நவீனன்

அவசரமாக ஊடக ஆசிரியர்களைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்

Recommended Posts

அவசரமாக ஊடக ஆசிரியர்களைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்

 

maithri-300x200.jpgநேற்று அவசர அமைச்சரவைக் கூட்டத்தை நடத்திய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அவசரமாக ஊடகங்களின் பிரதானிகள், ஆசிரியர்களைச் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.

சிறிலங்கா அதிபரின் இல்லத்தில் இன்று காலை இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

நாளிதழ்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் பிரதானிகளுக்கு சிறிலங்கா அதிபர் செயலகத்தினால் நேற்று இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

http://www.puthinappalakai.net/2018/09/14/news/32883

Share this post


Link to post
Share on other sites

இவர் அடுத்த தேர்தலில் நிக்க, இனவாத வேலைகளை தொடங்கீட்டார்.

Share this post


Link to post
Share on other sites

நாட்டின் பாதுகாப்பு எவ்விதத்திலும் பலவீனமடையவில்லை: ஜனாதிபதி

 

maithripala-sirisena-720x450.jpg

நாட்டின் பாதுகாப்பு எவ்விதத்திலும் வீழ்ச்சியடையவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுவரும் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வரவு செலவு திட்டத்தில் நாட்டின் பாதுகாப்பிற்கென 200 பில்லியனுக்கும் அதிகமான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும், பாதுகாப்பு செலவு இன்னமும் அதிகமாகக் காணப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்யைின் பிரதமர் நாட்டில் இல்லாத நிலையில் நேற்று நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து, ஊடக பிராதானிகளுடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பிற்கு ஏற்ப, ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை ஜனாதிபதி, ஊடகப் பிரதானிகளைச் சந்தித்தார்.  இந்த சந்திப்பில், நாட்டின் பாதுகாப்பு குறித்து கருத்து தொிவித்துள்ளார்.

அத்துடன், முல்லைத்தீவில் சிங்களக்குடியேற்றத்தை ஏற்றபடுத்த முயல்வதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்த ஜனாதிபதி, அவ்வாறு சிங்கள குடியேற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் கூறினார்.

http://athavannews.com/நாட்டின்-பாதுகாப்பு-எவ்வ/

Share this post


Link to post
Share on other sites

நாட்டிலுள்ள பிரச்சினைகளை தீர்க்க ஐ.நா.வில் யோசனைகளை முன்வைப்பேன் ; ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

 

 
 

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாட்டில் நிலவுகின்ற பிரச்சினைகளை சுமுகமாக தீர்ப்பதற்கான பல்வேறு யோசனைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை எதிர்வரும் 25 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுசபை கூட்டத்தில் முன்வைக்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை ஊடகப் பிரதானிகளுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, 

mahia.jpg

ஐக்கிய நாடுகளின் பொதுசபைக் கூட்டத்தில் நான் கலந்துகொண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரை சந்தித்து கலந்துரையாடவுள்ளேன்.

யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், இராணுவத்தினருக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுகள் மற்றும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ஐ.நா. சபையில் அறக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளேன்.

மேலும் தற்போது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு எதுவித குந்தகமும் இதுவரை ஏற்படவில்லை.

நீதிமன்ற நடவடிக்கையை எடுக்காமல், உயர்மட்ட இராணுவ அதிகாரிகளைக் கைது செய்யும் நடவடிக்கைககள் பொறுத்தமற்றது.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்வதாயின் முதலில் குற்றப்பத்திரிகை மற்றும் வழக்குத்தாக்கல் செய்ய வேண்டும். அதனை விடுத்து இராணுவ உயர் அதிகாரிகளை கைது செய்யமுடியாது.

மேலும் தற்போது தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து  விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்த நான் எதிர்பார்க்கின்றேன்.

என்னைக் கொலை செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகின்ற செய்திகள் தொடர்பில் விஷேட பொலிஸ்குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணை  மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடமும் விபரங்களை கேட்டுள்ளேன் என்றார்.

http://www.virakesari.lk/article/40398

 

 

 

'குற்றம் சுமத்தப்பட்டவர்கள்மீது வழக்குப் பதியப்படவில்லை'
 

image_f950deab4a.jpg

புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்மீது, இதுவரை எந்தவித வழக்கும் தொடரப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசனம் தெரிவித்தார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பு, இன்று (14) காலை, கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கும்போது, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐநா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்டிருக்கும் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளுக்குத் தாங்கள் முகங்கொடுக்கத் தாயார் எனவும், முன்னாள் ஆணையாளர்கள் போன்று, தற்போதைய ஆணையாளரும் தங்களுக்கு ஆதரவு வழங்கும் விதத்திலான கோரிக்கை ஒன்றை இம்மாதம் 25ஆம் திகதி, ஐநா மனிதஉரிமைகள் பேரவையில் முன்வைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மனிதஉரிமைகள் 

அடுத்தவாரம் அமெரிக்க செல்லும்போது, புதிதாகப் பதவியேற்றுள்ள ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளரைச் சந்தித்து, இலங்கை மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் பற்றிய தௌிவை அவருக்கு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

கடந்த காலங்களிலும் இலங்கை தொடர்பான தவறான புரிதலை ஐநா மனிதஉரிமைகள் ஆணைக்குழு கொண்டிருந்ததாகவும் அதனைத் தகுந்த விளக்கமளித்தலூடாக விலக்கிக்கொள்ள முடிந்ததாகவும் தெரிவித்த ஜனாதிபதி, 25ஆஆம் திகதி ஆற்றவுள்ள உரையில் பல முக்கிய தௌிவுகளை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 

நீதிமன்றத்தினால் தண்டனைக்குட்படுத்திய முன்னாள் போராளிகளையும் விசாரணை நிலுவையிலுள்ள போராளிகளையும் விடுதலை செய்யுமாறு மனிதஉரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த விடயத்திலுள்ள சிக்கல்களைத் தௌிவுபடுத்தவுள்ளதாகவும் கூறினார்.

விசாரணைகள்

நேற்று (13) நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னதாக பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்ட தகவலின்படி, இதுவரை காலமும் விசாரணைக்குள்ளாகிய லசந்த கொலை, கீத்நொயர் கடத்தல் விவகாரம், 11 இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம் போன்ற பல்வேறு விசாரணைகள், தொடர்ந்தும் விசாரணை மட்டத்திலேயே இருப்பதாகவும், இவற்றில் ஒன்றைத்தானும் வழக்குத் தாக்கல் செய்யும் நிலைக்குக் கொண்டுவரவில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார். குற்றப் புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம், முப்படைகளின் பிரதானி தொடர்பான விசாரணை, வெறும் குற்றச்சாட்டளவில் மாத்திரமே இருப்பதாகவும் அதனைப் பெரிதுபடுத்திப் பேசப் பலர் விளைந்திருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

தன்னைப் பொறுத்தவரையில் பாரிய குற்றச் செயல்களின் ஈடுபட்டவர்கள் நிச்சயமாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்களே எனவும், நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதன் ஊடாக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே எனவும் தெரிவித்த ஜனாதிபதி, வெறும் குற்றச்சாட்டுக்குள்ளாகி விளக்கமறியலில் இருப்பவர்கள் குற்றவாளிகளாகிவிட முடியாதவர்களே என்றும் தெரிவித்தார்.

எரிபொருள் சூத்திரம்

உலக நியதிக்கமைய எரிபொருள் சூத்திரத்தை உருவாக்கியபோதிலும் துரதிர்ஷ்டவசமாக எரிபொருள் விலை அதிகரித்துச் செல்வதாகக் கூறிய ஜனாதிபதி, இந்த விடயத்தில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். வரவு - செலவுத் திட்டத்தின்போதும் இந்த விடயம் தொடர்பில் கூடிய கவனஞ்செலுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

மகாவலி திட்டம்

வடக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாகக் கூறப்படும் விவகாரத்தை மறுப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மகாவலி எல் வலயத்துக்குட்பட்ட வெலிஓயா பகுதியில் 80ஆம் ஆண்டளவில் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் மாத்திரமே வாழ்வதாகவும், வேறெந்தக் குடியேற்றமும் இடம்பெறவில்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/குற்றம்-சுமத்தப்பட்டவர்கள்மீது-வழக்குப்-பதியப்படவில்லை/150-221810

 

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, நவீனன் said:

நாட்டிலுள்ள பிரச்சினைகளை தீர்க்க ஐ.நா.வில் யோசனைகளை முன்வைப்பேன் ; ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

வடக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாகக் கூறப்படும் விவகாரத்தை மறுப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மகாவலி எல் வலயத்துக்குட்பட்ட வெலிஓயா பகுதியில் 80ஆம் ஆண்டளவில் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் மாத்திரமே வாழ்வதாகவும், வேறெந்தக் குடியேற்றமும் இடம்பெறவில்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

குடியேற்றப்பட்டாலும், சிங்களவர் குடியேறிய நிலம், தற்போதைய சனாதிபதியின் நல்லாட்சியில் சிங்களவர் நிலமாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.! 

தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்ட நிலங்களில் இன்று குடியேறி இருப்பவர்களுக்கும், அந்த நிலங்கள் அனைத்தும் சொந்தமாக்கப்பட்டுவிட்டனவா...??

Share this post


Link to post
Share on other sites

இப்ப அதே மைத்திரி ஒரு அமைச்சரை ஜெனீவாவுக்கு அனுப்பி அங்குள்ள முட்டாள்களுக்கு, உள் நாட்டு விசாரணை என்று உலகத்து புளுகுமூட்டை எல்லாம் அவிச்சுக் கொட்ட வைப்பார் பாருங்கோ.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now