Jump to content

மோசமான ஒப்பந்தத்தைவிட உடன்பாடற்ற பிரெக்சிற் சிறந்தது: மே


Recommended Posts

மோசமான ஒப்பந்தத்தைவிட உடன்பாடற்ற பிரெக்சிற் சிறந்தது: மே

 

 

2018-09-21T131130Z_1_LWD0014J2EXQF_RTRWNEV_E_5164-BRITAIN-EU-MAY-720x450.jpg

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பில் மோசமானதொரு வெளியேற்ற ஒப்பந்தம் எட்டப்படுவதைவிட, உடன்பாடற்ற பிரெக்சிற் சிறந்தது என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

பிரெக்சிற் பேச்சுவார்த்தை தொடர்பாக லண்டனில் நேற்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நான் எப்போதும் கூறுவது போன்று இந்த பேச்சுவார்த்தைகள் கடுமையானதாக அமைந்தது.

இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு எட்டப்பட வேண்டுமாயின் உண்மை நிலையை எதிர்கொள்ள வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் நீடித்த உறவை பேணுவதற்கு இரண்டு பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. முதலாவது பிரச்சினை பொருளாதார உறவு. இந்த விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் எமக்கு இரண்டு தேர்வுகளை மாத்திரமே வழங்கியுள்ளது.

ஐரோப்பிய பொருளாதாரம் மற்றும் சுங்க ஒன்றியத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா இணைந்திருப்பது முதலாவது தேர்வு. பிரித்தானியாவிற்கு அடிப்படை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்பது இரண்டாவது தேர்வு. ஆனால் இந்த யோசனை நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிராகரிக்கப்பட்டது” எனவும் குறிப்பிட்டார்.

http://athavannews.com/மோசமான-ஒப்பந்தத்தைவிட-உட/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.