Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

உலக நடப்பு.......இந்தியாவிலிருந்து 15 ஆம் நூற்றாண்டில் புறப்பட்ட கப்பலுக்கு என்ன ஆனது?


Recommended Posts

இந்தியாவிலிருந்து 15 ஆம் நூற்றாண்டில் புறப்பட்ட கப்பலுக்கு என்ன ஆனது?

கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

நூற்றாண்டின் கண்டுபிடிப்பு

நூற்றாண்டின் கண்டுபிடிப்புபடத்தின் காப்புரிமைREUTERS/CASCAIS CITY HALL

போர்ச்சுகல் கடல் பகுதியில் 400 ஆண்டு பழமையான கப்பலின் உடைந்த பாகங்களை கண்டுப்பிடித்துள்ளனர். இதனை ஒரு தொல்பொருள் அறிஞர் `இந்த தசாப்தத்தின் கண்டுபிடிப்பு' என்று வர்ணித்துள்ளார். இந்த கப்பலானது 1575 - 1625 ஆகிய காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து மிளகு, கிராம்பு உள்ளிட்ட மசாலா மற்றும் நறுமண பொருட்களை ஏற்றிக் கொண்டு திரும்ப சென்றுக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Presentational grey line

சிரியா ஏவுகணை

சிரியா ஏவுகணைபடத்தின் காப்புரிமைEPA

சிரியாவுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ரஷ்யா அனுப்ப திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம் சிரியா படைகள் இஸ்ரேல் வான் தாக்குதலின் போது தவறுதலாக ரஷ்ய விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியது குறிப்பிடதக்கது. இந்த சூழ்நிலையில் ரஷ்யா இப்படியான முடிவை எடுத்திருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்கள் இந்த எஸ் 300 பாதுகாப்பு எவுகணைகள் வழங்கப்படும்.

Presentational grey line

குடியேறிகளுக்கு எதிராக

குடியேறிகளுக்கு எதிராகபடத்தின் காப்புரிமைREUTERS

இத்தாலி அரசாங்கம் குடியேறிகளுக்கு எதிரான சட்டத்தை இயற்றி உள்ளது. இந்த சட்டத்தின் மூலமாக இனி சுலபமாக தங்கள் பகுதியிலிருந்து குடியேறிகளை இத்தாலி வெளியேற்றிவிட முடியும். குறிப்பாக பாலியல் வல்லுறவு, கொலை உள்ளிட்ட கடுங்குற்றத்தில் ஈடுபடுபவர்களை எந்த விசாரணையும் இல்லாமல் வெளியேற்றிவிட முடியும். முன்னதாக, இப்படி வெளியேற்றுவது சுலபமான ஒன்றாக இல்லை.

Presentational grey line Presentational grey line

இருபது பேர் கைது

இருபது பேர் கைதுபடத்தின் காப்புரிமைEPA

இரான் உளவு அமைச்சகம், அண்மையில் ராணுவ அணிவகுப்பில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் தொடர்புடைவர்கள் என 22 பேரை கைது செய்துள்ளது. அவர்களிடமிருந்து ஆயுதங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறி உள்ளது. முன்னதாக, அமெரிக்க ஆதரவு பெற்ற வளைகுடா நாடுகள்தான் தாக்குதலுக்கு காரணம் என அதிபர் ருஹானி தெரிவித்திருந்தார். ஆனால், இதனை மறுத்த அமெரிக்கா, எந்த தீவிரவாத தாக்குதல்களையும் அமெரிக்கா வன்மையாக கண்டிக்கும் என்று கூறி இருந்தது.

Presentational grey line

டிரம்புடன் பேச்சுவார்த்தையில் துணை அட்டார்னி ஜெனரல்

டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பதவி நீக்கம் செய்ய வழிவகுக்கும் அரசியலமைப்புப் பிரிவு குறித்து விவாதிக்க தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட துணை அட்டார்னி ஜெனரல் ராட் ரோசன்ஸ்டைன், டிரம்புடன் அவசர நிலை பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளார்.

2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் குழு ரஷ்யவுடன் தொடர்பு வைத்திருந்தது குறித்த விசாரணையை மேற்பார்வையிடும் ரோசன்ஸ்டைன் மற்றும் டிரம்ப் திங்களன்று ஏற்கனவே பேச்சுவார்த்தையை நடத்தினர்.

தற்போது ரோசன்ஸ்டைன் பணியில் தொடர்வது குறித்த சந்தேகங்களுக்கு மத்தியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

வியாழனன்று நடைபெறவிருக்கும் அந்த சந்திப்பு எதிர்காலம் குறித்து தீர்மானிக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/global-45635526

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • உடனே தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டினமாம். பச்சோந்திகளின் கண்டனம். கண்ணுக்கு முன்னால் அழிவுகள் நடக்கும்போது தட்டிகேட்கவேண்டாம், வருத்தம் தெரிவிக்க வேண்டாம், அதை  நிஞாயப்படுத்த புறப்பட்டவர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.
  • அரசியல் அனுபவமற்ற, வெறும் அடிதடி  கொள்ளைக்காரரை சுயநலத்திற்காக அரசியல் கட்டிலில்   ஏற்றியவர்களே இதற்கு முழுப்பொறுப்பு.  
  • இழந்தவர்களை நினைவு கூர்வதற்கே தமிழர்கள் போராட வேண்டி உள்ளது -சுரேஷ் பிரேமச்சந்திரன்    56 Views இறுதி யுத்தத்தில் தமது உறவுகளை இழந்த மக்கள் அவர்களை நினைவுகூர்வதற்கான உரிமையைக்கூட மதிக்காமல் நினைவுத்தூபியையும் அரச இயந்திரம் இடித்தழித்துள்ளது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்ததைக் கண்டித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், இழந்தவர்களை நினைவு கூர்வதற்கே தமிழர்கள் போராட வேண்டிய துர்பாக்கியநிலை ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த ஈழவிடுதலைப் போராட்டத்தில் இலட்சக்கணக்கான பொதுமக்களை நாங்கள் இழந்திருக்கிறோம். அதேபோல் இறுதி யுத்தத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். அந்த பொதுமக்களின் நினைவுகளை மீட்டிக்கொள்வதும் அவர்களை கௌரவப்படுத்துவதும் தமிழ் மக்கள் ஒவ்வொருவரதும் தலையாய கடமையாகும். சர்வதேச சட்டவாயங்களின் அடிப்படையில் இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயம். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு வருடமும் பொதுமக்களை நினைவுகூர்வதாக இருந்தாலும் சரி, போராளிகளை நினைவுகூர்வதாக இருந்தாலும்சரி பலத்த போராட்டத்தின் மத்தியிலேயே இத்தகைய நினைவுகூர்தலை நாங்கள் செய்ய வேண்டியிருக்கின்றது. கொரோனா என்பது ஒருபக்கம் இருக்க, ஊர்வலங்களாக இருந்தாலும்சரி, உண்ணாவிரதங்களாக இருந்தாலும்சரி ஜனநாயக நெறிமுறைகளுக்கு உட்பட்டு சிறிய பெரிய போராட்டங்களை முன்னெடுப்பதாக இருந்தாலும்சரி உடனடியாகவே பொலிசார் நீதிமன்றங்களை அணுகி தடையுத்தரவைப் பெறுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. இதேநிலைமைதான் முள்ளிவாய்க்காலில் மரணித்துப்போன எமது மக்களை நினைவுகூர்வதற்கெதிராகவும் நீதிமன்ற தடையுத்தரவுகளையும் பொலிசார் பெற்றுள்ளனர். அதுமாத்திரமல்லாமல், இறந்த மக்களை நினைவுகூரும் முகமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒரு சிறிய நினைவுச்சின்னம்கூட அரச இயந்திரத்தினால் உடைத்தெறியப்பட்டிருக்கின்றது. இராணுவம் பொலிஸ் உட்பட்ட அரச இயந்திரமானது மக்களின் உணர்வுகளை சிதைப்பதென்பது கண்டிக்கத்தக்கதும் அநாகரிகமானதுமாகும். அரசாங்கத்தின் மனித உரிமைக்கெதிரான செயற்பாடுகளை கனேடிய தூதுவர் கண்டித்திருப்பதை நாங்கள் வரவேற்பதுடன், ஏனைய நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் இலங்கை அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டிக்க முன்வரவேண்டும் என்பதுடன் நினைவுகூரல் நிகழ்வுகள் எவ்விதமான அரச தலையீடுகளுமின்றி நடைபெறுவதற்கு அரசாங்கத்திற்கு தமது அழுத்தங்களை உயர்மட்ட அளவில் பிரயோகிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். தென்பகுதியில் அரசுக்கெதிராகப் போராடிய பொதுமக்களும் போராளிகளும் சிங்கள மக்களால் நினைவுகூரப்படுகிறார்கள், கொண்டாடப்படுகிறார்கள். அதற்கு எத்தகைய தடை உத்தரவுகளும் கிடையாது. வடக்கு-கிழக்கில் புதிய புதிய பௌத்த ஆலயங்கள் உருவாக்கப்படுகிறது. அதற்காக நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் ஒன்றுகூடி இராணுவம் மற்றும் பொலிசாரின் பாதுகாப்புடன் பிரித் ஓதுதலும் இரவு பகலாக நடைபெறுகிறது. ஆனால் தமிழ் மக்கள் தமது மரணித்துப்போன உறவுகளை நினைவுகூர்வது தடைசெய்யப்படுகிறது. இதிலும்விட மோசமான இனவாத அரசொன்று இலங்கையில் இருந்திருக்க முடியாது. அரசாங்கம் தொடர்ச்சியாக தமிழ் மக்களை பல்வேறுபட்ட முனைகளிலும் அடக்கியாள முயற்சிப்பதுடன் அவர்களது கௌரவத்தையும் சிதைத்து அழிக்கின்றது. அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளை தமிழ் மக்கள் மாத்திரமல்லாமல் சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளும் கண்டிக்க முன்வரவேண்டும். எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார வழிகாட்டலைப் பின்பற்றி; தமிழ் மக்கள் தமது உறவுகளை நினைவுகூர்வதற்கு அரசாங்கம் வழிவிட வேண்டும்”  என்றார்.   https://www.ilakku.org/?p=49624
  • இவருடைய கண்டனம் நேரடியாக அமெரிக்காவிடமும் இசுரேலிடமும் கையில் கொடுக்கப்பட்டது....
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.