Jump to content

திலீபனை நினைவுகூர நீதிமன்றம் அனுமதி!


Recommended Posts

திலீபன் நினைவேந்தலை தடுக்கும் சிறிலங்காவின் முயற்சி – நீதிமன்றில் இன்று முக்கிய விசாரணை

 

thileepan-2018-2-300x200.jpgதியாகதீபம் திலீபனின் நினைவு நிகழ்வை நடத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி, யாழ். மேல் நீதிமன்றில் சிறிலங்கா காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள மனு மீது இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது.

நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில், நாளை நடத்த ஏற்பாடாகியுள்ள 31 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதித்து உத்தரவிடுமாறும், திலீபன் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலி உள்ளிட்டவற்றை அகற்ற யாழ். மாநகர சபைக்கு உத்தரவிடுமாறும் கோரி யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் சிறிலங்கா காவல்துறையினர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான், இன்று யாழ். மாநகர சபை ஆணையாளரை நீதிமன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இதற்கமைய, இன்று யாழ். மாநகர சபை ஆணையாளர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார்.

அதேவேளை, இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டவாளருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும், யாழ். சட்டவாளர் சங்கத்தின் தலைவி சாந்தா அபிமன்னசிங்கம் தலைமையிலான சட்டவாளர்களுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டவாளர்களும் முன்னிலையாகவுள்ளனர்.

அதேவேளை எந்த எதிர்ப்புகள் வந்தாலும் நாளை திலீபன் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதில், ஏற்பாட்டாளர்கள் உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinappalakai.net/2018/09/25/news/33069

Link to comment
Share on other sites

தியாக தீபத்தின் நினைவேந்தல் தமிழர்தாயகத்தில் நடைபெறுமா? தீர்ப்பு விரைவில்.....

 

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி யாழ். பொலிசாரினால் , யாழ்.நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த வழக்கில் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கூடாது எனவும் மக்களுக்கு நினைவு கூரும் உரிமை உண்டெனக் கோரி , ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமானசிங்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

குறித்த வழக்கில் பல சிரேஸ்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகவுள்ளமையால் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம் பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நீதிமன்ற சூழலில் பலர் கூடியுள்ளமையால் நீதிமன்ற வளாகம் பெரும் பரபரப்படைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கு பிற்பகல் 2.00 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

 

https://www.ibctamil.com/srilanka/80/106643?ref=bre-news

Link to comment
Share on other sites

திலீபனை நினைவுகூர நீதிமன்றம் அனுமதி!

 

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு தடைவிதிக்கக் கோரிய பொலிஸாரின் மனுவை நீதவான் நிராகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தியாகதீபம் திலீபனின் நினைவுதினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், குறித்த நினைவு நாள் சட்டவிரோதமானது என பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ். நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த நிகழ்வு சட்டவிரோதமானது அல்ல என தெரிவித்த நீதவான் அதற்க்கான அனுமதியையும் வழங்கியிருந்தார் என சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

http://athavannews.com/திலீபன்-நினைவேந்தலுக்கு/

Link to comment
Share on other sites

தியாக தீபம் திலீபனின் நினைவுதினத்தை அனுஷ்டிக்க நீதிமன்றம் அனுமதி

b5aa8ed46c64eb5ac312bb4e4042301e?s=48&d=

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு தடைவிதிக்கக் கோரிய பொலிஸாரின் மனுவை நீதவான் நிராகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தியாகதீபம் திலீபனின் நினைவுதினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், குறித்த நினைவு நாள் சட்டவிரோதமானது என பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ். நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த நிகழ்வு சட்டவிரோதமானது அல்ல என தெரிவித்த நீதவான் அதற்கான அனுமதியையும் வழங்கியிருந்தார் என சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

http://www.newsuthanthiran.com/2018/09/25/தியாக-தீபம்-திலீபனின்-நி-2/

 

திலீபனின் நினைவேந்தலுக்கு தடையில்லை – காவற்துறையின் மனு நிராகரிப்பு…

குளோபல்தமிழ்ச் செய்தியாளர்

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நிறுத்தும்படி யாழ். காவல்துறையினர் தாக்கல் செய்திருந்த கோரிக்கை மனுவை யாழ்.நீதிவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது எனவும் திட்டமிட்டபடி நாளை நல்லூரில் தியாக தீபம் திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல் இடம்பெறவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் , ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

நல்லூரில் அமைந்துள்ள தியாகி தீபம் திலீபனின் நினைவு தூபியை சூழவுள்ள சுற்றுவேலிகள் மற்றும் நினைவேந்தலுக்காக போடப்பட்டுள்ள கொட்டகைகள் மற்றும் உருவப்படங்களை அகற்றும்படியும், நினைவேந்தலை நிறுத்தும்படியும் மாநகரசபை ஆணையாளருக்கு அவசர உத்தரவினை வழங்குமாறு யாழ். காவல்துறையினா கடந்த வெள்ளிக்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் செவ்வாய்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சி. சதிஸ்தரன் முன்னிலையில் விளக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் , ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ. சுமந்திரன் யாழ்.மாநகர சபை ஆணையாளர் சார்பில் மன்றில் முன்னிலையானார்.

அதன் பின்னர் குறித்த வழக்கு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

அரசாங்கத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடந்த வருடம் நிதி ஒதுங்கி இருந்தார். அந்த திலீபனின் நினைவுதூபி அமைப்புக்காக ஒதுக்கியிருந்தார். அதன் பிரகாரம் சுற்றுவேலி அமைக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக இவ்வருட நிதி ஒதுக்கீடாக நான் 2 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளேன். இதன் பிரகாரம் யாழ். மாநகர சபை தனது தீரமானங்களுக்கு ஏற்ப இதனை முன்னெடுக்கிறது. எங்களால் ஒதுக்கப்பட்ட இந்த நிதி ஒதுக்கீட்டிற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது என தெரிவித்தேன்.

அத்துடன் காவல்துறையினார்குறித்த கொட்டகைகள் , நினைவு தூபியை சூழ அமைக்கபட்டு உள்ள வேலி என்பன பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதனையும் நாம் அடியோடு மறுத்தோம். நினைவு தூபி அமைந்துள்ள காணி மாநகர சபைக்கு சொந்தமானது எனவும் , அங்கு அமைக்கப்பட்டு உள்ள கொட்டகைகளோ வேலிகளோ எவருக்கும் இடையூறு இல்லை என தெரிவித்தேன்.

அத்துடன் நாளைய தினம் மேற்கொள்ளப்படவுள்ள நினைவேந்தல் நிகழ்வும் யாழ்.மாநகரசபையினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. ஆகவே இதனை தடுப்பதற்கான முன்னகர்வுகள் இல்லை என்பதை சுட்டிக்காட்டி உரிய ஆவணங்களை மன்றில் சமர்பித்தேன். என தெரிவித்தார்.

அதேவேளை தடை செய்யபட்ட பயங்கரவாத அமைப்பு உறுப்பினர் ஒருவரை நினைவு கூறுவதாக காவல்துறையினர் புதிய குற்ற சாட்டு ஒன்றினை குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் முன் வைத்துள்ளனர்.

அது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள குறித்த வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு நீதிவான் ஒத்திவைத்தார்.

IMG_8875.jpg?resize=800%2C600

http://globaltamilnews.net/2018/97063/

Link to comment
Share on other sites

பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையாக சட்டத்தரணிகளுக்கு அனுமதி இல்லை

 

 

IMG_8881.jpg?resize=800%2C600
தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்திற்கு தடை கோரி காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் என சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாக நீதிவான் அனுமதிக்க வில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் , ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

நல்லூரில் அமைந்துள்ள தியாகி தீபம் திலீபனின் நினைவு தூபியை சூழவுள்ள சுற்றுவேலிகள் மற்றும் நினைவேந்தலுக்காக போடப்பட்டுள்ள கொட்டகைகள் மற்றும் உருவப்படங்களை அகற்றும்படியும், நினைவேந்தலை நிறுத்தும்படியும் மாநகரசபை ஆணையாளருக்கு அவசர உத்தரவினை வழங்குமாறு யாழ். காவல்துறையினர்; கடந்த வெள்ளிக்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் செவ்வாய்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சி. சதிஸ்தரன் முன்னிலையில் விளக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது , தமிழ் தேசிய மக்கள் முன்னணியினை சேர்ந்த சட்டத்தரணிகள் உள்ளிட்ட சில சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையான போது நீதிவான் அதற்கு அனுமதி வழங்க வில்லை என தெரிவிக்கப்பட்டது.

அது தொடர்பில் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட போது ,

இந்த வழக்கில் யாழ்.மாநகர சபை ஆணையாளர் சார்பில் நான் முன்னிலையானேன். அதே நேரம் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் தாம் மன்றில் முன்னிலையாக போவதாக சில சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்திருந்தனர்.

அந்த பாதிக்கப்பட்ட தரப்பு யார் என நீதிவான் கேட்ட போது , கரிசனை உள்ள தரப்பு என என கூறினார்கள் அவர்களின் விண்ணப்பத்தை நீதிவான் பதிவு செய்த பின்னர் அவ்வாறு முன்னிலையாக சட்டத்தில் இடமில்லை என சமர்ப்பன விண்ணப்பத்தை நிராகரித்து கட்டளை வழங்கினார் என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/97075/

Link to comment
Share on other sites

“புலிகளை நினைவு கூரலாமா என வாதிடும் சந்தர்ப்பத்தை, இழந்து விட்டோம்”

Guruparan.jpg?resize=739%2C538

தியாக தீபம் திலீபனின் நினைவு கூறலை தடை செய்ய கோரிய வழக்கில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி உள்ளிட்ட சட்டத்தரணிகள், விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை நினைவு கூறலாமா என்பது தொடர்பிலான கேள்வியை மிக கவனமாக தவிர்த்து உள்ளனர் எனவும் அதற்கான வாய்ப்பு இன்று இழக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.இந்த விடயத்தை வாதிடுவதன் மூலம் நீதிமன்றம் அங்கீகரிக்குமா என்பது இங்கு முக்கியமல்ல. ஏன் நாம் இந்த கேள்வியை கேட்பதில்லை என சட்டத்தரணி கு.குருபரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

 

தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை தடை செய்ய கோரி நடைபெற்ற வழக்கு விசாரணைகள் தொடர்பில் சட்டத்தரணி குருபரன் தனது முகநூலில் இதனை சுட்டிக் காட்டி பதிவிட்டுள்ளார்.குறித்த முகநூல் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,

“திலீபன் அண்ணாவின் நினைவிடம் தொடர்பிலான விண்ணப்பம் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது மகிழ்ச்சி தான். ஆனால் இத்தீர்ப்பு பெற முன்வைக்கப்பட்ட வாதங்கள், வழக்கு எப்படி நீதிமன்றிற்கு வந்தது என்பதற்கு பின் உள்ள நுட்பமான அரசியல் என்பன அபத்தமானவை. (வழக்கு வந்தது எப்படி என்பது தொடர்பிலான ஊகங்களை தவிர்க்கிறேன். மன்றின் முன் வந்த வாதங்கள் பற்றி கூறுகிறேன்).

“தியாகி திலீபன் அண்ணாவின் நினைவுத் தூபிக்கு வேலி அமைத்தது ஸ்ரீலங்கா அரசின் பணத்தில் தான் என்றும் (சிறீதரன் MP யின் திரட்டு நிதி ஒதுக்கீடு) தனது திரட்டு நிதிய (consolidated fund) ஒதுக்கீட்டில் தூபி கட்ட (மீளமைக்க என்று தானும் சொல்லவில்லை) நிதி ஒத்துக்கப்பட்டுள்ளது என்றும் ஆகவே திலீபன் அண்ணாவின் தூபி இலங்கை அரசாங்கத்தின் பணிப்பின் பிரகாரமே கட்டப்படுகின்றது (அவர் சொன்னதை அப்படியே சொல்கிறேன்) என்ற வாதத்தை சுமந்திரன் சேர் முன்வைத்தார்.

மாநகர சபையின் தீர்மானத்தின் பெயரில் நிகழ்வுகள் நடப்பதாகவும் வாதிடப்பட்டது. இது இந்நிகழ்வுகள் சட்ட பூர்வமானாவை என்பதை காட்டுவதாகவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
மேயர் ஆனோல்டின் (நாம் தான் செய்வோம் வேறு யாரும் செய்ய முடியாது) அறிவிப்பில் இருந்து இன்று மன்றில் இடம்பெற்ற வாதங்கள் வரை திலீபன் அண்ணாவின் நினைவிடத்தையும் அங்கு அஞ்சலி நிகழ்வு நட்த்துவதையும் மாநகர சபையின் ஏக போக உரிமைக்குள் (monopolising memory) கொண்டு வந்து நினைவுகூரலை பொதுப் பரப்பில் இருந்து குறுக்கும் செயற்பாட்டின் உச்சம் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

இது கூட்டமைப்பு செய்தாலும் பிழை, தான் முன்னணி செய்தாலும் பிழை, முதலமைச்சர் செய்தாலும் பிழையே. அரச அதிகாரம் நினைவு கூறலை ஒழுங்குபடுத்துவதை ஒரு போதும் ஏற்க முடியாது. அரச அதிகாரம் நினைவு செயற்பாடுகளை வசதிப்படுத்தலாம் (facilitate) ஆனால் உடைமை கொள்ள.முடியாது.

இன்று மன்றில் மாநகர சபையின் சட்டத்தரணிகள் கவனமாக தவிர்த்த விடயம் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை நினைவு கூறலாமா என்பது தொடர்பிலான கேள்வியை. எம்மையும் தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கினர். இதை நீதிமன்றில் பிரச்சனையாக்குவது முக்கியமானது. அதற்கான வாய்ப்பு இன்று இழக்கப்பட்டுள்ளது. இதை வாதாடி நீதிமன்றம் அங்கீகரிக்குமா என்பது இங்கு முக்கியமல்ல. ஏன் நாம் இந்த கேள்வியை கேட்பதில்லை என்பதே முக்கியமானது.

இன்று நாம் மன்றில் தோன்றி அக்கறையுள்ள தரப்பு என்ற வகையில் எமது தரப்பை கேட்க வேண்டும் என வாதாடினோம். இது மாநகர சபையின் காணிப் பிரச்சனை அல்ல என்று நிலைப்பாடு எடுத்தோம். பொது மக்களின் நினைவு கூறும் உரிமையை பற்றியது அதையும் கேளுங்கள் என்று சொல்லி பார்த்தோம். மன்று ஏற்கவில்லை. இப்படியான வழக்குகளில் யார் தோன்றலாம் (local standi) என்பது விசாலமாக பார்க்கப்படுவது வழமை. ஆனால் எனது காணியில் அமைக்கப்பட்ட கட்டடம் சட்ட பூர்வமாக கட்டப்பட்டதா என்ற தோரணையில் வழக்கு முடிவடைந்திருக்கிறது. என குறிப்பிடப்பட்டு உள்ளது.

http://globaltamilnews.net/2018/97077/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.