Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்: செல்வம் அடைக்கலநாதன்


Recommended Posts

கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்: செல்வம் அடைக்கலநாதன்

 

 

selvam-1-720x450.jpg

உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டுவரும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் அரசியல் கைதிகளை இன்று (புதன்கிழமை) மாலை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“கடந்த 13 நாட்களாக அநுராதபுரம் சிறையிலே அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றார்கள். தமக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் அல்லது விடுதலை செய்யப்படவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கைகளாக இருக்கிறது.

உரிய தீர்வுகள் கிடைக்கும் வரைக்கும் தமது போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்வதற்கான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். இன்னும் காலம் தாழ்த்தப்பட்டால் தாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் அனைத்தையும் நிறுத்தப்போவதாக தெரிவித்துள்ளார்கள்.

எனவே அவர்கள் வெகுவிரைவில் விடுதலை செய்யப்படவேண்டும். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட.கிழக்கைச் சேர்ந்த பிரதேசசபை, நகரசபை உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து கொழும்பிலே ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு முயற்சி செய்துவருகின்றோம்.

அதனை வெகுவிரைவில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். அரசியல் கைதிகளின் போராட்டம் நியாயமானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களின் விடுதலைக்காக தொடர்ந்தும் உழைக்கும் என்பதை இங்கு உறுதியுடன் தெரிவிக்கின்றேன்” என செல்வம் அடைக்கலநாதன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/கைதிகளின்-விடுதலையை-வலிய/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.