Jump to content

கனாக் கண்டேன் தோழா


Recommended Posts

கனாக் கண்டேன் தோழா

 
 
கதைகள் white_spacer.jpg
title_horline.jpg
 
கனாக் கண்டேன் தோழா
white_spacer.jpg
- ராஜேஷ்குமார், சிறுகதை

p93.jpgன்னலுக்கு வெளியே அமெரிக்காவின் நியூஜெர்ஸி வெள்ளை வெளேரென்ற உறைபனியில் இருக்க, என் மனதும் அடிவயிறும் நூற்றுப் பத்து டிகிரி உஷ்ணத்தில் தகித்துக்கொண்டு இருந்தது.

'தீட்சண்யா! எப்படியடி நீ ஏமாந்தாய்? எல்லா விஷயத்திலுமே ஜாக்கிரதையாக இருப்பாயே... இந்த விஷயத்தில் மட்டும் எப்படிக் கோட்டை விட்டாய்?' என் மனச் சாட்சி என்னைச் சாட்டையால் அடிக்க, நான் அதன் முன்னால் மண்டியிட்டு மானசீகமாகக் கை கூப்பினேன்.

'தப்பு என் பேரில் இல்லை. எல்லாம் அந்த ராஸ்கல் அஜய்யால் வந்தது. அஜய்யை அந்த ராத்திரி இங்கே ஸ்டே பண்ண விட்டிருக்கக் கூடாது!'

'சரி... இனிமே என்ன பண்ணப் போறே?'

'இப்பவே கனடாவில் இருக்கும் அஜய்க்கு போன் செய்து உலுக்கி எடுக்கப் போறேன்.'

'உலுக்கி எடுத்தா தப்பு சரியாயிடுமா? நீ கன்சீவ் ஆனது ஆனதுதானே?' - மனச்சாட்சி என்னைக் கிண்டல் பண்ணிக்கொண்டு இருக்கும்போதே, எனக்குப் பின்னால் அந்தக் குரல் கேட்டது...

''ஏய்... தீட்சண்யா! ஜன்னலுக்குப் பக்கத்துல நின்னுக்கிட்டு அப்படி என்ன பலமான யோசனை?''- கேட்டுக்கொண்டே கிச்சனில் இருந்து வெளிப்பட்டாள் என்னோடு தங்கியிருக்கும் என் கம்பெனி கொலீக் அனிதா. அந்த நேரத்துக்கே குளித்து இருந்தாள். அவள் உடம்பினின்றும் எழுந்த சோப்பு வாசனைகூட என்னுடைய மார்னிங் சிக்னஸை அதிகப்படுத்திக் குடலைப் புரட்டியது. அனிதா கறுப்புக் காபி நிரம்பித் தளும்பும் பீங்கான் கோப்பையுடன் எனக்கு முன்பாக வந்து உட்கார்ந்தாள்.

 

''நீ காபி சாப்பிட்டியா தீட்சண்யா?''

''இல்ல...''

''ஏன்..?''

''சாப்பிடணும்னு தோணலை.''

''ஏய்! உனக்கு என்னாச்சு? ஏன் இப்படி ஓவரா டல்லடிக்கிறே?''

''கொஞ்சம் வயிறு சரியில்லை.''

''ஓ! அதான் விடியற்காலையில் வாமிட் பண்ணினியா? நான் பக்கத்து ஃப்ளாட்ல இருக்கிற எமிலியோன்னு நினைச்சேன். ஆமா, ராத்திரி எங்கே டின்னர் சாப் பிட்டே?''

''சிங்கோட இண்டியன் ரெஸ்டாரென்ட்டில்தான்!''

''சீஸ்ல வறுத்த சிக்கன் சாப்பிட்டிருப்பே?''

''ஆமா!'' பொய்யாகத் தலையாட்டிவைத்தேன்.

''இனிமே அந்த ரெஸ்டாரென்ட் பக்கம் போகாதே!''

''எந்த அயிட்டமும் சரியில்லை. அந்த சிங் என்ன பண்றான் தெரியுமா? கோழிப் பண்ணைக்குப் போய், டிஸீஸ் வந்து செத்துப்போன கோழிகளைக் குறைஞ்ச விலைக்கு வாங்கிட்டு வந்து, சீஸ்ல வறுத்து, ஸ்பைஸி பண்ணி கல்லா கட்றான்!''

'வாந்திக்குக் காரணம் சீஸ்ல வறுத்த சிக்கன் இல்லை. அஜய் என்கிற உண்மையை இவளிடம் எப்படிச் சொல்வேன்?'

அனிதா காபியைக் குடித்து முடித்துவிட்டு எழுந்தாள். என் தோளின் மேல் ஆதரவாகக் கையை வைத்தாள்... ''தீட்சண்யா! யு ஸீம் டு பி வெரி டயர்ட். உடம்புக்கு ரொம்பவும் முடியலைன்னா லீவு போட்டுடு. நான் நம்ம குரூப் லீடர் மெர்ஸி தாமஸ்கிட்டே சொல்லிடறேன்.''

''ம்...'' எனத் தலையாட்டினேன்.

அனிதா லஞ்ச் கிட்டை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டாள். ''நான் கிளம் பறேன். படுத்துத் தூங்கி நல்லா ரெஸ்ட் எடு. மத்தியானம் தயிர் சாதம் மட்டும் சாப்பிடு. நான் ஃபார்மஸியில் சொல்லி, ஏதாவது மாத்திரை வாங்கிட்டு வரட்டுமா?''

''அதெல்லாம் வேண்டாம் அனிதா. நீ சொன்ன மாதிரி ஒரு நாள் ரெஸ்ட் எடுத்தாப் போதும். நீ மொதல்ல புறப்படு. வாட்டர் டாக்ஸியை மிஸ் பண்ணிடப் போறே!''

''டேக் கேர். அபார்ட்மென்ட்ல தனியா இருக்கே... டோரை நல்லா லாக் பண்ணிக்கோ.''

''ம்... ம்...''

அனிதா புறப்பட்டுப் போனதும், மனசுக்குள் கோபம் முளைத்து, அஜய்க்கு போன் செய்ய நினைத்து, செல்போனைக் கையில் எடுத்தேன். அதே விநாடி... அது ரிங்டோனை வெளியிட்டது. அழைப்பது யாரென்று பார்த்தேன். சென்னையிலிருந்து அப்பா. உற்சாகக் குரலோடு கேட்டார்... ''தீட்சண்யா... எப்படி இருக்கேம்மா?''

''நல்லா இருக்கேன்ப்பா...''

''என்னம்மா... ஆபீஸ் புறப்பட்டுப் போற அவசரத்துல இருக்கியா?''

''இல்லேப்பா... என்ன விஷயம் சொல்லுங்க?''

''நேத்திக்கு நெட்ல மாப்பிள்ளைப் பையனோட போட்டோவை அனுப்பியிருந்தேன். பார்த்தியாம்மா?''

''ம்... பார்த்தேன்!''

''உன் அபிப்பிராயம் என்னம்மா? மாப்பிள்ளை உனக்கு ஓ.கே-ன்னா, கல்யாணப் பேச்சை மேற்கொண்டு ஆரம்பிக்கலாம்னு...''

நான் குறுக்கிட்டேன்... ''அ... அப்பா..!''

''என்னம்மா?''

''எ... எனக்கு அவரைப் பிடிக்கலை!''

''ஏம்மா?''

''எஜுகேஷனல் குவாலிஃபிகேஷன் திருப்தியா இல்லை. இன்னும் கொஞ்சம் பெட்டராப் பார்க்கலாமே!.''

''உன் அண்ணனும் இதையேதான் சொன்னான். சரி, உன்னையும் ஒரு பேச்சு கேட்டுடலாம்னுதான் போட்டோவை உனக்கு அனுப்பிவெச்சேன். சரிம்மா... நான் புரோக்கர்கிட்டே சொல்லி வேற வரன் பார்க்கச் சொல்லிடறேன்.''

''ம்...''

''ஒரு நிமிஷம் இரும்மா. உன்னோட அம்மா கொஞ்சம் பேசணுமாம்!''

''இப்ப வேண்டாம்பா... அம்மா பேச ஆரம்பிச்சுட்டா, நான் ஆபீஸூக்குப் போக முடியாது. சாயந்திரம் ஆபீஸிலிருந்து வந்ததும் நானே போன் பண்றேன்!''

''அதுவும் சரிதான். நீ கிளம்பும்மா. நான் அம்மாகிட்டே சொல்லிக்கிறேன்!'' - அப்பா மறுமுனையில் செல்போனை அணைக்க, நான் அனல் நிரம்பிய பெரு மூச்சோடு நாற்காலியில் சாய்ந்தேன். கையோடு கையாக அஜய்க்கு போன் செய்தேன். ரிங்டோன் போய், அஜய்யின் குரல் கேட்டது.

''குட்மார்னிங் தீட்ச்...''

''ஸே... பேட் மார்னிங்!''

''ஏய்! என்ன சொல்றே?''

''உனக்கும் எனக்கும் இன்னிக்கு பேட் மார்னிங்டா.''

''என்னாச்சு? ஊரிலிருந்து ஏதாவது கெட்ட செய்தியா?''

''நீ பண்ண தப்புக்கு ஊர்லேர்ந்து ஏன் கெட்ட செய்தி வருது?''

''குழப்பாதே தீட்ச்! விஷயத்துக்கு வா...''

''போன மாசம் என் ஃப்ரெண்ட் அனிதா இந்தியாவுக்குப் போயிருந்தப்ப, நீ என் அபார்ட்மென்ட்டுக்கு வந்திருந்தே. நான் வேண்டாம் வேண்டாம்னு பிடிவாதமா எவ்வளவோ சொல்லியும் நீ அடம்பிடிச்சு, ஸ்டே பண்ணினே! அதோட விளைவு..?''

''விளைவு...?''

''போன மாசம் நீ எழுதின பரீட்சைக்கு இந்த மாதம் ரிசல்ட் வந்தாச்சு. இன்னிக்குக் காலையில் கண் விழிச்சதிலிருந்து எனக்கு மார்னிங் சிக்னஸ். தமிழ்ல சொல்றதுன்னா மசக்கை. விடிகாலை அஞ்சு மணியிலிருந்து வாமிட், குமட்டல்னு அவஸ்தைப்பட்டுக்கிட்டு இருக்கேன்டா!''

''மை குட்னஸ்!'' - அஜய் மறுமுனையில் அதிர்ந்து போனதை என்னால் உணர முடிந்தது.

''தீட்ச்! ப்ரக்னன்ஸி கன்ஃபர்ம்தானா?''

''இதை கன்ஃபர்ம் பண்ணிக்க வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போய் ஏடு எடுத்துப் பார்க்கணுமா என்ன? சரியா இருபது நாள் தள்ளிப் போயிருக்குடா...''

''நீ எப்படி இதைக் கவனிக்காம விட்டே?''

''ஒரு மாசமா ஆபீஸில் பயங்கர வொர்க்லோட். அந்த டென்ஷன்ல இந்த பயலாஜிக்கல் கணக்கைக் கவனிக்க மறந்துட்டேன்.''

''இப்ப என்ன பண்றது?''

''நீ உடனே புறப்பட்டு வா!''

''என்னது... நான் புறப்பட்டு வர்றதா? விளையாடறியா நீ? நான் கனடாவில் இருக்கேன். நீ நியூஜெர்ஸியில் இருக்கே..!''

''இருந்தா என்ன? அடுத்த ஃப்ளைட்டைப் பிடிச்சு உடனே வந்து சேரு!''

''இதோ பார் தீட்ச்! எனக்கு கம்பெனியில் லீவு கிடைக்கிறது கஷ்டம். நான் ஒரு யோசனை சொல்றேன். அதன்படி நீ செய்றியா?''

''சொல்லு!''

''நியூஜெர்ஸியில் ஹட்ஸன் லேக் அவென்யூ தெரியுமா?''

''தெரியும்...''

''அங்கே சென்னையைச் சேர்ந்த ஒரு டாக்டரம்மா இருப்பாங்க... அவங்க பேரு மீனாம்பிகா. நல்ல கைன காலஜிஸ்ட். போய்ப் பாரு. விஷயத்தைப் பக்குவமா எடுத்துச் சொல்லு. சுத்தம் பண்ணிடுவாங்க.''

''நோ...''

''என்ன நோ?''

''மாட்டேன். எனக்கு ரொம்பப் பயமா இருக்கு...''

''பயப்பட ஒண்ணும் இல்லை!''

''நோ... அஜய். நீயும் வரணும்.''

''எனக்கு லீவு கிடைக்காது போலிருக்கே?''

''கேட்டுப் பார், கிடைக்கும்...''

''கிடைக்காது.''

''நான் செத்துட்டதா நினைச்சுக்கோ. லீவு கிடைக் கும்.''

''ஏன் இப்படிப் பேசறே?''

''அப்படித்தான் பேசுவேன். நான் இப்போ எப்படிப் பட்ட நிலைமையில் இருக்கேன்னு உனக்குப்புரியலையா அஜய்?''

''சரி சரி, அழ ஆரம்பிச்சுடாதே! வந்துடறேன்!''

அஜய்க்கு லீவு கிடைத்து, ஃப்ளைட் பிடித்து நியூஜெர்ஸி வந்து சேர்ந்தபோது, மறு நாள் காலை பத்து மணி.

p94.jpgஉடனடியாக ஒரு டாக்ஸி பிடித்து, ஹட்ஸன் லேக் அவென்யூவில் இருக்கும் டாக்டர் மீனாம்பிகாவைப் போய்ப் பார்த்தோம். மீனாம்பிகாவுக்கு ஐம்பது வயது இருக்கலாம். செட்டிநாட்டு முகம். இரட்டை நாடி சரீரம். கவனமில்லாத பார்வையோடு கேட்டாள்...

''உங்களுக்கு என்ன பிரச்னை?''

நான் தலையைக் குனிந்துகொண்டே விஷயத்தைச் சொன்னேன். அஜய்யை வெளியே அனுப்பிவிட்டு என்னைச் சோதித்தாள். பிறகு, இரண்டு பேரையும் எதிரில் உட்கார்த்தி வைத்துக்கொண்டு, தலையைத் தீர்க்கமாக ஆட்டினாள்.

''நோ! இப்போதைக்கு டி அண்ட் சி சாத்தியமில்லை.''

''டாக்டர்!'' அஜய் பதற்றப்பட, மீனாம்பிகா தோள் களைக் குலுக்கிக் கைகளை விரித்தாள்.

''ஐம் ஹெல்ப்லெஸ்! கருவைக் கலைக்க எந்த முயற்சி எடுத்தாலும், அது இந்தப் பெண்ணோட உயிருக்கு ஆபத்தா முடியக்கூடிய வாய்ப்பு இருக்கு...''

அஜய்க்குப் பதற்றம் இன்னும் அதிகரித்தது.

''ப்ளீஸ் டாக்டர்! தீட்சண்யாவின் பிரக்னன்ஸி விஷயம் வெளியே தெரிஞ்சா, அவ வேலை பார்க்கிற சாஃப்ட்வேர் கம்பெனியிலிருந்து அதே நிமிஷம் டெர்மினேட் பண்ணிருவாங்க. மாசத்துக்கு மூணு லட்ச ரூபா சம்பளம் வாங்கிட்டிருக்கா. ரெண்டு வருஷ ஒப்பந்தம். நீங்க அவளைச் சுத்தம் பண்ணலைன்னா... அது எல்லாமே கனவாகி கையை விட்டுப்போயிடும்!''

டாக்டர் மீனாம்பிகா அஜய்யையும் என்னையும் ஒரு கோபப் பார்வை பார்த்தாள். ''இதை எல்லாம் முன்னாடியே யோசனை பண்ணியிருக்கணும். உங்க நன்மைக்காக இப்பவும் சொல்றேன். தீட்சண்யாவுக்கு டி அண்ட் சி பண்றது, மரணத்துக்கு மனு போடறதுக்குச் சமம். நான் மறுத்துட்டதால நீங்க வேற ஒரு டாக்டரைப் பார்க்க முடிவு எடுத்தா... அது முட்டாள்தனமான முடிவு. இங்கே இருக்கிற டாக்டர்களில் பாதிப் பேர் மணி மைண்டட் டைப். பேஷன்ட்களோட உயிர் அவங்களுக்கு முக்கியம் கிடையாது. பணம்தான் முக்கியம். நான் சொல்றதைச் சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்.''

டாக்டர் கை கூப்ப... நாங்கள் வெளியே வந்தோம்.

ஒரு டாக்ஸி பிடித்து அபார்ட்மென்ட் வந்து சேர்ந்தோம். அனிதா ஷிஃப்ட் முடித்து இன்னமும் ஆபீஸிலிருந்து வீடு திரும்பவில்லை.

கண்கள் கலங்கி, முகம் இருண்டுபோய் உட்கார்ந்திருந்த அஜய்யின் தோள் மேல் கையை வைத்தேன்.

''இப்ப என்ன பண்றது அஜய்?''

''அதான் எனக்கும் புரியலை.''

''வேற டாக்டரிடம் பேசிப் பார்க்கலாமா?''

''வேண்டாம் தீட்ச்! இந்த விஷயத்துல நாம ரிஸ்க் எடுக்க வேண்டாம்.''

''அப்படின்னா பிரக்னன்ஸி?''

''இருக்கட்டும்.''

''வேலை?''

''விஷயம் தெரிஞ்சு அவங்க உன்னை டெர்மினேட் பண்றதுக்கு முந்தி, நீயே வேலையை ராஜினாமா பண்ணிடு.''

''மாசம் பொறந்தா மூணு லட்ச ரூபாய் சேலரி. அந்த வேலையை ரிசைன் பண்றதா?''

''அதைவிட உன்னோட உயிர் பெரிசு இல்லையா? இந்த வேலை போனா என்ன... வேற வேலை கிடைக்காமலா போயிடும்?''

அஜய்க்குப் பதில் சொல்ல நான் வாயைத் திறந்த அதே விநாடி... கதவருகே அந்தக் குரல் கேட்டது.

''தட்ஸ் குட்!''

திரும்பிப் பார்த்தோம். அனிதா உதட்டில் சிரிப்போடு நின்றிருந்தாள். ''நான் எல்லாத்தையும் கேட்டுட்டேன். அநாவசியமா எந்தப் பொய் யையும் சொல்ல வேண்டாம். நீங்க ரெண்டு பேரும் எடுத்த முடிவுதான் சரி!''- சொல்லிக்கொண்டே உள்ளே வந்த அனிதா, என்னை நெருங்கி தோளின் மேல் கையை வைத் தாள்.

''தீட்சண்யா! நம்ம சாஃப்ட்வேர் கம்பெனியோட ரூல்ஸ்தான் உனக் குத் தெரியுமே? ரெண்டு வருஷ கால ஒப்பந்தம் முடிகிற வரைக்கும் பெண்கள் கன்சீவ் ஆகக் கூடாது; மீறி கன்சீவ் ஆனா, உடனடியா டெர்மினேஷன்தான்னு கொட்டை எழுத்தில் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்ல போட்டிருக்காங்களே... அதை நீங்க ரெண்டு பேருமே அலட்சியம் பண்ணிட்டீங்க!''

''இல்லை அனிதா... எவ்வளவோ முன்ஜாக்கிரதையாதான் நடந்துக்கிட்டோம். இருந்தாலும், எங்கே தப்பு நடந்துச்சுனு தெரியலை. விதி விளையாடிருச்சு. நான் கருத்தரிக்கணும்கிறது ஆண்டவன் கட்டளை போலிருக்கு!'' என்ற நான், அஜய்யின் முதுகில் குத்தினேன்...

''எல்லாம் இவனால் வந்த வினை!''

''தீட்சண்யா! உன்கிட்டே எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம் உண்டுன்னா, அது அஜய்யை இன்னும் 'அவன், இவன்'னு பேசறதுதான். உனக்கும் அஜய்க்கும் கல்யாணம் நடந்து, ஒரு வருஷம் முடியப்போகுது. இன்னும் நீங்க பழைய லவ்வர்ஸ் கிடையாது.''

அஜய் குறுக்கிட்டான்... ''நோ நோ... மிஸ் அனிதா! தீட்சண்யா என்னை அப்படிக் கூப்பிட்டாதான் எனக்குப் பிடிக்கும். அந்த உரிமையில்தான் நெருக்கமும் உண்மையான அன்பும் இருக்கு!''

''உங்க ரெண்டு பேரையும் இந்த ஜென்மத்தில் திருத்த முடியாது!'' - சொல்லிச் சிரித்த அனிதா எங்களுக்கு முன்னால் வந்து உட்கார்ந்தாள்.

''அது சரி... நீங்க ரெண்டு பேரும் ஒரு குழந்தையைப் பெத்துக்க முடிவு பண்ணிட்டீங்க. ஆனா, இந்த விஷயத்தை உங்க ரெண்டு பேர் வீட்லேயும் சொன்னா... ஒரு வீட்ல பூகம்பமும், இன்னொரு வீட்ல சுனாமியும் வெடிக்குமே... அதை எப்படிச் சமாளிக்கப் போறீங்க? ரெண்டு வருஷம் வரைக்கும் தீட்சண்யா குழந்தை பெத்துக்கக் கூடாதுங்கிறதுதானே ரெண்டு குடும்பங்களோட எதிர்பார்ப்பும்...''

''ஒரு பேரனோ, பேத்தியோ பிறந்தா அவங்களோட கோபமும் காணாமல் போயிடும்.'' - அனிதாவிடம் சொன்ன அஜய், என்னை ஏறிட்டான். ''தீட்ச்! நேத்து ராத்திரி உன்னோட அப்பா உன் சிஸ்டர் நேத்ராவுக்குப் பார்த்திருக்கிற மாப்பிள்ளைப் பையன் போட்டோவை எனக்கு நெட்ல அனுப்பியிருந்தார். நீ பார்த்தியா?''

''ம்... பார்த்தேன்! நேத்து காலையில் அப்பா எனக்கு போன் பண்ணினப்ப 'மாப்பிள்ளை பிடிக்கலை. எஜுகேஷனல் குவாலிஃபிகேஷன் போதாது. வேற மாப்பிள்ளை பாருங்க'ன்னு சொல்லிட்டேன். அப்பாவும் சரின்னுட்டார்.''

''உனக்குத் தைரியம்தான்!''

''இதுக்கென்ன தைரியம் வேண்டியிருக்கு... மனசுல பட்டதைச் சொன்னேன்!'' சொல்லிவிட்டு நான் அனிதாவை ஏறிட்டேன்.

''அனிதா! நான் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வர்றேன். எனக்கும் அஜய்க்கும் ஏதாவது டிஃபன் பண்ணிக் கொடேன். ஒரே பசி!''

''இதோ... பத்தே நிமிஷத்துல ரவா கிச்சடி ரெடி!'' - அனிதா கிச்சனை நோக்கிப் போக, நான் அபார்ட்மென்ட் கடைசியில் இருந்த குளியலறைக்குள் நுழைந் தேன்.

கதவைச் சாத்திக்கொண்டு இடுப்பில் இருந்த செல்போனை எடுத்து, டாக்டர் மீனாம்பிகாவின் எண்ணை அழுத்தினேன். மீனாம்பிகா லைனில் கிடைத்தாள். குரலைத் தாழ்த்தினேன்... ''ரொம்பவும் நன்றி டாக்டர்!''

''எதுக்கு..?''

''நீங்க சொன்ன பொய்க்காக! டி அண்ட் சி பண்ணினா என்னோட உயிருக்கு ஆபத்துன்னு சொன்னதை, என் கணவர் அஜய் நம்பிட்டார்!''

மீனாம்பிகா சிரித்தாள்.

''அந்தப் பொய்யையும் நீதானே சொல்லச் சொன்னே! மாசாமாசம் கிடைக்கிற மூணு லட்ச ரூபாய் சம்பளத்தைக் காட்டிலும், முதன்முதலாக் கிடைச்சிருக்கிற இந்தத் தாய்மைதான் பெரிசுன்னு சொல்லி, அந்தத் தாய்மையைச் சுமக்கிற பாக்கியத்தை நீங்க எனக்குக் கொடுக்கணும்னு முன்கூட்டியே நீ சொன்னது என் மனசுக்குச் சரியாப்பட்டது. அதனாலதான் அப்படி ஒரு பொய்யைச் சொன்னேன். உன் கணவர் இப்பவும் வருத்தத்துலதான் இருக்காரா, தீட்சண்யா?''

''இல்லை டாக்டர்! என்னைக்காட்டிலும் அவர் இப்போ ரொம்பச் சந்தோஷமாவே இருக்கார்.''

''தேங்க் காட்!'' என்றாள் மீனாம்பிகா.

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவிலும்கூட  ஒரு டாக்டரை  பொய் சொல்ல வைக்க முடியுமா.... ராஜேஸ்குமாரும் கதை விடுகிறார்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.