Jump to content

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஜெ.வாக நடிக்கிறார் நித்யா மேனன்


Recommended Posts

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஜெ.வாக நடிக்கிறார் நித்யா மேனன்

 

 
nithyamenonjpg

 தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவரது வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார்.

இப்படத்துக்கு ‘த அயர்ன் லேடி’ (The Iron Lady) என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிரியதர்ஷினி இப்படத்தை இயக்கி, தயாரிக்கிறார்.

 

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் உருவாகும் இந்தப் படத்தில், முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர். இப்படம், ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

IRON%20LADY%20posterjpg

படத்தின் போஸ்டர்

 

இதுகுறித்து 'தி இந்து' ஆங்கிலத்திடம் பேசிய பிரியதர்ஷினி, ''இந்தப்படம் இளம் நடிகையாக ஜெ. தனது வாழ்க்கையைத் தொடங்கியதில் இருந்து, மருத்துவமனையில் இருந்த கடைசி நாட்கள் வரை பேசும்.

படத்தின் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர்கள் இன்னும் தயங்குகின்றனர். ஆனால் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கத் தைரியமாக முன்வந்தவர் நித்யா மேனன்'' என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தை, விஜய் மற்றும் பாரதிராஜா ஆகியோரும் தனித்தனியாக இயக்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article25004008.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.