Jump to content

ஜனாதிபதி கொலை சதி குறித்த உரையாடல்! வெளியாகும் பல அதிர்ச்சித் தகவல்கள்


Recommended Posts

ஜனாதிபதி கொலை சதி குறித்த உரையாடல்! வெளியாகும் பல அதிர்ச்சித் தகவல்கள்

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நாலக டி சில்வா சதித் திட்டம் தீட்டியதாக வெளியான தகவல்கள் கடந்த நாட்களில் நாட்டில் பல சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்தன.

இந்நிலையில், நாலக டி சில்வா சதித் திட்டம் தீட்டியதாக வெளியான தகவல்கள் குறித்த உரையாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த உரையாடல் பின்வருமாறு,

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: எனக்கு மேலதிக வேலைகள் அதிகம், 14 நாட்கள் வெளிநாடு சென்றிருந்தேன். நான் இறுகிப் போயுள்ளேன்.

நாமல் குமார: நான் பயந்து போனேன். சேர் போனையும் ஓப் செய்துவிட்டிருந்தீர்கள். அமித் வீரசிங்கவின் பிரச்சினையால் உங்களுக்கு ஏதும் பிரச்சினையோ என பயந்து போனேன்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: பிரச்சினைகள் என்றால் வந்துள்ளனர். சிலர் எனக்கு எதிராக சேறு பூசுகின்றனர். நான் அவற்றுக்கு அஞ்சவில்லை. நான் அதனை கண்டு கொள்வதுமில்லை. நான் பதினான்கு நாட்கள் வெளிநாடு சென்றிருந்தேன். உனக்கு முடியுமா அவனுக்கு எதிராக பௌத்த துறவிகளை குரல் கொடுக்கச் செய்ய?

நாமல் குமார: எஸ்.ஐ.எஸ் பொறுப்பாளருக்கு எதிராகவா?

பிரதிப் பொலிஸ் மா அதிபர் : ஆம்

நாமல் குமார: ஒரு பிரச்சினையும் இல்லை, சேர் எனக்கு சரியான தகவல்கள்தான் தேவை.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: நான் தகவல்களைத் தருகின்றேன். எப்படியாவது அவனுக்கு அவப்பெயர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். நேரடியாக அவனை பீச்சானாக்க (இழிவுபடுத்துவதற்கான வட்டாரவழக்கு) வேண்டும்.

அமீத் வீரசிங்கவை இவர் சிக்கலில் போட்டார் என்ற வகையில் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். கண்டி பிரதிப் பொலிஸ் மா அதிபர் இல்லை, அரச புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளரே இதற்கு பொறுப்பு என்பதனை வெளிக்காட்ட வேண்டும்.

பௌத்த அமைப்புக்களின் ஊடாக இதனை வெளிப்படுத்த வேண்டும். இவரின் ஆட்கள் அமித்தை சுற்றியிருந்னர் என வெளிக்காட்ட வேண்டும். அமித்தை வன்முறைகளில் ஈடுபடத்தூண்டியவர் எனவும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

அமித் வீரசிங்கவை நிர்க்கதியாக்கி அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளிக்காட்டினால், அனைவரும் கோபித்துக்கொள்வார்கள்.

நாமல் குமார: அவரின் பெயர் என்ன சேர்

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: நிலந்த ஜயவர்தன

நாமல் குமார: நிலந்த ஜயவர்தன, பிரதமர் நம்புகின்றாரா?

பிரதிப் பொலிஸ் மா அதிபர் : பிரதமரும், ஜனாதிபதியும் நம்புகின்றனர்.

நாமல் குமார: அந்த இருவரும் நம்புகின்றனர்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: ம்ம். இந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டால், பிரதமர் டக்கென்று அவரை கைவிடுவார்.

நாமல் குமார: லத்தீப் ஐயா பற்றி அறியக் கிடைத்தது.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் : அவரை எஸ்.டி.எப்லிருந்து தூக்க வேண்டும்.

நாமல் குமார: அவருக்கு நாகொடிக் பிரிவு உள்ளதல்லவா?

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: நாகொடிக் இருப்பது எமக்கு பிரச்சினை கிடையாது. எஸ்.டி.எப்லிருந்து தூக்கினால் அதிகாரங்கள் சிதைந்து போகும். எஸ்.டி.எப்ல் பதவி வகிப்பதனால்தான் அவருக்கு அதிகாரம் காணப்படுகின்றது.

நாமல் குமார: நாகொடிக் (போதைப் பொருள் தடுப்புப் பிரிவில்) எனது நண்பர் ஒருவர் இருக்கின்றார். எஸ்.டி.எப். (விசேட அதிரடிப்படை)க்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகளை பொலிஸ் மா அதிபர் நிறுத்திக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: அது பொய் கதை, மக்களுக்கு எஸ்.டி.எப். பீதி ஏற்பட்டுள்ளது. நாமே மஹாசோன் அமைப்பை பிடித்தோம். எஸ்.டி.எப். அதனைச் செய்யவில்லையே. எமக்கு முடியும், பொலிஸாரினால் மக்களுக்கு சேவையாற்ற முடியும். எஸ்.டி.எப். எதற்கு பொய்யான பீதியே உருவாக்கப்பட்டுள்ளது.

நாமல் குமார: சேர் சொன்னது போன்று முகநூல் கணக்கு ஒன்றை உருவாக்கி இவற்றை போட வேண்டும். இன்று முகநூலே சிறந்த ஊடாக அமைந்துள்ளது. ஒரே மணித்தியாலத்தில் நாடே உலகமே தகவல்களை அறிந்து கொள்ள வழியமைக்கும். பஸ்ஸில் ரயிலில் செல்லும் போதும் அதனை பார்க்கின்றார்கள்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: அதற்கு ஓர் கணக்கு உருவாக்க முடியாதா?

நாமல் குமார: இல்லை சேர். எல்லோருக்கும் தெரியும்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: உயிரிழந்த நபர்களின் பெயர்களில் உருவாக்க முடியாதா

நாமல் குமார: முடியும் சேர். அப்படித்தான் பலர் உருவாக்குகின்றார்கள்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: அவதானமாக, தொழில்நுட்பமும் உண்டு சட்டமும் உண்டு. சேறு பூச போய் உள்ளே இருக்க நேரிடும். நான் அடித்தால் ஒரே அடிதான் இவனால் எழும்ப முடியாது. சாலிய ரனவக்க மற்றும் டென் பிரியசாத் இவனுடன் இணைந்துள்ளனர். அதனை புளொக் செய்ய வேண்டும்.

நான் முகநூல் கணக்கு ஒன்றை ஆரம்பிக்கின்றேன், அதற்கு இவர்கள் செய்யும் மோசமான செயற்பாடுகளை அம்பலப்படுத்த வேண்டும். இவர்கள் இருவரையும் பீச்சானாக்க வேண்டும். வரும் தேர்தலுக்கு முன்னதாக இரண்டு மூன்று பேரை தாக்க வேண்டுமென்றால் முடியும்தானே.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: என்னுடன் தொடர்பு பேணுவேரை தேடுகின்றனர்.

நாமல் குமார: உண்மையில் சேருக்கு அஞ்சுகின்றனர்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: ஆம் எனக்கு அவர்கள் அஞ்சுகின்றார்கள்.

நாமல் குமார: நீங்கள் பொலிஸ் மா அதிபராவீர்கள் என்று அஞ்சுகின்றார்கள் போலும். ஏதேனும் மோசடியான முறையில் தேசியப் புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பானர் பணம் சம்பாதித்திருக்க வேண்டும்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: ஆம் அவ்வாறு பணம் சம்பாதித்துள்ளார். இவருக்கு இந்திய புலனாய்வுப் பிரிவுடன் தொடர்பு உண்டு. பல மில்லியன் ரூபா பெறுமதியான வியாபாரம் செய்கின்றார்கள். ஓய்வு பெற்றுக்கொண்ட பின்னரும் அந்த வியாபாரத்தை முன்னெடுக்க முடியும்.

நாமல் குமார: டி.ஐ.ஜீ நந்தன முனசிங்க என்பவர் பற்றி கேள்வி பட்டேன், அப்படி ஒருவர் இருக்கின்றாரா?

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: அவர்தான் பெரிய பிரச்சினை, பாலியல் தொழில் மையங்கள் ஊடாக பணம் சம்பாதிக்கின்றார், ஊழல் மோசடி குகையென்றே அவரை கூற வேண்டும்.

நாமல் குமார: சீனியர் டி.ஐ.ஜீ ஒருவர்தானே அவர்?

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: ஆம். ஹக்மீமன தயாரட்ன உள்ளிட்டோருக்கு பிணை வழங்குவதற்கு இவரே நடவடிக்கை எடுத்திருந்தார். நான் உங்களுக்கு பேசினால் தொலைபேசியில் பதிலளிக்கவும்.

நாமல் குமார: என்னுடைய போனுக்கா சேர்

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: இந்த மொபிடேல் போனை ஆற்றில் வீசி விடவும். தேடிக்கொள்ள முடியாதவாறு ஆற்றில் வீசவும். அடுத்த வாரம் புதிய போன் ஒன்று கிடைக்கும். எமது காரியாலயத்திற்கு ஐந்து போன் வரும் அதில் ஒன்றை தருகின்றேன். புதிய சிம் ஒன்றை போட்டுக் கொள்ளவும்.

அதில் எனக்கு மட்டும் அழைக்கு எடுக்கவும். வீட்டில் இருந்து அழைப்பு எடுக்க வேண்டாம், வீட்டிலிருந்து ஒரு கிலோ மீற்றர் வந்து என்னுடன் பேசவும். தேசிய புலனாய்வு பிரிவு உங்களை பின்தொடரக்கூடும். நானும் ஓர் தனியான இலக்கத்தை பெற்றுக் கொள்கின்றேன் அதன் ஊடாக இருவரும் தொடர்பு கொள்ள முடியும். அல்பிட்டிய பகுதியில் நிஹால் தலதூ என்ற நபர் இருக்கின்றான் அவன் பௌத்த பிக்குகளுடன் நல்ல சிநேகிதம்.

நாமல் குமார: பொலிஸ் உத்தியோகத்தரா

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: ஆம் அல்பிட்டி எஸ்.ஐ ஒருவர். பெசில், கோதபாய, பொதுபல சேனா உள்ளிட்ட தரப்புக்களுடன் அவனுக்கு தொடர்பு உண்டு. இந்த நபருக்கும் அமைப்புக்களுக்கும் இடையிலான தொடர்பு பற்றிய விபரங்கள் தேடித் தாருங்கள். இந்த நபர்கள் வழங்கும் பொலிஸ் மற்றும் சட்ட ஆலோசனைகள் என்ன என்பது பற்றியும் தெரிவியுங்கள். நினைவிருக்கட்டும் பெயர் நிஹால் தல்துவ.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: ஜனாதிபதி மீதும் எனக்கு நம்பிக்கையில்லை. நாம் பிரதமர் மீது நம்பிக்கை வைத்தே செயற்பட வேண்டும். 2020ம் ஆண்டில் கோதபாய ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இணைந்து கொள்வார்கள்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடு காணப்படுகின்றது. ஜனாதிபதியை நம்ப முடியாது. அதனால் முடியாத சந்தர்ப்பம் வந்தால் 2020ம் ஆண்டு அண்மிக்கும் போது கோதபாய ராஜபக்ஸவிற்கோ அல்லது மைத்திரிபால சிறிசேனவிற்கோ மாகந்துரே மதுஸைக் கொண்டு ஏதேனும் செய்யுங்கள். முடிந்த எதையேனும் செய்யுங்கள். ஏனென்றால் கோதபாயவிற்கும் மதுஸிற்கும் முரண்பாடு உண்டு அதேபோன்று மைத்திரிக்கும் மதுஸிற்கும் இடையில் முரண்பாடு உண்டு.

இந்நிலையில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் என்ற போர்வையில் வேறும் எவரும் பேசினார்களா அல்லது அவரே பேசினாரா என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

 

https://www.tamilwin.com/politics/01/194092?ref=home-feed

Link to comment
Share on other sites

மைத்திரி, கோத்தா கொலைச்சதி இந்திய பிரஜையிடம் விசாரணை

 

இ.சதீஸ்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவை கொலை செய்ய மேற்­கொண்­ட­தாகக் கூறப்­படும் சதித்­திட்டம் தொடர்பில் கைது­செய்­யப்­பட்ட இந்­தி­யப்­பி­ரஜை வழங்­கிய தக­வல்கள் முன்­னுக்குப் பின் முர­ணாக இருப்­பதால் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் அவ­ரிடம் தொடர்ந்து விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவை கொலை செய்ய மேற்­கொண்ட சதித்­திட்டம் தொடர்பில் ஊழ­லுக்கு எதி­ரான படை அமைப்பின் பணிப்­பாளர் நாமல் குமார அண்­மையில் பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யி­ருந்தார்“. இந்­த­நி­லையில் இவரை தொடர்­பு­கொள்ள முயற்­சித்­த­தாக சந்­தே­கிக்­கப்­படும் இந்­தி­யப்­பி­ர­ஜை­யொ­ருவர் நேற்று முன்­தினம் கைது­செய்­யப்­பட்­டுள்ளார். 

அவ­ரிடம் குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரி­வினர் மேற்­கொண்ட விசா­ர­ணை­க­ளின்­போது அவர் வழங்­கிய வாக்­கு­மூ­லத்தில் ஏற்­பட்ட முன்­னுக்குப் பின் முர­ணான தக­வல்­களின் கார­ண­மாக அவரை தொடர்ந்து தடுத்து வைத்து விசா­ரிக்க மேலும் கால அவ­காசம் கோரப்­பட்­டது. இத­னை­ய­டுத்து அவரை தொடர்ந்து விசா­ரிக்க நேற்­றை­ய­தினம் அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டது.

குறித்த 53 வய­தான இந்­தி­யப்­பி­ர­ஜை­யிடம் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களின் போது குறித்த நபர் இந்­தி­யாவில் சட்­ட­வி­ரோத அமைப்­பொன்றில் இணைந்து செயற்­பட்டு வந்­த­தா­கவும் இதன் கார­ண­மாக அங்கு உயிர் அச்­சு­றுத்தல் இருந்­ததால் இலங்­கைக்கு தப்­பி­யோடி வந்­த­தா­கவும் கூறி­யுள்ளார்.

இலங்­கையில் அவர் அகதி அந்­தஸ்து கோரி­ய­போதும் அது கிடைக்­க­வில்­லை­யென்றும் அண்­மையில் நாமல் குமார பகி­ரங்­கப்­ப­டுத்­திய விடயம் தொடர்பில் விளக்கம் பெறு­வ­தற்­கா­கவே வரக்­கா­பொ­லை­யி­லுள்ள அவ­ரு­டைய வீட்டில் வைத்து அவரைத் தொடர்­பு­கொள்ள முயற்­சித்­த­தா­கவும் அவர் கூறி­யுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இந்தியப்பிரஜையின் வாக்குமூலத்தில் முன்னுக்குப்பின் முரணான விடயங்கள் இருப்பதாக சந்தேகித்த குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-09-23#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
    • முற்றிலும் உண்மை ஆனால் மீசாலையில் வ‌சிக்கும் என‌து அத்தை வ‌ய‌தான‌ கால‌த்திலும் சிங்க‌ள‌வ‌னின் அட‌க்கு முறைய‌ தாண்டி த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்புக்கு தொட‌ர்ந்து ஓட்டு போடுகிறா அதோட‌ அத்தைய‌ ஏதோ ஒரு ச‌ம்ப‌வ‌த்தில் சாலையில் வைச்சு மிர‌ட்டினார்க‌ள் அத்தை அவேன்ட‌ கைய‌ த‌ள்ளி விட்டு வீட்டுக்கு ந‌ட‌ந்து வ‌ந்த‌வா 2009க‌ட‌சியில் ட‌க்கிள‌ஸ்சின் ஆட்க‌ள் வீடு புகுந்து நெஞ்சில் துப்பாக்கிய‌ வைச்சு மிர‌ட்டின‌வை ஆனால் அவ‌ன் ப‌ய‌ப்பிட‌ வில்லை பிற‌க்கு உற‌வுக‌ள் சொல்ல‌ அர‌சிய‌லில் இருந்து முற்றிலுமாய் வில‌கி விட்டான் என‌து ம‌ச்சான் ..............................
    • "ஊசிப் போன வடை" என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.