Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இரான் அணு குண்டு தயாரிப்பதை தடுக்க ஒத்துழையுங்கள்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் டிரம்ப் பேச்சு


Recommended Posts

இரான் அணு குண்டு தயாரிப்பதை தடுக்க ஒத்துழையுங்கள்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் டிரம்ப் பேச்சு

 
ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் உரையாற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.படத்தின் காப்புரிமைSPENCER PLATT/GETTY IMAGES Image captionஐ.நா. பாதுகாப்புக் குழுவில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

இரான் அணு குண்டு தயாரிப்பதை தடுப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள பிற நாடுகள் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பாதுகாப்புக் குழு கூட்டத்தில் தலைமை வகித்துப் பேசிய டிரம்ப், இரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளுடன் ஒத்துப்போக மறுப்பவர்கள் கடும் பின்விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.

2015 இரான் அணு ஆயுத உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு இரான் மீது முன்பு அமெரிக்கா விதித்திருந்த தடைகளை மறுபடியும் விதித்தது அமெரிக்கா.

ஆனால், இரான் உடன்படிக்கையை தொடர்ந்து ஆதரிக்கும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங் இரான் அணு ஆயுத விவகாரத்தை சமாளிக்க நீண்டகால உபாயம் தேவை என்று தெரிவித்தார்.

பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய மக்ரோங், அணு உடன்படிக்கை விவகாரத்தில் அமெரிக்காவுடன் மாறுபாடு இருந்தாலும் அமெரிக்க அதிபரின் நோக்கங்களுடன் உடன்படுவதாக குறிப்பிட்டார். "நாம் ஒன்றாக சேர்ந்து நீண்டகால உபாயத்தை வகுக்கவேண்டும். தடைகளிலும், தடுப்பு நடவடிக்கைகளிலும் இறங்குவதாக அது இருக்கக்கூடாது" என்றார் அவர்.

 

 

2015ம் ஆண்டு உலக வல்லரசுகள் சேர்ந்து இரானுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, இரான் அணு ஆயுதங்களை தயாரிக்க முயலக்கூடாது. அதற்குப் பதிலாக வல்லரசுகள் விதித்திருந்த தடைகளை அவை விலக்கிக் கொள்ளும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களுக்கு சுழற்சி முறையில் நாடுகள் தலைமை வகிக்கும். அதன் அடிப்படையில் தற்போதைய கூட்டத்துக்கு தலைமை வகிப்பது அமெரிக்காவின் முறை என்பதால் அமெரிக்க அதிபர் இந்த பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்துக்குத் தலைமை வகிக்கிறார்.

"இரான் அரசு தமது போக்கை மாற்றிக்கொள்வதை உறுதி செய்யும் வகையிலும், அது அணு ஆயுதம் தயாரிக்காமல் இருப்பதற்காகவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் அமெரிக்காவுடன் சேர்ந்து வேலை செய்யவேண்டும்" என்று பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், சிரியா நாட்டு அரசு படுகொலைகளில் ஈடுபடுவதற்கு இரானும், ரஷ்யாவும் உதவி செய்வதாக குற்றம் சாட்டினார். அதேநேரம், சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் மீதான ஒரு தாக்குதலில் இருந்து விலகியதற்காக அந்த மூன்று நாடுகளுக்கும் டிரம்ப் நன்றி சொன்னார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இரான் உறுப்பு நாடாக இல்லை. அதே நேரம், செவ்வாய்க்கிழமை நடந்த ஐ.நா. பொதுக் குழுக்கூட்டத்தில் பேசிய இரான் அதிபர் ஹசன் ரூஹானி அமெரிக்காவை அடாவடி நாடு என வருணித்தார். அச்சுறுத்தல்களை, நியாயமற்ற தடைகளை நிறுத்துவதன் மூலமே பேச்சுவார்த்தை தொடங்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/global-45658143

Link to comment
Share on other sites

"அமெரிக்காவின் இடைக்கால தேர்தலில் தலையிட சீனா முயற்சி" - டிரம்ப் குற்றச்சாட்டு

டொனால்டு டிரம்ப்படத்தின் காப்புரிமைJOHN MOORE Image captionடொனால்டு டிரம்ப்

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்கால தேர்தலில் 'தலையிடுவதற்கு' சீனா முயற்சித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டியுள்ளார்.

"அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகத்தில் சீனாவை எதிர்க்கும் முதல் அதிபர் நான் என்பதால் என்னையோ அல்லது எங்களையோ தேர்தலில் தோல்வியடைய செய்ய அவர்கள் விரும்புகிறார்கள்" என்று புதன்கிழமையன்று நடந்த ஐநா கூட்டத்தில் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

அமெரிக்க அதிபருக்கான போட்டியில் இறங்கிய நாளிலிருந்து இதுவரை டொனால்டு டிரம்ப் சீனாவை கடுமையாக எதிர்த்து வருகிறார். ஆனால், இந்த சமீபத்திய குற்றச்சாட்டுக்கு அவர் எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை.

சீனாவின் மீதான டிரம்பின் குற்றச்சாட்டு குறித்து கருத்துத் தெரிவித்த அந்நாட்டின் வெளியுறத்துறை அமைச்சர், இது "தேவையற்ற குற்றச்சாட்டு" என்று கூறியதுடன் கண்டமும் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபரின் நான்காண்டுகால பதவியில் பாதிக்காலத்தை அதாவது இரண்டாண்டுகாலத்தை கடக்கும்போது அங்குள்ள பெரும்பாலான மாகாணங்களின் புதிய ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அமெரிக்காவின் இடைக்கால தேர்தல்கள் வரும் நவம்பர் மாதம் 6ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது.

டிரம்ப் என்ன சொன்னார்?

உலகத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கி யாரும் அணுசக்தி, இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் போன்றவற்றை எதிர்கொள்வது குறித்து விவாதிப்பதற்காக நேற்று (புதன்கிழமை) நியூயார்க்கில் தொடங்கிய ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்ற கூட்டத்தில் பேசியபோது, அமெரிக்காவில் விரைவில் நடைபெறவுள்ள இடைக்கால தேர்தல்களில் சீனா தலையிட முயற்சித்து வருவதாக எவ்வித ஆதாரமுமின்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

வாங் யிபடத்தின் காப்புரிமைCHINA NEWS SERVICE Image captionவாங் யி

"துரதிருஷ்டவசமாக, அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்கால தேர்தல்களில் எனது தலைமையிலான நிர்வாகத்திற்கெதிராக செயல்படுவதற்கு சீனா முயற்சித்து வருவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்" என்று அவர் கூறினார்.

"அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகத்தில் சீனாவை எதிர்க்கும் முதல் அதிபர் நான் என்பதால் என்னையோ அல்லது எங்களையோ தேர்தலில் தோல்வியடைய செய்ய அவர்கள் விரும்புகிறார்கள். இருப்பினும் நாங்கள் வர்த்தகம் உள்பட அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.

"எதிர்வரும் இடைக்கால தேர்தலில் சீனா எந்த விதத்திலும் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை."

அதே கூட்டத்தில் பேசிய சீனாவின் வெளியுறத்துறை அமைச்சர் வாங் யி, "மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற கொள்கையை சீனா தொடர்ந்து கடைபிடித்துள்ளது" என்று கூறினார்.

"இதுதான் சீனாவின் வெளிநாட்டு கொள்கையின் பாரம்பரியம்" என்றும் அவர் அப்போது கூறினார்.

"எந்த நாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை. அதுமட்டுமில்லாமல், சீனா மீதான இதுபோன்ற தேவையற்ற குற்றச்சாட்டுகளை கண்டிக்கிறோம்" என்று அவர் மேலும் கூறினார்

 

 

இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தான் சீனாவின் "திட்டம்" என்று கூறும் குற்றச்சாட்டுகள் சார்ந்த பத்திரிகைகளின் செய்தி துண்டுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

ஐநா கூட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், சீனாவுக்கெதிரான குற்றச்சாட்டுகளுக்கு உங்களிடம் சான்றுகள் ஏதாவது உள்ளதா என்று டிரம்பிடம் கேட்டபோது, தான் அதை பகிரங்கமாக வெளியிட முடியாது என்றும், ஆனால் அது கண்டிப்பாக வெளிவரும் என்றும் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/global-45661945

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அமேரிக்கா அணுக்குண்டு தயாரிக்க முடியுமெனின்....ஏன் ஈரான் அணுக்குண்டு தயாரிக்க முடியாது?

தொழில் நுட்ப வளர்ச்சியென்பது....எல்லா நாடுகளுக்கும் பொதுவாக இருக்க வேண்டும்! சிலரது...தனியுரிமையாக அது இருக்கக் கூடாது!

இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான்  போன்ற நாடுகள் தயாரிக்கின்றன!

அதைக் கண்டும் காணாமல் இருக்கும் உங்களால்.....நோர்த் கொரியாவும்....ஈரானும் தயாரிக்கும் போது மட்டும்....உறுத்துகிறது போலும்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

அமேரிக்கா அணுக்குண்டு தயாரிக்க முடியுமெனின்....ஏன் ஈரான் அணுக்குண்டு தயாரிக்க முடியாது?

தொழில் நுட்ப வளர்ச்சியென்பது....எல்லா நாடுகளுக்கும் பொதுவாக இருக்க வேண்டும்! சிலரது...தனியுரிமையாக அது இருக்கக் கூடாது!

இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான்  போன்ற நாடுகள் தயாரிக்கின்றன!

அதைக் கண்டும் காணாமல் இருக்கும் உங்களால்.....நோர்த் கொரியாவும்....ஈரானும் தயாரிக்கும் போது மட்டும்....உறுத்துகிறது போலும்!

தோழர் ,

யுகம் தோறும் பிறந்து பூமியின் பாரத்தை குறைப்பது கடவுளின் செய்கை என்கிறார்கள். சிலர் கல்கி அவதாரம் பூமியில் பிறந்து விட்டதாகவும் ஆனால் இன்னும்

அது மனித தன்மையோடு இருப்பதாகவும் தான் அவதரித்த நோக்கத்தை இன்னும் அடையவில்லை என்றும் சில கற்றறிந்த சான்றோர் கூறுகிறார்கள் .  கல்கியோ (அ) டிரம்ப் எதுவாக இருந்தாலும் பூமி பாரம் குறைந்தால் மகிழ்ச்சிதானே!!  ஒரே க்ரவுடு ..?

Kovil-Meme-Movie-Templates-MemeKadai-02.

யாராக இருந்தாலும் சட்டு புட்டுன்னு அடிச்சு காட்டுங்க..?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இப்பொழுது அப்படி சிந்திக்கமாட்டார்கள் என நம்புவோமாக.. ஆனால் இம்முறையும் ஒலிம்பிக்கில் அல்ஜீரியா(Fethi Nourine ) மற்றும் சூடானை(  Mohamed Abdalrasool ) சேர்ந்த இரு Judo வீரர்கள், இஸ்ரேலிய Judo வீரரை எதிர்த்து போட்டியிட மறுத்து வெளியேறியதாக செய்தி உள்ளது..    https://www.google.com.au/amp/s/amp.theguardian.com/sport/2021/jul/24/algerian-judoka-sent-home-from-olympics-after-refusing-to-compete-against-israeli   https://www.google.com.au/amp/s/amp.theguardian.com/sport/2021/jul/26/judo-athlete-sudan-withdraws-before-israel    
  • நான் சொல்லியதில் "எனது" கோபத்தை யாராவது உணர்கிறீர்களா?   அப்படி இருந்தால், நாதமுனியும் "எனது" கோபம் என்று புரிவதில் நியாயம் இருக்கிறது.  நாதமுனியை தவிர்த்து இன்னொருவர் பதில் அளித்தாலே, இத பற்றி என்னால் தொடர முடியும்.  
  • நாதமுனி, நீங்கள் tony பிளேயர் இன் பின் என்பது  , நான் சொல்லிய உங்கள் மதியில் உருவாகி இருக்கும் "கட்டணம்,  பல்கழலை under graduate  செலவுகள் முழுவதையும் செலுத்தி விடுகிறது"   என்பதற்கு மேலும் வலு சேர்க்கிறது. அதன் ஆதாரம், உங்கள் மதியில்  இருந்தே, ஆரம்பத்தில் (கிருபன், டோனி Blair, 2010 வர முதல்) "எனது காசில் அல்லது கடனை வாங்கி படித்தேன்." "தனி அமைப்பான பல்கலைக்கழகங்களில், (அதாவது அரசுக்கு சொந்தமில்லாத), பயிலும் எனக்கு, பயில்விக்க, எங்கே வரிப்பணம் செலவாகிறது என்று விளக்க முடியுமா?"  அது அரச மானியம் அல்ல. தர்மஸ்தாபன status. இங்குள்ள secondary independant ஸ்கூல் அனைத்துக்கும் இதே ஸ்டேட்டஸ் தான். அதாவது, லாபத்துக்கு வரி இல்லை. ஆனால் லாபம் ஒரு அளவுக்கு மேல் போகாதவாறு, ஸ்காலர்ஷிப், பர்சரி கொடுத்து விட வேண்டும், என்ற நிபந்தனையுடன்"  "கட்டணம்,  பல்கழலை under graduate  செலவுகள் முழுவதையும் செலுத்தி விடுகிறது"  என்பதில் இருந்து உங்களால் விடு பட முடியவில்லை (வேறு புள்ளி விபரங்கள் தரப்பட்டும்,  அதில் எனது நண்பர்களுடன் அடைந்த  தனிப்பட்ட அவதான  குறைபாடுகளை நான் ஏற்றுக் கொண்டும், கோசானும் அந்த புள்ளி விபரத்தின் ball park ஆக சரியாக இருக்கிறது என்று அவரது வட்டத்தின் வழியாக அடைந்த தரவுகளை கொண்டு சொல்லியும்).    அதுவே, மறுபடியும் Tony Blair  ஐ நீங்களாவே கொண்டு வந்த போது, மறு படியும், உங்களை அறியாமலே  "1997ம் ஆண்டு டோனி ப்ளாயர் அரசின் பின்னர் தான், பல்கலைக்கழக இலவசக்கல்வி முறை ஒழிந்து, கட்டணம் செலுத்தும் முறை வந்தது."   குறிப்பாக, Tony Blair ஐ நீங்களாவே கொண்டு வந்ததே,  உங்களின்    "கட்டணம்,  பல்கழலை under graduate  செலவுகள் முழுவதையும் செலுத்தி விடுகிறது" மதி பிம்பத்தை (state of mind) தெளிவாக வெளிக்காட்டியது, நான் சந்தேகித்ததை மீள் உறுதிப்படுத்தியது.    மருவளமாக, Tony Blair ஐ  நீங்கள் கொண்டு வந்து இருக்க விட்டால், நீங்கள் சொல்லும் இப்பொது சொல்லும் விளக்கமும் ஓரளவு பொருந்தி வரும். Tony Blair இதில் முற்றுமுழுதான reference point  என்பதை (இப்போது கூட) நீங்கள் உணரவில்லை. நாதமுனி, மனித discrepancies ஐ திட்டமிட்டாலும் தடுக்க முடியாது.  இதுவே crime scene இல் கூட செய்த நபர்களை  எதோ ஓர் வழியில் தொடர்பு படுத்துவது (implicate). 
  • விசுகு அண்ணா!!! இந்த மாதிரி சிந்திப்பவர்கள் மிகவும் குறைவு.. அதிகமான பெற்றோர் தங்களது பெருமைக்காகவும் safe side lifestyleற்காகவும் தங்களது விருப்பங்களை பிள்ளைகள் மீது திணிப்பவர்களே அதிகம்.. அதனால்தான் பெரும்பாலும் மருத்துவம் ஒரு உன்னதமான சேவை என்ற கரு அவர்களின் மனதில் பதிவதில்லை.. அதற்கு மனதளவில் தயாராகாமல் பெற்றோர் கவலைப்படுவார்கள் என்பதால் படித்து ஒரு வேலை என்ற ரீதியில் போய்வருபவர்கள் அதிகம்.. அவர்களால் முன்னேற முடிவதில்லை.. விதிவிலக்குகளும் இருக்கலாம்..  ஓரளவு வயதிலிருந்தே பிள்ளைகளின் குணாதியங்களை கவனித்து வந்தால் அவர்களை அவர்களால் திறமையாக செயற்படக்கூடிய துறைகளை தெரிவு செய்ய ஆதரவு அளித்தால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என நம்புகிறேன்..  உங்களது மகளிற்கு வாழ்த்துக்கள்!!!   உண்மைதான்.. இந்த திரியில் வரும் விடயங்களில் இந்த 3 விடயங்களை படித்திருப்பீர்கள்👇🏼
  • இலங்கையில் 3 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று   இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து ஆயிரத்து 832 ஆக அதிகரித்துள்ளது.     மேலும் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 258 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் பயன்பாட்டிலுள்ள அனைத்து கொவிட் தடுப்பூசிகளும் டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாட்டிற்கு எதிராக செயற்படுகின்றன என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. டெல்டா கொரோனா வைரஷிற்கு எதிராக தடுப்பூசி போடுவது சிறந்த பாதுகாப்பாகும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார். இந்நிலையில், தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டாலும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை  தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.   இதைத் தொடர்ந்து தனியார் பேருந்துகளில் கோவிட்-19 தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டவர்களை மாத்திரம் ஏற்றிச் செல்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/sri-lanka-surpasses-300000-total-coronavirus-cases/  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.