Jump to content

திசை மாறும் சட்டப் போராட்டம்


Recommended Posts

திசை மாறும் சட்டப் போராட்டம்

Untitled-4-25430fce5a8ff8a2b9e721e87caf9030ca2f3eef.jpg

 

-கபில்

இன்னும் ஒரு மாதம் அமைச்­ச­ராக இருந்து டெனீஸ்­வரன் எதனைச் சாதித்து விடப்­போ­கிறார்- அல்­லது டெனீஸ்­வ­ரனை இன்னும் ஒரு மாதம் பத­வியில் இருக்க அனு­ம­திப்­பதால் தான் விக்­னேஸ்­வ­ர­னுக்கு என்ன கெடுதல் வந்து விடப் போகி­றது?

இன்னும் ஒரு மாதத்­துக்குப் பின்னர் வடக்கு மாகா­ண­சபை செய­லி­ழந்து போகும். அதற்குப் பின்னர் ஆளு­நரின் கையில் அதி­காரம் வரப்­போ­கி­றது. அவர் அந்த அதி­கா­ரத்தை எவ்­வாறு பயன்­ப­டுத்­துவார் என்ற கேள்வி உள்­ளது

வடக்கு மாகாண சபையின் ஆயுள்­காலம் முடி­வ­டைந்­தாலும் கூட, அதன் அமைச்சர் பத­வியை முன்­வைத்து தொடங்­கப்­பட்ட சட்டப் போராட்டம் ஓய்­வுக்கு வரும் அறி­கு­றிகள் ஏதும் இருப்­ப­தாகத் தென்­ப­ட­வில்லை.

வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக, அமைச்சர் பத­வியில் இருந்து நீக்­கப்­பட்ட டெனீஸ்­வரன் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் தொடுத்த வழக்கு திக்குத் திசை மாறி எங்­கெங்கோ போய்க் கொண்­டி­ருக்­கி­றது.

இதனால், யார் யாரோ வெல்லாம் சிக்­க­லுக்குள் வந்து மாட்டிக் கொள்ளும் நிலையும் ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

இப்­போது இந்த விவ­காரம் மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்றம், உச்­ச­நீ­தி­மன்றம் என இரண்டு இடங்­களில் விசா­ர­ணை­களில் இருக்­கி­றது.

மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில், டெனீஸ்­வரன் தரப்பில், தம்மை முத­ல­மைச்சர் பத­வியில் இருந்து நீக்­கு­வ­தற்கு முத­ல­மைச்சர் எடுத்த நட­வ­டிக்கை தவறு என உத்­த­ர­விடக் கோரித் தாக்கல் செய்­யப்­பட்ட முத­லா­வது மனு விசா­ர­ணையில் இருக்­கி­றது.

அந்த மனு மீது மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் இடைக்­கால உத்­த­ரவைப் பிறப்­பித்து, இன்­னமும் டெனீஸ்­வரன் அமைச்­ச­ரா­கவே இருக்­கிறார், அவரை நீக்­கிய உத்­த­ர­வுகள் இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்று கூறி­யி­ருக்­கி­றது.

இந்த உத்­த­ரவை செயற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­காமல், நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­துள்ளார் என்று முத­ல­மைச்சர் மீதும், இரண்டு அமைச்­சர்கள் மீதும் டெனீஸ்­வரன் தொடுத்த இரண்­டா­வது வழக்கும் இங்கு இருக்­கி­றது.

ஆனால், மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தின் இடைக்­கால உத்­த­ர­வுக்கு எதி­ராக, முத­ல­மைச்சர் தாக்கல் செய்த மனு உச்­ச­நீ­தி­மன்­றத்தில் விசா­ர­ணையில் இருக்­கி­றது.

இதற்­கி­டையில், இரண்டு தரப்பும் அவ்­வப்­போது ஆட்­சேப மனுக்­களைத் தாக்கல் செய்து விசா­ர­ணையின் போக்கை மாற்றிக் கொண்­டி­ருக்­கின்­றன.

அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரங்­களில் விசா­ர­ணை­களை நடத்த- உத்­த­ர­வு­களைப் பிறப்­பிக்க மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­துக்கு அதி­காரம் உள்­ளதா என்­றொரு சிக்­கலும் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இன்­னொரு பக்கம் நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கை மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்ள முடி­யாது என்று முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் தரப்பில் தாக்கல் செய்­யப்­பட்ட மனுவும் மேல்­மு­றை­யீட்டு மனுவில் விவா­திக்­கப்­ப­டு­கி­றது.

இது போதா­தென்று, மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் அமைச்சர் அனந்தி சசி­த­ர­னுக்கு சமர்ப்­பிக்­கப்­பட்ட குற்றப் பத்­திரம் ஆங்­கி­லத்தில் இருப்­ப­தா­கவும், ஆங்­கிலம் தெரி­யாது என்­பதால், அதனை அவரால் வாசித்து விளங்கிக் கொள்ள முடி­யாது என்றும் அவ­ரது சட்­டத்­த­ரணி முன்­வைத்த வாதம் வேறு புதிய பிரச்­சி­னையை கிளப்­பி­யி­ருக்­கி­றது.

அமைச்சர் அனந்தி சசி­த­ர­னுக்கு ஆங்­கிலம் தெரி­யாது என்ற வாதத்தை நீதி­மன்றம் நிரா­க­ரித்­துள்ள அதே­வேளை, அவர் ஜெனீ­வாவில் ஆங்­கி­லத்தில் நிகழ்த்­திய உரை ஆதா­ரத்தை வைத்து, நீதி­மன்­றத்தை தவ­றாக வழி­ந­டத்­தினார் என அனந்தி மீது இன்­னொரு அவ­ம­திப்பு வழக்குப் போடு­வ­தற்கு டெனீஸ்­வ­ரனின் சட்­டத்­த­ரணி அச்­சாரம் போட்­டி­ருக்­கிறார்.

ஆக, வடக்கு மாகாண அமைச்­ச­ரவை தொடர்­பான பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்கு நீதி­மன்றப் படி­யே­றிய தரப்­புகள் இப்­போது, வேறெ­தையோ தேடிக் கொண்­டி­ருக்­கின்ற நிலை தான் தோன்­றி­யி­ருக்­கி­றது.

வடக்கு மாகாண சபையின் ஆயுள்­காலம் முடி­யப்­போ­கி­றது. அதற்குள் அமைச்­ச­ர­வையைக் கூட்டி நிலு­வையில் உள்ள திட்­டங்­க­ளுக்கு அங்­கீ­காரம் அளித்து, நிர்­வாக, நடை­முறைச் சிக்­கல்­களைத் தவிர்க்­கவும், மக்­க­ளுக்­கான பணி­களில் தடங்­கல்கள் வராமல் செய்­வதும் தான் இன்­றைய முக்­கி­ய­மான தேவை.

இன்னும் ஒரு மாதத்­துக்குப் பின்னர் வடக்கு மாகா­ண­சபை செய­லி­ழந்து போகும். அதற்குப் பின்னர் ஆளு­நரின் கையில் அதி­காரம் வரப்­போ­கி­றது. அவர் அந்த அதி­கா­ரத்தை எவ்­வாறு பயன்­ப­டுத்­துவார் என்ற கேள்வி உள்­ளது.

எனவே, எஞ்­சி­யுள்ள குறு­கிய காலத்­துக்­குள்­ளா­வது, வடக்கு மாகா­ண­சபை தனது உச்­ச­வி­னைத்­தி­றனை மக்­க­ளுக்­கான திட்­டங்­க­ளுக்கும், செயற்­பா­டு­க­ளுக்கும் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்­டி­யது முக்­கி­ய­மா­னது.

வடக்கு மாகாண சபையின் செயற்­பா­டுகள் நீதி­மன்ற வழக்­கு­களால் கடந்த மூன்று மாதங்­க­ளா­கவே முழு­மை­யாக இருக்­க­வில்லை. அமைச்­சர்கள் வாரியம் கூடா­ததே அதற்குக் காரணம்.

பொது­வாக ஆட்சி நிர்­வாக கட்­ட­மைப்­புகள் தமது பத­விக்­கா­லத்தின் இறு­திக்­கட்­டத்தில் தான், வேக­மாகச் செயற்­பட முனை­வ­துண்டு. ஆனால் வடக்கு மாகா­ண­சபை மாத்­திரம், தனது கடைசிக் கால­கட்­டத்­திலும் நத்­தை­வே­கத்தில் நடை போடு­வ­தி­லேயே குறி­யாக இருக்­கி­றது.

இன்னும் ஒரு மாதம் அமைச்­ச­ராக இருந்து டெனீஸ்­வரன் எதனைச் சாதித்து விடப்­போ­கிறார்- அல்­லது டெனீஸ்­வ­ரனை இன்னும் ஒரு மாதம் பத­வியில் இருக்க அனு­ம­திப்­பதால் தான் விக்­னேஸ்­வ­ர­னுக்கு என்ன கெடுதல் வந்து விடப் போகி­றது?

எது­வுமே இல்லை. இரண்டு தரப்­பு­க­ளுமே ஈகோ­வினால் தான் இந்­த­ள­வுக்கு இழு­ப­றிப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.

தம் மீதுள்ள ஈகோ குற்­றச்­சாட்­டு­களை எதிர்­கொள்­வ­தற்­காக- இரண்டு தரப்­புமே கூறிக்­கொள்­கின்ற விடயம் தான், நாங்கள் மாகாண சபைக்கு அதி­காரம் இல்லை என்­பதை நிரூ­பிக்­கவே வழக்கை நடத்­து­கிறோம் என்­ப­தாகும்.

மாகாண சபைக்கு அதி­காரம் உள்­ளது என்று இவர்­க­ளுக்கு யார் சொன்­னது? அதனை நீதி­மன்­றத்தில் ஏறி நிரூ­பி­யுங்கள் என்று வாக்­க­ளித்த மக்கள் கேட்­டார்­களா?,

இந்த வழக்­கினால் தான் மாகாண சபைக்கு அதி­காரம் இல்லை என்று நிரூ­பிக்க வேண்டும் என்­றில்லை. அது ஏற்­க­னவே தெரிந்த விடயம் தான்.

மாகா­ண­ச­பைக்கு கூடுதல் அதி­கா­ரங்­களைத் தர­மு­டி­யாது என்று அர­சாங்­கத்தில் உள்­ள­வர்­களே கூறு­கி­றார்கள். அதுவே அதி­கா­ரங்கள் அற்ற சபை தான் இது என்­பதை உறு­திப்­ப­டுத்­து­கி­றது.

அப்­ப­டி­யி­ருக்க, மிக முக்­கி­ய­மா­ன­தொரு தரு­ணத்தில் வீண் சட்டப் போராட்­டத்தில் தமிழர் தரப்பில் உள்­ள­வர்கள் ஏன் காலத்தைக் கழிக்க வேண்டும்? (6ஆம் பக்கம் பார்க்க)

 

விட்­டுக்­கொ­டுப்­பதால் தமது மதிப்புக் கெட்டு விடும் என்று இரண்டு தரப்­பு­க­ளுமே கரு­து­கின்­றன. அதனால் சட்டப் போராட்­டத்தை தொடர்ந்து முன்­னெ­டுப்­பதில் தீவி­ர­மாக இருக்­கின்­றன.

முன்னாள் நீதி­ய­ர­ச­ரான, விக்­னேஸ்­வரன் நீதி­மன்றப் படிக்­கட்டில் ஏறு­வது வடக்கு மாகாண சபைக்கு அவ­மானம் என்று அவைத்­த­லைவர் சிவிகே சிவ­ஞானம் கூறி­யி­ருந்தார். அவரால் சில சம­ரச முயற்­சி­களும் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஆனாலும் கடைசி வரையில், முத­ல­மைச்சர் தரப்பில் அதற்கு சாத­க­மான பதில் கிடைக்­க­வில்லை.

அவர் தாம் ஒரு நீதி­ய­ரசர் என்­பதை தொடர்ந்து வலி­யு­றுத்தி வந்­தாலும், தாம் வழக்­கிற்­காக நீதி­மன்றில் எழுந்து நின்று சாட்­சியம் அளிப்­பது கௌர­வத்தைப் பாதிக்கும் என்­பதை ஏன் கருத்தில் கொள்ளத் தவ­று­கிறார் என்­பது தான் பல­ருக்கும் வியப்பு.

அதை­விட, இப்­போது விக்­னேஸ்­வ­ரனும் டெனீஸ்­வ­ரனும் நடத்­து­கின்ற சட்டப் போராட்டம் அவர்­களின் பிர­தான வழக்­கு­களை விட்டு வெளியே சென்று கொண்­டி­ருக்­கின்­றது என்­ப­தையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கை விசா­ரிக்க மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­துக்கு அதி­காரம் உள்­ளதா என்­பது ஒன்று, அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் தொடர்­பாக தீர்ப்­ப­ளிக்க உச்­ச­நீ­தி­மன்­றத்­துக்கு அதி­காரம் இருக்­கி­றதா என்­பது இன்­னொன்று.

இந்த இரண்டு விட­யங்­களும் முத­ல­மைச்­ச­ருக்கோ, டெனீஸ்­வ­ர­னுக்கோ தமது வழக்­கு­களில் வெற்­றி­பெறத் தேவை­யான விட­யங்­க­ளாக இருக்­கலாம். ஆனால், இவர்­களை வடக்கு மாகாண சபைக்குத் தெரிவு செய்த மக்­க­ளுக்கு அவ­சி­ய­மா­னதா? என்றால் நிச்­ச­ய­மாக இல்லை.

வடக்கு மாகாண சபைக்கு மக்கள் எதற்­காக நீதி­ய­ர­சர்கள், சட்­டத்­த­ர­ணிகள் கல்­வி­மான்­களை தெரிவு செய்­தார்கள்?

வடக்கு மாகா­ணத்­துக்­கான உரித்­து­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு தமது சட்ட வித்­து­வங்­களைப் பயன்­ப­டுத்திக் கொள்­வார்கள், வடக்கின் அபி­வி­ருத்­திக்கும் வளர்ச்­சிக்கும் தமது நிபு­ணத்­து­வத்தை பிழிந்து கொடுப்­பார்கள் என்­றெல்லாம் எதிர்­பார்த்துத் தான், இவர்­களை மக்கள் தெரிவு செய்­தார்கள்.

ஆனால் கடை­சியில் நடந்­தது என்ன? வடக்கு மாகாண சபைக்­கான அதி­காரம் அல்­லது உரித்­துக்­காக எத்­தனை வழக்­குகள் போடப்­பட்­டன? இவர்­களின் சட்ட வித்­துவம் எந்­த­ள­வுக்கு மாகாண சபைக்குப் பயன்­பட்­டது?

எத்­தனை நிலை­யியல் கட்­ட­ளை­களை இவர்­களால் உரு­வாக்க முடிந்­தி­ருக்­கி­றது?

எத்­த­னையோ விட­யங்­களில் மத்­திய அரசின் தலை­யீ­டுகள் இருந்த போதிலும், அதற்கு எதி­ராக சட்ட ரீதி­யாக எத்­தனை போராட்­டங்கள் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன?

இந்தக் கேள்­வி­க­ளுக்­கான பதில், ஏமாற்றம் தான்.

அபி­வி­ருத்தி விட­யத்­திலும் இதே­நிலை தான். வடக்­கிற்கு முன்­மொ­ழி­யப்­பட்ட திட்­டங்கள் பல முடங்கிப் போன­தற்கும் வடக்கு மாகாண சபையில் உள்­ள­வர்கள் காரணம் என்­பதை மறந்து விட முடி­யாது.

ஏதேதோ சாக்குப் போக்­கு­களைச் சொல்லி முத­லீ­டுகள், திட்­டங்கள் பல கைவி­டப்­படும் நிலை தான் ஏற்­பட்­டது.

இப்­படிப் பல நிறை­வேற்­றப்­பட வேண்­டிய வி்டயங்கள் இருந்த போதும், அதனை தமது பத­விக்­கா­லத்­துக்குள் நிறை­வேற்­று­வதை விட்டு விட்டு, நீதி­மன்­றங்­க­ளுக்கும், சட்ட ஆலோசனைகளுக்கும் அலைந்து கொண்டிருப்பதால் இழப்பு வடக்கிலுள்ள மக்களுக்குத் தான்.

இந்த வழக்குகளால் ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய உழைப்பும், முயற்சியும், நேரமும், ஏன் நிதியும் கூட, வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமது பதவிக்காலம் முடிந்து ஓய்வில் இருக்கும் போது இப்படி வழக்குகளை நடத்திக் கொண்டிருந்தால் அதனை யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. ஆனால் மக்கள் பணிக்காக தெரிவு செய்யப்பட்ட காலத்தை, அதற்குப் பயன்படுத்தாமல், தேவையற்ற சட்டப் போராட்டத்துக்காக பயன்படுத்திக் கொள்வதும் கூட ஒரு வகையில் அரசியல் ஏமாற்று வேலை தான்.

மாகாண சபைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் தான் இருக்கின்றன. இதனைத் தெரிந்து கொண்டு தான், அதற்குள் நீச்சலடிக்கக் குதித்தவர்கள், மைல் கணக்கில் நீச்சலடித்துப் பயணிக்க எத்தனிக்கிறார்கள். அவ்வாறாயின் அவர்கள் கடைசியில் கரையில் தான் ஏறி நிற்க வேண்டியிருக்கும்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-23#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல.
    • சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா🙏🥰............................................
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.