Jump to content

நம்பிக்கை இழந்துவரும் தமிழ் மக்கள்


Recommended Posts

நம்பிக்கை இழந்துவரும் தமிழ் மக்கள்

 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐ.நா. பொதுச்­சபைக் கூட்­டத்தில் உரை­யாற்­ற­வுள்­ள­துடன் ஐ.நா. பொதுச் செய­லாளர் மற்றும் ஐ.நா.மனி­த­வு­ரிமை ஆணை­யாளர் ஆகி­யோரை சந்­தித்து பேச­வுள்ளார். ஜனா­தி­ப­தியின் இந்த சந்­திப்பு பெரும் எதிர்­பார்ப்பை தோற்­று­வித்­துள்­ளது. தனது உரை எந்­த­வ­கை­யான விமர்­ச­னத்­துக்­குள்­ளான போதும் அது தொடர்பில் தான் கவலை கொள்­ளப்­போ­வ­தில்லை எனவும் ஜனா­தி­பதி ஏலவே தெரி­வித்­துள்ளார். குறிப்­பாக இலங்கைப் படை­யி­ன­ருக்கு எதி­ரான போர்க் குற்­றச்­சாட்­டுக்­களை நீக்கும் யோச­னை­களை ஜனா­தி­பதி முன்­வைப்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இவ்­வா­றான சர்ச்­சை­க­ளுக்கு மத்­தியில் ஏலவே ஜெனீவா மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை அர­சாங்கம் ஏற்­றுக்­கொண்ட விட­யங்­களை சரி­யான வகையில் நடை­மு­றைப்­ப­டுத்­தாமல் வெறு­மனே கால அவ­கா­சத்தைக் கோரி சர்­வ­தேச சமூ­கத்தை ஏமாற்றி வரு­வ­தாக தமிழ் தரப்­புகள் தொடர்ச்­சி­யாக குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­துள்­ளன. முன்­னைய அரசும் இதே பாணியில் சர்­வ­தே­சத்­துக்கு வழங்­கிய உறுதி மொழி­களை நிறை­வேற்­றாமல் இழுத்­த­டித்து வந்­தது. இதனால் சர்­வ­தேச ரீதியில் இலங்கை மிகுந்த அப­கீர்த்­திக்கு உள்­ளான நிலையை இல­குவில் மறந்­து­விட முடி­யாது.

எவ்­வா­றெ­னினும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் பொறுப்­பேற்ற நல்­லாட்சி அரசு, இலங்­கையில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குற்­றச்­சாட்டு தொடர்பில் பொறுப்புக் கூறும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. எனினும் காலப்­போக்கில் முன்­னைய அர­சுக்கு எந்­த­வ­கை­யிலும் சளைத்­த­தில்லை என்ற போக்­கி­லேயே இந்த அரசும் நடந்து கொள்­வ­தாக தமிழ் தரப்பு சுட்­டிக்­காட்டி வரு­கின்­றது. குறிப்­பாக போர்க் குற்­றங்­களை நியா­யப்­ப­டுத்தும் அல்­லது நிரா­க­ரிக்கும் போக்­கையே அர­சாங்கம் கொண்­டுள்­ள­தா­கவும் இதன் மூலம் பாதிக்­கப்­பட்ட தமி­ழ­ருக்கு எந்­த­வித நியா­யமும் பிறக்­கப்­போ­வ­தில்லை எனவும் தமிழ் மக்கள் கூறு­கின்­றனர்.

இது ஒரு­பு­ற­மி­ருக்க, தமிழ் மக்­களின் பூர்­வீக நிலங்கள் விடு­விப்பு விவ­காரம் மிகவும் மந்த கதியில் நடந்­து­வரும் அதே­வேளை, காணா­ம­லாக்­கப்­பட்டோர் மற்றும் சிறைச்­சா­லை­களில் வரு­டக்­க­ணக்கில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை என்­பவை தொடர்ந்தும் கவ­னத்தில் கொள்­ளப்­ப­டாத நிலையே இருந்து வரு­வ­தாக பாதிக்­கப்­பட்ட தமிழ்­மக்கள் மிகுந்த கவலை வெளி­யிட்­டுள்­ளனர்.

 குறிப்­பாக தமிழ் அர­சியல் கைதிகள் விசா­ர­ணைகள் இன்றி வரு­டக்­க­ணக்கில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­பதன் மூலம் அவர்­களின் எதிர்­காலம் மாத்­தி­ர­மன்றி அவர்­களில் தங்­கி­யி­ருப்­போரின் நிலை­மையும் மிகவும் பரி­தா­பத்­துக்­குள்­ளாகி வரு­வதை சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் சிந்­திப்­ப­தாக தெரி­ய­வில்லை என்­பதும் தமிழ் மக்­களின் குற்­றச்­சாட்­டாக இருந்து வரு­கி­றது. வெறு­மனே ஐ.நாவிலும் ஜெனீவா மனி­த­வு­ரிமை பேர­வை­யிலும் இலங்கை அர­சாங்கம் நொண்டிச் சாட்­டுக்­களை கூறி காலத்தை கடத்தி சர்­வ­தேச சமூ­கத்தை ஏமாற்றி வரு­கின்­றதே தவிர இதய சுத்­தி­யுடன் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை சரி­யான வகையில் அணுகத் தவ­றி­யுள்­ளது என்­பதும் தமிழ் மக்­களின் குற்­றச்­சாட்­டாகும்.

வெறு­மனே காலத்தை கடத்திப் பிரச்­சி­னை­களை ஆற­விட்டு அதன்­மூலம் போர்க்­குற்­றச்­சாட்­டுகள் உட்­பட அனைத்து வித­மான குற்­றச்­சாட்­டு­களில் இருந்தும் தப்­பிக்­கொள்ளும் யுக்­தி­யையே இலங்கை அர­சாங்கம் கடைப்­பி­டித்து வரு­கி­றது. இதன்­மூலம் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்கள் நியாயம் கிடைக்கப் போவ­தில்லை என மிகுந்த விரக்­திக்­குள்­ளா­கின்­றனர்.

இத­னி­டையே, அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லை­யி­லுள்ள தமிழ் அர­சியல் கைதிகள் 8பேர் கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்­

கி­ழமை முதல் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். கடந்த 9வருட கால­மாக சிறைச்­சா­லையில் தண்­டனை அனு­ப­வித்து வரும் நிலையில் தம்மை விடு­விக்­கு­மாறு கோரியே இக்­கை­திகள் உண்­ணா­வி­ர­தத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். தம்­மீ­தான வழக்கு விசா­ர­ணைகள் திட்­ட­மிட்டு காலந்­தாழ்த்­தப்­ப­டு­வ­தா­கவும் அவர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

இதே­வேளை, உண்­ணா­வி­ரதம் இருக்கும் அர­சியல் கைதி­களின் விடு­தலை மற்றும் அர­சியல் தீர்வு உள்­ள­டங்­கிய புதிய அர­சி­ய­ல­மைப்பு அவ­சியம் என்­பன தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ள­தாக தெரி­வித்­துள்ளார். குறிப்­பாக அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் அர­சியல் கைதி­களின் விடு­தலை குறித்து ஜனா­தி­ப­திக்கு விளக்­க­ம­ளித்­துள்ள எதிர்க்­கட்சித் தலைவர் நீண்­ட­கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதிகளை விரை­வாக விடு­தலை செய்­யப்­பட வேண்­டிய அவ­சி­யத்­தையும் அவர் எடுத்துக் கூறி­யுள்ளார்.

இது தொடர்பில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்­துள்ளார். அந்தக் கடி­தத்தில், 'வட மாகா­ணத்­துக்கு நீங்கள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யங்­களை மேற்­கொண்ட பல தரு­ணங்­களில் தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை குறித்து நட­வ­டிக்கை எடுப்­ப­தாக வாக்­க­ளித்­தி­ருந்­தீர்கள். வழக்­குகள் தாக்கல் செய்­யாமல் போது­மான சாட்­சி­யங்கள் இல்­லா­த­வரை உடன் விடு­தலை செய்­வ­தா­கவும் வாக்­க­ளித்­தி­ருந்­தீர்கள். எனினும் அவை இற்­றை­வரை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

இரா­ணுவப் போர் குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக கட்­டாய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­வ­ரும்­போது மேற்­படி தமிழ் சிறைக்­கை­தி­களை பகடைக் காய்­க­ளாக பயன்­ப­டுத்­தவே அவர்கள் சம்­பந்­த­மாக நட­வ­டிக்­கைகள் எடுக்­காது தாம­திக்­கின்­றீர்­களோ என எண்ணத் தோன்­று­கி­றது. எனினும் உங்கள் மீதான நம்­பிக்­கையை இன்­னமும் நாம் இழக்­க­வில்லை. நீங்கள் உங்கள் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வீர்கள்' என்று நம்­பு­கிறேன் எனத் தெரி­வித்­துள்ளார்.

இதே கோரிக்­கையை மன்னார் பிர­ஜைகள் குழுவின் தலைவர் அருட்­தந்தை எஸ்.ஞான­பி­ர­காசம் அடி­க­ளாரும் முன்­வைத்­துள்ளார். அவர் இது தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கையில், கைதிகள் சுக­யீ­ன­முற்­றுள்ள போதும் அவர்­க­ளுக்கு கைவி­லங்­கி­டப்­பட்டே சிகிச்­சைகள் வழங்­கப்­பட்­டன. அதனை அவர்கள் எமக்கு துய­ரத்­துடன் வெளிப்­ப­டுத்­தினர். அவர்கள் தங்­களை விடு­தலை செய்­யா­வி­டினும் புனர்­வாழ்­வ­ளிக்­கவா­வது அனுப்­பு­மாறு கோரு­கின்­றனர். எனவே அவர்­களின் கோரிக்­கையை சாத­க­மாக பரி­சீ­லித்து உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென அவர் கோரிக்கை விடுத்­துள்ளார்.

ஜனா­தி­பதி மற்றும் அமைச்­சர்கள் வட­ப­கு­திக்கு விஜயம் செய்யும் சந்­தர்ப்­பங்­களில் வழங்கும் உறுதி மொழி­களை பின்னர் நிறை­வேற்ற தவ­று­வதே தமிழ் மக்கள் அவர்கள் மீதான நம்­பிக்­கையை இழப்­ப­தற்கு பிர­தான கார­ண­மாக அமை­கின்­றது. யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ந்தும் பல்­வேறு கஷ்­டங்­க­ளுக்கும் நெருக்­க­டி­க­ளுக்கும் மத்தியிலேயே தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.

அது மாத்திரமன்றி யுத்தத்தின் போது காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள முடியாத நிலைமைகளே தொடர்கின்றன. இது தொடர்பான ஆணைக்குழு மீதும் மக்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இல்லை. அரசின் செயற்பாடுகள் யாவும் வெறுமனே கண்துடைப்பு நடவடிக்கையாகவே இருப்பதாக தமிழ் மக்கள் மிகுந்த விசனம் தெரிவிக்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டேனும் தமிழ் மக்களின் துயரைத் துடைக்க இதய சுக்தியுடன் காத்திரமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

மாறாக அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை இழுத்தடித்து வருமானால் அது அரசின் மீதான நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக இழப்பதற்கே வழிவகுப்பதாக இருக்கும் என்பதை எடுத்துக்கூற விரும்புகிறோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-23#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.