Jump to content

தமிழர்கள் ஒன்றுபடாத வரை -விமோசனம் கிடைக்காது!!


Recommended Posts

தமிழர்கள் ஒன்றுபடாத வரை -விமோசனம் கிடைக்காது!!

 

 

 

தமி­ழர்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­டா­தி­ருந்­தால் தனி ஈழம் என்ற சிந்­தனை அவர்­கள் மத்­தி­யில் எழுந்­தி­ருக்­க­மாட்­டா­தென நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிறீ­த­ரன் கூறி­யுள்­ளமை ஆட்­சி­யா­ளர்­க­ளின் கவ­னத்­துக்­கு­ரி­யது.
தற்­போ­தும் தமி­ழர்­க­ளுக்­குப் பல வகை­யி­லும் அர­சி­யல் நகர்­வு­க­ளால் அநீ­தி­கள் இழைக்­கப்­பட்ட வண்­ணம்­தான் இருக்­கின்­றன.

தமி­ழர்­கள் எதி­லும் முன்­னிலை வகிக்­கக்­கூ­டாது என்­பதை வேத­வாக்­கா­கக் கொண்டு பெரும்­பான்மை இன­வா­தி­கள் செயற்­பட்டு வரு­கின்­ற­னர். அரச நிர்­வாக சேவை­யில் ஆட்­களை இணைப்­ப­தற்­கான போட்­டிப் பரீட்­சை­யில் தமி­ழர்­கள் அதி­கம் சித்­தி­ய­டைந்­ததால் அந்­தப் பரீட்­சையை நீக்­கம் செய்­வ­தற்­கான முயற்­சி­கள் இடம்­பெ­று­வ­தாக ஜே.வி.பி. நாடா­மன்­றத்­தில் தெரி­வித்­த­தாக ஒரு தக­வல் வெளி­வந்­துள்­ளது.

தமி­ழர்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­டு­வது இது­தான் முதற் தட­வை­யல்ல. தரப்­ப­டுத்­தல் என்ற போர்­வை­யின்­கீழ் தமிழ் மாண­வர்­க­ளின் கல்­வி­சார் முன்­னேற்­றங்­களை மந்­தப்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தும் இந்த நாட்­டில்­ நிகழ்ந்­துள்­ளது. பாதிக்­கப்­பட்ட தமிழ் மாண­வர்­க­ளில் பலர் ஆயு­தப் போராட்­டத்­தில் இணைந்து கொள்­வ­தற்­கும் இதுவே கார­ண­மாக அமைந்­தி­ருந்­தது.

மக்­க­ளி­டையே பாகு­பாடு, முரண்­பாட்­டைத்­தோற்­று­வித்­தல்
மக்­க­ளி­டையே இன ரீதி­யான பாகு­பா­டு­க­ளைக் காட்­டு­வ­தும், அநீ­தி­களை இழைப்­ப­தும் பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரைச் சீற்­ற­மு­றச் செய்­து­வி­டும். இத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய எதிர்­வி­ளை­வு­கள் மோச­மா­ன­வை­க­ளாக அமைந்­து­வி­டும். நீண்ட கொடிய போர் இடம்­பெ­று­வ­தற்­கும் இதுவே கார­ண­மாக அமைந்­தி­ருந்­தது. இத­னால் ஏற்­பட்ட அழி­வு­க­ளில் இருந்து ஆட்­சி­யா­ளர்­கள் பாடங்­க­ளைக் கற்­றி­ருக்க வேண்­டும். ஆனால், அதி­லி­ருந்து அவர்­கள் தவ­றி­விட்­டார்­கள். இனப் பிரச்­சினை நீண்­ட­கா­ல­ மா­கவே இந்த நாட்­டி­ல் காணப்­ப­டு­கின்­றது.

நாட்­டின் சகல பிரச்­சி­னைக­ளுக்­கும் இதுவே அடிப்­ப­டைக் கார­ண­மாக அமைந்­துள்­ளது. இத­னைப் போக்­கு­வ­தற்­கான சிந்­தனை ஆட்­சி­யா­ளர்­க­ளி­டம் எழா­மல் இருக்­கும் வரை­யில் இனப்­பி­ரச்­சினை நீடிக்­கத்­தான் செய்­யும்.

நேர் எதி­ரா­கச்
செயற்­ப­டும் தலை­வர்­கள்
சிங்­கள மக்­கள் போன்­று­தான் ஏனைய சிறு­பான்­மை­யி­ன­ரும் இந்த நாட்­டின் மீது சம உரிமை கொண்­ட­வர்­கள். தமிழர்கள் இந்த நாட்­டின் பூர்­வீ­கக் குடி­கள். இந்­தச் சிந்­த­னை­யைப் பெரும்­பான்­மை­யின மக்­க­ளி­டம் கொண்­டு­செல்ல வேண்­டும். இதில் அர­சி­யல்­வா­தி­கள், மதத் தலை­வர்­கள் ஆகி­யோ­ரின் பங்கு அளப் பெரி­ய­தாக இருத்­தல் வேண்­டும்.

ஆனால் இதற்கு எதிர்­மா­றான சிந்­த­னை­யையே அவர்­கள் கொண்­டி­ருக்­கின்­ற­னர். இந்த நிலை­யில் இனப்­பி­ரச்­சி­னைக்கு எவ்­வாறு தீர்வு கிடைக்­கும்? பெரும்­பா­லான சிங்­கள மக்­கள் சிறு­பான்மை இனத்­த­வ­ரு­டன் நல்­லு­ற­வு­டன் பழ­க­வும், வாழ­வும் விரும்­பு­கின்­ற­னர். ஆனால் இன­வா­தச் சிந்­தனை கொண்­ட­வர்­க­ளால் இவர்­கள் திசை திருப்­பப் படு­கின்­ற­னர். இதுவே இன மோதல்­க­ளுக்­கும் கார­ண­மாகி விடு­கின்­றது.

வடக்­கி­லி­ருக்­கின்ற பௌத்த சின்­னங்­கள் அழிக்­கப்­ப­டு­வ­தா­கத் தெற்­கில் தீவி­ர­மான பரப்­பு­ரை­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. இது­வு­மொரு இன­வா­தம் கலந்த செயல் என்­ப­தைச் சொல்­லத் தேவை­யில்லை. தமிழ்­மக்­க­ளுக்கு எதி­ரா­கச் சிங்­கள, பௌத்த மக்­க­ளைத் தூண்டி விடு­வதே இதன் வஞ்­சக நோக்­க­மா­கும். இது தொடர்­பாகத் தினேஸ் குண­வர்த்­தன போன்ற இன­வா­தி­கள் நடந்­ததை அறி­யா­மல் கொக்­க­ரிக்க ஆரம்­பித்து விட்­ட­னர். மக்­க­ளைத் தூண்­டி­யும் வரு­கின்­ற­னர். இத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய விளை­வு­கள் தொடர்­பாக இவர்­கள் சிறி­தும் சிந்­தித்­துப் பார்ப்­ப­தில்லை.

அர­சி­யல் கைதி­க­ளா­கத்
தமி­ழர்­கள் சிறை­யில்
அர­சி­யல் கைதி­கள் என்ற பெய­ரில் தமி­ழர்­கள் பலர் நீண்ட கால­மா­கச் சிறை­க­ளில் அடைத்­து­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்ற கொடுமை இந்த நாட்­டில் தொடர்­கி­றது. அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­ லை­யில் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கும் தமிழ் அர­சி­யல் கைதி­கள் உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். இவர்­க­ளில் சில­ரின் உடல்­நிலை மோச­மான கட்­டத்தை எட்­டி­யுள்­ளது. தமி­ழர் பகு­தி­க­ளில் இவர்­க­ளுக்கு ஆத­ர­வா­கப் போராட்­டங்­க­ளும் இடம்­பெற்று வரு­கின்­றன.

ஆனால் இவர்­களை விடு­தலை செய்­வ­தற்­கான திட்­ட­மெ­து­வும் அர­சி­டம் இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. விசா­ர­ணை­கள் எது­வு­மின்றி நீண்­ட­கா­ல­மா­கச் சிறை­க­ளில் அடைத்து வைப்­ப­தென்­பது அநீ­தி­யா­ன­தொரு செய­லா­கும். அர­சி­யல் கைதி­களை நீதி­மன்­றத்­தில் விசா­ரித்து தண்­டனை வழங்­கப்­ப­டு­தல் வேண்­டும். அல்­லது விடு­தலை செய்­தல்­வேண்­டும். இவை எது­வுமே இல்­லா­மல் சிறை­க­ளில் அடைத்து வைத்­தி­ருப்­பதை எந்த வகை­யி­லும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

தமிழ்த் தலை­வர்­க­ளுக்­குள்
புடுங்­குப்­பாடு
இதே­வேளை தமி­ழர்­கள் பிள­வு­பட்டு நிற்­ப­தால் பேரி­ன­வா­தி­கள் தாம் நினைத்­த­வாறு நடந்­து­கொள்­வ­தற்கு வச­தி­யா­கப் போய்­விட்­டது. தமிழ் மக்­க­ளுக்­குத் தீர்­வைப் பெற்­றுத்­தர வேண்­டிய தமிழ்த் தலை­வர்­கள் தமக்­குள் சண்டை பிடிப்­ப­ தில் காலத்­தைக் கடத்­திக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். உணர்வு பூர்­வ­மா­கக் கடைப்­பி­டிக்­க­வேண்­டிய தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வேந்­தல் நிகழ்­வின்­போ­தும் அர­சி­யல் கட்­சி­கள் முரண்­பட்டு நின்­ற­தைக் காண முடிந்­தது. இதை எவ­ரா­லும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. தமது சுய இலா­பத்­துக்­கா­கத் தம்மை நம்பி நிற்­கின்ற மக்­களை ஏமாற்­று­கின்ற தலை­வர்­களை மக்­கள் முற்­றா­கவே புறக்­க­ணித்­து­விட வேண்­டும். தமி­ழர்­கள் ஒரே குர­லில் தமது பிரச்­சி­னை­கள் தொடர்­பாக ஓங்கி ஒலிக்­கும்­போது பலன் கிடைக்­கத்­தான் செய்­யும்.

https://newuthayan.com/story/09/தமிழர்கள்-ஒன்றுபடாத-வரை-விமோசனம்-கிடைக்காது.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.