Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

மஹிந்தவுக்கு முளைத்திருக்கும் சிக்கல்


Recommended Posts

மஹிந்தவுக்கு முளைத்திருக்கும் சிக்கல்

Untitled-9-a148e87806fec6ea7d5e29c1f3630632a0b31051.jpg

 

-சத்­ரியன்

ஒன்றுமட்டும் உறுதியாகத் தெரிகிறது, கூட்டு எதிரணி மஹிந்த ராஜபக் ஷ என்ற ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைந்திருந்தாலும், கோத்தா விசுவாசிகள், பசில் விசுவாசிகள், என்று மாத்திரமன்றி, ராஜ பக்ஷ குடும்ப அரசியலுக்கு எதிரானவர்களும் கூட அதனுள் அடங்கியிருக்கிறார்கள். 

அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் கூட்டு எதி­ரணி அல்­லது ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் வேட்­பாளர் யார் என்ற விவ­காரம் இப்­போது முன்­னை­யதை விடவும் சிக்­க­லா­ன­தாக மாறி­யி­ருக்­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷ தனது சகோ­தரர்­களில் ஒரு­வரை போட்­டியில் நிறுத்தக் கூடும் என்ற எதிர்­பார்ப்பு நீண்­ட­கா­ல­மா­கவே இருந்து வரு­கி­றது.

குறிப்­பாக, இரண்டு பேருமே அமெ­ரிக்க குடி­யு­ரி­மையைக் கொண்­ட­வர்­க­ளாக இருந்­தாலும், பசில் ராஜபக் ஷ மற்றும் கோத்­தா­பய ராஜபக் ஷ ஆகிய இரு­வரில் ஒரு­வரை, போட்­டியில் நிறுத்தும் வாய்ப்­புகள் அதிகம் என்றே பேசப்­பட்­டது.

ஆனாலும், இவர்கள் இரு­வ­ரையும் விட சமல் ராஜபக் ஷவே வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட வேண்டும் என்­பது மஹிந்த ராஜபக் ஷவின் இட­து­சாரித் தோழர்­களின் நிலைப்­பாடு.

ஆனாலும், அடுத்த வேட்­பாளர் யார் என்­பதை கூறாமல் மஹிந்த உயர் இர­க­சி­யத்தை பாது­காத்து வந்­துள்ளார்.

இதற்­குள்­ளா­கவே, 19 ஆவது திருத்தச் சட்டம், இதற்கு முன்னர் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்­த­வர்­க­ளுக்குப் பொருந்­தாது என்ற ஒரு “ஓட்டை” இருக்­கி­றது என்ற மிகவும் பல­வீ­ன­மான வழி­யொன்­றையும் கூட்டு எதி­ரணி கண்­டு­பி­டித்து வைத்­தி­ருக்­கி­றது. 

அந்த வழியின் ஊடாக மஹிந்­த­வினால் செல்ல முடியும் என்­ப­தற்கு உத்­த­ர­வாதம் இல்லை.

19 ஆவது திருத்­தத்தில் இருப்­ப­தாக கூறும் ஓட்­டையைப் பயன்­ப­டுத்தி, மீண்டும் போட்­டி­யி­டு­வது பற்றி முடிவு செய்­ய­வில்லை என்று மஹிந்த ராஜபக் ஷ கூறி­யி­ருக்­கிறார்.

அதே­வேளை, இன்­னொரு பக்­கத்தில், “தி ஹிந்து” வுக்கு அண்­மையில் அளித்­தி­ருந்த செவ்­வியில், தமது சகோ­தரர் நிச்­சயம் போட்­டி­யா­ள­ராக இருப்பார் என்­ப­தையும் கூறி­யி­ருந்தார். அவ­ரது இந்தக் கருத்து அர­சி­யலில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது. 

“நாமல் ராஜபக் ஷவினால் போட்­டி­யிட முடி­யாது. அவர் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான குறைந்­த­பட்ச வய­தெல்­லையை அடை­ய­வில்லை. எனவே அவரைக் கவ­னத்தில் கொள்ள முடி­யாது.

எனது சகோ­தரர் நிச்­ச­ய­மாக போட்­டி­யா­ள­ராக இருப்பார். ஆனால் கட்சி மற்றும் பங்­காளிக் கட்­சி­களே யார் என்­பதைத் தீர்­மா­னிப்­ப­வர்­க­ளாக இருப்பர்.” இது தான் அவர் “தி ஹிந்­து”­வுக்கு அளித்­தி­ருந்த செவ்­வியில் கூறி­யி­ருந்த விடயம்.

அவர் இதனைக் கூறி­ய­துமே, கோத்­தா­பய ராஜபக் ஷவை அடுத்த ஜனா­தி­ப­தி­யாக்கத் துடிக்கும் தரப்­பி­னரும், ஊட­கங்­களும், கோத்­தா­பய ராஜபக் ஷ தான் அடுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர் என்று கொட்டை எழுத்­து­களில் செய்தி வெளி­யிட்­டன.

இங்கு தான் மஹிந்­த­வுக்கு பிரச்­சி­னையே வெடித்­தது. மஹிந்த ராஜபக் ஷ இதனைக் கூறி­யதும், அதற்கு எதி­ராகப் போர்க்­கொடி தூக்­கி­ய­வர்கள் இரண்டு பேர்.

ஒருவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குமார வெல்­கம. இன்­னொ­ருவர், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்­கார. இரு­வ­ருமே, மஹிந்த ராஜபக் ஷவுக்கு மிகவும் நெருக்­க­மா­ன­வர்கள். அவ­ரது நல்ல விசு­வா­சி­களும் கூட.

ஆனாலும், மஹிந்த ராஜபக் ஷவின் கருத்தை அவர்­களால் ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. இரண்டு பேரி­னது எதிர்க் கருத்­துக்­க­ளிலும் வேறு­பட்ட நோக்­கங்கள் இருந்­த­மையும் கவ­னிக்­கத்­தக்­கது.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் மஹிந்­த­வுடன் ஒன்­றா­கவே, வெளியே வந்­தவர் குமார வெல்­கம. அவரைப் பொறுத்­த­வ­ரையில், மீண்டும் மஹிந்த ராஜபக் ஷ அதி­கா­ரத்­துக்கு வர வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருந்­தாலும், அவ­ருக்குப் பதி­லாக, ராஜபக் ஷ குடும்­பத்தில் இருந்து மற்­றொ­ருவர் வரு­வதை ஏற்கத் தயா­ரில்லை.

நிச்­ச­ய­மாக, தனது சகோ­தரர் போட்­டி­யா­ள­ராக இருப்பார் என்று மஹிந்த ராஜபக் ஷ கூறி­யது தான், குமார வெல்­க­ம­வுக்கு கொதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது. அவர் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு எதி­ரான கருத்தைக் கொண்­டவர்.

கோத்­தா­பய ராஜபக் ஷ ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப­டக்­கூ­டாது என்று ஏற்­க­னவே கருத்­துக்­களை வெளி­யிட்டு வந்­தவர்.

2015இல் மஹிந்த ராஜபக் ஷ, தமது குடும்­பத்­தி­னரை முன்­னி­றுத்­தி­யதால் தான் தோல்வி கண்டார், எனவே ராஜபக் ஷ குடும்­பத்தைச் சேர்ந்த ஒரு­வரை வேட்­பா­ள­ராக நிறுத்­து­வதை ஏற்­க­மு­டி­யாது என்று அவர் போர்க்­கொடி உயர்த்­தினார்.

அதே­வேளை, வாசு­தேவ நாண­யக்­கா­ர­வுக்கோ, ராஜபக் ஷவி­னரின் குடும்ப அர­சியல் பிரச்­சி­னை­யில்லை. அவரைப் பொறுத்­த­வ­ரையில் கோத்­தா­பய ராஜபக் ஷவையோ, பசில் ராஜபக் ஷவையோ வேட்­பா­ள­ராக நிறுத்­தக்­கூ­டாது.

சமல் ராஜபக் ஷவை நிறுத்த வேண்டும் என்­பதே அவ­ரது கருத்து. இவ­ரது இந்தக் கருத்­துடன் கூட்டு எதி­ர­ணியில் உள்ள திஸ்ஸ விதா­ரண போன்ற இட­து­சாரித் தலை­வர்­களும் இணங்­கு­கின்­றனர்.

கோத்­தா­பய ராஜ­பக்­ ஷவை நிறுத்­தினால் கூட்டு எதி­ர­ணிக்குள் பிளவு ஏற்­படும், கட்சி உடையும் என்­றெல்லாம் வாசு­தேவ நாண­யக்­கார எச்­ச­ரித்தார்.

மஹிந்த ராஜபக் ஷ நாடு திரும்­பிய போது, அவ­ரது கருத்­தினால் ஏற்­பட்ட கொந்­த­ளிப்பு அடங்­க­வில்லை.

அதனால் தான் அவர், கெபிற்­றி­கொல்­லா­வயில் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய போது, கோத்­தா­பய ராஜபக் ஷவை வேட்­பா­ள­ராக நிறுத்தப் போவ­தாக நான் கூற­வே­யில்லை. அப்­படிக் கூறி­ய­தாக சொல்­லப்­ப­டு­வது முற்­றிலும் பொய். இது சில­ரது கற்­பனை. என்று கூறி­யி­ருந்தார்.

மஹிந்த ராஜபக் ஷவின் இந்தக் கருத்து உண்­மை­யா­னதே,

இந்­தி­யாவில் இருந்­த­போது, மஹிந்த ராஜபக் ஷ ‘தி ஹிந்து’ நாளிதழ், News X தொலைக்­காட்சி, Strategic News International தொலைக்­காட்சி மற்றும் தந்தி தொலைக்­காட்சி ஆகி­ய­வற்­றுக்குத் தான் செவ்­வி­களை அளித்­தி­ருந்தார்.

அதில், ‘தி ஹிந்து’ மற்றும் Strategic News International செவ்­வி­களில் தான், அடுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்து பேசி­யி­ருந்தார்.

‘தி ஹிந்து’ செவ்­வியில் தான், ‘நிச்­ச­ய­மாக எனது சகோ­தரர் ஒரு போட்­டி­யா­ள­ராக இருக்­கிறார்’ என்று குறிப்­பிட்டார். ஆனால் அதில் எந்த சகோ­தரர் என்­பதை மஹிந்த கூற­வில்லை.

அந்த சகோ­தரர் கோத்­தா­பய ராஜபக் ஷவாகத் தான் இருக்க வேண்டும் என்­ப­தில்லை, அது பசில் ராஜபக் ஷவா­கவோ, சமல் ராஜபக் ஷவா­கவோ கூட இருக்­கலாம். அந்த மர்­மத்தை அவர் உடைக்­க­வில்லை. அது அவ­ரது தந்­தி­ர­மாகக் கூட இருக்­கலாம்.

Strategic News International தொலைக்­காட்­சியில் மஹிந்­தவைச் செவ்வி கண்ட நிதின் கோக்­ஹலே, “அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் வாய்ப்பு உங்­க­ளுக்கு கிடைக்­காமல் போனால், நீங்கள் ஒரு வேட்­பா­ளரை பெய­ரிட வேண்­டி­யி­ருக்கும், அது யார் என்று கேட்­டி­ருந்தார்.

அதற்கு மஹிந்த, நான் அந்த வேட்­பா­ளரை தேடிக் கொண்­டி­ருக்­கிறேன் என்று பதி­ல­ளித்­த­போது, நிதின் கோக்­ஹலே இன்­னொரு கேள்­வியைத் தொடுத்தார்.

அந்த வேட்­பாளர் உங்­களின் குடும்­பத்தைச் சேர்ந்­த­வ­ராக இருப்­பாரா? என்று, மஹிந்­த­விடம் கேட்க அவர், ‘அதற்கு அவ­சி­ய­மில்லை’ என்றே கூறினார்.

அதா­வது அடுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர், ராஜபக் ஷ குடும்­பத்தைச் சேர்ந்­த­வ­ராக இருக்க வேண்டும் என்ற அவ­சியம் இல்லை என்று கூறி­யி­ருந்தார்.

ஏற்­க­னவே, பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸை வேட்­பா­ள­ராக மஹிந்த நிறுத்தப் போவ­தாக செய்­திகள் வெளி­யா­னதும் நினை­வி­ருக்­கலாம்.

அம்­பா­றையில் நடந்த கூட்டம் ஒன்றில், தமது கட்சி விம­ல­வீர திச­நா­யக்­கவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிறுத்­தினால் கூட வெற்றி பெறும் என்று பசில் ராஜபக் ஷ கூறி­யி­ருந்தார்.

இதை­விட, அண்­மையில் தமது பெயரும் கூட, ஜனா­தி­பதி வேட்­பாளர் பட்­டி­யலில் இருக்­கி­றது என்று வாசு­தேவ நாண­யக்­கா­ரவும் கூட குறிப்­பிட்­டி­ருந்தார்.

தமது அணியில் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடத் தகுதி பெற்ற பலர் இருக்­கி­றார்கள் என்று, கூட்டு எதி­ர­ணி­யினர் நம்­ப­வைக்க முயன்­றாலும், ராஜபக் ஷவி­னரை விலக்­கிய ஒரு வேட்­பா­ளரைக் கண்­டு­பி­டிப்­பது அவர்­க­ளுக்கு இய­லு­மா­னதா என்­பது சந்­தேகம் தான்.

ஏனென்றால், மஹிந்த ராஜபக் ஷவை மையப்­ப­டுத்­தியே இந்தக் கூட்டு எதி­ரணி உரு­வா­னது. அவர் கையைக் காட்டும் ஒரு­வரை தாம் வேட்­பா­ள­ராக ஏற்றுக் கொள்வோம் என்றும் அவ­ரது சக­பா­டிகள் கூறி வந்­தனர்.

ஆனால் இப்­போது, மஹிந்த கைகாட்­டக்­கூ­டிய ஒரு­வரை ஏற்றுக் கொள்ளும் மனோ­நி­லையில் அவர்கள் இல்லை என்­பது வெளிப்­பட்­டி­ருக்­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷவைப் பொறுத்­த­வ­ரையில், தனது மகன் நாமல் ராஜபக் ஷவை அதி­கா­ரத்­துக்கு கொண்டு வரு­வதே அவ­ரது இலக்கு. இந்­தியப் பய­ணத்தில் அவ­ரையும் அழைத்துக் கொண்டு சென்று அங்­குள்ள தலை­வர்­க­ளிடம் அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­தற்கு அதுவே காரணம்.

அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட அவ­ருக்கு வயது போதாது. இந்­த­நி­லையில் ராஜபக் ஷவி­னரில் ஒரு­வரை ஜனா­தி­பதித் தேர்­தலில் இறக்­கு­வதா- அல்­லது வெளியில் இருந்து ஒருவரை இறக்குவதா, தனது மகனின் அரசியல் எதிர்காலத்துக்கு துணையாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டே அவர் முடிவை எடுப்பார் என்று தெரிகிறது.

ஆனால் ஒன்றுமட்டும் உறுதியாகத் தெரிகிறது, கூட்டு எதிரணி மஹிந்த ராஜபக் ஷ என்ற ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைந்திருந்தாலும், கோத்தா விசுவாசிகள், பசில் விசுவாசிகள், என்று மாத்திரமன்றி, ராஜபக் ஷ குடும்ப அரசியலுக்கு எதிரானவர்களும் கூட அதனுள் அடங்கியிருக்கிறார்கள்.

இதுதான் மஹிந்த ராஜபக் ஷ எதிர்கொள்ளப்போகும் சிக்கல். அவரது பலவீனமும் இதுதான். இந்தப் பலவீனத்தை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஐ.தே.க.வோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ முற்பட்டால், மஹிந்தவுக்கு பெரும் நெருக்கடி ஏற் படும்.

கிட்டத்தட்ட அவர் அத்தகையதொரு நிலையை நோக்கித் தான் நகர்ந்திருக் கிறார்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-23#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.