Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இரான் அணு குண்டு தயாரிப்பதை தடுக்க ஒத்துழையுங்கள்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் டிரம்ப் பேச்சு


Recommended Posts

இரான் அணு குண்டு தயாரிப்பதை தடுக்க ஒத்துழையுங்கள்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் டிரம்ப் பேச்சு

 
ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் உரையாற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.படத்தின் காப்புரிமைSPENCER PLATT/GETTY IMAGES Image captionஐ.நா. பாதுகாப்புக் குழுவில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

இரான் அணு குண்டு தயாரிப்பதை தடுப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள பிற நாடுகள் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பாதுகாப்புக் குழு கூட்டத்தில் தலைமை வகித்துப் பேசிய டிரம்ப், இரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளுடன் ஒத்துப்போக மறுப்பவர்கள் கடும் பின்விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.

2015 இரான் அணு ஆயுத உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு இரான் மீது முன்பு அமெரிக்கா விதித்திருந்த தடைகளை மறுபடியும் விதித்தது அமெரிக்கா.

ஆனால், இரான் உடன்படிக்கையை தொடர்ந்து ஆதரிக்கும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங் இரான் அணு ஆயுத விவகாரத்தை சமாளிக்க நீண்டகால உபாயம் தேவை என்று தெரிவித்தார்.

பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய மக்ரோங், அணு உடன்படிக்கை விவகாரத்தில் அமெரிக்காவுடன் மாறுபாடு இருந்தாலும் அமெரிக்க அதிபரின் நோக்கங்களுடன் உடன்படுவதாக குறிப்பிட்டார். "நாம் ஒன்றாக சேர்ந்து நீண்டகால உபாயத்தை வகுக்கவேண்டும். தடைகளிலும், தடுப்பு நடவடிக்கைகளிலும் இறங்குவதாக அது இருக்கக்கூடாது" என்றார் அவர்.

 

 

2015ம் ஆண்டு உலக வல்லரசுகள் சேர்ந்து இரானுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, இரான் அணு ஆயுதங்களை தயாரிக்க முயலக்கூடாது. அதற்குப் பதிலாக வல்லரசுகள் விதித்திருந்த தடைகளை அவை விலக்கிக் கொள்ளும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களுக்கு சுழற்சி முறையில் நாடுகள் தலைமை வகிக்கும். அதன் அடிப்படையில் தற்போதைய கூட்டத்துக்கு தலைமை வகிப்பது அமெரிக்காவின் முறை என்பதால் அமெரிக்க அதிபர் இந்த பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்துக்குத் தலைமை வகிக்கிறார்.

"இரான் அரசு தமது போக்கை மாற்றிக்கொள்வதை உறுதி செய்யும் வகையிலும், அது அணு ஆயுதம் தயாரிக்காமல் இருப்பதற்காகவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் அமெரிக்காவுடன் சேர்ந்து வேலை செய்யவேண்டும்" என்று பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், சிரியா நாட்டு அரசு படுகொலைகளில் ஈடுபடுவதற்கு இரானும், ரஷ்யாவும் உதவி செய்வதாக குற்றம் சாட்டினார். அதேநேரம், சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் மீதான ஒரு தாக்குதலில் இருந்து விலகியதற்காக அந்த மூன்று நாடுகளுக்கும் டிரம்ப் நன்றி சொன்னார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இரான் உறுப்பு நாடாக இல்லை. அதே நேரம், செவ்வாய்க்கிழமை நடந்த ஐ.நா. பொதுக் குழுக்கூட்டத்தில் பேசிய இரான் அதிபர் ஹசன் ரூஹானி அமெரிக்காவை அடாவடி நாடு என வருணித்தார். அச்சுறுத்தல்களை, நியாயமற்ற தடைகளை நிறுத்துவதன் மூலமே பேச்சுவார்த்தை தொடங்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/global-45658143

Link to comment
Share on other sites

"அமெரிக்காவின் இடைக்கால தேர்தலில் தலையிட சீனா முயற்சி" - டிரம்ப் குற்றச்சாட்டு

டொனால்டு டிரம்ப்படத்தின் காப்புரிமைJOHN MOORE Image captionடொனால்டு டிரம்ப்

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்கால தேர்தலில் 'தலையிடுவதற்கு' சீனா முயற்சித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டியுள்ளார்.

"அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகத்தில் சீனாவை எதிர்க்கும் முதல் அதிபர் நான் என்பதால் என்னையோ அல்லது எங்களையோ தேர்தலில் தோல்வியடைய செய்ய அவர்கள் விரும்புகிறார்கள்" என்று புதன்கிழமையன்று நடந்த ஐநா கூட்டத்தில் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

அமெரிக்க அதிபருக்கான போட்டியில் இறங்கிய நாளிலிருந்து இதுவரை டொனால்டு டிரம்ப் சீனாவை கடுமையாக எதிர்த்து வருகிறார். ஆனால், இந்த சமீபத்திய குற்றச்சாட்டுக்கு அவர் எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை.

சீனாவின் மீதான டிரம்பின் குற்றச்சாட்டு குறித்து கருத்துத் தெரிவித்த அந்நாட்டின் வெளியுறத்துறை அமைச்சர், இது "தேவையற்ற குற்றச்சாட்டு" என்று கூறியதுடன் கண்டமும் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபரின் நான்காண்டுகால பதவியில் பாதிக்காலத்தை அதாவது இரண்டாண்டுகாலத்தை கடக்கும்போது அங்குள்ள பெரும்பாலான மாகாணங்களின் புதிய ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அமெரிக்காவின் இடைக்கால தேர்தல்கள் வரும் நவம்பர் மாதம் 6ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது.

டிரம்ப் என்ன சொன்னார்?

உலகத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கி யாரும் அணுசக்தி, இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் போன்றவற்றை எதிர்கொள்வது குறித்து விவாதிப்பதற்காக நேற்று (புதன்கிழமை) நியூயார்க்கில் தொடங்கிய ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்ற கூட்டத்தில் பேசியபோது, அமெரிக்காவில் விரைவில் நடைபெறவுள்ள இடைக்கால தேர்தல்களில் சீனா தலையிட முயற்சித்து வருவதாக எவ்வித ஆதாரமுமின்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

வாங் யிபடத்தின் காப்புரிமைCHINA NEWS SERVICE Image captionவாங் யி

"துரதிருஷ்டவசமாக, அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்கால தேர்தல்களில் எனது தலைமையிலான நிர்வாகத்திற்கெதிராக செயல்படுவதற்கு சீனா முயற்சித்து வருவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்" என்று அவர் கூறினார்.

"அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகத்தில் சீனாவை எதிர்க்கும் முதல் அதிபர் நான் என்பதால் என்னையோ அல்லது எங்களையோ தேர்தலில் தோல்வியடைய செய்ய அவர்கள் விரும்புகிறார்கள். இருப்பினும் நாங்கள் வர்த்தகம் உள்பட அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.

"எதிர்வரும் இடைக்கால தேர்தலில் சீனா எந்த விதத்திலும் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை."

அதே கூட்டத்தில் பேசிய சீனாவின் வெளியுறத்துறை அமைச்சர் வாங் யி, "மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற கொள்கையை சீனா தொடர்ந்து கடைபிடித்துள்ளது" என்று கூறினார்.

"இதுதான் சீனாவின் வெளிநாட்டு கொள்கையின் பாரம்பரியம்" என்றும் அவர் அப்போது கூறினார்.

"எந்த நாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை. அதுமட்டுமில்லாமல், சீனா மீதான இதுபோன்ற தேவையற்ற குற்றச்சாட்டுகளை கண்டிக்கிறோம்" என்று அவர் மேலும் கூறினார்

 

 

இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தான் சீனாவின் "திட்டம்" என்று கூறும் குற்றச்சாட்டுகள் சார்ந்த பத்திரிகைகளின் செய்தி துண்டுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

ஐநா கூட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், சீனாவுக்கெதிரான குற்றச்சாட்டுகளுக்கு உங்களிடம் சான்றுகள் ஏதாவது உள்ளதா என்று டிரம்பிடம் கேட்டபோது, தான் அதை பகிரங்கமாக வெளியிட முடியாது என்றும், ஆனால் அது கண்டிப்பாக வெளிவரும் என்றும் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/global-45661945

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அமேரிக்கா அணுக்குண்டு தயாரிக்க முடியுமெனின்....ஏன் ஈரான் அணுக்குண்டு தயாரிக்க முடியாது?

தொழில் நுட்ப வளர்ச்சியென்பது....எல்லா நாடுகளுக்கும் பொதுவாக இருக்க வேண்டும்! சிலரது...தனியுரிமையாக அது இருக்கக் கூடாது!

இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான்  போன்ற நாடுகள் தயாரிக்கின்றன!

அதைக் கண்டும் காணாமல் இருக்கும் உங்களால்.....நோர்த் கொரியாவும்....ஈரானும் தயாரிக்கும் போது மட்டும்....உறுத்துகிறது போலும்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

அமேரிக்கா அணுக்குண்டு தயாரிக்க முடியுமெனின்....ஏன் ஈரான் அணுக்குண்டு தயாரிக்க முடியாது?

தொழில் நுட்ப வளர்ச்சியென்பது....எல்லா நாடுகளுக்கும் பொதுவாக இருக்க வேண்டும்! சிலரது...தனியுரிமையாக அது இருக்கக் கூடாது!

இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான்  போன்ற நாடுகள் தயாரிக்கின்றன!

அதைக் கண்டும் காணாமல் இருக்கும் உங்களால்.....நோர்த் கொரியாவும்....ஈரானும் தயாரிக்கும் போது மட்டும்....உறுத்துகிறது போலும்!

தோழர் ,

யுகம் தோறும் பிறந்து பூமியின் பாரத்தை குறைப்பது கடவுளின் செய்கை என்கிறார்கள். சிலர் கல்கி அவதாரம் பூமியில் பிறந்து விட்டதாகவும் ஆனால் இன்னும்

அது மனித தன்மையோடு இருப்பதாகவும் தான் அவதரித்த நோக்கத்தை இன்னும் அடையவில்லை என்றும் சில கற்றறிந்த சான்றோர் கூறுகிறார்கள் .  கல்கியோ (அ) டிரம்ப் எதுவாக இருந்தாலும் பூமி பாரம் குறைந்தால் மகிழ்ச்சிதானே!!  ஒரே க்ரவுடு ..?

Kovil-Meme-Movie-Templates-MemeKadai-02.

யாராக இருந்தாலும் சட்டு புட்டுன்னு அடிச்சு காட்டுங்க..?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • "தமிழீழ மண்ணை மீட்பதற்குப் போராட புறப்பட்டவர்களில் ஒருவரான டக்ளசு தேவானந்தா என்பவரால், கௌதாரிமுனை மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியது".  இப்படித் தலையங்கம் இட்டு அவரைக் கெளரவித்திருக்கலாமே.!!👆🤔
  • 44 ஞான மாணிக்கவாசகர் சிவாச்சாரியார் சித்தர்  சமாதி இருக்குமிடம்:  பழைய எண். 60, புதிய எண் 87 , மன்னார்சாமி கோயில் தெரு,  சென்னை 13 ராயபுரம் பழைய பாலத்தின் இறக்கத்தில் உள்ள ருத்ர சோமநாதர் கோயில் இவரது சமாதி இருக்கிறது.
  • நயினாதீவுச் சுவாமிகள்   சிறுகுறிப்பு உசாத்துணை: ஈழத்துச் சித்தர்கள் - ஆத்மஜோதி நா. முத்தையா - 1980   உலகெங்களும் உள்ள சக்திபீடங்கள் அறுபத்துநான்கில் நயினாதீவு நாகபூஷணி ஆலயமும் ஒன்றாகும். இலக்கியங்களில் வரும் மணிபல்லவம் எனபதுவும் இதுவே. மணிமேகலையும் மணிமேகலா தெய்வமும் வரப்பெற்ற இடமாகும். நயினாதீவு முற்காலத்தில் சிறந்ததொரு துறைமுகமாகவும் விளங்கியது. மணித்தீவு, மணிநாகதீவு, நாகதீபம் என்ற பெயர்களும் இத்தீவிற்கு உண்டு. பாரத நாட்டிலிருந்து வருவோர் அம்பிகையை தரிசிக்க தவறுவதில்லை. நான்கே நான்கு மைல் சுற்றளவுள்ள இத்தீவில் பெரும்பகுதியோர் சைவவேளான் மரபைச்சார்ந்தவர்களாகும். இம்மரபிலே ஆறுமுகம் எனும்பெரியார் ஒருவர் வாழ்நதார். அவருக்கு ஒரு மகன். அம்மகனுக்கு முத்துக்குமாரசாமி என்று நாமகரணம் சூட்டினர். இந்த முத்துக்குமாரசாமியே பிற்காலத்தில் நயினாதீவுச் சாமியார் என்று அழைக்கப்பட்டார். உரிய காலத்தில் ஆரம்பக்கல்வி பெற்றார். அக்கால இளைஞர்களில் பெரும்பாலானோர் ஆரம்பக்கல்வி முடிந்ததும் முடியாததுமாக யாழ்ப்பாண நகருக்கோ, கொழும்புக்கோ அன்றி கண்டி போன்ற பட்டினங்களுக்கோ சென்றுவிடுதல் வழக்கமாக இருந்தது. முத்துக்குமாரசாமி ஆரம்பக்கல்வி முடிந்ததும் கொழும்புக்குச் சென்று ஒரு வர்த்தக நிலையத்தில் வேலைக்கு அமர்ந்தார். முத்துக்குமாரசாமி வர்த்தக நிலையத்தில் சிப்பந்தியாக வேலை பார்த்தாலும் மனம் இறைபணியையே நாடி நின்றது. ஒருநாள் வர்த்தக நிலைய அதிபர் இவரை ஏசிவிட்டார். அந்த வன்சொல்லை அவரால் பொறுக்க முடியவில்லை. ரமண பகவானுக்கு பதினாறு வயதாயிருக்கும்போது இவரது தமையனார் இவர் ஒழுங்காக படிப்பதில்லை என்பதை மனதிற்கொண்டு இப்படிப்பட்டவனுக்கு இங்கு என்ன வேலை என்று ஏசினார். இந்த ஏச்சு மனதில் தைக்க, ‘இது நல்ல விடயத்தை நாடிச்செல்லுகின்றது, இதையாரும் தேடவேண்டாம்” என்று ஒரு கடிதத்திலே எழுதிவைத்துவிட்டு திருவண்ணாமலைக்குச் சென்றுவிட்டார். இவருடைய துறவுக்கு இவரது தமையனாரே காரணம் ஆனார். இச்செய்தி போன்றுதான் முத்துக்குமாரசாமியும் ஒரு சீட்டுக்கவி மாத்திரம் எழுதிவைத்துவிட்டு யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் கடையைவிட்டு சென்றுவிட்டார். கவி ஒரு விரசமான கவிதான். ஆனால் அந்த நேரத்து மனஉணர்வை அக்கவி படம்பிடித்து காட்டுகின்றது. பல இடங்களிலும் தேடினார்கள். ஊரிலும் தேடினார்கள். முத்துக்குமாரசாமி சென்ற இடத்தை யாரும் அறியார். துறவுக்கேற்ற பக்குவநிலை ஏற்படும்போது சிறு சம்பவங்கள் கூட துறவுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. அக்காலத்திலே இந்தியாவுக்கு சென்று வருவதில் எந்தவித கஷ்டமும் இருக்கவில்லை. முத்துக்குமாரசுவாமியாருடைய உள்ளம் இறைவனை நாடி இருந்தமையால் தலயாத்திரை மேற்கொண்டார். என்ற தாயுமானவரின் வாக்குப்படி இவரது யாத்திரை வீண்போகவில்லை. இவரிடத்து விளங்கிய தெய்வபக்தி, ஞானம், தூய்மை, மனஅடக்கம், இன்சொல், அருளோடு கூடிய நோக்கு, எந்த நேரமுஞ் சிவசிந்தனை ஆகிய குணங்கள் இவரைத் தகுந்த ஒரு குருவிடம் கொண்டு சென்று சேர்த்தன. அவரோடு பல ஆண்டுகள் தங்கிக் குரு உபதேசமும், சந்நியாசமும் பெற்றுக்கொண்டார். இவரது பக்குவநிலை அறிந்த குருநாதர் நீ உனது ஊருக்கு செல்லலாம் என்று உத்தரவு கொடுத்தார். குருநாதரை பிரிய மனமின்றி பிரிந்து ஊர்நோக்கி வந்தார். பல ஆண்டுகளுக்கு பின் நீண்ட சடா முடியும், காவிஉடையும் தரித்த சுவாமியார் ஒருவர் நயினாதீவில் உலாவுவதை நயினாதீவு மக்கள் பார்தனர். எங்களுடைய ஆறுமுகத்தாரின் மகன் முத்துக்குமாரசாமியைப்போலல்லவா தோற்றம் இருக்கின்றது என்று சிலர் பேசிக்கொண்டனர். வேறுசிலர் அதற்கு மறுப்புத்தெரிவித்தனர். முத்துக்குமாரசுவாமி இருக்கும் இடமோ போன இடமோ யாருக்கும் தெரியாது. அவர் உயிரோடு இருக்கிறார் என்பதே சந்தேகம் என்றனர். மிக நெருங்கிய உறவினர் முத்துக்குமாரசாமியுடன் நெருங்கிப்பழகி அவர் முத்துக்குமாரசாமிதான் என்று தெளிந்து கொண்டனர். உற்றார் உறவினர் அவரை அணுகி தமது இல்லத்துக்கு வருமாறு அழைத்தனர். அவர் யாருடைய இல்லத்திற்கும் செல்லுவதற்கு மறுத்துவிட்டார். நாளொரு கோயிலில் சென்று தங்கி வந்தார். கோயில் மண்டபங்களையே தமது வசிப்பிடமாக்கி கொண்டார். கோயில் மண்டபங்களிலேயே படுத்துறங்கி தானும் தன்பாடுமாய் திரிந்த சுவாமியார் என்ன சாப்பிடுகிறார்? எங்கே சாப்பிடுகின்றார் என்பதை யாரும் அறியார். நயினாதீவிலே உள்ள மக்கள் சுவாமிகளை முத்துக்குமார சாமியார் என்றே அழைத்தனர். அனால் அயலூரவர்கள் சுவாமியாரை பெயர் சொல்லி அழைக்க அஞ்சிப்போலும் நயினாதீவுச் சுவாமியார் என்றே அழைத்தனர். சுவாமிகளுடைய குருநாதன் பெரியானைக்குட்டி சுவாமிகளேதான். குருநாதன் அவருக்கு என்ன பெயர் வைத்தாரோ யாரறிவார்? இப்படி ஊர்பேர் தெரியாது, உலகுக்குத்த தம்மைக் காட்டி கொள்ளாது மறைந்த மகான்கள் எத்தனைபேரோ யாரறிவார்? சுவாமியார் என்று பெயர் எடுத்துவிட்டால் அவர்களை சுற்றி ஒரு கூட்டம் எப்பொழுதும் இருந்துகொண்டேதான் இருக்கும். நயினாதீவுச்சுவாமிகள் அதற்கு விலக்கானவர் அல்ல. சுவாமிகள் தமது அடியார் கூட்டத்தோடு வடபகுதியில் உள்ள எல்லா ஆலயங்களுக்கும் யாத்திரை செய்தருளினார்கள். சுவாமியை நாடி வந்தவர்கள் யாவரும் ஏதோ ஒரு வகையில் பயன்பெற்றே சென்றனர். சுவாமி கொடுத்த விபூதியை பெற்று உடல்நோய், உள்ளநோய் தீரந்தவர் ஆயிரத்திற்கதிகமானவர்கள். ஆத்மஞானம் நாடிவந்தவர்கள், ஆத்மஞானம் பெற்றனர். சுவாமிகளின் சீடர் கூட்டம் இன்று எல்லா ஊர்களிலும் இருக்கின்றது. தமது சீடர்களின் முதல்வரான சண்முகரத்தினம் அவர்களை கொண்டு நயினாதீவு தென்மேற்கு பகுதி கடற்கரையில், ஒரு தீர்த்தக்கேணி அமைப்பித்தார். இன்றும் நயினாதீவு நாகம்மாள் தீர்த்தம் ஆடிவருவது இத்தீர்த்தக்கேணியில்தான் என்பது குறிப்பிடத்தக்க தொன்றாகும். சுவாமிகள் இயல்பாகவே கவிபாடும் திறமை வாய்ந்தவர். இவரியற்றிய தனிப்பாடல்கள் பல உள்ளன. நாகேஸ்வரி தோத்திரமாலை, நாகேஸ்வரி அந்தாதி போன்ற நூல்கள் அன்னாரின் சமாதி நிலையத்தொண்டர் சபையினரால் வெளியிடப்பட்டுள்ளன. அடியவர்களுடைய இன்னல்களை வாக்கினாலும் நோக்கினாலும் தீர்த்தருளிய சுவாமியவர்கள் 1949ம் ஆண்டு தை மாதம் 26ம் திகதி தமது அன்பரின் இல்லத்தில் யாழப்பாணம் சிவலிங்கப்புளியடியில் சமாதிநிலை எய்தினார். சுவாமிகளின் திருவுளப்படி அவரின் பூதவுடல் நயினாதீவு காட்டுக்கந்தசுவாமி கோவிலின் மேற்குப்புறத்தில் அடியார்களால் சமாதி வைக்கப்பட்டது. இன்று அதனமேல் ஒரு சோமாஸ்கந்த லிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டு நித்திய பூசை நடைபெற்று வருகின்றது.https://www.thejaffna.com/eminence/நயினாதீவுச்-சுவாமிகள்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.