Jump to content

400 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு


Recommended Posts

400 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு : இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை வெளிப்படுத்தும் ஆதாரங்கள்

 

 
 

போர்த்துக்கல் நாட்டில் 400 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய கப்பல் லிஸ்பனின் புறநகரான கடற்கரைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

the-find-has-been-hailed-as-the-discover

இந்தியாவிலிருந்து 400 ஆண்டுகளுக்கு முன்னர் நறுமணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு போரத்துக்கல்லிற்கு சென்ற கப்பல் லிஸ்பன் அருகே கடலில் மூழ்கியது. 

portugalshipwreck-1.jpg

இந் நிலையில்  மூழ்கிய கப்பல் கடந்த 3ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.

portugalshipwreck-0.jpg

கண்டெடுக்கப்பட்ட கப்பலின் உடைந்த பாகத்தில் 40 அடி ஆழத்தில் நறுமணப் பொருட்கள், 9 பித்தளை பீரங்கிகள்,  போர்த்துக்கேயர் பயன்படுத்தும் ஆடை அலங்கார கருவிகள், சீன செரமிக்ஸ் பொருட்கள் மற்றும் அடிமைகளை விலைக்கு வாங்க பயன்படுத்தும் நாணயத்தாள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

portugalshipwreck.jpg

கி.பி 1575ற்கும் 1625ற்கும் இடையே போர்த்துக்கல் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையேயான நறுமணப் பொருட்கள் வர்த்தகம் உச்சக்கட்டத்திலிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/41130

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

400 வருடங்களுக்கு முதல் இந்தியா என்ற நாடு இருந்ததா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, putthan said:

400 வருடங்களுக்கு முதல் இந்தியா என்ற நாடு இருந்ததா? 

அப்போது இலங்கையும் இருந்தது என்பதால் இந்தியாவும் இருந்திருக்கத்தானே வேண்டும்!

கறுவா, மிளகு போன்ற வாசனைத் திரவியங்களை எடுத்துச் செல்ல விரும்பித்தானே கொலம்பஸ் மேற்கால் போய்க் கிழக்கை அடையலாம் என்று அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்! அவர் போக விரும்பியது இந்தியாவுக்குத்தானே!

 

பி.கு. வாசனைத் திரவியங்களை இப்போது நறுமணப் பொருட்கள் என்று சொல்கின்றார்கள் போலுள்ளது!

Link to comment
Share on other sites

இந்தியாவிலிருந்து 15 ஆம் நூற்றாண்டில் புறப்பட்ட கப்பலுக்கு என்ன ஆனது?

 

 

நூற்றாண்டின் கண்டுபிடிப்பு

நூற்றாண்டின் கண்டுபிடிப்புபடத்தின் காப்புரிமைREUTERS/CASCAIS CITY HALL

போர்ச்சுகல் கடல் பகுதியில் 400 ஆண்டு பழமையான கப்பலின் உடைந்த பாகங்களை கண்டுப்பிடித்துள்ளனர். இதனை ஒரு தொல்பொருள் அறிஞர் `இந்த தசாப்தத்தின் கண்டுபிடிப்பு' என்று வர்ணித்துள்ளார். இந்த கப்பலானது 1575 - 1625 ஆகிய காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து மிளகு, கிராம்பு உள்ளிட்ட மசாலா மற்றும் நறுமண பொருட்களை ஏற்றிக் கொண்டு திரும்ப சென்றுக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

https://www.bbc.com/tamil/global-45635526

4 hours ago, putthan said:

400 வருடங்களுக்கு முதல் இந்தியா என்ற நாடு இருந்ததா? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

400 வருடங்களுக்கு முதல் இந்தியா என்ற நாடு இருந்ததா? 

1522 போர்த்துக்கீசர் வருகை. 1612 ஆங்கிலேயர் வருகை. இப்போது இருக்கும் இந்தியா இதே எல்லைகளுடன் அப்போது இல்லை என்பதே உண்மை.  இந்திய உபகண்டத்தில் இருந்த பல இராஜதானிகளில் பல அரசர்கள் ஆட்சிசெய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் காலத்துக்குக்காலம் தம்மிடையே போரிட்டு வெல்வதும் தோற்பதுமாக இருக்க இராஜதானிகளின் எல்லைகளும் மாறிக்கொண்டேயிருந்தன. பின் வந்த காலக்கட்டத்தில்  இந்திய உபகண்டத்தில் ஆங்கிலேயர் படிப்படியாக தமது ஆட்சியை  கிழக்கிந்திய கம்பனியூடாக நிறுவினர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.