Jump to content

ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக ஐ.நா.வில் ஆர்ப்பாட்டம்!


Recommended Posts

ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக ஐ.நா.வில் ஆர்ப்பாட்டம்!

 

maithiri-1-720x450.png

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகம் முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் புலம்பெயர் தமிழ் அமைப்பினரின் ஒழுங்கமைப்பின் கீழ் அமெரிக்ககா நேரப்படி நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் 73ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில்  நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரை நிகழ்த்தவுள்ளார். இதன்போதே ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க புலம்பெயர் தமிழ் அமைப்பு தீர்மானித்துள்ளது.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக கனடாவிலிருந்தும் புலம்பெயர் தமிழர்கள் வருகை தரவுள்ளதாகவும் இப்போராட்டத்துக்காக டொரன்டோ நகரிலிருந்து விசேட பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யுத்தத்தின் போதான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்களுக்கு நீதி கோரி போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக  ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/இலங்கை-ஜனாதிபதிக்கு-எதிர/

Link to comment
Share on other sites

மைத்ரிக்கு எதிராக நியூயோர்க்கில் கொட்டும் மழையிலும் போராடிவரும் தமிழர்கள்

 

சிறிலங்காவின் அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையிலானசிறிலங்கா அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகம் துணை போகக் கூடாது என வலியுறுத்தி அமெரிக்காவின்நிவ்யோர்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு எதிரில் புலம்பெயர்தமிழர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

நிவ்யோர்க் நகரில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழைக்குமத்தியிலும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் போராட்டம் தொடர்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில்சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன உரையாற்றவுள்ள நிலையிலேயே ஐ.நா தலைமையகத்திற்குதிரண்ட தமிழர்கள், சிறிலங்கா அரச தலைவர் போர் குற்றவாளி என்றும், ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு தமிழர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறுவலியுறுத்தியும் கோசங்களை எழுப்பினர்.

 

கொட்டும் மழைக்கு மத்தியில் இடம்பெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில்நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரான சட்ட நிபுணர் வீ.ருத்திரகுமாரன், சிறிலங்காஅரச தலைவருக்கு தமிழர் தரப்பின் செய்தியை கூறுவதற்காகவே இங்கு வந்திருப்பதாகதெரிவித்தார்.

 

தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்காது தொடர்ந்தும்இழுத்தடிப்பு செய்துவரும் சிறிலங்கா அரசுக்கு சர்வதேச சமூகம் துணை போவதை நிறுத்திஉடனடியாக சிறிலங்காவை சர்வதேச போர் குற்ற நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் போராட்டத்தில் இணைந்திருந்த புலம்பெயர் தமிழர்கள் தொடர்ச்சியாக கோசம்எழுப்பினர்.

https://www.ibctamil.com/diaspora/80/106671?ref=bre-news

Link to comment
Share on other sites

உலகில் தொடரும் கொடூரங்களுக்கு வித்திட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பில் ஐ.நா விற்கு மனு

 

 
 

உலக நாடுகளில் இன்றும் தொடரும் இனப்படுகொலைகளுக்கு 21 ஆம் நூற்றாண்டின்மிகக் கொடூரமான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையே வித்திட்டது என்று நாடு கடந்ததமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் 73 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டுசிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன உரையாற்றவுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள்சபையின் தலைமையகத்திற்கு எதிரில் திரண்டு ஆர்ப்பாடடம் நடத்திவரும் புலம்பெயர்தமிழர்களுடன் இணைந்துகொண்ட நிலையிலேயே விஸ்வநாதன் ருத்திரகுமாரன் இவ்வாறுகுறிப்பிட்டுள்ளார்.

 

ஐ.நா தலைமையகத்திற்கு முன்னால் திரண்ட தமிழர்களுடன் இணைந்துபல மணி நேரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன், சிறிலங்கா தொடர்பில் மௌனமாக இருந்துவரும் சர்வதேசசமூகத்தை மீள ஒருங்கிணைக்கும் நோக்கிலேயே தாம் போராட்டத்தில் இணைந்து கொண்டிருப்பதாககூறினார்.

பொறுப்புக்கூறல் என்பது மீள இணக்கப்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய ஒரு விடையம் என்ற செய்தியை சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தெரிவித்துக்கொள்வதாகவும்சட்ட நிபுணர் ருத்திரகுமாரன் தெரிவித்தார்.

“ஒன்பது வருடங்களுக்கு முன்னர் ஒரு இலட்சம் தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டனர். எமது மக்கள் நடந்துசெல்லும் போதும், சாப்பிடும் போதும்,உறங்கும் போதும் படுகொலை செய்யப்பட்டனர். முள்ளிவாய்க்கால் படுகொலைஎன்பதே 21 ஆவது நூற்றாண்டின் மிகக் கொடூரமான இனப்படுகொலையாகும்” என்றும் ருத்திரகுமாரன்தெரிவித்தார்.

“முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையே மியன்மார், சிரியாபோன்ற நாடுகளில் தொடரும் இனப்படுகொலைகளுக்கும் வழியேற்படுத்திக் கொடுத்தது” என்றும்நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த விஸ்வநாதன்ருத்திரகுமாரன்....

ஐக்கிய நாடுகள் சபையினால் சிறிலங்கா தொடர்பில் இதுவரைமூன்று அறிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான கொடூரங்கள் இடம்பெற்றதை நிரூபிக்கக்கூடிய ஆதாரங்களுடன் இந்தஅறிக்கைகளில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இனப்படுகொலை இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபைஉறுதிப்படுத்தி கூறாத போதிலும், அதனை நிரூபிக்கக்கூடிய நிகழ்வுகள் மூன்றுஅறிக்கைகளிலும் தெளிவாக உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

எமது மக்களுக்கு எதிர்நோக்க வேண்டியிருக்கும் உடல், உளரீதியான பாதிப்புகளை அவதானிக்கும் போது அவை இனப்படுகொலை தொடர்பான சர்வதேச சட்டத்தைமீறும் செயல்களாகவே அமைந்திருக்கின்றன.

எனினும் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஒன்பதுவருடங்களாகியும் இதுவரை குற்றங்களுடன் தொடர்புடைய எவரும் சட்டத்தின் முன்நிறுத்தப்படவில்லை.

கலப்பு நீதிமன்ற கட்டமைப்பொன்றை அமைப்பதற்காக 2015 ஆம்ஆண்டு ஜெனீவாவில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. எனினும் இதுவரை அந்தப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது தொடர்ந்தும்உதாசீனம்செய்து வருவது மாத்திரமன்றி படையினரை ஒருபோதும் தண்டிக்கப்போவதில்லைஎன்றும் சிறிலங்கா அரச தலைவர் பகிரங்கமாக கூறியும் வருகின்றார்.

அதனால் நீதியை வழங்காது தொடர்ந்தும் இழுத்தடித்து வரும்சிறிலங்கா அரசாங்கத்தை சர்வதேச போர்குற்ற நீதிமன்றில் பாரப்படுத்த சர்வதேச சமூகம்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ருத்திரகுமாரன் வலியுறுத்தினார்.

 

https://www.ibctamil.com/diaspora/80/106672?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.