நவீனன் 9,747 Report post Posted September 23, 2018 மட்டன் பிரியாணி, ஹைதராபாதி சிக்கன் மசாலா... ஹோட்டல் ஸ்பெஷல்! அசைவம் இல்லாத ஞாயிற்றுக்கிழமையா? சென்னையைச் சேர்ந்த ஆசிஃப் பிரியாணி நிறுவனம், மட்டன் பிரியாணியும், அதற்கு சைட் டிஷ்-ஆக ஹைதராபாதி சிக்கன் மசாலாவும் எப்படி செய்வது என்று சொல்லித் தந்திருக்கிறார்கள். சமைத்து ருசியுங்கள். புரட்டாசி அன்பர்கள் மட்டும் மன்னிச்சு... மட்டன் பிரியாணி தேவையானவை: மட்டன் (ஆட்டுக்கறி) - 1 கிலோ பிரியாணி அரிசி - அரை கிலோ சீரகம் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு நெய் - 4 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா தயாரிக்க: பட்டை - 4 சிறிய துண்டு ஏலக்காய் - 8 கிராம்பு - 4 மிளகு - 20 ஜாதிக்காய், ஜாதிபத்ரி - சிறிதளவு வறுத்து அரைத்துத் தூளாக்கிக் கொள்ளவும். ஊற வைக்க: தயிர் - 100 கிராம் பச்சை மிளகாய் - 6 (பொடியாக நறுக்கவும்) இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டேபிள்ஸ்பூன் சீரகத்தூள் - 1 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன் பெரிய வெங்காயம் - 4 (பொன்னிறமாகப் பொரித்து வைக்கவும்) கொத்தமல்லித்தழை- ஒரு கப் (பொடியாக நறுக்கி வைக்கவும்) புதினா இலைகள் - 1 கப் (பொடியாக நறுக்கி வைக்கவும்) எலுமிச்சை - 1 (ஜூஸ் எடுத்து வைக்கவும்) உப்பு - 2 டீஸ்பூன் பப்பாளிக்காய் ஜூஸ் - 5 டேபிள்ஸ்பூன் கிராம்பு - 4 ஏலக்காய் - 4 கறுப்பு ஏலக்காய் - 2 பட்டை - 2 பிரிஞ்சி இலை - 2 மிளகு - 8 ஜாதிபத்ரி, ஜாதிக்காய் - சிறிதளவு எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு அலங்கரிக்க: பொரித்த பெரிய வெங்காயம் - ஒரு கைப்பிடி பாலில் ஊற வைத்த குங்குமப்பூ - சிறிதளவு நெய்/வெண்ணெய் - சிறிதளவு செய்முறை: மட்டனை (ஆட்டுக்கறி) கழுவி, விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும். ஊற வைக்கக் கொடுத்தவற்றை எல்லாம் ஒன்றாகக் கலந்து மட்டனைச் சேர்த்துக் கலந்து மூன்று மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைக்கவும். அரிசியைக் கழுவி தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் பிரியாணிக்கான பாத்திரத்தை வைத்து அரிசி வேகும் அளவுக்குத் தேவையான தண்ணீரை ஊற்றி, கொதிக்க விடவும், இதில் அரிசிக்குக் கொடுத்த பொருட்களை எல்லாம் ஒரு துணியில் கட்டி கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீரில் போடவும். இத்துடன் சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறிய அரிசியை மட்டும் தண்ணீரில் சேர்த்து, பிறகு, பாதி பங்கு அரிசியை அப்படியே கரண்டியால் எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைக்கவும். இனி, மறுபடியும் தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது தண்ணீரை வடித்து தனியாகவும், வெந்த அரிசியைத் தனியாகவும் ஆற விட்டு மூடி வைக்கவும். ஊறிய மட்டன் கலவையை கனமான அடிப்பகுதியுள்ள பிரியாணி பாத்திரத்தில் சேர்த்து, அதில் அரிசி வடித்த தண்ணீரைச் சேர்த்து அடுப்பில் வைத்து மட்டன் வேகும் வரை மிதமான தீயில் வேக விடவும். மட்டன் நன்றாக வெந்ததும் முதலில் எடுத்து வைத்த பாதி அரிசியைச் சேர்த்து இரண்டு நிமிடம் வேக விடவும். இதன் மேல் அலங்கரிக்கக் கொடுத்தவற்றைச் சேர்த்துப் பரப்பவும். இதன் மேல் நெய், அரைத்து வைத்துள்ள கரம் மசாலாத்தூளை ஒரு லேயர் போலப் பரப்பி தூவவும். இதன் மேல் மீதம் இருக்கும் அரிசியைப் பரப்பவும். இப்படிப் பரப்பிய லேயர்கள் எல்லாம் பாத்திரத்தின் கால் பாகத்துக்கு மட்டும்தான் இருக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டும்தான் பிரியாணி நன்றாக வேகும். இனி மூடிப் போட்டு, அதன் மேல் கனமான பொருளைத் தூக்கி வைத்து ஐந்து நிமிடம் அதிக தீயில் வேக விடவும். பின்னர் தீயை லேசாகக் குறைத்து பதினைந்து நிமிடம் வேக விடவும். பதினைந்து நிமிடம் கழித்து தீயை முற்றிலும் குறைத்து அரை மணி நேரம் வேக விடவும். அடுப்பை அணைத்து ரைத்தாவோடு பிரியாணியைப் பரிமாறவும். ஹைதராபாதி சிக்கன் மசாலா தேவையானவை: சிக்கன் - 1 கிலோ (சின்னச்சின்ன பீஸ்களாக நறுக்கி வைக்கவும்) துருவிய தேங்காய் - அரை கப் ஏலக்காய் - 4 கிராம்பு - 6 காய்ந்த மிளகாய் - 15 சீரகம் - 1 டீஸ்பூன் வெந்தயம் - அரை டீஸ்பூன் தனியா (மல்லி) - 2 டீஸ்பூன் பட்டை - 2 முந்திரி - 3 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கவும்) நெய்/எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் பெரிய வெங்காயம் - அரை கப் (பொடியாக நறுக்கவும்) இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன் சர்க்கரை - 2 டீஸ்பூன் ஜாதிக்காய் - கால் டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன் டொமேட்டோ பியூரி - 200 மில்லி உப்பு - தேவையான அலவு தேங்காய்ப்பால் - 200 மில்லி செய்முறை: மிக்ஸியில் தேங்காய், கிராம்பு, ஏலக்காய், பட்டை, காய்ந்த மிளகாய், சீரகம், வெந்தயம், மல்லி (தனியா), ஜாதிக்காய், முந்திரி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, நெய் விட்டு வெங்காயத்தைச் சேர்த்து பிரவுன் நிறம் ஆகும் வரை வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனைப் போக வதக்கி, அரைத்த விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். இத்துடன் தேங்காய்ப்பால், டொமேட்டோ பியூரி, ஒரு கப் தண்ணீர் விட்டு வேக விடவும். இதில் சிக்கன், உப்பு, சர்க்கரை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு சிக்கனை வேக விடவும். சிக்கன் வெந்து கலவை க்ரீம் பதத்துக்கு வந்ததும், எலுமிச்சைச் சாறு ஊற்றி இறக்கவும். புலாவ், பராத்தா, மட்டன் பிரியாணி ஆகியவற்றுக்கு ஏற்ற சைட் டிஷ் இந்த சிக்கன் மசாலா. https://www.vikatan.com/news/miscellaneous/137769-mutton-briyani-hyderabad-chicken-masala-hotel-special.html 1 Share this post Link to post Share on other sites
suvy 5,120 Report post Posted September 23, 2018 புரட்டாசியில் சனிக்கிழமை விரதம் பிடிப்பவர்களையும் சேர்த்து ஞாயிறு அநேகமாய் எல்லோரும் சாப்பிடுவார்கள்.....! Share this post Link to post Share on other sites