Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

மாறிவரும் பருவநிலை இலங்கைக்கு அச்சுறுத்தல்: எச்சரிக்கும் உலக வங்கி


Recommended Posts

மாறிவரும் பருவநிலை இலங்கைக்கு அச்சுறுத்தல்: எச்சரிக்கும் உலக வங்கி

அதிகரித்துவரும் வெப்பநிலையும் மாற்றமடைந்துவரும் மழைக் காலங்களும் இலங்கைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.

தன்ணீரால் பேரழிவுபடத்தின் காப்புரிமைWORLDBANK.ORG

இந்த பருவநிலை மாற்றத்தால் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் வாழ்க்கைத் தரமும் குறைந்துவிடக்கூடும் என உலக வங்கியின் புதிய அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் அபாய வலயங்கள் பற்றிய உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கீழ்காணும் அம்சங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

வெப்பநிலை, மழை பெய்வதில் மாற்றங்கள் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுத்தும் தாக்கம்

தெற்காசிய மக்கள்தொகையில் ஏறத்தாழ பாதிபேர் அபாய வலயங்கள் எனப்படும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலே வாழ்ந்து வருகின்றனர்.

பயிர் விளைச்சல் குறைதல், நலிவடையும் தொழிலாளர் உற்பத்தித்திறன், இவற்றுடன் தொடர்புடைய சுகாதார தாக்கங்கள் ஆகியவை காரணமாக அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடையக்கூடும்.

மிகக் குறைவான வளர்ச்சி, மோசமான இணைப்புக்களை கொண்டிருத்தல், நீர் பற்றாக்குறை ஆகிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதால், இந்த அபாய வலயங்களில் உள்ள மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் வடக்கு, வட மேற்கு மாகாணங்களில் 2050ம் ஆண்டளவில் சராசரி வெப்பநிலை அதிகரிக்கவும், மழை பெய்வதில் அதிக மாற்றம் ஏற்படவும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

2015ம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையில் பரிந்துரைக்கப்பட்டதற்கு ஏற்ப கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

இருப்பினும், இலங்கையின் சராசரி ஆண்டு வெப்பநிலையானது 2050ம் ஆண்டளவில் 1 டிகிரி செல்சியஸ் முதல் 1.5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என பகுப்பாய்வுள் கூறுகின்றன.

முத்துக்குமார மணிபடத்தின் காப்புரிமைWORLDBANK.ORG

எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் இலங்கையின் சராசரி வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம்.

'காலநிலை மாற்றங்கள் தனி நபர் வருமானக் குறைவுக்கு வழிகோலுகிறது. இது தெற்காசியா முழுவதிலும் வறுமை மற்றும் சமத்துவமின்மையை அதிகரிக்கும்' என தெற்காசியப் பிராந்தியத்திற்கான உலக வங்கியின் முதன்மை பொருளியலாளர்களில் ஒருவரும் இந்த அறிக்கையைத் தயாரித்தவருமான முத்துக்குமார மணி தெரிவித்தார்.

'காலநிலை மாற்றத்தினால் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள பகுதிகளை இனம் காண்பது, அங்கு வாழும் சமூகங்களுக்கு அவசியமான வளங்களையும் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் முன்னுரிமை அடிப்படையில் அளிக்க கொள்கை வகுப்பாளர்களுக்கு உதவும்' என்று முத்துகுமார மணி கூறியுள்ளார்.

பருவநிலை மாற்றத்தைத் தாக்குபிடிக்கும் உள்ளகத் திறனை கட்டியெழுப்பத் தேவையான முதலீடுகள், மூலோபாயங்களை முன்னிலைப்படுத்தும் தெரிவுகளை இந்த அறிக்கை வழங்குகின்றது.

விவசாயத்துறையை சாராத தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல், சந்தை வாய்ப்புக்களை மேம்படுத்துல், கல்வி வாய்ப்புக்களை மேம்படுத்துதல் போன்றவற்றின் ஊடாக, காலநிலையுடன் நெருங்கிய தாக்கத்தை கொண்டிருக்காத துறைகளில் வாய்ப்புக்களை உருவாக்குவதன் மூலம், அதிக அபாயத்தை எதிர்கொள்ளும் தரப்பினரின் வாழ்க்கைத் தரத்தை, காலநிலை தாக்கங்களின் பாரதூரம் பாதிக்காமல் காக்க முடியும் என ஆய்வுகள் கோடிட்டுக்காட்டுகின்றன.

இலங்கைஇலங்கை

காலநிலையை தாக்குபிடிக்கும் திறனுக்கு ஒத்துழைப்பு வழங்கல், காலநிலை மாற்றத்தை தழுவிக்கொண்டு செயல்படுதல் ஆகிய விடயங்களில் இலங்கை அரசாங்கத்துடன் உலக வங்கி மிக நெருக்கமாக பணியாற்றுகின்றது.

காலநிலை பதிப்பை தாக்குபிடிக்குத் திறனை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கும் செயற்பாடுகள், நிலச்சரிவுகளுக்கு தாக்குப்பிடித்தல் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் முதலீடுகளுக்கு ஒத்துழைப்பளிக்கிறது.

காலநிலையை தாக்குபிடிக்கும் உத்தேச விவசாய நீர்ப்பாசன திட்டமானது, இவ்வருடத்தில் அனுமதிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இனங்காணப்பட்டுள்ள அபாய வலயங்களிலுள்ள நீர்ப்பாசன கட்டமைப்புக்களை புனரமைப்பது உட்பட விவசாயத்திற்கு தேவையான மேம்படுத்தப்பட்ட நீர்முகாமைத்துவத்திற்கு உலக வங்கி ஆதரவளிக்கும்.

"மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு, சந்தை மறுசீரமைப்பு, மேம்படுத்தப்பட்ட மனித ஆற்றல் ஆகியன, காலநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர் ஆகிய அதிகரிக்கும் அச்சுறுத்தல்களுக்கு, வலுவான, நிறுவன ரீதியான பதிலளிக்கக்கூடியதாக அமைந்திருக்கின்றன" என்று மணி தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-45639841

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • புது மண தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்! 💐💐 திருமண வைபவத்தை இந்து முறைப்படி சிறப்பாக செய்து வைத்த ஐயாவுக்கு பாராட்டுக்கள்! ❤️❤️
  • பிரம்மாஸ்திரம் நிகழ்ச்சிக்கு எம். ஏ. சுமந்திரன் வழங்கிய செவ்வி    
  • இந்த வகையில் பார்த்தால் எனது ஒப்பீடு பிழைதான். தன்பாலின உந்தலை மருத்துவத்தால் குணமாக்க முடியாது என்பது மிகச்சரி. ஆனால் மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத தானாக அமையும் ஒன்றைதானே “இயற்கையானது” என்போம்?
  • எனக்கு தாவரங்கள் மேல் அதீத நாட்டம் என்பது உங்கள் எல்லாருக்கும் தெரியும் தானே. 2019 இல் கனடாவிலிருக்கும் என் ஒன்றுவிட்ட அண்ணா பாவல், புடோல் பந்தலில் கீழே நின்று படம்  எடுத்துப் போட எனக்கும் என வளவில் இரண்டும் நட்டுக் கோடியில் படர விடவேணும் என்ற ஆசை எழுந்தது. ஊரில் உள்ள கணவனின் தங்கையிடம் உள்ள விதைகள் எல்லாம் அனுப்பும்படி கூற யாவரும் 1200 ரூபா கட்டி ஒரு சிறிய பார்சலை அனுப்பி வைக்க கோவிட் காலத்தில் என் கெடுகாலமும் சேர கஷ்டம்சில் எல்லாவற்றையும் எடுத்துவிட்டு அனுமதி இல்லை என்ற விபரத்துடன் கீரை விதைகள் மட்டும் வந்து சேர்ந்தது. உடனே கனடாவுக்கு தொலைபேசி எடுத்து எனக்குக் கொஞ்ச விதைகள் அனுப்புங்கோ என்றதுக்கு நான் எப்படி அனுப்புறது. விதைகள் அனுப்பக் கூடாதே  என்று அண்ணா பின்வாங்க, ஒரு வாழ்த்துமடலினுள் வைத்து அனுப்புமாறு ஆலோசனை கூறினேன்.  ஒரு வாரம் வரும் வரும் என்று பார்க்க இரு வாரங்களின் பின் வந்து சேர்ந்தது வாழ்த்துமடல். வாழ்த்து மடலை பார்த்தபோதே எனக்கு விளங்கீட்டுது அண்ணாவின் நப்பித்தனம். ஆறு பாகல் விதைகள், ஆறு புடோல். அதில் மூன்று கட்டைப் புடோல் மற்றையது நீளமானது என்றும் எழுதியிருக்க, சரி இதாவது வந்ததே என்று மகிழ்வோடு கடைக்காரரிடம் மரக்கறிகள் வரும் சிறிய regiform பெட்டிகளை வாங்கி வந்து அதற்குள் சிறிய சாடிக்களில் உரம் போட்டு விதைகளை நாட்டாச்சு.மேலே இன்னொரு மூடியால் மூடியும்  ஆச்சு.  ஒரு மாதமா ஒரு அசுமாத்தமும் இல்லை.  மே மாதம் முளைத்து நான்கு இலைகள் தெரிய அதை எங்கே நடுவது,  எப்பிடிப் பந்தல் போடுவது என்று ஒரே கற்பனை. வழமைபோல ஏற்கனவே தோட்டம் எல்லாம் காடாக்  கிடக்கு. உது எதுக்கு என்று மனிசன் தொடங்கியாச்சு.  ஜெகதீஸ் அண்ணா என்று ஒருவர் வீட்டுத் தோட்டத்தில்  பாவல் நட்டு ஒரே காய்தாய். அந்த வீடியோ பார்த்த நான் அவருடன் தொடர்புகொண்டு அவரின் கொடிகளைப் பற்றி நலம் விசாரித்துவிட்டு என் பாவல் புடோல் பற்றி விபரம் சொன்னேன். இப்போதைக்கு வெளியே வையாதை பிள்ளை. ஜூன் மாதம் வெயில் வந்தால் தான் மரம் எழும்பும் என்றார். எனக்கோ கொடிகள் வளர வளர எப்படி வீட்டுக்குள் வைப்பது என்று எண்ணி எனது conservetry  உள் கொண்டுசென்று வைத்தேன். மே மாதக் கடைசியில் சாடையாய் வெயில் எறிக்க நல்ல பெரிய சாடிகளில் நல்ல உரம்போட்டு கன்றுகளை இடம் மாற்ற கிட்டத்தட்ட ஒரு மீற்றர் வரை கன்றுகள் வளர்ந்து புடோலிலும் பாகலிலும் பூக்களும் பூக்கத் தொடங்க எனக்கோ மட்டில்லா மகிழ்ச்சி. ஒரு வாரம் போக இழைகள் எல்லாம் சுருண்டு சுருண்டு என்ன என்று பார்த்தால் ஒரே எறும்புகள். இந்த ஆண்டுபோல் என தோட்டத்தில் எறும்புகள் வந்ததே இல்லை. பல இடங்களில் எறும்பு. எதற்கும் அந்த அண்ணாவிடமே கேட்போம் என்று போன் செய்ய அவர் ஒரு ஸ்பிறே ஒன்றைப் பரிந்துரைக்க கடைகளில் தேடினால் இல்லை.  ஒருவாறு  ஒன்லைனில் ஒன்றுக்கு மூன்றாய் எறும்புக்கு ஸ்பிறே ஓடர் செய்து அடுத்த நாள் வந்ததும் ஆசை தீர சாடிக்களின் மேலே கீழே இலைகளில் எல்லாம் நன்றாக அடித்து இனிமேல் இந்தப் பக்கம் எப்பிடித் தலை வைத்துப் படுக்கிறீர்கள் என்று எண்ணியபடி நல்ல நின்மதியான தூக்கம். அடுத்தநாள் காலை நல்ல வெயிலைக் கண்ட சந்தோசத்தில் தேனீரும் பருக்காமல் தோட்டத்துக்குப் போனால் நெஞ்செல்லாம் அடைச்சுப் போச்சு. அத்தனை கொடிகளும் எரிஞ்சுபோய்க் கிடக்கு. உடன அந்த அண்ணாவுக்கு போன் செய்தால், என்ன தங்கச்சி அடியில கொஞ்சம் அடிக்கிறதுக்கு இலைக்கு ஏன் அடிச்சியள் என்கிறார். அவரைத் திட்டவும் முடியாமல் மனிசனுக்கு போன் செய்து விடயத்தைச் சொல்ல, ஊரிலையே எரும்புக்கு பவுடர் தான் போடுறது. சரி இனி என்ன செய்யிறது. இண்டைக்கு வெயில் தானே தண்ணியை நல்லா விட்டுவிடு என்று சொல்ல..................... என்ன சொல்லி என்ன திரும்ப ஒரு குருத்துக் கூட வரேல்லை.  இனி என்ன செய்யிறது. அடுத்த ஆண்டு பார்ப்பம் என்று எண்ணியிருக்க, முளைக்காமல்  இருந்த ஒரு புடல் ஒரு சாடியில் இருந்து முளைத்துவர  இன்னொரு சாடியில் ஒரு பாகலும் முளைக்க என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால் இப்ப சீசன் தப்பி முளைத்து என்ன பயன். பிஞ்சுகள் எல்லாம் பழுத்துப் பழுத்து கொட்ட எனது கண்ணாடி அறையுள் அவர்களைக் கொண்டு வந்தாச்சு. சந்தோஷமா அவை படர்ந்தாலும், பிஞ்சு  பெருக்குமா காய்க்குமா என்ற சந்தேகம் எனக்கு. LED lights வாங்கிப் போடலாமா என்று எண்ண, அது கூடாது. எமக்கு  பார்வைக் கோளாறை உண்டாக்கும் என்கிறாள் மகள். யாராவது அதுபற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் எனக்கு உதவுங்கள். 
  • குட்மோனிங் - நல்ல நாளாக அமையட்டும் என்று ஒருவரை வாழ்த்துவதும் ஒருவரை வணங்குவதும் ஒன்றா வில் வளைவது தீமை செய்வதற்காக  வணங்கம் தெரிவிப்போரும் அது மாதிரியே அதனால் கவனம்  என்று திருக்குறள் தெரிவிக்கின்றது. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான் இலங்கைக்கு நான் போன போது இந்த வணங்குதல் வணக்கம் ஒன்றும் இல்லாமல் எவ்வளவு அன்பாக வரவேற்றார்கள்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.