Sign in to follow this  
nunavilan

இன்று ரஜினி திரணகம நினைவு நாள் 

Recommended Posts

 

இன்று ரஜினி திரணகம நினைவு நாள் 
இவரின் நினைவு நாளில் வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் EPRLF கும்பலின் எச்சங்கள் தலித் அமைப்பு என்றும் மனித உரிமை குழுக்கள் இலக்கிய குழுக்கள் என பல பெயர்களில் மனித உரிமை பாடம் எடுப்பதும் அவரை புத்தியீவி என கதை எழுதுவதும் தொடர்ந்து நடக்குகிறது. 2009 களுக்கு பின்னால் இவை அதிகரித்து வருகிறது 
உண்மையில் தனிப்பட்ட காரணம் உடபட இரண்டு காரணங்களை முன் வைத்து ரஜினி திரணகம கொல்லப்பட்டார் .
முறிந்த பனை நூல் புலிகளை விமரிசித்து இருந்தாலும் இந்தியா அமைதிப்படை மற்றும் அதனோடு சேர்ந்து இயங்கி வடக்கு கிழக்கில் பத்மநாபா தலைமையில் கொலை களவு கடத்தல் பாலியல் வல்லுறவு என வெறியாட்டம் ஆடிய EPRLF ஆயுத கும்பலை பற்றியும் பேசி இருந்தது . இந்தியா ஆமி கொடூரங்கள் இந்த புத்தகங்கள் வழியாக வெளிவருவதை இந்தியா ஆமியின் ஒரு சாரார் விரும்பவில்லை .இந்தியா ஆமியின் சார்பில் கொலை செய்வதற்கான திட்டத்தை இந்தியா ஆமி தளபதிகளில் ஒருவரான கேணல் சசிகுமார் EPRLF அமைப்பின் ரஃபிக் என்பவரோடு சேர்ந்து திட்டமிட்டார் . இந்த திட்டத்தின் படி EPRLF அமைப்பின் கார்த்திக் மற்றும் தாமஸ் ஆகிய இருவரும் இந்த கொலையை செய்தனர் .திட்டத்தின் படி கொலை விழுந்த மறு கணமே புலிகள் மீது குற்றம் சுமத்தி EPRLF அறிக்கை வெளியிட்டது ..அதை மக்கள் மத்தியில் இந்தியா ஆமி ஏற்பாட்டில் EPRLF கொண்டு சென்றது ..புலிகள் இயக்கம் மணலாறு காட்டுக்குள் ஒடுக்கப்பட்ட நிலையில் இதை EPRLF கும்பல் வேகமாக செய்தது .இந்தியா படை வெளியேறிய பின்னர் கொலை செய்த தாமஸ் டக்ளஸ் கும்பலில் செயல்பட்டு வந்தார் .கார்த்திக் சில காலம் சுரேஷ் பிரம்மச்சந்திரனின் உதவியாளராக இயங்கி பின்னர் வெளிநாடு சென்று விட்டார் .பிற்காலத்தில் தாமஸ் திருகோணமலை பகுதியில் தனிப்பட்ட தகராறு ஒன்றில் வெட்டி கொல்லப்பட்டார் 
இந்த கொலை திட்டத்தை செய்லபடுத்திய கேணல் சசிகுமார் என்கிற இந்தியா ஆமி அதிகாரி கொலை நடந்த சில நாளில் மணியம்தோட்ட பகுதியில் வைத்து புலிகளால் கொல்லப்பட்டார் . இந்த கொலையை பகிரங்கமாக அம்பலப்படுத்திய EPRLF கும்பலின் முன்னை நாள் உறுப்பினரும் டக்ளஸ் குழுவை சேர்ந்தவருமான அற்புதனை இலங்கை ராணுவ ஏற்பாட்டில் டக்லஸ் மற்றும் சந்திரகுமார் (கிளிநொச்சி) சுட்டு கொன்றனர் .இந்த கொலையை சந்திரகுமார் நெறிப்படுத்தி இருந்தார். இந்த கொலையை தொடர்ந்து அற்புதனின் மனைவி மற்றும் பிள்ளைகளை டக்ளஸ் கும்பல் கொடூரமாக ஏமாற்றி இலங்கையில் இருந்து விரட்டி விட்டு தினமுரசு பத்திரிகையை அபகரித்தனர் .இதற்க்கு இன்றும் சட்டத்தரணியாக தொழில் புரியும் CV Vivekananthan சாட்சியாக இருக்கிறார்

PS 1: இந்த EPRLF கும்பல் இந்தியா ஆமி காலத்தில் வடக்கில் பிரபல ஆசிரியர் கிருசானந்தன் கிழக்கில் வண பிதா சந்திரா அடிகள் என ஆயிரக்கணக்கான அப்பாவிகளை வேட்டையாடியது .இதனால் தான் இந்தியா ஆமியோடு சேர்ந்து கும்பல் இந்தியா தப்பி ஓடியது. 2009 க்கு பின்னர் மீண்டும் இந்தியா ஆமி அனுசரணையில் வரதராஜ பெருமாள் தரையிறக்க பட்டு இருக்கிறார் .இந்த கும்பலின் எச்சங்கள் இந்தியா புலனாய்வு துறையின் ஏற்பாட்டில் இலக்கிய அமைப்புகள் , தலித் அமைப்புகள் என பல பெயர்களில் மீண்டும் இயக்க முயற்சிக்கப்படுகிறது . கிளிநொச்சியில் புலிகளின் சஞ்சிகை ஒன்றில் வேலை செய்த கருணாகரன் என்கிற ஒரு நபர் இந்த குழுக்களை இலக்கிய கூட்டங்கள் என்கிற பெயரில் ஒருங்கிணைக்கும் முகவராக செய்லபாடுகிறார்

PS 2: புலிகள் பெயரில் இந்தியா புலனாய்வு அமைப்பு கொலைகளை செய்ய தொடங்கியது புலிகள் டெலோ மோதலுக்கு முற்பட்ட காலமாகும் . நாடாளமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் (சித்ததார்த்தன் தந்தை ) ஆலாலசுந்திரம் ஆகியோரை டெலோ புலிகள் பெயரில் கொலை செய்து இருந்தது ..பின்னர் டெலோ அமைப்பு மோதலுக்கு முற்பட்ட காலம் ஒன்றில் புலிகள் இதை அம்பலப்படுத்தி இருந்தனர் .பாராளமன்ற உறுப்பினர் சித்ததார்த்தன் இதற்க்கு இன்றும் சாட்சி

டக்ளஸ் கும்பல் தன்னுடைய கும்பலை சேர்ந்த மகேஸ்வரி வேலாயுதத்தை கொலை செய்ததும் இப்படியான ஏற்பாடு தான் ..ஆனால் இந்த கொலை தனிப்பட்ட காரணம் ஒன்றுக்காக நடத்தப்பட்டது

Image may contain: one or more people, people riding bicycles and outdoor
 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this