Jump to content

வடமாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க 215 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன….


Recommended Posts

வடமாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க 215 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன….

north.jpg?resize=650%2C433

வடமாகாணத்தில் இதுவரை தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடங்களாக 215 விடயங்கள் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் மொஹன் லால் கிரேறு தெரிவித்துள்ளார்.

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் 176 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் 88 இடங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் 64 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 33 இடங்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. வவுனியா மாவட்டத்தில் 50 இடங்களும் யாழ் மாவட்டத்தில் 79 இடங்களும் கிளிநொச்சியில் 18 இடங்களும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளன.

வர்த்தமானியில் வெளியிடப்படாத இடங்களை விரைவில் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ராஜாங்க அமைச்சர் மொஹன் லால் கிரேறு மேலும் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2018/97299/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப பிறகென்ன டக்கென்டு 215 சிலைக்கு ஓடர் கொடுக்க வேண்டியது தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நுவரெலியா, சீத்தாவை சிறை வைத்திருந்த, அசோகவன, சீத்தாஎலிய, சீத்தாஅம்மன் கோவிலை பிரகடனம் செய்ய மாட்டினமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொல்லியல் பொருட்களின் வயதை கணக்கீடு செய்ய அது வெளியிடும் கார்பனின் அளவை கொண்டு செய்யப்படும் . இந்த பிக்குமாரை நம்ப ஏலாது .. சிங்கள மே பழமையானது என்று காட்ட அதற்கேற்ற மிஷினை கூட கண்டெடுக்கப்படும் தொல்லியல் பொருட்கள் உள்ளே பொருத்தி விடுவீனம்.. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனியென்ன, கொஞ்சம் புத்தர் சிலையும், அரச மரமும் கொண்டுவந்து நடுஙகோவன். எல்லாம் சிவமயம் போய் இன் எல்லாம் சிங்கள மயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தனை இடங்களிலும் விகாரைகள் அமைப்பதன் மூலம்.. யாழ்ப்பாணம் அனுதாரபுரத்தின் தலைநகரமாக்கப்படும். அத்தோடு ஓரளவுக்கு திருப்திப்படும்.... சிறீலங்கா என்பது பெளத்த சிங்கள தேசம் என்ற சொறீலங்கா பயங்கரவாத அரசுகளின் வேலைத்திட்டம். ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.