Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

ஜனாதிபதிக்கும், கனேடிய பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!


Recommended Posts

ஜனாதிபதிக்கும், கனேடிய பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

 

IMG-20180924-WA0008-720x450.jpg

அமெரிக்க தலைநகர் நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக இடம்பெறும் நெல்சன் மண்டேலா சமாதான மாநாடானது அனைத்து அரச தலைவர்களின் பங்குபற்றலுடன் இன்று(திங்கட்கிழமை) நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஆரம்பமானது.

இதன்போதே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும், குறித்த சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பிலான தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

http://athavannews.com/ஜனாதிபதிக்கும்-கனேடிய-ப/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இந்த இலங்கை சனாதிபதி  மண்டேலாவின்  சமாதான மாநாட்டில் கலந்து கொள்ள அருகதையற்றவர் . 

Link to post
Share on other sites

இலங்கையில் நிரந்தரத் தீர்வு: இதுவே கனடாவின் விருப்பம்! – மைத்திரியிடம் அந்நாட்டுப் பிரதமர் நேரில் தெரிவிப்பு

0d2d9cd01683688bc91c063ca422a320?s=48&d=

01-1-1.jpg

“மூவின மக்கள் வாழும் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அங்குள்ள மக்கள் சமாதானத்துடன் – ஒற்றுமையுடன் வாழ வேண்டும். மீண்டுமொரு போர் அங்கு மூள இடமளிக்கக்கூடாது. இலங்கை மக்களின் அகதி வாழ்க்கைக்கு முடிவுகட்டப்பட வேண்டும். கனடாவின் இந்த எதிர்பார்ப்புகள் – விருப்பங்கள் நிறைவேற வேண்டும்.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் தெரிவித்தார் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ.

ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச்சபைக் கூட்டத் தொடருக்கு சமாந்தரமாக இடம்பெறும் நெல்சன் மண்டேலா சமாதான மாநாடானது அனைத்து அரச தலைவர்களின் பங்குபற்றலுடன் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இன்று (24) ஆரம்பமானது.

இந்த மாநாட்டில் பங்குபற்றியுள்ள இலங்கை ஜனாதிபதியை கனேடியப் பிரதமர் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

http://www.newsuthanthiran.com/2018/09/24/இலங்கையில்-நிரந்தரத்-தீர/

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.