து போகும் வழியெல்லாம் திக்திக் தருணங்களை பரிசளித்து இறுதியாக ஓரிடத்தில் முடிகிறது அந்தச் சாலை. அதுவென்ன என்பதை நீங்கள் திரையில் பார்ப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

 

 

ரக்‌ஷனாவாக சமந்தா. பொதுவாக த்ரில்லர்களில் ஹீரோக்கள் துப்பறிய, அவர்களின் வேலைக்கு நடுவே கால் செய்து, 'என்ன பண்ற? சாப்பிட்டியா?' என தொணதொணக்கும் வேஷம்தான் ஹீரோயின்களுக்கு! இதில் அப்படியே ரிவர்ஸ்! படத்தில் சமந்தா இல்லாத காட்சிகளை யோசித்துப் பார்த்து சொல்வது கூட கஷ்டம்தான். ஆனால், ஒரு த்ரில்லருக்கான அத்தனை வெயிட்டையும் தனது ட்ரேட்மார்க் சிரிப்போடு தாங்கியிருக்கிறார். ஒரு பக்கம் மட்டும் நெளிந்து முன்னால் விழும் தலைமுடி கொள்ளை அழகு. சிரிப்பு, பயம், சோகம் என காட்சிக்குக் காட்சி உணர்ச்சிகளை மாற்றவேண்டிய ரோல். சூப்பராக செய்துகாட்டுகிறார் சாம்!

 

 

'என்ன பண்ற, சாப்பிட்டியா?' என்ற ரோல் இதில் ராகுல் ரவீந்திரனுக்கு! பார்க்க அமெரிக்க மாப்பிள்ளை போல இருந்தாலும் வரும் காட்சிகளில் தன் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். சமந்தா - ராகுலுக்கு இடையிலான சைலன்ட் மோட் அன்பு ரசிக்கவைக்கிறது. படம் முழுக்க சமந்தாவோடு பயணிப்பது போலீஸ்காரரான ஆதிதான். துடிப்பான ஆறடி போலீஸ்காரரை கற்பனை செய்துபார்த்தால் ஆதிதான் ஞாபகத்துக்கு வருவார். அவ்வளவு கச்சிதமான கேஸ்ட்டிங். யூ-டர்ன் போட்டு போட்டு தொடங்கிய இடத்திற்கே வந்தாலும் சளைக்காமல் திரும்ப எழுந்து ஓடுக்கொண்டே இருக்கிறார். 

யூ டர்ன்

பூமிகா, நரேன் போன்றவர்களின் நடிப்பெல்லாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. 'அடுத்தென்ன இதானா?' என்ற ரேஞ்சுக்கு ஈஸியாக நடித்துவிட்டுச் செல்கிறார்கள். நடிப்பில் குறையின்றி எல்லாரும் சிறப்பாக செய்திருந்தாலும் ஆங்காங்கே நான் சிங்க்கில் இருக்கும் டப்பிங் கொஞ்சம் தார் ரோட்டிலிருந்து விலகி ப்ளாஸ்டிக் ரோடில் பயணித்து திரும்ப யூ-டர்ன் அடிப்பது போல இருக்கிறது. 

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் சட்சட்டென மாறும் காட்சியமைப்புகள்தான். பின்னணி இசையில் மட்டுமல்ல, எடிட்டிங்கிலும் திகில் கிளப்பமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சுரேஷ் ஆறுமுகம். சாலை பற்றிய கதை என்பதால் ரெட் லைட் படம் முழுக்க டாலடிக்கிறது. அந்த மூட் செட்டாவதற்கு நிறைய மெனக்கெட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிகித் பொம்மிரெட்டி. முக்கியமாக லாக்கப்பில் நடக்கும் அந்த சீக்வென்ஸ் வேற லெவல்! ஒளிப்பதிவு, எடிட்டிங்கோடு ஒப்பிட்டால் இசையமைப்பாளர் கொஞ்சம் அடக்கி வாசித்ததுபோல இருக்கிறது.

 

 

'ஏதோ நடக்கப்போகுது' என நம் முதுகில் ஜில்லென பயத்தை படரச் செய்வதில் வெற்றி கண்டிருக்கிறது திரைக்கதை. தேவை இல்லாத காட்சிகள் இல்லை. பாடல்கள் இல்லை. அதனால் நான் ஸ்டாப் பஸ் போல விர்ரென வழுக்கிச் சென்று முடிவை அடைகிறது. ஒன்றிரண்டு இடங்களில் அடுத்தக் காட்சிகளை கணித்துவிடலாம்தான். ஆனால், அடுத்தடுத்த திருப்பங்கள் அதை மறக்கச் செய்கின்றன. 

ஆதி - யூ டர்ன்

லூசியாவின் வெற்றிக்குக் முக்கியக் காரணம் அதன் Rawness தான். ஆனால் இதில் அது மிஸ்ஸாகிறது. அதுவும் பை - லிங்குவல் என்பதற்காக திணிக்கப்பட்ட வசனங்கள் நாடகத்தன்மையை கொடுக்கின்றன. கன்னட யூ-டர்னின் ரீமேக்தான். அதற்காக கேரக்டர் பெயர்கள், வசனங்கள் கூட மாற்றாமல் அப்படியேவா தருவது? 

குறைகளைத் தாண்டி 'யூ-டர்ன்' வின்னராவதற்கு ஒரு பெரிய காரணமுண்டு. நாம் அன்றாடம் கடந்து செல்லும் ஒரு சிறு விஷயத்திற்குப் பின்னால் இவ்வளவு பெரிய கதையை பயம் வரும்வகையில் சொல்லலாம் என்ற மேக்கிங்தான் அது!

https://cinema.vikatan.com/movie-review/136826-u-turn-movie-review.html

Link to comment
Share on other sites

திரை விமர்சனம்: யூ டேர்ன்

 

 
u%20turn

சென்னையின் முக்கிய பகுதி யான வேளச்சேரியில் இருக் கிறது அந்த மேம்பாலம். அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் அதை கடந்துசெல்கின்றனர். அவர் களில் சிலர், சாலை விதிகளை மதிக் காமல் ‘யூ-டேர்ன்’ அடிக்கிறார்கள். இவ்வாறு விதி மீறுபவர்களை சந்தித்து சிறப்புக் கட்டுரை எழுத விரும்புகிறார் செய்தியாளர் சமந்தா. அப்படி விதிமீறிய ஒருவரை பேட்டி எடுக்கச் செல்லும்போது, எதிர் பாராதவிதமாக அவர் இறந்து கிடக் கிறார். போலீஸின் சந்தேகக் கண், சமந்தா மீது விழுகிறது. அவரை அழைத்துவந்து விசாரிக்கத் தொடங்குகின்றனர். ஆனால், இறந் தவர் தற்கொலை செய்துகொண்ட தாக உடற்கூறு ஆய்வு தெரிவிக் கிறது. ஆனால், உண்மை அது அல்ல. அந்த மேம்பாலத்தில் அத்து மீறியவர்கள் அடுத்தடுத்து பலியா கும் அதிர்ச்சிகரமான தொடர்ச்சி தெரியவருகிறது. அதன் மர்மப் பின்னணியை நோக்கி விறுவிறுப் பாகப் பயணிக்கிறது திரைக்கதை.

‘லூசியா’, ‘யூ-டேர்ன்’ ஆகிய கன்னடப் படங்களை இயக்கி வெற்றி கண்டவர் பவன்குமார். கதையிலோ, காட்சி அமைப்பிலோ பெரிய மாற்றங்கள் எதையும் செய் யாமல் 'யூ-டேர்ன்' படத்தை கச்சித மாக தமிழில் மறுஆக்கம் செய்திருக் கும் அவரை வரவேற்கலாம்.

 

அக்காவின் சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப்பையும், அவர் பரிந்துரைக்கும் காதணிகளையும் அணிந்துகொண்டு ரொமான்ஸ் மன துடன் அலுவலகம் வருகிறார் சமந்தா. அதுமுதல், நடக்கும் ஒவ் வொரு நிகழ்வும் தங்களுக்கே நடப்பதுபோல பார்வையாளர் களை உணரவைத்துவிடுகிறது இயக்குநரின் பிடிமானம் விலகாத கதை சொல்லல். அதேபோல, கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர் களைத் தேர்வு செய்த விதத் திலும் ‘அட!’ போட வைத்து விடுகிறார்.

மேம்பால வழக்கு ஃபைலை மூடிவிட்டு மற்ற வழக்குகளைப் பார்க்கும்படி மூத்த அதிகாரி கண்டிப்புடன் கூறினாலும், தன் தனிப்பட்ட ஆர்வத்தில் அந்த வழக்கை கையில் எடுத்து துறுவ ஆரம்பிக்கிறார் ஆதி. அவரும், சமந்தாவும் மொத்தப் படத்தையும் தூண்போல தாங்குகின்றனர். மிகை யற்ற எல்லைக்குள்ளும், கதாபாத் திரத்தை உணர்ந்தும் கடைசிவரை வெளிப்படுகிறது அவர்கள் இரு வரது நடிப்பு. குறிப்பாக, விசா ரணை அறைக்குள் சமந்தா காட்டும் பய உணர்ச்சிகள், பின்னர் தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் உடல் நடுங்கும் நிலையில் சுருண்டுகிடப்பது என காட்சிக்குக் காட்சி, பய உணர்ச்சியை நமக்குக் கூட்டிவிடுகிறார்.

சமந்தா, ஆதிக்கு அடுத்த இடத் தில் ‘ஆடுகளம்’ நரேன், ‘கத்துக் குட்டி’ நரேன், பூமிகா ஆகியோரும் பளிச்சென்று கவனம் ஈர்க்கின்றனர்.

சமந்தா - ராகுல் இடையிலான மெல்லிய காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் பிரதான கதைக்கு பெரிதாக உதவவில்லை.

பின்னணி இசையில் அதிகமும் மிரட்டாத பூர்ணசந்திர தேஜஸ்வி, ஒரு திரில்லர் மற்றும் திகில் கதைக்கு ஏற்ற மனநிலையை உருவாக்கும் ஒளிப்பதிவை அளித்த நிகேத் பொம்மி, சிக்கல்கள் இல்லாத கதையை கச்சிதமாகத் தொகுத் திருக்கும் சுரேஷ் ஆறுமுகம் ஆகிய மூவரது தொழிநுட்பப் பங்களிப்பும் படத்துக்கு முதுகெலும்பு.

ஆவி, அமானுஷ்யம் ஆகிய வற்றை சித்தரித்த விதத்திலும், முழு அழுத்தம் தரும் விதமாக ஓர் அமானுஷ்யக் கதையில் சமூக விழிப்புணர்வைக் கடத்திய விதத்திலும் ‘யூ-டேர்ன்’ தமிழ் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைக்கும்.

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24960592.ece?utm_source=HP&utm_medium=hp-cinema

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் உந்தப் படத்தை நேற்று பார்த்தேன்...வேறு எந்தப் படத்திலும் சமந்தா இவ்வளவு அசிங்கம் இல்லை?...ஆனால், படம் சுப்பரோ சுப்பர்

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

தரமான பிரதி கிடைத்தமையால் நேற்று இரவு இத் திரைப்படத்தை பார்த்தேன்.

ஊகிக்க முடியாத திரைக்கதையும் திருப்பங்களாலும் படம் விறுவிறுப்பாக இருந்தது. எல்லா இடமும் U ஆக முடிவது சுவாரசியமாக இருந்தது. ஆனாலும் இறுதியில் பேய்ப்படமாக முடித்ததில் கொஞ்சம் ஏமாற்றம் வந்தது.

ஒன்றும் செய்ய இல்லை என்றால் பொழுது போக்குவதற்காக ஒரு முறை பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நிழலி said:

தரமான பிரதி கிடைத்தமையால் நேற்று இரவு இத் திரைப்படத்தை பார்த்தேன்.

ஊகிக்க முடியாத திரைக்கதையும் திருப்பங்களாலும் படம் விறுவிறுப்பாக இருந்தது. எல்லா இடமும் U ஆக முடிவது சுவாரசியமாக இருந்தது. ஆனாலும் இறுதியில் பேய்ப்படமாக முடித்ததில் கொஞ்சம் ஏமாற்றம் வந்தது.

ஒன்றும் செய்ய இல்லை என்றால் பொழுது போக்குவதற்காக ஒரு முறை பார்க்கலாம்.

உண்மைதான் நிழலி ஊகிக்கவே முடியாதபடி கதையின் நகர்வுகள் இருந்தன. கடைசியில் பேய்க்கதையாக்கிவிட்டார்கள். இந்தப்படத்தில் பேயைத் திணிக்காமல் வேறுமாதிரி முடிவைக் கொடுத்திருக்கலாம் அல்லது தொடரக்கூடிய மாதிரி ஒரு சாப்டரை குளோஸ் பண்ணி இன்னொன்றை ஆரம்பிப்பதுபோல் தொடர்ந்திருக்கலாம். நல்ல விறுவிறுப்பான படம் சமந்தாவின் நடிப்பு சூப்பர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/16/2018 at 5:11 PM, ரதி said:

நான் உந்தப் படத்தை நேற்று பார்த்தேன்...வேறு எந்தப் படத்திலும் சமந்தா இவ்வளவு அசிங்கம் இல்லை?...ஆனால், படம் சுப்பரோ சுப்பர்

நானும் பார்த்தேன்.. :innocent:

நாங்கள் தாத்தாவானது மாதிரி,  சமந்தாவும் பாட்டியாகிவிட்டார்..! :)

காலத்தின் கோலம்..!! 

Link to comment
Share on other sites

கன்னடாவில் வந்த போது (streaming platform ) ஒன்றில் பார்த்திருந்தேன், அப்போதே பரவலான வரவேற்பைப் பெற்றிருந்த படம், சமந்தாவை விட ஷரதா நன்றாக நடித்திருந்தார் ,( எனக்கு சமந்தாவை பிடிக்கும் நல்லாவே அது வேறு:) தமிழில் பூமிகா சகிக்கவே முடியல்ல,

(  தமிழில் சமந்தாவின் கதலனாக நடித்தவர் சின்மையின் கணவர் :) என நினைக்கிறேன்) 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.