Jump to content

நினை­வேந்­தல்­க­ளுக்கு உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­கள் உவப்­பா­ன­வை­யல்ல!


Recommended Posts

நினை­வேந்­தல்­க­ளுக்கு உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­கள் உவப்­பா­ன­வை­யல்ல!

 

 

தியாக தீபம் திலீ­பன் நினை­வின் இறுதி நாள் நிகழ்­வு­களை யாழ்ப்­பா­ணம் மாந­கர சபையே பொறுப்­பேற்று நடத்­தும் என்று நகர பிதா ஆர்­னோல்ட் அறி­வித்­தி­ருக்­கி­றார்.

இந்த நினை­வேந்­த­லின் தொடக்­கத்­தில் இரண்டு கட்­சி­க­ளுக்­கி­டை­யில் ஏற்­பட்ட முரண்­பாட்­டைத் தொடர்ந்து, நிகழ்­வு­களை மாந­கர சபையே நடத்­தும் என்­கிற அறி­விப்பு வந்­தி­ருக்­கி­றது. இது தூர நோக்­கற்ற, தற்­கா­லி­கத் தீர்­வைக் காணும் முறை­மை­யைக் கொண்ட ஒரு நகர்வு. ஏற்­றுக்­கொள்­ளப்­பட முடி­யா­தது. உட­ன­டி­யாக நிறுத்­தப்­ப­ட­வேண்­டும்.

தியாகி திலீ­பன் 5 முக்­கிய கோரிக்­கை­களை முன்­வைத்து நல்­லூர் முன்­ற­லில் உணவு தவிர்ப்­புப் போராட்­டத்­தைத் தொடங்­கி­ய­போது ஒட்­டு­மொத்­தத் தமிழ்த் தேசி­யத்­தின் எழுச்­சி­யைக் கட்­ட­மைக்க முடிந்­தது. திலீ­ப­னின் போராட்­டம் அள­வுக்கு மக்­கள் கலந்­து­கொண்ட, உணர்­வு­பூர்­வ­மா­கத் தம்மை அத­னோடு இணைத்­துக்­கொண்ட ஓர் அறப் போராட்­டத்­தைச் சுட்­டிக்­காட்­டி­விட முடி­யாது.

திலீ­ப­னின் இறுதி நாள்­கள் நெருங்­கிக் கொண்­டி­ருந்­த­போது நல்­லூர் முன்­ற­லில் கூடி­யி­ருந்த மக்­கள் மட்­டு­மல்­லர், வீடு­க­ளில், வேறு நாடு­க­ளில் இருந்­த­வர்­க­ளும் உணர்­வு­பூர்­வ­மாக அந்­தப் போராட்­டத்­தோடு மான­சீ­க­மா­கத் தம்மை இணைத்­துக்­கொண்­டி­ருந்­தார்­கள்.

அதுவே தமிழ்த் தேசிய எழுச்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­குப் போது­மா­ன­தாக இருந்­தது. இந்­திய ஏகா­தி­பத்­தி­யத்­தின் முகத்­தி­ரை­யைக் கிழிப்­ப­தற்­கும் அதற்­குப் பின்­வந்த இன்­னல்­க­ளைத் தமிழ் மக்­கள் சகித்­துக்­கொள்­வ­தற்­கும் வேண்­டிய பலத்­தைத் தமி­ழர்­க­ளுக்­குத் தந்­தும் நின்­றது.

அவ்­வா­றான ஒரு தேசிய எழுச்­சியை ஏற்­ப­டுத்­திய வீர­னின் நினைவு நிகழ்­வைக் குழப்­பங்­கள் இன்றி நடத்­து­வ­தற்­குக்­கூட முடி­யா­த­ள­வுக்­குச் சகிப்­புத் தன்­மை­யற்ற கய­மை­யு­ட­னும், இத்­த­கைய நிகழ்­வு­களை நடத்­து­வ­தன் ஊடாக அர­சி­யல் இலா­பம் அடைந்­து­வி­ட­லாம் அல்­லது எதிர் அர­சி­யல் தரப்­பு­கள் அத்­த­கைய நலனை அடைந்­து­வி­டக்­கூ­டாது என்­கிற கீழ்­நிலை அர­சி­யல் சிந்­த­னை­யை­யும் கொண்­ட­வை­க­ளாக இன்­றைய அர­சி­யல் கட்­சி­கள் சில­வும் அவற்­றின் உறுப்­பி­னர்­க­ளும் உரு­வா­கி­யி­ருப்­பது தமி­ழர்­க­ளின் எதிர்­கா­லத்தை எண்­ணிக் கவ­லைப்­பட வைக்­கின்­றது.

தமக்­கி­டை­யி­லான அர­சி­யல் கருத்து முரண்­பா­டு­களைச் சகிப்­புத் தன்­மை­யோடு அணுக முடி­யாத கட்­சி­யி­ன­ரா­லேயே அன்­றைய தினம் நல்­லூ­ரில் உள்ள திலீ­ப­னின் நினை­வி­டத்­தில் முரண்­பாடு ஏற்­பட்­டது.

ஆனால், இந்­தப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு நிகழ்வை யாழ்ப்­பாண மாந­கர சபை பொறுப்­பேற்று நடத்­து­வ­தல்ல. இந்த முன்­னு­தா­ர­ணத்தை ஏற்­றுக்­கொண்­டால் இது­போன்ற எல்லா நினை­வேந்­தல்­க­ளை­யும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­கள்­தான் செய்­தா­க­வேண்­டும் என்­கிற நிலமை உரு­வா­கி­வி­டும்.

அது தவ­றான முன்­னு­தா­ர­ணம். உள்­ளூ­ராட்சி நிர்­வா­கங்­கள் காலத்­துக்­குக் காலம் வெவ்வேறு அர­சி­யல் கட்­சி­க­ளின் கைக­ளில் இருக்­கக்­கூ­டி­யவை. அத்­த­கைய நிலை­யில் நினை­வேந்­தல்­களை உள்­ளூ­ ராட்சி சபை­க­ளி­டம் கைய­ளித்­தால் ஒவ்­வொரு கட்­சி­யி­ன­தும் அடிப்­ப­டைக் கொள்­கை­யின் அடிப்­ப­டை­யி­லேயே அந்த நிகழ்­வு­கள் அணு­கப்­ப­டும், நடத்­தப்­ப­டும், நடத்­தப்­ப­டா­மல் போக­வும்­கூ­டும். எனவே உள்­ளூ­ராட்சி சபை­கள் இத்­த­கைய நினை­வேந்­தல்­க­ளைப் பொறுப்­பேற்­பதை நிறுத்த வேண்­டும்.

இந்த விட­யத்­தில் மட்­டு­மல்ல போரில் கொல்லப்பட்ட தமி­ழர்­க­ளுக்­கான மே 18 நினை­வேந்­தல் நிகழ்­வைக்­கூட வடக்கு மாகாண சபை பொறுப்­பேற்று நடத்­தா­மல் சுயா­தீ­ன­மான ஒரு குழு­வி­டம் கைய­ளிக்­க­வேண்­டும் என்று உத­யன் தொடக்­கத்­தி­லி­ருந்தே வலி­யு­றுத்தி வரு­வ­தும் இதே கார­ணத்­துக்­கா­கத்­தான். காலச் சூழ்­நி­லை­க­ளுக்கு ஏற்ப அர­சி­யல் நகர்­வு­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­லாம். ஆனால், தூர­நோக்­கு­டன் நிரந்­தர முடி­வு­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டும்.

நினை­வேந்­தல்­க­ளுக்­கான நிரந்­த­ரத் தீர்வு அவற்றை உள்­ளூ­ராட்சி மன்­றங்­களோ, மாகாண சபை­களோ பொறுப்­பேற்­ப­தல்ல. இதற்­கெ­னத் தனி­யான பொறுப்­புக் குழுக்­கள் அமைக்­கப்­ப­ட­வேண்­டும். அனைத்­துத் தரப்­பு­க­ளை­யும் கொண்­ட­தாக, சுயா­தீ­ன­மா­கச் செயற்­ப­டக்­கூ­டி­ய­தாக அந்­தக் குழு இருக்­க­வேண்­டும்.

திலீ­ப­னின் நினை­வேந்­த­லுக்கு ஒரு நிரந்­த­ரத் தீர்­வைக் காண்­ப­தற்­கும் யாழ். நகர பிதா செய்­தி­ருக்­க­வேண்­டி­ய­தும் அத்­த­கைய சுயா­தீ­னக் குழு ஒன்றை நிய­மிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­தான். திறந்த கலந்­து­ரை­யா­டல்­கள் மூலம் அத்­த­கைய சுயா­தீ­னக் குழு ஒன்றை அமைத்து அதற்­கூ­டா­கவே எல்லா நினை­வேந்­தல்­க­ளும் நிகழ்த்­தப்­ப­ட­வேண்­டும். ஒட்­டு­மொத்­தத் தமிழ் மக்­க­ளுக்­கும் நன்­மை­ய­ளிக்­கக்­கூ­டிய நிரந்­த­ரத் தீர்வு அது மட்­டுமே!

https://newuthayan.com/story/10/நினை­வேந்­தல்­க­ளுக்கு-உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­கள்-உவப்­பா­ன­வை­யல்ல.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
    • என்ன‌ பெரிய‌ப்பா 10பேர் இன்னும் வ‌ர‌ வில்லை என்று ஆத‌ங்க‌ ப‌ட்டினங்க‌ள் இப்ப‌ மொத்த‌ம் 17பேர் க‌ல‌ந்து இருக்கின‌ம்......................உற‌வுக‌ள் நீங்க‌ள் கொடுத்த‌ தேதிக்கு ச‌ரியா க‌ல‌ந்து கொண்டு விட்டின‌ம்.................இன்னொரு உற‌வு தானும் தானும் க‌ல‌ந்து கொள்ளுகிறேன் போட்டியில் என்று சொன்னார் ஆனால் அவ‌ரை சிறு நாட்கள் யாழில் காண‌ வில்லை இந்த‌ முறை நான் தான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்பேன் ஒரு க‌தைக்கு ந‌ம்ம‌ட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை முத‌ல் இட‌த்துக்கு வ‌ந்தால் என்னை தூக்கி போட்டு மிதிச்சு போடுவார் ஹா ஹா😂😁🤣....................................
    • வருமான அதிகரிப்பு பொறிமுறை; வடக்கு ஆளுநர் தெரிவிப்பு! சுற்றுலாவிகளுக்கு வீடுகளில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கான வருமான அதிகரிப்புக்குரிய பொறிமுறையை தயார் செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!  (மாதவன்) சுற்றுலாவிகளுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போர், உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில், ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் (18) சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் சுற்றுலாவிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. சுற்றுலாவிகள் தங்குவதற்காக சில பகுதிகளில் மக்கள் தமது வீடுகளிலேயே அறைகளை வழங்குவதோடு, முழுமையான வீட்டையும் நாள், கிழமை மற்றும் மாத அடிப்படையில் வாடகைக்கு வழங்குவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், குறித்த நபர்கள் எந்தவொரு பணிமனையிலும் பதிவுகளை மேற்கொள்வதில்லை எனவும், தங்குமிடங்களின் வசதிகள் தொடர்பில் கரிசனை கொள்வதில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். அவ்வாறான நபர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி, அவர்களது வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஊக்குவிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது கூறினார். பதிவு செய்யாது தங்குமிட வசதிகளை வழங்குவோர் தொடர்பில் தகவல்களை திரட்டி, அவர்களின் சேவைகளை ஒழுங்குப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் கூறினார். அத்துடன் சட்ட பொறிமுறைக்குள் அவ்வாறானவர்கள் உள்வாங்கப்படும் போது, அவர்களின் தங்குமிட வசதிகள் தொடர்பில் இணையத்தளங்களில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான பொறிமுறையை வடிவமைக்குமாறும் அறிவுறுத்தினார். (ஏ)   https://newuthayan.com/article/வருமான_அதிகரிப்பு_பொறிமுறை;_வடக்கு_ஆளுநர்_தெரிவிப்பு!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.