Jump to content

இலங்கை குறித்து முக்கிய உப குழுக்கூட்டம் இன்று


Recommended Posts

இலங்கை குறித்து முக்கிய உப குழுக்கூட்டம் இன்று

 

(ரொபட் அன்­டனி)

ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 39 ஆவது கூட்டத் தொடர்  ஜெனி­வாவில் நடை­பெற்­று­வ­ரு­கின்ற  நிலையில்  இலங்கை விவ­காரம் தொடர்பில் இன்று 24 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை  "பசு­மைத்­தா­யகம்" அமைப்­பினால்    உப­கு­ழுக்­ கூட்டம்  ஒன்று நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 

UNHRC-.jpg

இலங்கை மனித உரிமை தொடர்­பான இந்த உப­கு­ழுக்­ கூட்டம் மனித உரி­மைப்­பே­ரவை வளா­கத்தில் 25 ஆம் இலக்க அறையில் பிற்பகல் 2 மணி­யி­லி­ருந்து  3 மணி­வரை  நடை­பெ­ற­வுள்­ளது.

இந்த உப­கு­ழுக்­ கூட்­டங்­களில்  பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நிதிகள், தமிழ் அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள்,  சர்­வ­தேச நாடு­களின்   பிர­தி­நி­திகள், சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பினர் கலந்­து­கொண்டு  இலங்­கையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­ட­வேண்டும் என்ற விட­யத்தை   வலி­யு­றுத்­த­வுள்­ளனர். 

அத்­துடன் தென்­னி­லங்­கையிலிருந்து கலந்­து­கொள்­ள­வுள்ள அமைப்­புக்கள்   ஜெனிவா பிரே­ர­ணைக்கு எதி­ராக   அக்­க­ருத்­துக்­களை முன்­வைக்­க­வுள்­ளன.    ஜெனிவா நோக்கி பய­ணித்­துள்ள  முன்னாள் பிர­தி­ய­மைச்சர் சரத் வீர­சே­கர  இக் கூட்­டத்தில் பங்­கேற்று இலங்கை குறித்த  ஜெனிவா பிரே­ர­ணைக்கு  எதி­ராக  உரை­யாற்­றவுள்ளார் என்று  தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  

இதே­வேளை "தமிழ் உலகம்" என்ற அமைப்­பினால் நாளை 25 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் இலங்கை தொடர்­பான உப­கு­ழுக் கூட்டம் ஒன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

"இலங்­கையின் மனித உரிமை நிலைமை" என்ற தலைப்பில் மனித உரிமைப் பேர வையின் 15 ஆவது இலக்க அறையில் பிற்பகல் 3 மணியிலிருந்து 4 மணி வரை இந்த உபகுழுக் கூட்டம் நடத்தப்படவுள் ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/41064

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நவீனன் said:

நிலையில்  இலங்கை விவ­காரம் தொடர்பில் இன்று 24 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை  "பசு­மைத்­தா­யகம்" அமைப்­பினால்    உப­கு­ழுக்­ கூட்டம்  ஒன்று நடத்­தப்­ப­ட­வுள்­ளது.  

அன்புமணி கதற விடுவாரா ? இல்லை செஞ்சி முன்னாள் எம். எல் .ஏ  கணேஸ் குமாரோடு முடிந்து விடுமா ? ரெல் மீ ..?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.