Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பலாலி விமான நிலையத்தை எந்தவொரு நாட்டுக்கும் வழங்கப்போவதில்லை – நிமல்


Recommended Posts

பலாலி விமான நிலையத்தை எந்தவொரு நாட்டுக்கும் வழங்கப்போவதில்லை – நிமல்

 

 

Nimal.Siripala.Desilva.jpg

யாழ் பலாலி விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகளை எந்தவொரு வௌிநாட்டிற்கும் வழங்கப்போவதில்லை என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

நாட்டில் உள்ள ஆறு விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

திகன விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக ஒரு நிபுணர் குழுவை அமித்துள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் கூறினார். இந்த குழுவானது அபிவிருத்தி முயற்சிகளை மீளமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் மதிப்பீடு செய்யும் எனவும் அவர் கூறினார்.

அத்துடன் இரத்மலானை, மட்டக்களப்பு, பலாலி, சிகிரியா, கோகலை மற்றும் திகன விமான நிலையங்கள் ஆகியவை நாட்டின் விமான சேவையில் ஈடுபடுவதற்கான அபிவிருத்திகளை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், A320 ரக விமானங்களைத் தரையிறக்கும் வகையில் விமான ஓடுதளத்தை புனரமைக்கும் பணிகளை முன்னெடுப்பதற்கு தேவையான நிதியை வழங்க சிவில் விமான சேவை அதிகாரசபை மற்றும் அபிவிருத்தி சபை என்பன இணங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொள்ளாது புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

http://athavannews.com/பலாலி-விமான-நிலையத்தை-எந/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முடிவு 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.