Jump to content

தமி­ழர்­க­ளுக்­கான கட­மையை நிறை­வேற்­றா­தவி­டத்து எஞ்­சி­யி­ருப்­ப­­வர்­களும் புலம்­பெ­யர்ந்து விடுவர்....அமைச்சர் சுவா­மி­நாதன்


Recommended Posts

தமி­ழர்­க­ளுக்­கான கட­மையை நிறை­வேற்­றா­தவி­டத்து எஞ்­சி­யி­ருப்­ப­­வர்­களும் புலம்­பெ­யர்ந்து விடுவர்

City-Page-03-BlckGMGPage1Image0006-093f02aa20934e88b0b058351291520814c8b202.jpg

 

(எம்.சி.நஜி­முதீன்)

அமைச்சர் சுவா­மி­நாதன் தெரி­விப்பு

தமிழ் மக்­க­ளுக்­கான கட­மை­களை உரிய வகையில் செய்­யா­தவி­டத்து நாட்டில் எஞ்­சி­யி­ருக்­கின்ற தமிழ் மக்­களும் வெளி­நாடு செல்­வ­தற்கு இட­முண்டு. மேலும் நாம் எமது கட­மை­களைச் செய்­வ­தற்கு எதிர்­பார்க்­கின்ற போதும் அதற்கு அர­சி­யலில் இட­ம­ளிப்­ப­தாக இல்லை என அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்தார்.

இந்து சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் வெளி­யீ­டாக வந்­துள்ள அமரர் கி.லக்ஷ்­மணன் எழு­திய கட்­டு­ரை­களின் தொகுப்­பான “சிப்­பிக்குள் முத்து” நூல் வெளி­யீட்டு விழா நேற்று மாலை பம்­ப­லப்­பிட்டி சரஸ்­வதி மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. அந்­நி­கழ்­வுக்கு தலை­மை­தாங்கி உரை­யாற்­றும்­போதே இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இந்து சமய கலா­சார திணைக்­க­ளத்­தி­னூ­டாக என்ன செய்­துள்­ளீர்கள் என சிலர் கேட்­கலாம். எனினும் கடந்த மூன்று வருட காலங்­களில் நூற்று இரு­பது நூல்­களை வெளி­யிட்­டுள்ளோம். அது தவிர வேறு பல வேலைத்­திட்­டங்­க­ளையும் முன்­னெடுத்து வரு­கின்றோம். மேலும் இந்து மாநாட்டை எதிர்­வரும் மார்ச் மாதம் 29, 30, 31 ஆம் திக­தி­களில் நடத்­து­வ­தற்குத் திட்­ட­மிட்­டுள்ளோம். எனவே அதற்கு முன்னர் இன்னும் நூறு புத்­த­கங்­க­ளை­யா­வது வெளி­யி­டு­வ­தற்கு எதிர்­பார்த்­துள்ளோம்.

மேலும் எமது இளம் சமூ­கத்தில் அதி­க­ள­வானோர் வெளி­நாட்டில் உள்­ளனர். எனவே தமிழ் மக்­க­ளுக்­கான கட­மை­களை உரிய வகையில் செய்­யாத­வி­டத்து எஞ்­சி­யி­ருக்­கின்ற மக்­களும் வெளி­நாடு செல்­வ­தற்கு இட­முண்டு. இதனை நான் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­வு­க்கும் தெரி­வித்­துள்ளேன். ஆகவே நாம் எமது கடமைகளைச் செய் வதற்கு எதிர்பார்க்கின்றோம். எனினும் அக்கடமையை நிறைவேற்றுவதற்கும் அரசி யலில் இடமளிப்பதாக இல்லை என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-24#page-3

Link to comment
Share on other sites

தமிழர்களை வெளியேற்றி இலங்கையை முற்று முழுதாக சிங்கள நாடாக மாற்றுவதற்குத்தான் சிங்களம் அன்றிலிருந்து இன்றுவரை படாத பாடுபட்டு வருகிறது. அதற்குத் துணையாகத்தான் நீங்களும் வீட்டுத் திட்டதில், தமிழ் மக்­க­ளுக்­கான கட­மை­களை உரிய வகையில் செய்­யா­திருக்க முயன்றீர்களா. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.