Jump to content

வெளிநாட்டு தலையீடு வேண்டாம் – எமது பிரச்சினையை தீர்த்துக்கொள்ள இடமளியுங்கள்! – ஜனாதிபதி மைத்திரி


Recommended Posts

வெளிநாட்டு தலையீடு வேண்டாம் – எமது பிரச்சினையை தீர்த்துக்கொள்ள இடமளியுங்கள்! – ஜனாதிபதி மைத்திரி

 

Maithri-720x450.jpg

இலங்கை பிரச்சினைகளில் வெளிநாடுகளின் தலையீடு அவசியமில்லையென்றும், நாட்டிற்குள்ளேயே பிரச்சினையை தீர்த்துக்கொள்ள இடமளியுங்கள் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் சுயாதீனத் தன்மையை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் தான் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச்சபையின் 73ஆவது அமர்வு நியுயோர்க்கில் நேற்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதில் இலங்கை நேரப்படி இன்று (புதன்கிழமை) அதிகாலை உரையாற்றிய ஜனாதிபதி மேற்குறித்த வேண்டுகோளை முன்வைத்தார்.

ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”நான் பதவிக்கு வரும்போது காணப்பட்ட ஜனாதிபதிக்கு காணப்பட்ட அதிகூடிய அதிகாரங்களை குறைத்து அதனை நாடாளுமன்றத்திற்கு வழங்கியுள்ளேன். அதனை சந்தோசமாகவே செய்தேன். கடந்த மூன்றரை வருட காலத்தில் பாரிய அபிவிருத்திகளை எட்டியுள்ளது.

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் சுதந்திரம், ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் சுயாதீனமாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், அப்போது காணப்பட்ட இலங்கை இப்போது இல்லையென்றும், பல முன்னேற்றகரமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இலங்கைக்கு இன்று உலகில் எந்தவொரு எதிரி நாடுகளும் இல்லை. சகல நாடுகளுக்கும் ஒரு மத்தியஸ்த நாடாக எமது நாட்டை நோக்கும் அளவிற்கு மாற்றியமைத்துள்ளோம்.

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த பின்னர், எமது ஆட்சிக்காலத்திலேயே பல செயற்பாடுகளை முன்னெடுத்தோம். தேசிய சமாதானம், நல்லிணக்கம், மீண்டும் யுத்தம் ஏற்படுவதை தடுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளோம். அந்தவகையில், மனித உரிமைகளை நிலைநாட்ட நாம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு உலக நாடுகள் ஆதரவளிக்க வேண்டும். நாடு பிளவுபடாமல் இருப்பதற்கு இராணுவம் ஆற்றிய பணி மகத்தானது.

மனித உரிமை விடயத்தில் புதிய நோக்கத்தில் எம்மை நோக்குங்கள். சமாதானம், நல்லிணக்கம், பொருளாதாரம், அபிவிருத்தி போன்ற சகல விடயங்களிலும் எமது நாடு முன்னோக்கிச் செல்கின்றது.

எமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்ள இடமளியுங்கள். நாட்டின் சுயாதீனம் மிக முக்கியமானது. அந்தவகையில், எமது அர்ப்பணிப்புகள் மற்றும் புதிய செயற்பாடுகளுக்கு ஆதரவளியுங்கள்.

சர்வதேச தலையீடுகள், அழுத்தங்கள் மற்றும் சர்வதேச அச்சுறுத்தல்கள் எவையும் எமக்கு அவசியமில்லை. எமது நாட்டை சக்திமிக்கதாக மாற்ற இடமளியுங்கள். எமது நாட்டின் உரிமையை பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்ல இது மிகவும் முக்கியமானது” என்றார்.

president-maithri-in-UNGA-5.jpg

president-maithri-in-UNGA-6.jpg

president-maithri-in-UNGA-1.jpg

president-maithri-in-UNGA-2.jpg

president-maithri-in-UNGA-4.jpg

http://athavannews.com/பிரச்சினையை-தீர்த்துக்க/

Link to comment
Share on other sites

ஐ.நாவில் தமிழ் அமைச்சரின் தோளில் கைகளை போட்டு ஜனாதிபதி கேட்ட கேள்வி!

 

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 73ஆவது பொதுச்சபை கூட்டத் தொடரில் உரையாற்றிய பின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் மனோ கணேசனை சந்தித்துள்ளார்.

“அமைச்சர் மனோ கணேசன் அவர்களே, என் உரையில் சர்ச்சை எதுவும் இல்லை தானே! இப்போது திருப்திதானே?” என அமைச்சர் மனோ கணேசனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுள்ளதாக அமைச்சர் தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அமைச்சர் மனோ கணேசன் அவர்களே, என்ன, என் உரையில் சர்ச்சை எதுவும் இல்லை தானே! இப்போது திருப்திதானே?”

ஐ.நா சபையில் உரை நிகழ்த்தி இறங்கி வந்ததும் அமைச்சர்கள் குழு ஜனாதிபதியை சூழ்ந்த போது, என்னை அழைத்த ஜனாதிபதி, என் தோளில் கைகளை போட்டவாறு இப்படி கேட்டார்.

ஜெனிவா தீர்மானத்தை எதிர்த்து பேசி அதிலே திருத்தம் செய்ய வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரி, ஐ.நா சபையில் தனது உரையின் போது கோரிக்கை முன் வைக்க போகிறார் என இலங்கையில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில், அப்படி சர்ச்சைக்குரிய கருத்துகள் எதுவும் ஜனாதிபதியின் உரையில் இடம்பெறவில்லை.

வழமையாக இலங்கையிலே பேசுகின்ற கருத்துகளையே ஜனாதிபதி தனது உரையிலே குறிப்பிட்டார்.

ஆக, “போர் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இனிமேல் சர்வதேசம் எனது நாட்டை புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்” என்று மேலதிகமாக குறிப்பிட்டார்.

“அந்த புதிய கண்ணோட்டம் என்னவென்று நீங்கள் இங்கே கூறவில்லை. நல்லது. அது என்னவென்று ஊருக்கு போய் விளக்கமாக சொல்லுங்கள் ஜனாதிபதி அவர்களே” என்று நான் கிண்டலாக சொல்ல, அனைவரும் சிரித்தார்கள்.” என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.tamilwin.com/politics/01/194336?ref=home-latest

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் மீது ஒரு இனக்கொலையினை நடத்தி முடிப்பதற்கு மட்டும் சர்வதேச நாடுகளின் உதவியும், அனுசரணையும் வேண்டும். ஆனால் அவர்களுக்கு நியாயமான தீர்வொன்றை வழங்கவோ அல்லது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியை வழங்கவோ சர்வதேச தலையீடுகள் தேவையில்லை.

மனோ கணேசன் அவர்கள் நல்லிணக்க அரசுக்கு சார்பாகப் பேசி வருபவர். தமிழருக்கு நடந்த அநீதிகள் பற்றி இவர் ஆறியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், மைத்திரி அவர்கள் உள்நாட்டில் தீர்த்துக்கொள்கிறோம் என்று கூறும்போது இவரால் வெறுமனே கைதட்டி ஆர்ப்பரிக்கத்தான் முடிகிறது.

யுத்தம் முடிந்து இன்றுடன் ஒன்பது வருடங்கள் நான்கு மாதங்கள் 8 நாட்கள் ஆகிவிட்டன. இதுவரை தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியோ, ஆக்கிரமிப்பில்லாத  அவர்களின் சுதந்திரமான வாழ்விற்கான உரிமைகளோ வழங்கப்படவில்லை.

தமிழ்க் கூட்டமைப்பு தொடர்ந்தும் இந்த அரசுக்கு முண்டுகொடுப்பது நலிவடைந்து போயிருக்கும் தமிழினத்தின் நிலையை இன்னும் இன்னும் பலவீனமாக்குமேயன்றி, வெறு எதுவும் செய்யப்போவதில்லை.

உள்நாட்டில் தீர்வு, உள்நாட்டில் தீர்வு என்று சொல்கிறீர்களே, அப்படி என்னதான் தீர்வு தரப்போகிறீர்கள் என்று கேட்கும் தைரியம் கூட இல்லாமல்த்தான் சம்பந்தனும், சுமந்திரனும் ஆதரவு வழங்கிவருகிறார்கள்.

இப்போது ஐநாவில் பேசுபொருளாக இருக்கும் எமது அவலம், இன்னும் ஒரு சில வருடங்களில் முற்றாகக் காணாமல்ப் போய்விடும். ஆப்போதும்கூட, எமக்கான நீதியும், உரிமையும் நிச்சயம் கிடைக்கப்போவதில்லை. ஆனால், அப்படியொன்றைத் தரப்போவதாக சிங்களம் தொடர்ந்தும் ஏமாற்றும், நாமும் தொடர்ந்து முண்டு கொடுத்துக்கொண்டுதான் இருப்போம்.

எமது தலைவிதி அதுதான் என்றால், யாரால்த்தான் என்ன செய்யமுடியும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

ஆக, “போர் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இனிமேல் சர்வதேசம் எனது நாட்டை புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்” என்று மேலதிகமாக குறிப்பிட்டார்.

போரெ நடைபெறவில்லை அப்புறம் என்ன புதிய கண்ணோட்டம் ??

11 hours ago, நவீனன் said:

வெளிநாட்டு தலையீடு வேண்டாம் – எமது பிரச்சினையை தீர்த்துக்கொள்ள இடமளியுங்கள்! – ஜனாதிபதி மைத்திரி 

பொரியல் குழு, புரோட்டா குழு ,புரியாணி குழு வழியாக பேசி தீர்க்கப்படுமா ? எல்லாம் இவையள் உட்காரும் ரேபில் மேல் வைக்கப்படும் மினரல் தண்ணி போத்தல் , தேத்தண்ணி , கோப்பித்தண்ணி , போண்டா , பஜ்ஜி க்கு கேடு ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.