Jump to content

இலங்கை ஐ. நா சபைக்கு பயந்த காலம் இப்போது இல்லை ; இராதாகிருஸ்ணன்


Recommended Posts

இலங்கை ஐ. நா சபைக்கு பயந்த காலம் இப்போது இல்லை ; இராதாகிருஸ்ணன்

 

 
 

இலங்கை ஒரு காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை என்று சொன்னாலே பயந்து கொண்டிருந்த காலம் மாறி இன்று அங்கே சென்று துணிச்சலாக எங்களுடைய கருத்துக்களை கூறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

IMG_8147.JPG

அதற்கு காரணம் நல்லாட்சி அரசாங்கம் படிப்படியாக மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட தொழில் நுட்ப பீடத்தின் கட்டிடம், வகுப்பறை, பெண் ஆசிரியர்களுக்கான விடுதி ஆகியவற்றின் திறப்பு விழா இன்று பாடசாலை அதிபர் ரி..தனேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

IMG_8155.JPG

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினரும் , குழுக்களின் பிரதி அவைத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வலய கல்வி பணிப்பாளர் திருமதி. செலின் சுகந்தி செபஸ்டியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்

IMG_8176.JPG

தொடர்ந்து அங்கு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்,

கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் சபை என்று சொன்னாலே அந்த பக்கம் திரும்பி பார்க்கவே நாங்கள் சிந்திப்பது வழக்கம்.

ஆனால் இன்று அவ்வாறு இல்லை . அந்த ஐக்கிய நாடுகள் சபைக்கு நேரடியாக விஜயம் செய்து எங்களுடைய கருத்துக்களை தெளிவாக அவர்களுக்கு எடுத்து கூறுகின்ற அளவிற்கு இந்த நாட்டில் படிப்படியாக மனித உரிமைகளையும் ஐக்கிய நாட்டின் சாசனத்தையும் நடை முறைப்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கின்றோம். 

IMG_8194.JPG

இது இந்த நல்லாட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருத முடியும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுகின்ற பொழுது எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்திருக்கின்றார்.

எங்களுடைய உள்நாட்டு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எங்களுக்கு சந்தர்ப்பத்தை தாருங்கள் என்பதை உறுதியாக தெரிவித்திருக்கின்றார்.

அதே நேரத்தில் எங்களுடைய நாட்டில் தற்பொழுது நடை முறைபடுத்தப்படுகின்ற அனைத்து விடயங்களிலும் சர்வதேசம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாக இருந்தால் நிச்சயமாக நாங்கள் எங்களுடைய இலக்கை விரைவாக அடைய முடியும்.

IMG_8174.JPG

நாங்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சர்வதிகார போக்குடன் நடந்து கொள்வதற்க தயாராக இல்லை. சர்வதேசத்தின் ஆதரவு இன்றி இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது. நாங்கள் அவர்களுடன் இணைந்து பயனித்தால் மாத்திரமே இந்த நாட்டை வளமான ஒரு நாடாக மாற்ற முடியும்.

இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி எங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்வதற்கும் இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

அதற்காக தமிழ் கட்சிகளும் முஸ்லிம் பிரதிநிதிகளும் இணைந்து செயற்படுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் எங்களுடைய நாட்டை சர்வதேச ரீதியாக முன்கொண்டு செல்வதில் எங்களுடைய ஜனாதிபதியும் பிரதமரும் முன் நின்று செயற்படுகின்றமையானது மிகவும் வரவேற்க கூடிய ஒரு விடயமாகும். அதற்கு நாம் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/41228

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் முட்டாள்த்தனமான கருத்து,

தமது சுயலாபத்துக்காக மலையக மக்களின் வியர்வையை உறிஞ்சி வாழும் இவர் போன்ற அரசியல் தலைவர்களிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்கமுடியவில்லை என்றாலும்கூட, தான் சொல்வது என்னவென்று புரிந்துகொண்டுதான் பேசுகிறாரா என்கிற நியாயமான கவலை இருக்கிறது எனக்கு.

இவ்வளவு காலமும் ஐ. நா வில் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளால் பயத்துடந்தான் பேச முடிந்ததென்றால் அதன் அர்த்தம் என்ன்? நீங்கள் செய்த கொலைகளையும், மனிதவுரிமை மீறல்களையும்பற்றி அங்கே கேள்வியெழுப்பினார்கள், விசாரிக்கவேண்டும் என்றார்கள், காலக்கெடு விதித்தார்கள். 

ஆனால், இப்போது அவ்விதமான எந்த நெருக்குதல்களும் இல்லை. ஏன், அவர்கள் கேட்டபடி எல்லவற்றையும் நீங்கள் செய்துவிட்டீர்களா? கொலைகளை ஏற்றுக்கொண்டீர்களா? விசாரணை செய்தீர்களா? கொலைக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கினீர்களா? எதுவுமேயில்லை. இன்னும் இன்னும் தமிழர்கள் உங்களது ஆக்கிரமிப்பிலும், அதிகாரத்திலும் துன்பப்பட்டுக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

அப்படியாயின், இப்போது மட்டும் எப்படி உங்களால் பயமின்றி ஐ.நா வில் சுற்ற முடிகிறது ? 

காரணம் உங்களது செயற்பாடுகள் அல்ல. மாறாக, சீனாவை நோக்கி ஒட்டிக்கொண்டிருந்த மகிந்தவுக்கு எச்சரிக்கை செய்யவே ஐ. நா வும் மேற்குலகமும் உங்கள் மேல் விசாரணை, காலக்கெடு, அது, இது என்று புலுடா விட்டார்கள். இப்போதோ மகிந்த இல்லை, இருப்பதோ மேற்குலகிற்கு ஆதரவான அரசு, ஆகவே தமிழர் நலனாவது மண்ணாவது.

இப்படியான அரசியல்;வாதிகளைப் பாராளுமன்றம் அனுப்பியதற்கு மலையகச் சகோதரர்கள் வெட்கப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.