Jump to content

என்னுயிர் நீதானே... - ஒரு நிமிடக்கதை


Recommended Posts

என்னுயிர் நீதானே... - ஒரு நிமிடக்கதை

 

 

 
 
anibul13.gifசுபாகர்
white_spacer.jpg
title_horline.jpg
bullet2.gif
BLUFLOAT1.gifஎன்னுயிர் நீதானே...
white_spacer.jpg

''சாமி, நான் இந்த ஊருக்கு வந்து ஏழு வருஷம் ஆச்சு. ஒரு ஹோட்டல்ல சப்ளையர் வேலை பாக்கு றேன். ஏனோ தெரியலை, உங்களைப் பார்த்ததுமே என் கதையைச் சொல்லி அழணும் போல இருக்கு!'' என்றான் அவன்.

p83a.jpgசாமி இளமை தொலையாத முகத்துடன், கருமை மறையாத தாடியுடன், சாந்தம் தவழும் கண்களுடன் அவனை, 'சொல் குழந்தாய்!' என்பது போல் பார்த் தார்.

''என் பேரு கோபால். ஊர் மதுரைப் பக்கம் ஒரு கிராமம். ஊர்ல எங்க குடும்பமும் எங்க மாமன் குடும்பமும்தான் பெரிய குடும்பங்கள். எல்லாரும் ஒண்ணுமண்ணா இருப்போம்!

என் மாமனுக்கு வித்யா பொறந்தப்ப முதல்ல அந்தப் பேச்சு விளையாட்டாதான் ஆரம்பிச்சது. ஆனா, கொஞ்ச நாள்ல அதையே ரெண்டு குடும்பங்களும் தீர்மானமா எடுத்துக்கிட்டாங்க. கல்யாண வயசு வந்ததும் வித்யாவுக்கு என்னைக் கல்யாணம் கட்டி வெச்சுப்புடணும்னு முடிவு எடுத் தாங்க. அவங்க ஊட்டுன ஆசையில நான் சின்ன வயசுல இருந்தே 'வித்யா எனக்குத்தான்'கிற நினைப்போடவே வளர்ந்தேன்.

வாலிப வயசுல வித்யா பைத்தியம் முத்தி என் உயிர், உலகம் எல்லாமே வித்யாதான் இருந்தா. ஆனா, ஒரு கை மட்டும் தட்டுனா ஓசை வருமா?வித்யா வுக்கு விவரம் புரிய ஆரம்பிச்சதுல இருந்தே என்கிட்ட ஓர் இடைவெளியோடுதான்நடந்துக் கிட்டா. அது எனக்குப் புரியாத அளவுக்கு வெறித்தனமா அவளை நேசிச்சுட்டு இருந்தேன். நான் எங்கப்பா மாதிரி மை கறுப்பு இல்லேன்னாலும் கொஞ்சம் கறுப்புதான். வித்யாவோ அப்பதான் பூத்த செம்பருத்தி மொட்டு கணக்கா எளஞ்சிவப்பு. எங்க கிராமம் அதோட ஆயுசுக்கும் வித்யா மாதிரி ஒரு அழகியைச் சுமந்திருக்காது.

 

அழகு ஒரு காரணம்... ரெண்டாவது படிப்பு. நான் ஆறாம் கிளாஸ் ஃபெயில். வித்யா டவுன் காலேஜுக்கு எல்லாம் போய் படிச்சது. கல்யாணப் பேச்சு எடுத் தப்போ, வித்யா ஒரே வரியில் என்னைக் கல்யாணம் கட்டிக்க இஷ்டமில்லைன்னு சொல்லிருச்சு.

அதைக் கேட்டுக்கிட்டு நான் எப்படி உயிரோடு இருந்தேன்னு இப்ப வரைக்கும் தெரியலை. அவளுக்கு அவங்க வீட்டுல நல்லா படிச்ச, சிவப்பா, அழகா ஒரு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணிவெச்சுட்டாங்களாம்.

அவ கல்யாணம் அன்னிக்குக் கிளம்பி இலக்கில்லாம எங்கெங்கோ அலைஞ்சு திரிஞ்சு, கடைசியா இந்த ஊர்ல செட்டில் ஆயிட்டேன். இத்தனை வருஷம் பொழைச்ச என்பொழைப்புக்கு ஏதாவது அர்த்தம் இருக்குதா சாமி?''

சாமி நிதானமாகக் கேட்டார், ''அது கிடக் கட்டும்... மணியஞ்சோலை கிராமத்து ரங்கசாமி, பாக்கியம் தம்பதியோட மகன்தானே நீ?''

சாமியின் ஞான தீர்க்கத்தை எண்ணி கோபால் புல்லரித்துவிட்டான்.

''சா... சாமி என் ஊரும் அப்பா, அம்மா பேரும் உங்களுக்கு எப்படி சாமி தெரியும்?''

''உன் மாமன் மகள் வித்யாவைக் கல்யா ணம் பண்ண அதிர்ஷ்டக்கட்டை நான்தான். அந்த ராங்கிக்காரிகூட மனுஷன் வாழ முடியாதுப்பா. அதான், நான் சாமியாராயிட்டேன்! நீயாவது நிம்மதியா இரு!'' என்று கூறிவிட்டு கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார் 'சாமி'கள்!

 

https://www.vikatan.com

 

Link to comment
Share on other sites

1மெசேஜ் ரிசீவ்டு! -

ஒரு நிமிடக்கதை

 

 

 
 
bullet4.gifத.ரமேஷ். white_spacer.jpg
title_horline.jpg
 
white_spacer.jpg

p52b.jpg'இந்த கணேஷை 20 நபர்களுக்கு ஃபார்வர்ட் செய்யவும். உடனடியாக உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். உஷார்... அழித்துவிடாதீர்கள். நிச்சயம் நல்ல செய்தி உங்களுக்குக் காத்திருக்கிறது!' என்று விநாயகர் உருவம்கொண்ட படத்துடன் மனோகரன் மொபைலில் விழுந்தது அந்த எஸ்.எம்.எஸ். 'ஏதும் நல்லது நடக்காதா?' என்று ஏங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் இப்படி ஒரு குறுஞ்செய்தி. 'அதை அழித்துவிட வேண்டாம்!' என்று எச்சரிக்கை வேறு. அதை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தான். படிக்கப் படிக்க மனசில் ஒரு குறுகுறு. 'இது உண்மைதானா... நம்பலாமா?' என்று அந்த குறுஞ்செய்தி அனுப்பிய நண்பனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். தட்டினான். 'நம்பலாம் என்றுதான் எனக்கு அனுப்பியவன் சொன்னான். அவனுக்கு அவன் லவ்வர் 'ஓ.கே.' சொன்னாளாம்!' - பீப்பியது பதில்.

 

முன்பெல்லாம் கைரேகை பார்த்து ஜோசியம் சொன்னார்கள். இப்போது செல்போனில் சொல்கிறார்கள். ஹ்ம்ம்... வேலையில்லாத வெட்டி ஆபீஸராக நேரத்தைக் கடத்த ஊருக்கு வெளியே இருந்த பூங்காவில் படுத்து வானத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தவனுக்கு டீ குடிக்கலாம் போலத் தோன்றியது. பூங்கா வாசலில் டீக்கடையைப் பார்த்தது நினைவுக்கு வந்த அதே நேரம்... பாக்கெட்டில் இருந்த ஒண்ணே முக்கால் ரூபாயும் நினைவுக்கு வந்தது. 'ச்சே... சிங்கிள் டீக்குக்கூட வக்கில்லாத இந்தியனாகத் திரிகிறோமே!' என்ற கழிவிரக்கம் தூண்ட... எதையாவது உடனடியாகச் சாதிக்க வேண்டும் என்ற வெறி எழுந்தது.

பாக்கெட்டில்தானே காசில்லை. செல்போனில் இருக்கிறதே! நடப்பது நடக்கட்டும் என்று அந்த கணேஷ் எஸ்.எம்.எஸ்ஸை 20 நண்பர்களுக்கு அனுப்ப முடிவு செய்தான். ஒரு குறுஞ்செய்திக்கு 50 பைசா. கலங்காமல், தயங்காமல் 22 நண்பர்களுக்கு அனுப்பிவிட்டுத்தான் ஓய்ந்தான்.

ஆயுளின் இன்னொரு அரை மணி நேரம் தேய, 'சம்போ சிவ சம்போ' என அலறியது அலைபேசி. 'வினோத் காலிங்!' ''சொல்றா பங்காளி!'' என்றான் மனோகரன். ''டேய்! உன் வேலைக்கு எனக்குத்

p52a.jpgதெரிஞ்ச மில் ஓனர்கிட்ட பேசியிருக்கேன்னு சொல்லியிருந்தேன்ல. அவர் இப்ப உன்னை உடனே கூப்பிடச் சொன்னாருடா. உன் மொபைல் நம்பரை அவர் பி.ஏ-கிட்ட கொடுத்திருக்கேன். தெரியாத நம்பர்ல இருந்து கால் வந்தா எடுக்க மாட்டாங்க. உன் மொபைல்ல இருந்து கூப்பிடு. அவர் நம்பரை உனக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியிருக்கேன்டா. டேய்! அவரை இந்தப் பத்து நிமிஷ டீ பிரேக்லதான் பிடிக்க முடியும். உடனே, கூப்பிடுடா. நான் அப்புறமாக் கூப்பிடுறேன்!'' பட்டென்று கட் செய்தான். அடுத்த இருபதாவது நொடியில் குறுஞ்செய்தியாக வந்து விழுந்தது மில் ஓனரின் நம்பர். ஓனர் பெயர் கணேஷ். 'ஆஹா! கணேஷ் எஸ்.எம்.எஸ். ராசிடோய்!'
சட்டென்று ரத்த ஓட்டம் அதிகரிக்க, இதயம் படபடக்க... செல்போனில் மில் ஓனர் நம்பரை டயல் செய்தான்.

ஹஸ்கியான ஒரு பெண் குரல், 'உங்கள் அக்கவுன்ட்டில் மிச்சம்இருக்கும் தொகை 37 பைசா. இந்த அழைப்பை கனெக்ட் செய்ய உடனடியாக ரீ-சார்ஜ் செய்யவும்' என்றது!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.