Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நினை­வு­கூர்­தல் என்­பது வெறும் நிகழ்வு மட்­டுமா?


Recommended Posts

நினை­வு­கூர்­தல் என்­பது வெறும் நிகழ்வு மட்­டுமா?

 

தியாக தீபம் திலீ­ப­னின் 31ஆவது ஆண்டு நினை­வேந்­தல் இன்று கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்­றது. ஏகப்­பட்ட இடர்­பா­டு­க­ளை­யும் தாண்டி தாய­கத்­தி­லும், புலத்­தி­லும் நினை­வு­கூர்­தல்­கள் இடம்­பெ­று­கின்­றன.

தாயக தேசத்­தில் போருக்கு முடி­வுரை எழு­தப்­பட்ட பின்­னர் நினை­வு­கூர்­தலை நடத்­து­வது இன்­னொரு போரை நடத்­து­வ­தற்­குச் சம­மா­ன­தாக இருந்­தது. மகிந்­த­வின் ஆட்­சிக் காலத்­தில் மிக மிக இர­க­சி­ய­மாக அங்­கொன்­றும் இங்­கொன்­று­மாக நினை­வு­கூ­ரல்­கள் இடம்­பெற்­றன. ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் நினை­வு­கூர்­தல்­கள் வெளிப்­ப­டை­யா­கக் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அத்­த­கைய நினை­வு­கூ­ர்தல்களை நடத்­து­வது யார்? தலைமை ஏற்­பது யார்? அங்கு பேசு­வது யார்? என்ற பிடுங்­குப் பா­டு­க­ளும் கூடவே வளர்ந்து விரிந்­து­விட்­டன. முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லின்­போ­தும் இதே­போட்டி வியா­பித்து நின்­றது. தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வேந்­த­லி­லும் அதே நில­மையே தொடர்­கி­றது.

தற்­போது கோயில்­க­ளில் திரு­வி­ழாக்­கள் நடத்­து­வது ஒரு சடங்­காக -– விழா­வாக – – கொண்­டாட்­ட­மாக மாறி வரு­கின்­றது. மதங்­க­ளின் போத­னை­களை மதிப்­பார் யாரும் இல்லை. மற்­ற­வர்­க­ளில் அன்பு காட்­டுங்­கள், உண்­மை­யாக இருங்­கள் என்று மதம் போதிக்­கும் நல்ல விட­யங்­கள் எவற்­றை­யும் கருத்­தில் எடுக்­காது முறை­யற்ற வழி­க­ளில் பணத்­தைச் சம்­பா­தித்து அதை ஆல­யங்­க­ளின் திரு­வி­ழாக்­க­ளுக்கு அள்­ளிச் செலவு செய்­தால் எல்­லாம் சரி­யா­கி­வி­டுமா?

அதே­போ­லவே, நினை­வேந்­தல்­களை போட்டி போட்­டுக் கொண்டு, நீ முந்தி நான் முந்தி என்று நடத்­து­வது சரி­யா­னதா?எந்த இலட்­சி­யத்­துக்­காக தமது உயிர்­க­ளைத் துச்­ச­மென்று மதித்­துப் போரா­டி­னார்­களோ -– துறந்­தார்­களோ, அந்த இலட்­சி­யத்­துக்கு விசு­வா­ச­மாக இருக்­க­வேண்­டாமா? அவர்­கள் காட்­டிய இலட்­சி­யத்­தின் வழி­யில் பய­ணிக்­க­வேண்­டாமா? ஆகக் குறைந்­தது அந்த இலட்­சி­ய­வேட்­கைக்கு குந்­த­கம் விளை­விக்­கா­ம­லா­வது இருக்­க­வேண்­டாமா? நினை­வேந்­தலை நடத்தி அர­சி­யல் செய்ய முனை­யும் அனைத்­துத் தரப்­புக்­க­ளும் – – தனி நபர்­க­ளும் ஒரு கணம் தங்­கள் மனச்­சாட்­சி­யி­டம் இதைக் கேட்­டுப் பாருங்­கள்.

ஏனெ­னில், 31 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் தியாக தீபம் திலீ­பன் முன்­வைத்த, மீளக்­கு­டி­ய­மர்­தல் என்ற பெய­ரில் வடக்­கி­லும் கிழக்­கி­லும் புதி­தா­கத் திட்­ட­மி­டும் குடி­யேற்­ற ங்­க­ளைத் தடுத்து நிறுத்­த­வேண்­டும். சிறைக் கூடங்­க­ளி­லும், இரா­ணுவ, பொலிஸ் தடுப்பு முகாம்­க­ளி­லும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­கள் யாவ­ரும் விடு­தலை செய்­யப்­ப­ட­வேண்­டும். அவ­ச­ர­கா­லச் சட்­டம் முழு­மை­யாக நீக்­கப்­ப­ட­வேண்­டும். ஊர்­கா­வல் படை­யி­ன­ருக்கு வழங்­கப்­பட்ட ஆயு­தங்­கள் முற்­றா­கக் களை­யப்­ப­ட­வேண்­டும். தமி­ழர் பிர­தே­சங்­க­ளில் புதி­தா­கப் பொலிஸ் நிலை­யங்­க­ளைத் திறப்­ப­தற்கு மேற்­கொள்­ளப்­ப­டும் நட­வ­டிக்­கை­கள் முற்­றாக நிறுத்­தப்­ப­ட­வேண்­டும் என்ற 5 அம்­சக் கோரிக்­கை­க­ளில் முத­லி­ரண்டு கோரிக்­கை­க­ளும் இன்­றும் நிறை­வே­றா­மல் தொடர்­கின்­றன. இதற்கு இவர்­க­ளும் பொறுப்­பா­ளி­களே.

மகா­வலி ‘எல்’ வல­யம் என்ற பெய­ரில் தமிழ் மக்­க­ளின் காணி­கள் அப­க­ரிக்­கப்­பட்டு சிங்­கள மக்­கள் குடி­யேற்­றப்­ப­ டு­கின்­றார்­கள். இனப் பரம்­பலை மாற்­றி­ய­மைக்­கும் விதத்­தில் தொட­ரும் இந்­தக் குடி­யேற்­றங்­களை நிறுத்­தக் கோரி மக்­கள் இன்­றும் அற­வழி -– அகிம்­சா­வ­ழிப் போராட்­டங்­களை நடத்­திக் கொண்டே இருக்­கி­றார்­கள். அர­சி­யல் கைதி­கள் தங்­களை விடு­விக்­கக் கோரி உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருக்­கின்­றார்­கள்.

அது­வும் இரண்டு வாரங்­களை நெருங்­கிக் கொண்­டி­ருக்­கின்­றது. அவர்­கள் ஐந்­தா­வது தட­வை­யாக இந்த அகிம்சை ஆயு­தத்தை ஏந்­தி­யி­ருக்­கி­றார்­கள்.
அகிம்சை வழிப் போராட்­டங்­க­ளின் பிறப்­பி­ட­மாக தங்­களை மார் தட்­டிக் கொள்­ளும் இந்­திய தேசத்­துக்கே, அகிம்சை என்­றால் என்­ன­வென்று உணர்த்­தி­ய­வர்­கள் நாங்­கள். அதை மன­தி­லி­ருத்தி நினை­வு­கூர்­தலை நடத்­து­வதே சாலப் பொருத்­தம்.

https://newuthayan.com/story/09/நினை­வு­கூர்­தல்-என்­பது-வெறும்-நிகழ்வு-மட்­டுமா.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • சாவையூர் அந்திகுழி ஞானவைரவர் கோவில்  
  • படம் : திசை மாறிய பறவைகள் இசை : M.S.விஸ்வநாதன் பாடியவர் : T.M.சௌந்தரராஜன் கிழக்கு பறவை மேற்கில் பறக்குது அது கிழக்கு வானை மறக்கப் பார்க்குது தனக்கென ஓர மார்க்கம் உள்ளது அது சமயம் பார்த்து மாறி விட்டது காரிருள் தேடுது நிலவை அது திசை மாறிய பறவை காரிருள் தேடுது நிலவை அது திசை மாறிய பறவை காரிருள் தேடுது நிலவை... அது திசை மாறிய பறவை...
  • "தமிழீழ மண்ணை மீட்பதற்குப் போராட புறப்பட்டவர்களில் ஒருவரான டக்ளசு தேவானந்தா என்பவரால், கௌதாரிமுனை மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியது".  இப்படித் தலையங்கம் இட்டு அவரைக் கெளரவித்திருக்கலாமே.!!👆🤔
  • 44 ஞான மாணிக்கவாசகர் சிவாச்சாரியார் சித்தர்  சமாதி இருக்குமிடம்:  பழைய எண். 60, புதிய எண் 87 , மன்னார்சாமி கோயில் தெரு,  சென்னை 13 ராயபுரம் பழைய பாலத்தின் இறக்கத்தில் உள்ள ருத்ர சோமநாதர் கோயில் இவரது சமாதி இருக்கிறது.
  • நயினாதீவுச் சுவாமிகள்   சிறுகுறிப்பு உசாத்துணை: ஈழத்துச் சித்தர்கள் - ஆத்மஜோதி நா. முத்தையா - 1980   உலகெங்களும் உள்ள சக்திபீடங்கள் அறுபத்துநான்கில் நயினாதீவு நாகபூஷணி ஆலயமும் ஒன்றாகும். இலக்கியங்களில் வரும் மணிபல்லவம் எனபதுவும் இதுவே. மணிமேகலையும் மணிமேகலா தெய்வமும் வரப்பெற்ற இடமாகும். நயினாதீவு முற்காலத்தில் சிறந்ததொரு துறைமுகமாகவும் விளங்கியது. மணித்தீவு, மணிநாகதீவு, நாகதீபம் என்ற பெயர்களும் இத்தீவிற்கு உண்டு. பாரத நாட்டிலிருந்து வருவோர் அம்பிகையை தரிசிக்க தவறுவதில்லை. நான்கே நான்கு மைல் சுற்றளவுள்ள இத்தீவில் பெரும்பகுதியோர் சைவவேளான் மரபைச்சார்ந்தவர்களாகும். இம்மரபிலே ஆறுமுகம் எனும்பெரியார் ஒருவர் வாழ்நதார். அவருக்கு ஒரு மகன். அம்மகனுக்கு முத்துக்குமாரசாமி என்று நாமகரணம் சூட்டினர். இந்த முத்துக்குமாரசாமியே பிற்காலத்தில் நயினாதீவுச் சாமியார் என்று அழைக்கப்பட்டார். உரிய காலத்தில் ஆரம்பக்கல்வி பெற்றார். அக்கால இளைஞர்களில் பெரும்பாலானோர் ஆரம்பக்கல்வி முடிந்ததும் முடியாததுமாக யாழ்ப்பாண நகருக்கோ, கொழும்புக்கோ அன்றி கண்டி போன்ற பட்டினங்களுக்கோ சென்றுவிடுதல் வழக்கமாக இருந்தது. முத்துக்குமாரசாமி ஆரம்பக்கல்வி முடிந்ததும் கொழும்புக்குச் சென்று ஒரு வர்த்தக நிலையத்தில் வேலைக்கு அமர்ந்தார். முத்துக்குமாரசாமி வர்த்தக நிலையத்தில் சிப்பந்தியாக வேலை பார்த்தாலும் மனம் இறைபணியையே நாடி நின்றது. ஒருநாள் வர்த்தக நிலைய அதிபர் இவரை ஏசிவிட்டார். அந்த வன்சொல்லை அவரால் பொறுக்க முடியவில்லை. ரமண பகவானுக்கு பதினாறு வயதாயிருக்கும்போது இவரது தமையனார் இவர் ஒழுங்காக படிப்பதில்லை என்பதை மனதிற்கொண்டு இப்படிப்பட்டவனுக்கு இங்கு என்ன வேலை என்று ஏசினார். இந்த ஏச்சு மனதில் தைக்க, ‘இது நல்ல விடயத்தை நாடிச்செல்லுகின்றது, இதையாரும் தேடவேண்டாம்” என்று ஒரு கடிதத்திலே எழுதிவைத்துவிட்டு திருவண்ணாமலைக்குச் சென்றுவிட்டார். இவருடைய துறவுக்கு இவரது தமையனாரே காரணம் ஆனார். இச்செய்தி போன்றுதான் முத்துக்குமாரசாமியும் ஒரு சீட்டுக்கவி மாத்திரம் எழுதிவைத்துவிட்டு யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் கடையைவிட்டு சென்றுவிட்டார். கவி ஒரு விரசமான கவிதான். ஆனால் அந்த நேரத்து மனஉணர்வை அக்கவி படம்பிடித்து காட்டுகின்றது. பல இடங்களிலும் தேடினார்கள். ஊரிலும் தேடினார்கள். முத்துக்குமாரசாமி சென்ற இடத்தை யாரும் அறியார். துறவுக்கேற்ற பக்குவநிலை ஏற்படும்போது சிறு சம்பவங்கள் கூட துறவுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. அக்காலத்திலே இந்தியாவுக்கு சென்று வருவதில் எந்தவித கஷ்டமும் இருக்கவில்லை. முத்துக்குமாரசுவாமியாருடைய உள்ளம் இறைவனை நாடி இருந்தமையால் தலயாத்திரை மேற்கொண்டார். என்ற தாயுமானவரின் வாக்குப்படி இவரது யாத்திரை வீண்போகவில்லை. இவரிடத்து விளங்கிய தெய்வபக்தி, ஞானம், தூய்மை, மனஅடக்கம், இன்சொல், அருளோடு கூடிய நோக்கு, எந்த நேரமுஞ் சிவசிந்தனை ஆகிய குணங்கள் இவரைத் தகுந்த ஒரு குருவிடம் கொண்டு சென்று சேர்த்தன. அவரோடு பல ஆண்டுகள் தங்கிக் குரு உபதேசமும், சந்நியாசமும் பெற்றுக்கொண்டார். இவரது பக்குவநிலை அறிந்த குருநாதர் நீ உனது ஊருக்கு செல்லலாம் என்று உத்தரவு கொடுத்தார். குருநாதரை பிரிய மனமின்றி பிரிந்து ஊர்நோக்கி வந்தார். பல ஆண்டுகளுக்கு பின் நீண்ட சடா முடியும், காவிஉடையும் தரித்த சுவாமியார் ஒருவர் நயினாதீவில் உலாவுவதை நயினாதீவு மக்கள் பார்தனர். எங்களுடைய ஆறுமுகத்தாரின் மகன் முத்துக்குமாரசாமியைப்போலல்லவா தோற்றம் இருக்கின்றது என்று சிலர் பேசிக்கொண்டனர். வேறுசிலர் அதற்கு மறுப்புத்தெரிவித்தனர். முத்துக்குமாரசுவாமி இருக்கும் இடமோ போன இடமோ யாருக்கும் தெரியாது. அவர் உயிரோடு இருக்கிறார் என்பதே சந்தேகம் என்றனர். மிக நெருங்கிய உறவினர் முத்துக்குமாரசாமியுடன் நெருங்கிப்பழகி அவர் முத்துக்குமாரசாமிதான் என்று தெளிந்து கொண்டனர். உற்றார் உறவினர் அவரை அணுகி தமது இல்லத்துக்கு வருமாறு அழைத்தனர். அவர் யாருடைய இல்லத்திற்கும் செல்லுவதற்கு மறுத்துவிட்டார். நாளொரு கோயிலில் சென்று தங்கி வந்தார். கோயில் மண்டபங்களையே தமது வசிப்பிடமாக்கி கொண்டார். கோயில் மண்டபங்களிலேயே படுத்துறங்கி தானும் தன்பாடுமாய் திரிந்த சுவாமியார் என்ன சாப்பிடுகிறார்? எங்கே சாப்பிடுகின்றார் என்பதை யாரும் அறியார். நயினாதீவிலே உள்ள மக்கள் சுவாமிகளை முத்துக்குமார சாமியார் என்றே அழைத்தனர். அனால் அயலூரவர்கள் சுவாமியாரை பெயர் சொல்லி அழைக்க அஞ்சிப்போலும் நயினாதீவுச் சுவாமியார் என்றே அழைத்தனர். சுவாமிகளுடைய குருநாதன் பெரியானைக்குட்டி சுவாமிகளேதான். குருநாதன் அவருக்கு என்ன பெயர் வைத்தாரோ யாரறிவார்? இப்படி ஊர்பேர் தெரியாது, உலகுக்குத்த தம்மைக் காட்டி கொள்ளாது மறைந்த மகான்கள் எத்தனைபேரோ யாரறிவார்? சுவாமியார் என்று பெயர் எடுத்துவிட்டால் அவர்களை சுற்றி ஒரு கூட்டம் எப்பொழுதும் இருந்துகொண்டேதான் இருக்கும். நயினாதீவுச்சுவாமிகள் அதற்கு விலக்கானவர் அல்ல. சுவாமிகள் தமது அடியார் கூட்டத்தோடு வடபகுதியில் உள்ள எல்லா ஆலயங்களுக்கும் யாத்திரை செய்தருளினார்கள். சுவாமியை நாடி வந்தவர்கள் யாவரும் ஏதோ ஒரு வகையில் பயன்பெற்றே சென்றனர். சுவாமி கொடுத்த விபூதியை பெற்று உடல்நோய், உள்ளநோய் தீரந்தவர் ஆயிரத்திற்கதிகமானவர்கள். ஆத்மஞானம் நாடிவந்தவர்கள், ஆத்மஞானம் பெற்றனர். சுவாமிகளின் சீடர் கூட்டம் இன்று எல்லா ஊர்களிலும் இருக்கின்றது. தமது சீடர்களின் முதல்வரான சண்முகரத்தினம் அவர்களை கொண்டு நயினாதீவு தென்மேற்கு பகுதி கடற்கரையில், ஒரு தீர்த்தக்கேணி அமைப்பித்தார். இன்றும் நயினாதீவு நாகம்மாள் தீர்த்தம் ஆடிவருவது இத்தீர்த்தக்கேணியில்தான் என்பது குறிப்பிடத்தக்க தொன்றாகும். சுவாமிகள் இயல்பாகவே கவிபாடும் திறமை வாய்ந்தவர். இவரியற்றிய தனிப்பாடல்கள் பல உள்ளன. நாகேஸ்வரி தோத்திரமாலை, நாகேஸ்வரி அந்தாதி போன்ற நூல்கள் அன்னாரின் சமாதி நிலையத்தொண்டர் சபையினரால் வெளியிடப்பட்டுள்ளன. அடியவர்களுடைய இன்னல்களை வாக்கினாலும் நோக்கினாலும் தீர்த்தருளிய சுவாமியவர்கள் 1949ம் ஆண்டு தை மாதம் 26ம் திகதி தமது அன்பரின் இல்லத்தில் யாழப்பாணம் சிவலிங்கப்புளியடியில் சமாதிநிலை எய்தினார். சுவாமிகளின் திருவுளப்படி அவரின் பூதவுடல் நயினாதீவு காட்டுக்கந்தசுவாமி கோவிலின் மேற்குப்புறத்தில் அடியார்களால் சமாதி வைக்கப்பட்டது. இன்று அதனமேல் ஒரு சோமாஸ்கந்த லிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டு நித்திய பூசை நடைபெற்று வருகின்றது.https://www.thejaffna.com/eminence/நயினாதீவுச்-சுவாமிகள்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.