Jump to content

கூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார்....சி.வி.


Recommended Posts

கூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார்

01MAIN22092018Page1Image0008-6893f4b4184e97c11771916748b1e8422974c967.jpg

 

ஆர்.ராம்

அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.

சம்­பந்­த­னுடன் எனக்­கென்ன பிணக்கு?

கூட்­ட­மைப்பபை பதிவு செய்ய வேண்டும்

இந்­தி­யா­வுடன் நல்­லு­றவு உள்­ளது

முத­ல­மைச்சர் பதவி முடி­வுக்கு வந்­ததும் தமிழ் மக்­கள் பேர­வையின் நட­வ­டிக்­கை­களில் கூடிய கவனம் செலுத்­துவேன். கட்­சி­க­ளிலும் பார்க்க மக்­களை ஒன்­றி­ணைத்து எமது மக்­களின் தேவை­களை உல­கிற்கு எடுத்துக் கூற என்னால் முடிந்­த­வற்றை செய்வேன் என்று வட­மா­காண முத­ல­மைச்சர்

சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

தற்­போ­தைய தலை­மைகள் போய் கூட்­ட­மைப்பு பதிவு பெற்று மாற்­றுத்­த­லைமை உதித்தால் மீண்டும் கூட்­ட­மைப்பின் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தற்கு சாத்­தியம் உள்­ளது என்று குறிப்­பிட்­டவர் வட­மா­காண சபையின் ஒரு­சில பின்­ன­டை­வு­க­ளுக்கு அர­சியல் ரொட்­டித்­துண்­டு­களைக் காட்டி அற­நிலை மறந்த அவை­யினர் சிலரே காரணம். அவ்­வாறு இருந்தும் எமது செயற்­பா­டுகள் செவ்­வனே இருந்­தன என்றும் சுட்­டிக்­காட்­டினார்.

ஏதிர்­வரும் மாதம் 25ஆம் திக­தி­யுடன் வட­மா­காண சபையின் முத­லா­வது ஆயுட்­காலம் நிறை­வுக்கு வர­வுள்ள நிலையில் அடுத்­த­கட்ட செயற்­பா­டுகள் குறித்து முத­ல­மைச்சர் சி.வி;.விக்­கி­னேஸ்­வரன் வீர­கே­சரி வார இத­ழுக்கு வழங்­கிய பிரத்­தி­யேக கருத்துப் பரி­மாற்­றத்தின் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அதன் முழு­வ­டிவம் வரு­மாறு,

கேள்வி – ஒக்­டோபர் 23ஆம் திகதி உங்­களின் பிறந்த தினத்­தன்று வட­மா­காண சபையின் முதலாம் அத்­தி­யாயம் நிறை­வுக்கு வர­வுள்ள நிலையில் அடுத்த கட்டம் என்ன செய்யப் போகி­றீர்கள்?

பதில் - 24ஆம் திகதி பௌர்­ணமி தின­மா­கை­யாலும் 25ஆம்; திக­தியே கடைசித் தின­மாகக் கூறப்­பட்­டுள்­ள­தாலும் வட மாகா­ண­சபை ஒக்­டோபர் 23ஆம் திகதி கூட இருக்­கின்­றது. அன்­றைய தினம் பிறந்த தின­மாக அமைந்­தது எதேச்­சை­யாக ஏற்­பட்ட ஓர் ஒற்­றுமை.

நான் முத­ல­மைச்சர் பதவி முடி­வுக்கு வந்­ததும் தமிழ் மக்கள் பேர­வையின் நட­வ­டிக்­கை­களில் கூடிய கவனஞ் செலுத்த உள்ளேன். கட்­சி­க­ளிலும் பார்க்க மக்­களை ஒன்­றி­ணைத்து, எமது மக்­களின் தேவை­களை, அபி­லா­ஷை­களை, விருப்பு வெறுப்­புக்­களை, கரி­ச­னை­களைத் தெரிந்து வைத்து உல­கிற்கு எடுத்துக் கூறவும் அர­சாங்­கத்­திற்கு எடுத்துக் கூறவும் வேண்­டி­யுள்­ளது. என்னால் முடிந்­ததை இது சம்­பந்­த­மாகச் செய்ய முன்­வ­ருவேன்.

கேள்வி – அடுத்த கட்டம் தொடர்பில் 4 தெரி­வு­களைக் கொண்­டி­ருக்கும் நீங்கள் இறுதி முடிவை எப்­போது எடுக்­க­வுள்­ளீர்கள்?

பதில் - வட­மா­கா­ண­சபைத் தேர்­தல்கள் உடனே நடை­பெ­றக்­கூ­டிய சாத்­தியக் கூறுகள் மிகவும் குறைவு. முதலில் நான்­கா­வது தெரிவில் ஈடு­பட்டுக் கொண்டு மேற்­கொண்டு நடக்க வேண்­டி­யவை பற்றி பின்னர் ஆராய்வோம்.

கேள்வி – உங்­களை முத­ல­மைச்­ச­ராக தெரிவு செய்ய வேண்டும் என்­பதில் ஆரம்பம் முதல் இறு­தி­வரை இறுக்­க­மாக இருந்த கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­தனை சந்­திப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் உண்டா?

பதில் - நான் எப்­பொ­ழுதும் ஆயத்தம். அவ­ருடன் எனக்­கென்ன பிணக்கு? அவரின் வலது கரம் இட­ம­ளித்தால் அவரும் என்னைச் சந்­திப்­பதில் அவ­ருக்கு எந்தத் தடங்­கலும் இருக்­காது என்று நம்­பு­கின்றேன்;.

கேள்வி – உங்­க­ளி­டத்தில் காணப்­படும் 4 தெரி­வு­களில் நான்­கா­வது தெரிவை மேற்­கொள்ளும் பட்­சத்தில் கூட்­ட­மைப்பு வர­வேற்­புடன் ஆத­ரவை நல்கும் என அதன் பேச்­சாளர் தெரி­வித்­தி­ருக்­கின்­றதைக் கருத்தில் எடுப்­பீர்­களா?

பதில் - கூட்­ட­மைப்பு ஏற்­க­னவே ஆத­ரவு நல்­கியே வரு­கின்­றது. பேச்­சா­ள­ருக்கு இது தெரி­யாது போலும்!

கேள்வி – கொள்கை ரீதி­யாக புதிய கூட்­ட­ணியை உரு­வாக்கி அடுத்த தேர்­தலில் கள­மி­றங்­கு­வீர்­களா?

பதில் - இன்­னமும் முடி­வெ­டுக்­க­வில்லை. ஆனால் கொள்கை ரீதி­யா­கவே எனது நிலை இருக்கும் என்­பதில் சந்­தேகம் இருக்கத் தேவை­யில்லை.

கேள்வி – எதிர்­கா­லத்தில் கூட்­ட­மைப்­புடன் கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்று அதன் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தற்கு சாத்­தி­யப்­பாடு உள்­ளதா?

பதில் - தற்­போ­தைய தலை­மைகள் போய் கூட்­ட­மைப்பு பதிவு பெற்று மாற்­றுத்­த­லைமை உதித்தால் சாத்­தி­யப்­பாடு உண்டு.

கேள்வி – வட­மா­காண சபையின் வினைத்­தி­ற­னான செயற்­பாட்டில் பின்­ன­டை­வுகள் உள்­ளன என்­பதை ஏற்­றுக்­கொள்­கி­றீர்­களா?

பதில் - இன்­றைய மத்­திய அர­சாங்கம் பற்­றியும் அவர்­களின் வினைத்­திறன் சம்­பந்­த­மா­கவும் கேள்­விகள் எழுப்­பப்­பட்­டுள்­ளன. ஆகவே யாரும் இவ்­வா­றான கேள்­வி­களை யாரைப்­பற்­றியும் அடுக்­கலாம். எம்மைப் பொறுத்த வரையில் பின்­ன­டை­வு­க­ளுக்குக் காரணம் நாமல்ல. எம்முள் இருந்து கொண்டே எமக்குக் குழி­ப­றித்துக் கொண்­டி­ருப்­போரே அதற்குப் பதில் கூற வேண்டும். அர­சியல் ரொட்டித் துண்­டு­களைக் காட்டி அற நிலை மறந்த அவை­யினர் சிலரை வைத்து அரங்­கேற்­றிய நாட­கங்கள் பின்­ன­டைவைத் தராமல் எதனைத் தரு­வன? அப்­படி இருந்தும் எமது செயற்­பா­டுகள் பற்றி நல்­லதே கூறப்­பட்­டுள்­ளன. நாடு பூரா­கவும் உள்ள 800க்கும் அதி­க­மான அரச அமைச்­சுக்கள், திணைக்­க­ளங்கள் போன்­ற­வற்றுள் 2015ஆம் ஆண்டில் எமது மாகாண முத­ல­மைச்சர் அமைச்சே சில விட­யங்கள் சம்­பந்­த­மாக முத­லிடம் பெற்­றது. 2016இலும் நாம் முதன்மை நிலை­யில்த்தான் அடை­யாளம் காட்­டப்­பட்­டுள்ளோம். சதிகள் பல நடந்­தாலும் எமது செயற்­பா­டுகள் வினைத்­தி­ற­னு­டன்தான் நடாத்­தப்­பட்டு வரு­கின்­றன. முட்­டை­களை இட்­டு­விட்டு கொக்­க­ரித்து எமது வினைத்­திறன் பற்றி பறை­சாற்ற வேண்­டிய அவ­சியம் எமக்­கில்லை.

கேள்வி – இது­வரை காலத்தில் வட மாகாண சபை சாதித்­தது என்ன?

பதில் - எமது சாத­னைகள் பற்­றிய கைநூல் விரைவில் வெளி­வரும். அதை வாசித்துத் தெரிந்து கொள்­ளலாம்.

கேள்வி – கஜேந்­தி­ர­குமார் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் ஆகியோர் இரு துரு­வ­மா­கி­யுள்ள நிலையில் புதிய கூட்­டணி ஒன்று அமை­வ­திலும் சிக்­கல்கள் இருப்­பது போல் உள்­ளதே?

பதில் - கொள்­கைகள் ஒன்றாக இருந்தால், மக்களின் நலனே முக்கியமென்ற எண்ணம் வேரூன்றி விட்டால் துருவங்கள் கூட இணையலாம்.

கேள்வி – மஹிந்த ராஜபக்ஷ உட்பட இலங்கையின் அரசியல் தலைமைகள் இந்தியாவின் கரிசனையை கவனத்தில் கொண்டு செயற்படுகின்ற சூழல் காணப்படுகின்ற நிலையில் தொடர்ந்தும் அரசியல் களத்தில் பயணிப்பதை உறுதிசெய்துள்ள நீங்கள் இந்தியாவுடன் உறவுகளை கட்டியெழுப்புவது தொடர்பில் கவனம் செலுத்துவீர்களா?

பதில் - இந்தியாவுடனான எனது உறவுகள் என்றுமே நன்றாகவே இருந்து வருகிறது. அதில் கட்டி எழுப்ப எதுவும் இல்லை.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-09-23#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைமை மாறினால் களமிறங்கத் தயார் ; விக்னேஸ்வரன்

மாயவன்
49D96564-4089-4CA4-844A-03AD0AC6DE43

தற்போதைய தலைமைகள் போய், மாற்றுத் தலைமை உதித்தால் மீண்டும் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக களமிங்குவதற்கு சாத்தியும் உள்ளது எனத் தெரிவித்த வட மாகாண  முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வட­மா­காண சபையின் ஒரு­சில பின்­ன­டை­வு­க­ளுக்கு அர­சியல் ரொட்­டித்­துண்­டு­களைக் காட்டி அற­நிலை மறந்த அவை­யினர் சிலரே காரணம். அவ்­வாறு இருந்தும் எமது செயற்­பா­டுகள் செவ்­வனே இருந்­தன என்றும் சுட்­டிக்­காட்­டினார்.

எதிர்­வரும் மாதம் 25 ஆம் திக­தி­யுடன் வட­மா­காண சபையின் முத­லா­வது ஆயுட்­காலம் நிறை­வுக்கு வர­வுள்ள நிலையில் அடுத்­த­கட்ட செயற்­பா­டுகள் குறித்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் முத­ல­மைச்சர் பதவி முடி­வுக்கு வந்­ததும் தமிழ் மக்­கள் பேர­வையின் நட­வ­டிக்­கை­களில் கூடிய கவனம் செலுத்­துவேன். கட்­சி­க­ளிலும் பார்க்க  மக்­களை ஒன்­றி­ணைத்து எமது மக்­களின் தேவை­களை உல­கிற்கு எடுத்துக் கூற என்னால் முடிந்­த­வற்றை செய்வேன் என்று விக்­கி­னேஸ்­வரன் இதன்போது தெரி­வித்தார்.

2018-09-23

http://tamilleader.org/2018/09/23/தலைமை-மாறினால்-களமிறங்கத/

Link to comment
Share on other sites

விக்னேஸ்வரனின் சுயரூபம் தெளிவாகி விட்டது…!!

 

வடக்கு மாகா­ணத்­தின் தற்­போ­தைய முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அடுத்த முறை­யும் முத­ல­மைச்­சர் பதவி தொடர்­பா­கச் சிந்­திப்­பது தெரி­கின்­றது. அவ்­வா­றில்­லா­விட்­டால் கூட்­ட­மைப்­பின் தலைமை பதவி வில­கி­னால் முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ரா­கக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் கள­மி­றங்­கு­வேன் என அவர் கூறி­யி­ருக்­க­மாட்­டார்.

கூட்­ட­மைப்­பை­யும் கூட்­ட­மைப்­பின் தலை­மை­யை­யும் தாக்­கிப்­பேசி வரு­வதை அவர் வழக்­க­மா­கக் கொண்­டுள்ள நிலை­யில் தற்­போது இத்­த­கைய கருத்தை அவர் வெளி­யிட்­டுள்­ளமை கவ­னத்­துக்­கு­ரி­யது. கூட்­ட­மைப்­பின் தலை­மை­யைப் பதவி வில­கி­வி­டு­மாறு அந்த அமைப்­பைச் சேர்ந்த எவ­ருமே கோரிக்கை விடுத்­த­தில்லை. முன்­னர் கூட்­ட­மைப்­பில் இணைந்­தி­ருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்­சி­யின் தலை­வ­ரும், சிவ­சக்தி ஆனந்­தன் போன்­ற­ வர்­க­ளும் கூட்­ட­ மைப்­பின் தலைமை தொடர்­பாக எதிர்க் கருத்­துக்­களை வெளி­யிட்டு வந்­துள்­ள­னர். அவர்­கள் இப்­போது கூட்­ட­மைப்­பில் இல்லை. ஆனால் கூட்­ட­மைப்­பில் இருந்­து­கொண்டே அதை மோச­மாக விமர்­சித்து வரு­கி­றார் விக்­னேஸ்­வ­ரன்.

கூட்­ட­மைப்­பில் இருந்து
அவர் முத­லில் வில­க­லாமே?
மக்­கள் பலம் தம்­மு­டன் இருக்­கும்­வ­ரை­யில் தம்மை எவ­ரா­லும் அசைத்­து­விட முடி­யா­தென அவர் அடிக்­கடி கூறி வரு­கின்­றார். அவ­ருக்கு எதி­ரா­கத் தமி­ழ் அரசுக் கட்சியினர் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தைக் கொண்­டு­வந்­த­போது அவ­ருக்கு ஆத­ர­வாக மக்­கள் கூட்­டம் திரண்­டி­ருந்­தது உண்­மை­தான். ஆனால் அந்­தக் கூட்­டம் அவ­ருக்கு உரி­ய­தல்ல. தமி­ழ் அரசுக் கட்­சிக்­கும், கூட்­ட­ மைப்­புக்­கும் எதி­ரான கூட்­டம்­தான் அது. இதை அவர் தவ­றா­கப் புரிந்­து­ கொண்­டமை அவ­ரது அர­சி­யல் அனு­ப­வ­மின்­மையை எடுத்­துக் காட்­டு­கின்­றது. கூட்­ட­மைப்­பும், அதன் தலை­மை­யும் சரி­யில்­லை­யென்­றால் அங்­கி­ருந்து வெளி­யே­றி­வி­டு­வ­தற்கு அவர் ஏன் தயங்­கு­கி­றார்? அவர் இன்­ன­மும் கூட்­ட­மைப்­பில் ஒட்­டிக்­கொண்­டி­ருப்­பது எவ­ருக்­குமே புரி­யாத மர்­ம­மாக நீடிக்­கின்­றது.

தனது செல்­வாக்­கா­கக் கரு­த­மு­டி­யுமா?
2013ஆம் ஆண்­டுத் தேர்­த­லில் வட பகுதி மக்­கள் விக்­னேஸ்­வ­ரன்­தான் முத­ல­மைச்­சர் பத­வி­யில் அம­ர­வேண்­டு­மென ஒரு­போ­துமே கேட்­ட­தில்லை. பெரும்­பா­லா­ன­வர்­கள் அவரை அறிந்­தி­ருக்­க­வு­மில்லை. கூட்­ட­மைப்­பின் தலைவர்­தான் அவரை அர­சி­ய­லுக்­குள் கொண்டு வந்தவர் என்­பது பல­ருக்­கும் தெரிந்த விட­யம். அவ­ரொரு ஓய்­வு­பெற்ற உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர் என்ற வகை­யில் அவர்­மீது வட­ப­குதி மக்­கள் நம்­பிக்­கை­வைத்­துத் தமது வாக்­கு­களை அமோ­க­மாக அள்ளி வழங்­கி­னார்­கள். இதை விக்­னேஸ்­வ­ரன் தனது சொந்­தச் செல்­வாக்­கா­கக் கருத முடி­யுமா?

தம்­மி­டம் நான்கு தெரி­வு­கள் இருப்­ப­தா­க­வும் அவற்­றில் ஒன்றை விரை­வில் தெரிவு செய்­யப் போவ­தா­க­வும் அவர் முன்­பொரு தடவை தெரி­வித்­தி­ருந்­தார். அர­சி­ய­லில் இருந்து ஒதுங்கி வீட்­டில் ஓய்­வெ­டுப்­பது, தனிக்­கட்சி தொடர்­வது, வேறொரு கட்­சி­யு­டன் இணைந்து செயற்­ப­டு­வது, தமிழ்­மக்­கள் பேர­வை­யின் வளர்ச்­சிக்­கா­கத் தொடர்ந்து உழைப்­பது ஆகிய நான்­குமே அந்­தத் தெரி­வு­க­ளா­கும். தற்­போது கூட்­ட­மைப்­பின் சார்­பில் முத­ல­மைச்­சர் வேட்­பா­ளரா­கக் கள­மி­றங்­கப் போவ­தா­கக் கூறு­கி­றார். அவரை இனி­யா­வது கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் போன்­ற­வர்­கள் புரிந்­து­ கொள்ள வேண்­டும். கூட்­ட­மைப்­பில் இருந்து விலகி விக்­னேஸ்­வ­ரன் தம்­மு­டன் இணைந்து செயற்­ப­டு­வா­ரென அவர் கனவு காண்­கி­றார். ஆனால் விக்­னேஸ்­வ­ரன் அவ­ருக்கு அல்வா கொடுக்­கும் வகை­யில் நடந்து கொள்­கின்­றார்.

பங்­கா­ளிக் கட்­சி­கள்
கவ­ன­மெ­டுப்­பது நல்­லது
கூட்­ட­மைப்­பின் ஏனைய பங்­கா­ளிக் கட்­சி­யி­ன­ரும் தற்­போ­தைய முதல்­வரை நன்கு எடை­போட்டு வைத்­தி­ருக்க வேண்­டும். அண்­மை­யில் புளொட்­டின் தலை­வர் சித்­தார்த்­தன் கருத்து ஒன்றை வெளி­யிட்­டி­ருந்­தார். நாமே விக்­கி­ னேஸ்­வ­ரனை முத­ல­மைச்­சர் பத­வி­யில் அமர்த்­தி­விட்டு அவ­ருக்­குத் தொல்லை கொடுப்­பது சரி­யல்­ல­வென அவர் கூறி­யி­ருந்­தார். ஆனால், பிரச்­சி­ னை­கள் ஏற்­ப­டு­வ­தற்கு மூல­கா­ர­ண­மாக இருந்­த­வர் விக்­னேஸ்­வ­ரனே என்­பதை அவர் முத­லில் தெரிந்­து­கொள்ள வேண்­டும்.

கூட்­ட­மைப்­பின் தலை­மையை மாற்ற வேண்­டு­மெ­னக் கூறு­வ­தற்கு விக்­னேஸ்­வ­ர­னுக்­குள்ள தகு­திப்­பாட்­டைப் பரி­சீ­லிப்­ப­தும் சிறந்­தது. அந்­தத் தலை­மைப் பொறுப்பை ஏற்­ப­தற்கு இவர் விரும்­பு­கின்­றாரோ என்­றும் கருத வேண்­டி­யுள்­ளது. கூட்­ட­மைப்­பைத் தாங்­கிப்­பி­டித்­துள்ள மக்­கள்­இ­வ­ரைத் தமது தலை­வ­ராக ஒரு­போ­துமே ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்­கள். ஆக, விக்­னேஸ்­வ­ர­னின் சுய­ரூ­பம் தற்­போது தெளி­வா­கத் தெரிந்து விட்­டது. அவ­ரைத் தலை­யில்­தூக்கி வைத்­துக் கொண்­டா­டு­கின்ற சிறு­ப­கு­தி­யி­ன­ருக்­கும் இது புரிந்­தி ­ருக்­கு­மென நம்­ப­லாம்.

 

https://newuthayan.com/story/09/124441.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன்,

இங்கே இணைக்கப்பட்டுள்ள நியு உதயன் கட்டுரை யாரால் எழுதப்பட்டது? ஆல்லது யாரது கருத்து இது?

வெறுமனே நியு உதயன் என்று மூலத்தினை இடுவதால், இது அவர்களுடைய நிலைப்பாடு என்று எடுத்துக்கொள்ளலாமா ? 

வீரகேசரியில் திரு விக்கினேஸ்வரனின் பேட்டிக்கு எதிர்வினையாக இதை இணைத்திருக்கிறீர்களா?

முழுவதுமாக கூட்டமைப்பை நியாயப்படுத்தியும், திரு விக்கினேஸ்வரன் அவர்களை வசைபாடியும் எழுதப்படும் இக்கட்டுரையின் நோக்கம் நன்றாகவே தெரியும் நிலையில், இதனை யார் சொல்கிறார் என்று வெளிப்படையாக ஒரு புதிய தலைப்பில் தொடங்கியிருக்கலாம் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

விக்னேஸ்வரனின் சுயரூபம் தெளிவாகி விட்டது…!!

 

வடக்கு மாகா­ணத்­தின் தற்­போ­தைய முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அடுத்த முறை­யும் முத­ல­மைச்­சர் பதவி தொடர்­பா­கச் சிந்­திப்­பது தெரி­கின்­றது. அவ்­வா­றில்­லா­விட்­டால் கூட்­ட­மைப்­பின் தலைமை பதவி வில­கி­னால் முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ரா­கக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் கள­மி­றங்­கு­வேன் என அவர் கூறி­யி­ருக்­க­மாட்­டார்.

கூட்­ட­மைப்­பை­யும் கூட்­ட­மைப்­பின் தலை­மை­யை­யும் தாக்­கிப்­பேசி வரு­வதை அவர் வழக்­க­மா­கக் கொண்­டுள்ள நிலை­யில் தற்­போது இத்­த­கைய கருத்தை அவர் வெளி­யிட்­டுள்­ளமை கவ­னத்­துக்­கு­ரி­யது. கூட்­ட­மைப்­பின் தலை­மை­யைப் பதவி வில­கி­வி­டு­மாறு அந்த அமைப்­பைச் சேர்ந்த எவ­ருமே கோரிக்கை விடுத்­த­தில்லை. முன்­னர் கூட்­ட­மைப்­பில் இணைந்­தி­ருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்­சி­யின் தலை­வ­ரும், சிவ­சக்தி ஆனந்­தன் போன்­ற­ வர்­க­ளும் கூட்­ட­ மைப்­பின் தலைமை தொடர்­பாக எதிர்க் கருத்­துக்­களை வெளி­யிட்டு வந்­துள்­ள­னர். அவர்­கள் இப்­போது கூட்­ட­மைப்­பில் இல்லை. ஆனால் கூட்­ட­மைப்­பில் இருந்­து­கொண்டே அதை மோச­மாக விமர்­சித்து வரு­கி­றார் விக்­னேஸ்­வ­ரன்.

கூட்­ட­மைப்­பில் இருந்து
அவர் முத­லில் வில­க­லாமே?
மக்­கள் பலம் தம்­மு­டன் இருக்­கும்­வ­ரை­யில் தம்மை எவ­ரா­லும் அசைத்­து­விட முடி­யா­தென அவர் அடிக்­கடி கூறி வரு­கின்­றார். அவ­ருக்கு எதி­ரா­கத் தமி­ழ் அரசுக் கட்சியினர் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தைக் கொண்­டு­வந்­த­போது அவ­ருக்கு ஆத­ர­வாக மக்­கள் கூட்­டம் திரண்­டி­ருந்­தது உண்­மை­தான். ஆனால் அந்­தக் கூட்­டம் அவ­ருக்கு உரி­ய­தல்ல. தமி­ழ் அரசுக் கட்­சிக்­கும், கூட்­ட­ மைப்­புக்­கும் எதி­ரான கூட்­டம்­தான் அது. இதை அவர் தவ­றா­கப் புரிந்­து­ கொண்­டமை அவ­ரது அர­சி­யல் அனு­ப­வ­மின்­மையை எடுத்­துக் காட்­டு­கின்­றது. கூட்­ட­மைப்­பும், அதன் தலை­மை­யும் சரி­யில்­லை­யென்­றால் அங்­கி­ருந்து வெளி­யே­றி­வி­டு­வ­தற்கு அவர் ஏன் தயங்­கு­கி­றார்? அவர் இன்­ன­மும் கூட்­ட­மைப்­பில் ஒட்­டிக்­கொண்­டி­ருப்­பது எவ­ருக்­குமே புரி­யாத மர்­ம­மாக நீடிக்­கின்­றது.

தனது செல்­வாக்­கா­கக் கரு­த­மு­டி­யுமா?
2013ஆம் ஆண்­டுத் தேர்­த­லில் வட பகுதி மக்­கள் விக்­னேஸ்­வ­ரன்­தான் முத­ல­மைச்­சர் பத­வி­யில் அம­ர­வேண்­டு­மென ஒரு­போ­துமே கேட்­ட­தில்லை. பெரும்­பா­லா­ன­வர்­கள் அவரை அறிந்­தி­ருக்­க­வு­மில்லை. கூட்­ட­மைப்­பின் தலைவர்­தான் அவரை அர­சி­ய­லுக்­குள் கொண்டு வந்தவர் என்­பது பல­ருக்­கும் தெரிந்த விட­யம். அவ­ரொரு ஓய்­வு­பெற்ற உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர் என்ற வகை­யில் அவர்­மீது வட­ப­குதி மக்­கள் நம்­பிக்­கை­வைத்­துத் தமது வாக்­கு­களை அமோ­க­மாக அள்ளி வழங்­கி­னார்­கள். இதை விக்­னேஸ்­வ­ரன் தனது சொந்­தச் செல்­வாக்­கா­கக் கருத முடி­யுமா?

தம்­மி­டம் நான்கு தெரி­வு­கள் இருப்­ப­தா­க­வும் அவற்­றில் ஒன்றை விரை­வில் தெரிவு செய்­யப் போவ­தா­க­வும் அவர் முன்­பொரு தடவை தெரி­வித்­தி­ருந்­தார். அர­சி­ய­லில் இருந்து ஒதுங்கி வீட்­டில் ஓய்­வெ­டுப்­பது, தனிக்­கட்சி தொடர்­வது, வேறொரு கட்­சி­யு­டன் இணைந்து செயற்­ப­டு­வது, தமிழ்­மக்­கள் பேர­வை­யின் வளர்ச்­சிக்­கா­கத் தொடர்ந்து உழைப்­பது ஆகிய நான்­குமே அந்­தத் தெரி­வு­க­ளா­கும். தற்­போது கூட்­ட­மைப்­பின் சார்­பில் முத­ல­மைச்­சர் வேட்­பா­ளரா­கக் கள­மி­றங்­கப் போவ­தா­கக் கூறு­கி­றார். அவரை இனி­யா­வது கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் போன்­ற­வர்­கள் புரிந்­து­ கொள்ள வேண்­டும். கூட்­ட­மைப்­பில் இருந்து விலகி விக்­னேஸ்­வ­ரன் தம்­மு­டன் இணைந்து செயற்­ப­டு­வா­ரென அவர் கனவு காண்­கி­றார். ஆனால் விக்­னேஸ்­வ­ரன் அவ­ருக்கு அல்வா கொடுக்­கும் வகை­யில் நடந்து கொள்­கின்­றார்.

பங்­கா­ளிக் கட்­சி­கள்
கவ­ன­மெ­டுப்­பது நல்­லது
கூட்­ட­மைப்­பின் ஏனைய பங்­கா­ளிக் கட்­சி­யி­ன­ரும் தற்­போ­தைய முதல்­வரை நன்கு எடை­போட்டு வைத்­தி­ருக்க வேண்­டும். அண்­மை­யில் புளொட்­டின் தலை­வர் சித்­தார்த்­தன் கருத்து ஒன்றை வெளி­யிட்­டி­ருந்­தார். நாமே விக்­கி­ னேஸ்­வ­ரனை முத­ல­மைச்­சர் பத­வி­யில் அமர்த்­தி­விட்டு அவ­ருக்­குத் தொல்லை கொடுப்­பது சரி­யல்­ல­வென அவர் கூறி­யி­ருந்­தார். ஆனால், பிரச்­சி­ னை­கள் ஏற்­ப­டு­வ­தற்கு மூல­கா­ர­ண­மாக இருந்­த­வர் விக்­னேஸ்­வ­ரனே என்­பதை அவர் முத­லில் தெரிந்­து­கொள்ள வேண்­டும்.

கூட்­ட­மைப்­பின் தலை­மையை மாற்ற வேண்­டு­மெ­னக் கூறு­வ­தற்கு விக்­னேஸ்­வ­ர­னுக்­குள்ள தகு­திப்­பாட்­டைப் பரி­சீ­லிப்­ப­தும் சிறந்­தது. அந்­தத் தலை­மைப் பொறுப்பை ஏற்­ப­தற்கு இவர் விரும்­பு­கின்­றாரோ என்­றும் கருத வேண்­டி­யுள்­ளது. கூட்­ட­மைப்­பைத் தாங்­கிப்­பி­டித்­துள்ள மக்­கள்­இ­வ­ரைத் தமது தலை­வ­ராக ஒரு­போ­துமே ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்­கள். ஆக, விக்­னேஸ்­வ­ர­னின் சுய­ரூ­பம் தற்­போது தெளி­வா­கத் தெரிந்து விட்­டது. அவ­ரைத் தலை­யில்­தூக்கி வைத்­துக் கொண்­டா­டு­கின்ற சிறு­ப­கு­தி­யி­ன­ருக்­கும் இது புரிந்­தி ­ருக்­கு­மென நம்­ப­லாம்.

 

https://newuthayan.com/story/09/124441.html

சமரச அரசியல் மூலம் நாம் இதுவரை சாதித்தவை எதுவென்று பார்த்தால் எதுவுமில்லை. இந்நிலையில் தொடர்ந்தும் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்துக்கொண்டிருப்பது எமக்கு எவ்வித பயனையும் தரப்போவதில்லை.

30 வருடகால ஆயுதப் போராட்டமும், அதற்குமேலான சமரச அரசியல் கலந்த சாத்வீகப் போராட்டங்களும் எமக்கு இதுவரையிலும் எதனையும் தராத நிலையில், மாற்றுவழி பற்றிச் சிந்திப்பதில் தவறில்லை.

மக்கள் எழுச்சியின் மூலம் தமிழர்களது இன்றைய நிலை சர்வதேச அரங்கில் சரியாக வெளிக்கொணரப்பட வேண்டும். அதற்கு அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்துக்கொண்டோ அல்லது எதிர்கட்சித் தலைவராக இருந்துகொண்டோ எதையும் செய்ய முடியாது.

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியும், அவர்களது சுதந்திரமான வாழ்விற்கான தீர்வும் வேண்டுமென்றே தாமதிக்கப்படுவது அவர்களை இன்னும் பலவீனமாக்கும் என்பது இப்போதுள்ள தலைமைகளுக்குத் தெரியாததல்ல. 

வெறுமனே உள்நாட்டில் பேசித் தீர்க்கிறோம் என்று அரசாங்கம் சொல்ல, சரி, நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூட்டமைப்பு சொல்வது வேதனை. 
அவர்கள் எதையுமே தரப்போவதில்லை என்று தெரிகிறதல்லவா? பின் இன்னும் ஏன் அங்கே தொங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்? வெளியில் வந்து மக்களுடன் போராடுங்கள், அவர்களின் வேதனைகளையும் வேண்டுகோளையும் உங்களுடைய குரல்களில் தக்க வைய்யுங்கள், வெளியுலகிற்குக் கொண்டு செல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ragunathan said:

நவீனன்,

இங்கே இணைக்கப்பட்டுள்ள நியு உதயன் கட்டுரை யாரால் எழுதப்பட்டது? ஆல்லது யாரது கருத்து இது?

வெறுமனே நியு உதயன் என்று மூலத்தினை இடுவதால், இது அவர்களுடைய நிலைப்பாடு என்று எடுத்துக்கொள்ளலாமா ? 

வீரகேசரியில் திரு விக்கினேஸ்வரனின் பேட்டிக்கு எதிர்வினையாக இதை இணைத்திருக்கிறீர்களா?

முழுவதுமாக கூட்டமைப்பை நியாயப்படுத்தியும், திரு விக்கினேஸ்வரன் அவர்களை வசைபாடியும் எழுதப்படும் இக்கட்டுரையின் நோக்கம் நன்றாகவே தெரியும் நிலையில், இதனை யார் சொல்கிறார் என்று வெளிப்படையாக ஒரு புதிய தலைப்பில் தொடங்கியிருக்கலாம் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

இப்படி அனாமத்தா சேறு பூசும் நியு உதயன்  அதன் தகுதியை இழந்துகொண்டு இருக்கின்றது .சம்பந்தன் சுமத்திரன் களுக்கு எதிராக எல்லாப்பக்கமும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நேரம் உதயன் புனுகு பூசுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தலைவர்களில் அரசியல் என்றால் என்ன என்பதை சரியாக விளங்கிக்கொண்டவர்கள் இல்லை என்று சொல்லுமளவுக்கு மிகமிக சொற்பம். சிலருக்கு அது வியாபாரம் இன்னும் சிலருக்கு வாழ்க்கையை சிரமமின்றி கொண்டு நடத்த ஒரு தொழில். மேலும் சிலருக்கு அதிகாரத்தை கையகப்படுத்தவும் அதில்  ஏகபோக வாழ்க்கையை அனுபவிக்கவும் வாழ்நாளில் கிடைத்த அதிஸ்ட்டம்.

ஆரம்பத்தில் தமிழினத்துக்காக சாத்வீக போராட்டத்தில் குதித்தவர்கள் சின்னாபின்னமாகிப்போக இன்னுமொருசாரார் அரசியலில் சாதிப்போம் என்று அதிலிறங்க எதிரியின் வெட்டியோடும் தந்திரத்தால் அவர்களும் இலவுகாத்த கிளியாகி  மெளனமாகிவிட்டனர். இன்னும் சிலர் இந்தச் சிரமம் நமக்கெதற்கு என்று சிங்கள மேலாதிக்கம் விட்டெறியும் எலும்புத்துண்டை பாய்ந்து கெளவி இன்பமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

அரசியல் என்பது எவருக்கும் காலவரையறையின்றி ஒப்பந்தம் செய்து வழங்கப்பட்ட பணியல்ல. மக்கள் விரும்பவில்லை என்றாலோ இன்னுமொருவர் தன்னிலும்பார்க்க அதிகமாக மக்களுக்காக உழைக்க  வல்லமையுள்ளவர் என்றாலோ மக்கள் வாக்கு மகேசன் வாக்கு என்று விலகி புதியவருக்கு வழிவிடுதல் வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுற்றுலா அனுபவங்கள் எப்போதுமே  மகிழ்வானவை. கேட்க ஆவலை தூண்டுபவை. மிகுதி பயண அனுபவங்கள்  அறிய ஆவலாக உள்ளேன்.  முடிந்தால் Palma வின் இயற்கை அழகு ததும்பும்  படங்களையும் இணைக்கலாம். 
    • இல்லையண்ணை படிப்பறிவு இல்லாத தமிழ் ஒழுங்கா வாசிக்க தெரியாத பெருமாள் இந்த இணைப்பை இணைத்து இருக்கிறார் எதுக்கும் ஒருக்கா இந்த செய்தியை fact check  செய்து பார்த்து விட்டு சொல்றன் .😀 இடியாப்ப கொத்து 1800 ரூபா முழு பொய் அந்த வெள்ளை தனக்கு நிறைய யூடுப்  subscribers வேணுமென்பதற்காக விட்ட  புளுகு பொய் .😀  
    • மின்னம்பலம் மெகா சர்வே : மத்திய சென்னை Apr 14, 2024 20:04PM IST  2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. மத்திய சென்னையில் மகுடம் சூடப் போவது யார் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் தயாநிதி மாறன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் ப.பார்த்தசாரதி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் வினோஜ் பி.செல்வம் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.கார்த்திகேயன் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்குமற்றும் அண்ணா நகர் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்   திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 52% வாக்குகளைப் பெற்று மீண்டும் மத்திய சென்னை தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் ப.பார்த்தசாரதி 23% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.கார்த்திகேயன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, மத்திய சென்னை தொகுதியில் இந்த முறையும் தயாநிதி மாறன் வெற்றி பெற்று திமுகவின் கொடிபறக்கவே  வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-dhayanidhi-maran-wins-central-chennai-dmdk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: பொள்ளாச்சியில் யார் ஆட்சி? Apr 15, 2024 08:00AM IST  2024 மக்களவை தேர்தலுக்காக  தமிழ்நாடு முழுவதும் மின்னம்பலம், மக்களை சந்தித்து கருத்து கணிப்பு நடத்திய நிலையில், கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான பொள்ளாச்சி தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற கேள்விக்காக இயற்கை எழில் சூழ்ந்த பொள்ளாச்சியில் களமிறங்கினோம்.   இந்த தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் திமுக சார்பில் ஈஸ்வரசாமி களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வசந்தராஜன் போட்டியிடுகிறார். நாம் தமிழர்கட்சியின் சார்பில் நா.சுரேஷ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிற சூழலில்…  பொள்ளாச்சியில் யார்  ‘ஆட்சி’ அமைக்கப் போகிறார்?  மக்களின் வாக்குகள் யாருக்கு? போன்ற கேள்விகளை பரவலாக பொள்ளாச்சி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  பொள்ளாச்சி,  கிணத்துக்கடவு,  தொண்டாமுத்தூர்,  வால்பாறை (தனி),  உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி 45% வாக்குகளைப் பெற்று பொள்ளாச்சி தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் 35% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் வசந்தராஜன் 14% வாக்குகளைப் பெறுகிறார்.   நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நா.சுரேஷ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார்  என்று மக்களின் குரல் மூலம் தெரியவருகிறது . 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…,பொள்ளாச்சி தொகுதியில் இந்த முறை திமுகவின் ஈஸ்வரசாமி வெற்றி பெறுவார் என்பதே மக்களின் கணக்காக இருக்கிறது.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-eswarasamy-won-pollachi-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: தென்காசி…. வெற்றிச் சாரல் யார் மீது? Apr 15, 2024 09:00AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நமது மின்னம்பலம், மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த வகையில் தென் மாவட்டத்தின் முக்கியமானதும் இயற்கை வளம் மிக்கதுமான தென்காசி தொகுதியில் களமிறங்கினோம். தென்காசி தொகுதியில் திமுக சார்பில் ராணி ஸ்ரீகுமார் களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணி  சார்பில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணி சார்பில்தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார். நாம் தமிழர்கட்சியின் சார்பில் இசை மதிவாணன் போட்டியிடுகிறார். டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் என இரு ஆளுமைகள் எதிரெதிரே நிற்கும் இத்தொகுதியின் மீது தென் மாவட்டங்கள் மட்டுமல்ல தமிழகத்தின் கவனமும் ஒரு சேர பதிந்துள்ளது. தென்காசி களத்தின் நிலவரம் என்ன?   உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினைபரவலாக தென்காசி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  தென்காசி,  கடையநல்லூர்,  இராஜபாளையம்,  சங்கரன்கோயில் (தனி),  வாசுதேவநல்லூர் (தனி) மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 44% வாக்குகளைப் பெற்று தென்காசி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக கூட்டணியில்  இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர்கிருஷ்ணசாமி 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக  கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்ஜான் பாண்டியன் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணன் 10% வாக்குகளைப் பெறுவார் என்றும் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தென்காசி தொகுதியில் இந்த முறை ராணி ஸ்ரீகுமாரை நோக்கியே வெற்றிச் சாரல் வீசுகிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-rani-sreekumar-won-tenkasi-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: காஞ்சிபுரம்… கள நாயகன் யார்? Apr 15, 2024 10:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரான அண்ணா பிறந்த, கோயில்கள் நிறைந்த என அரசியல், ஆன்மிகம் என இரு வகைகளிலும் முக்கியத்துவம் பெற்ற காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் யார் வெற்றி பெறப் போகிறார்? ஆய்வில் இறங்கினோம். இந்த தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்.பி.யான செல்வம் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ராஜசேகர் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் வெ.ஜோதி வெங்கடேசன் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.சந்தோஷ்குமார் போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  காஞ்சிபுரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் சில கேள்விகளை  முன்வைத்தோம். இந்த மக்களவைத்தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வுசெய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்தகருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட   6 சட்டமன்றத் தொகுதிகளான  செங்கல்பட்டு,  திருப்போரூர்,  செய்யூர் (தனி),  மதுராந்தகம் (தனி),  காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் ஆகியவற்றில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வம் 46% வாக்குகளைப் பெற்று மீண்டும் காஞ்சிபுரம் தொகுதியில் முன் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வெ.ஜோதி வெங்கடேசன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.சந்தோஷ்குமார் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, காஞ்சிபுரம் தொகுதியில் இந்த முறையும் செல்வம் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-kanchipuram-constituency-dmk-candidate-selvam-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: நாமக்கல் வெற்றிநடை போடுவது யார்? Apr 15, 2024 11:49AM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? நாமக்கல் தொகுதியில் வெற்றிநடை போடுவது யார் ? என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்த தேர்தலில் நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் சார்பில் மாதேஷ்வரன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் தமிழ்மணி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் கே.பி.ராமலிங்கம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் க.கனிமொழி போட்டியிடுகிறார். கொ.ம.தே.க, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன ? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாமக்கல் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், சங்ககிரி,  இராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், கொ.ம.தே.க வேட்பாளர் மாதேஷ்வரன் 45% வாக்குகளைப் பெற்று நாமக்கல் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் தமிழ்மணி 36% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.கனிமொழி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, நாமக்கல் தொகுதியில் இந்த முறை மாதேஷ்வரன் வெற்றி பெற்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/kmdk-candidate-madheswaran-won-namakkal-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/
    • ஈரான் என ஒரு நாடே இல்லாமல் போனாலும் பரவாயில்லை, இஸ்ரேல் ஒழிந்தால் போதும் என முல்லாக்கள் முடிவு செய்தால் நீங்கள் சொன்னது போல் நடக்கலாம். ஆனால் முல்லாக்கள் அந்தளவு முட்டாள்கள் இல்லை. ஈக்குவானத்தை புட்டின் தலையில் கட்டி விடும் அளவாவது அவர்களுக்கு அறிவுள்ளது🤣. இது பகிடி. பிறகு ஏதோ புட்டின்-புருசன் மாரி என்னை வந்து சேட் கொலரில் பிடிக்க வேண்டாம்🤣 மருமோன், தயவு செய்து குடும்ப ரகசியத்தை பரகசியமாக்கா வேண்டாம்🤣 இத பார்த்த கண்டனம் மாரி தெரியேல்லையே🤣
    • வெய்யில் பிடித்த இடம் எல்லாம் கறுத்து  இருக்கு. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.