நவீனன்

'சிங்கள இராணுவத்தினர் பேய்கள்" என நினைத்தோம் : தமிழினி எழுதிய புத்தகத்தை ஆதாரமாக எடுங்கள் என்கிறார் பிரசன்ன

Recommended Posts

'சிங்கள இராணுவத்தினர் பேய்கள்" என நினைத்தோம் : தமிழினி எழுதிய புத்தகத்தை ஆதாரமாக எடுங்கள் என்கிறார் பிரசன்ன

 

 
 

புற்றுநோயால் பீடிக்கப்பட்டு மரணித்த விடுதலை புலிகள் அமைப்பின் பெண்கள் அமைப்பின் தலைவி தமிழினி தான் உயிருடன் இருக்கும்போது நூல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள விடங்களை நோக்கும் போது இராணுவத்தினர் யுத்தக் குற்றம் புரியவில்லை என்பது புலனாகிறது என சட்டத்தரணி  மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்தார்.  

ajith.jpg

 “தாய் நாட்டுக்காக இராணுவத்தினர்” அமைப்பு ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பு ஸ்ரீவஜிராஷர்ம பௌத்த நிலையத்தில் நடைபெற்றது. 

அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புலிகள் அமைப்பின் பெண்கள் அமைப்பின் தலைவி தமிழினி தான் உயிருடன் இருக்கும்போது நூல் ஒன்றை எழுதியுள்ளார். 

அதில்“சிங்கள இராணுவத்தினர் பேய்கள் என்றே நாம் கருதியிருந்தோம். எனினும் எமக்கு புனர்வாழ்வளிக்கும் போதுதான் அறிந்துகொண்டோம் அவர்களும் மனிதர்கள் என்று. இறுதிகட்ட யுத்தத்தின்போது தப்பிச்செல்ல முற்பட்ட தமிழ் மக்களை சுடுமாறு பணிப்புரை கிடைத்தது. 

அதன் பிரகாரம் சுட்டதாகவும்” அந்நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே அந்த நூலே சிறந்த ஆதாரமாக உள்ளது என்றார்.

http://www.virakesari.lk/article/41159

Share this post


Link to post
Share on other sites

அரசாங்கத்திற்கு எதிராக இராணுவத்தினர் கிளர்ந்தெழுவர் ; மேஜர் அஜித் பிரசன்ன 

 

 

(எம்.சி.நஜிமுதீன்)

வெளிவிவகார அமைச்சர் திலக் மாறப்பனவை பதவியிலிருந்து விலக்கிவிட்டு அப்பதவியை பிரித்தானிய பிரபுக்கள் சபை உறுப்பினருக்கு வழங்கினால் அவர் இலங்கை இராணுவத்தினர் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்பார். 

ajith.jpg

மேலும் அரசாங்கம் இராணுவத்தினர் மீது கெடுபிடிகளை மேற்கொண்டு வருகிறது.  நாட்டில் இருபது இலட்சம் பேர் வரையிலான இராணுவத்தினர் உள்ளனர். எனவே அவர்கள் அனைவரும் எப்போதாவது அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கிறேன். அந்த எழுச்சி எவ்வாறு அமையும் என்பதைத் சொல்ல முடியாதென சட்டத்தரணி  மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்தார்.  

“தாய் நாட்டுக்காக இராணுவத்தினர்” அமைப்பு ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பு ஸ்ரீவஜிராஷர்ம பௌத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

http://www.virakesari.lk/article/41157

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, நவீனன் said:

'சிங்கள இராணுவத்தினர் பேய்கள்" என நினைத்தோம் : தமிழினி எழுதிய புத்தகத்தை ஆதாரமாக எடுங்கள் என்கிறார் பிரசன்ன

 

ajith.jpg

 

முகம் மனத்தைக் காட்டுகிறது. வாய் அதற்கும் மேலே.?

Share this post


Link to post
Share on other sites

தமிழினி எழுதியதாகக் கூறப்படும் புத்தகம் அவர் எழுதவில்லை என்பது நான் அறிந்தது. அவரது காதலரான தமிழர் ஒருவருக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான புரிந்துணர்வின் அடிப்படையிலேயே இப்புத்தகம் எழுதப்பட்டது. இதில் தமிழியின் பங்களிப்பென்பது கேள்விக்குறியானது.

அடுத்ததாக, இந்தப் புத்தகத்தின் வெளியீட்டுச் சூத்திரதாரி சிறிதுகாலம் இங்கே அவுஸ்திரேலியாவிலும் வந்து தங்கியிருந்தவர். சரி, அவரது சொந்த வாழ்க்கை பற்றிப் பேச வேண்டாமே.

சரி, தாங்களே நடத்திய நாடகத்தினை தங்களுக்குச் சாதகமாக மேற்கோள் காட்டுவதென்பது சிங்களத்திற்கு புதியதல்லவே? இப்படி எத்தனையோ பேரைப் பார்த்தாயிற்று. தமது குற்றங்களை தம்மாலேயே மறைக்க முடியாத தறுவாய்களில், தமிழரின் பக்கமிருந்து நற்சான்றிதழ் பெறப்பார்கிறது சிங்களம். நீங்கள் எதுவுமே செய்யவில்லையென்றால், ஒரு முன்னால்ப் போராளியின் வாக்குமூலத்தை ஏன் சாட்சியாகக் கையிலெடுக்க வேண்டும் ?

என்னதான் நடந்தாலும், எமக்கான நீதியோ தீர்வோ சிங்களத்திடமிருந்து வரப்போவதில்லை. சீனாவின் பக்கமிருந்து இலங்கையைக் கழற்றிவிட்டால், தமிழர் மீதான சர்வதேசத்தின் "அக்கறையும்" இல்லாமல்ப் போய்விடும். அதன் பிறகு நாம் உள்நாட்டுக்குள்ளேயே தமிழர்களுக்கு தீர்வொன்றை வழங்குவோம்?? அதுசரி, தமிழரின் பிரச்சினைதான் என்ன ?? யாருக்குத் தெரியும் ??


 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now