Jump to content

கிளி­நொச்­சி­யில் பௌத்த சின்­னங்­கள் அழிப்­பாம் – சபை­யில் சீறி­யது மகிந்த அணி!!


Recommended Posts

கிளி­நொச்­சி­யில் பௌத்த சின்­னங்­கள் அழிப்­பாம் – சபை­யில் சீறி­யது மகிந்த அணி!!

 

வடக்­கில் பௌத்த புரா­தன மற்­றும் தொல்­பொ­ரு­ளி­யல் சிறப்­பு­மிக்க இடங்­கள் திட்­ட­மிட்டு அழிக்­கப்­ப­டு­வ­தாக மகிந்த அணி நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­றுக் குற்­றம் சுமத்­தி­யது.

கிளி­நொச்­சி­யில் பௌத்த தொல்­லி­யல் சின்­னங்­கள் அழிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் குற்­றச்­சாட்டை முன்­வைத்­தது. அது தவ­றா­னது என்று பதி­ல­ளித்த இரா­ஜாங்க அமைச்­சர், வடக்கை விட அநுரா­த­பு­ரத்­தி­லும், குரு­நா­க­லி­லுமே அதி­க­ளவு சின்­னங்­கள் அழிக்­கப்­ப­டு­கின்­றன என்­றும் குறிப்­பிட் டார்.

நாடா­ளு­மன்­றத்­தில் மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தினேஸ் குண­வர்த்­தன நிலை­யி­யற் கட்­ட­ளை­யின் கீழ் கேள்வி எழுப்­பி­னார்.

குழப்­பம் தோற்­று­விக்க முயற்­சியா?

‘கிளி­நொச்­சி­யில் நூற்­றுக்­க­ணக்­கான வரு­டங்­கள் பழ­மை­யான சின்­னங்­கள் கரைச்­சிப் பிர­தேச சபை­யால் அழிக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்­பான செய்­தி­கள் ஊட­கங்­க­ளில் வெளி­யா­கி­யி­ருந்­தன. வடக்­கில் பல இடங்­க­ளில் தொல்­பொ­ருள் சின்­னங்­கள் அழிக்­கப்­பட்­டுள்­ளன.

இது தொடர்­பாக பொறுப்­புக் கூறக் கூடிய அதி­கா­ரி­கள் எவ­ரும் எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை. வட­மா­காண சபை இது தொடர்­பாக எவ்­வித பாது­காப்­பையோ, அதி­கா­ரி­க­ளுக்கு வழி­காட்­டு­தல்­க­ளையோ வழங்­காது நடந்து கொள்­கின்­றது.

சிங்­க­ளம் மற்­றும் தமிழ் மக்­க­ளி­டையே காணப்­ப­டும் நம்­பிக்­கை­கள் மற்­றும் மதங்­க­ளுக்­கி­டை­யே­யான உற­வு­கள் இத­னால் தேவை­யில்­லாது பாதிப்­புக்கு கொண்டு செல்­லப்­ப­ட­லாம். இதற்கு இட­ம­ளித்து அரசு என்ற ரீதி­யில் நட­வ­டிக்­கை­யெ­டுக்­கா­தி­ருப்­பது வட­மா­காண சபை எதிர்­பார்க்­கும் குழப்­ப­க­ர­மான சூழலை ஏற்­ப­டுத்­தும் வகை­யி­லேயே இருக்­கும்’ என்­றார்.

இதற்­குப் பதி­ல­ளித்த உயர்­கல்வி மற்­றும் கலா­சாரா இரா­ஜாங்க அமைச்­சர் மொகான் லால் கிரேரு, இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக அறிந்­துள்­ளேன். அது தொல்­பொ­ருள் அழிப்பு அல்ல. வடக்கு மாகா­ணத்­தின் தொல்­பொ­ரு­ளி­யல் உதவி பணிப்­பா­ளர் உள்­ளிட்ட அதி­கா­ரி­கள் சம்­பவ இடத்­துக்­குச் சென்று ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பித்­துள்­ள­னர்.

கற்­கள் புதி­யவை

அந்த மதில் சுவர் ஏ – 9 வீதி­யில் டிப்­போச் சந்தி எனும் இடத்­தி­லேயே இருந்­துள்­ளது. இடித்து அகற்­றப்­பட்ட செங்­கற்­கள் அந்த இடத்­தில் காணப்­பட்­டுள்­ளன. இவற்றை எடுத்து ஆராய்ந்த போது அந்­தக் கற்­க­ளில் இலக்­கங்­கள் இடப்­பட்­டுள்­ளன. இவற்­றில் கலா­சார முக்­கோ­ணம், அவற்றை தயா­ரித்த பௌத்த ஆண்டு என்­பன குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

அதற்கு மேல­தி­க­மாக அந்­தக் கற்­களை தயா­ரித்த தர­கர்­க­ளின் இலக்­கங்­க­ளும் உள்­ளன. அப­ய­கிரி தூபி­யின் மறு­சீ­ர­மைப்­புப் பணி­க­ளுக்­காக அதில் இருக்­கின்ற கற்­களை ஒத்­த­வாறு கற்­களை அமைக்க ஒப்­பந்­தம் வழங்­கப்­பட்­டுள்­ளது. கற்­கள் பழைய கற்­க­ளி­லி­ருந்து பிரித்து பார்க்­கக் கூடி­ய­வாறு கலா­சார முக்­கோண சின்­னம், தயா­ரிப்­பா­ள­ரின் ஒப்­பந்த இலக்­கம் மற்­றும் அதனை தயா­ரித்த பௌத்த ஆண்டு என்­பன உள்­ளன.

அப­ய­கிரி தூபி­யின் மறு­சீ­ர­மைப்­புப் பணி­கள் மத்­திய கலா­சார நிதி­யத்­தி­னா­லேயே முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­படி வடக்கு தொல்­பொ­ரு­ளி­யல் உத­விப் பணிப்­பா­ளர் இவை தொடர்­பாக கூறும் போது அப­ய­கரி தூபியை மறு­சீ­ர­மைப்­ப­தற்­காக லொறி­யொன்­றில் கொண்­டு­வ­ரப்­பட்ட கற்­கள் தர­மில்­லாத கார­ணத்­தி­னால் நீக்­கப்­பட்­டுள்­ளன.

இரா­ணு­வத்­தின் வேலை

போர் முடி­வ­டைந்த பின்­னர் இரா­ணு­வத்­தி­னர் அந்­தக் கற்­களை ஒப்­பந்;தக்­கா­ரர்­க­ளின் அனு­ம­தி­யு­டன்; அந்­தப் பிர­தே­சத்­துக்கு கொண்டு வரப்­பட்­டுள்­ளன. இரா­ணு­வத்­தி­னர் கிளி­நொச்சி நக­ரில் அமைக்­கப்­பட்­டுள்ள இரா­ணுவ நினைவு தூபியை சுற்றி பழை­மை­யான முறை­மை­யி­லேயே அந்­தக் கற்­களை பயன்­ப­டுத்தி மதில் சுவர்­களை அமைத்­துள்­ள­னர்.

மீத­மா­கிய கற்­கள் அவ்­வி­டத்­தி­லி­ருந்து 20 மீற்­றர் தூரத்­தில் வீதிக்கு மறு­பக்­கத்­தில் சுவரை அமைத்­துள்­ள­னர். இதனை எதற்­காக அமைத்­தார்­கள் எனத் தெரி­ய­வில்லை.

கரைச்சி பிர­தேச சபை­யால் வாராந்த சந்தை மற்­றும் வாகன தரிப்­பி­டத்தை அமைப்­ப­தற்­காக அந்த இடத்தை தயார்­ப­டுத்­தும் போது புதிய செங்­கற்­க­ளால் அமைக்­கப்­பட்­டி­ருந்த சுவ­ரையே இடித்­துள்­ள­னர்.

இங்கு கூறப்­ப­டு­வது போன்று தொல்­பொ­ருள் அழிப்பு இடம்­பெ­ற­வில்லை. இதற்­கான ஆதா­ரங்­கள் இருக்­கின்­றன. பழ­மை­யான கட்­டி­ட­மென்­றால் அதன் அத்­தி­வா­ரம் ஆழத்­தி­லேயே இருக்­கும். ஆனால், இதில் ஒரு அடி வரை­யான அத்­தி­வா­ரமே இருந்­துள்­ளது.

அடை­யா­ளம் கண்­டுள்­ளோம்

மேலும், போர் முடிந்த பின்­னர் வடக்கு மாகா­ணத்­தில் புரா­தன இடங்­கள் மற்­றும் தூபி­களை இனங்­காண்­ப­தற்­காக ஆரம்­ப­கட்ட வேலைத்­திட்­டங்­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அந்த இடங்­கள் தொடர்­பாக ஆய்­வு­கள் செய்­யப்­ப­டுள்­ளன. இவற்­றில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள புரா­தன இடங்­கள் மற்­றும் தூபி­க­ளில் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் 176 கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.

இவற்­றில் 88 அர­சி­தழ் ஊடாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. மன்­னார் மாவட்­டத்­தில் 64 இடங்­க­ளில் 33 அர­சி­தழ் ஊடாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளன. வவு­னி­யா­வில் 50 இடங்­க­ளில் 28 அர­சி­தழ் ஊடாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளன. யாழ்ப்­பா­ணத்­தில் 79 இடங்­க­ளில் 58 அர­சி­தழ் ஊடாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

கிளி­நொச்­சி­யில் 18 இல் 8 அர­சி­தழ் ஊடாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளன. இதே­வேளை, மிகு­தி­யா­னவை ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட்டு அர­சி­த­ழில் அறி­விப்­ப­தற்­காக அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளன.

வடக்கு மாகா­ணத்­தில் தொல்­பொ­ரு­ளி­யல் எண்­ணிக்கை தொடர்­பாக கவ­னம் செலுத்தி பார்க்­கும் போது இவற்றை பாது­காப்­ப­தற்­காக இரண்டு பிரி­வு­க­ளாக பிரித்து பிர­தேச உதவி பணிப்­பா­ளர்­கள் இரு­வ­ரின் தலை­மைத்­து­வத்­தில் இரண்டு தொல்­பொ­ரு­ளி­யல் அலு­வ­ல­கங்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

யாழ்ப்­பா­ணம் மற்­றும் கிளி­நொச்சி மாவட்­டங்­களை இணைத்­த­தாக ஒரு அலு­வ­ல­க­மும், முல்­லைத்­தீவு, வவு­னியா, மன்­னார் ஆகிய மாவட்­டங்­களை இணைத்­த­தாக இன்­னு­மொரு அலு­வ­ல­க­மும் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

வடக்­கில் குறைவு

கடந்த 3 வருட காலப்­ப­கு­தி­யில் வடக்­கில் தொல்­பொ­ருள் அழிவு தொடர்­பாக மன்­னார் மாவட்­டத்­தில் 2016ஆம் ஆண்­டில் ஒரு சம்­ப­வ­மும் தொல்­பொ­ருள் திருட்டு, தொல்­பொ­ரு­ளுக்­கான சட்­ட­வி­ரோத அகழ்வு நட­வ­டிக்­கை­கள் உள்­ளிட்ட வேறு சம்­ப­வங்­கள் இரண்­டும் நடந்­துள்­ளன.

தொல்­பொ­ருள் அழிப்பு தொடர்­பாக ஒரு சம்­ப­வம் வடக்­கில் இடம்­பெற்­றுள்­ள­து­டன் தொல்­பொ­ருள் திருட்டு, தொல்­பொ­ரு­ளுக்­கான சட்­ட­வி­ரோத அகழ்வு போன்ற வேறு 12 சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன. 2017இல் கிளி­நொச்­சி­யில் ஒன்­றும், வவு­னி­யா­வில் ஒன்­றும் நடந்­துள்­ளன. 2018இல் எந்த அழிப்பு சம்­ப­வ­மும் பதி­வா­க­வில்லை.

வடக்­கில் தொல்­பொ­ருள் அழிப்­பு­கள் பெரி­ய­ள­வில் நடப்­ப­தாக கூறி­னா­லும் கடந்த 3 ஆண்­டு­க­ளில் நடந்த தொல்­பொ­ருள் தொடர்­பான குற்­றங்­கள் மற்­றும் அழிப்­பு­கள் தொடர்­பாக வடக்கு மாகா­ணத்­தில் 2016இல் 12 சம்­ப­வங்­களே பதி­வா­கி­யுள்­ளன. ஆனால், நாடு முழு­வ­தும் 203 சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

வடக்­கில் 10 சம்­ப­வங்­க­ளும் நாடு முழு­வ­தும் 290 சம்­ப­வங்­க­ளும், 2018இல் நாடு முழு­வ­தும் 184 சம்­ப­வங்­கள் நடந்­துள்ள நிலை­யில் வடக்­கில் 8 சம்­ப­வங்­களே பதி­வா­கி­யுள்­ளன. இவற்­றைப் பார்க்­கும் போது வடக்­கில் குறைந்­த­ள­வான சம்­ப­வங்­களே இடம்­பெற்­றுள்­ளன. ஆனால், இவற்­றில் அதி­க­மான அழி­வு­கள் அனு­ரா­த­பு­ரத்­தி­லும் அதற்கு அடுத்­த­தாக குரு­நா­கல் மற்­றும் தங்­கா­லை­யி­லேயே இடம்­பெற்­றுள்­ளன – என்­றார்.

https://newuthayan.com/story/09/கிளி­நொச்­சி­யில்-பௌத்த-சின்­னங்­கள்-அழிப்­பாம்-சபை­யில்-சீறி­யது-மகிந்த-அணி.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.