Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிரமாண்டமாக தேசிய விழாவை நடத்தி பலத்தைக் காண்பித்த சீனா!


Recommended Posts

பிரமாண்டமாக தேசிய விழாவை நடத்தி பலத்தைக் காண்பித்த சீனா!

 

0042A7CC-23A7-406D-A04C-8FAAB20332AC-720x450.jpeg
 
 
முன்னெப்போதுமில்லாத வகையில் தனது தேசிய விழாவை நடத்திய சீனா தனது பலத்தை வெளிப்படுத்திக் காண்பித்துள்ளது. நேற்றையதினம் மக்கள் சீனக் குடியரசு ஸ்தாபிக்கப்பட்ட 69வது வருடாந்த பூர்த்திவிழா கொழும்பில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
6A91AD2F-BEF2-4480-A0FE-6E495B392561-384
 
சீனர்களுக்கு சொந்தமான கொழும்பிலுள்ள ஷங்கிரிலா ஹோட்டலில் முதன்முறையாக நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.  அரசியல்வாதிகள் இராஜதந்திரிகள் ஊடகவியலாளர்கள்பாதுகாப்பு படை அதிகாரிகள் எனப்பலரும் இதில் பங்கேற்றிருந்தனர்.
DF39C3E3-E78F-4F82-874A-1093DAE87B70-384685ADF4D-25F5-49EA-B83F-27499FD157F8-384930C992D-68C2-4D61-B9FE-5D005CF9CF71-384
 
இலங்கையில் இதுபோன்று பிரமாண்டமான விழாவை வேறெந்த வெளிநாட்டுத் தூதரங்களும் இதற்கு முன் நடத்தியிருக்கவில்லை என அங்கு வருகை தந்தோர் வியந்துபேசியதை அவதானிக்க முடிந்தது. 

http://athavannews.com/பிரமாண்டமாக-தேசிய-விழாவை/

Link to comment
Share on other sites

அனைத்து இடையூறுகளையும் தாண்டி சீன-.இலங்கை ஒத்துழைப்பை முன்னோக்கி கொண்டுசெல்வோம்- சீனத்தூதுவர்

 

4126015F-2F47-44FA-B16C-F30C95A6AE0A-720x450.jpeg

 

அனைத்து விதமான இடையூறுகளையும் தாண்டி எமது இலக்குகளில் உறுதியாக இருந்து ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டத்தின் கீழ் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டுறவை முன்னோக்கிக்கொண்டு செல்வதற்கு அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என இலங்கைக்கான சீனத்தூதுவர் செங் ஷேகியான் தெரிவித்தார்.

மக்கள் சீனக்குடியரசு ஸ்தாபிக்கப்பட்ட 69வது வருடப்பூர்த்தியை முன்னிட்டு கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஒருமண்டலம் ஒரு பாதை திட்டமானது இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நட்புறவுமிக்க நடைமுறைரீதியான கூட்டுறவிற்கான மிகவும் முக்கியமான கருத்தொருமைப்பாட்டு கட்டமைப்பாக அமைந்துள்ளதெனவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

8BE5E403-2B57-4837-98A2-DC113695F438-384

அவர் தனது உரையில் இலங்கையில் சீனா மேற்கொள்ளும் திட்டங்களின் தற்போதைய நிலை தொடர்பாகவும் கருத்துக்களை முன்வைத்தார்.

“கடந்த ஒரு வருடகாலப்பகுதியில் இலங்கைக்கு சீனாவிற்கும் இடையிலான நடைமுறைரீதியான ஒத்துழைப்பு துரித வளர்ச்சி கண்டுள்ளது. கொழும்பு துறைமுகத் நகரிற்கான நிலப்பகுதியை கடலில் இருந்து நிரப்பும் பணிகள் விரைவில் பூர்த்தியடையும். அதன் இரண்டாம்கட்டம் விரைவில் ஆரம்பமாகும். இலங்கையின் அபிவிருத்தியின் புதிய இயக்கச் சக்தியாக துறைமுக நகர் திகழும் தெற்காசியாவின் நிதி மையமாக அது விளங்கும். சீனாவின் எச்ஐபிஜி நிறுவனம் மற்றும் இலங்கைக்கிடையிலான கூட்டு முயற்சி ஹம்பாந்தோட்டை துறைமுக செயற்பாட்டு நடவடிக்கைகளைப் பொறுப்பேற்றுள்ளது. இலாபம் ஏறத்தாழ இரட்டிப்பாகியுள்ளது.எதிர்காலத்தில் துறைமுகத்தின் ஒருங்கிணைந்த அபிவிருத்தியும் கைத்தொழில் பேட்டையும் இலங்கைப் பொருளாதாரத்தின் புதிய இயந்திரமாக மாறும். மொரகாகந்த நீர்த்தேக்க பணிகள் பூர்த்திசெய்யப்பட்டு வெற்றிகரமாக கையளிக்கப்பட்டுள்ளது. தென் பகுதிக்கான ரயில்வே பாதை அமைக்கும் திட்டமும் கொழும்பையும் ஹம்பாந்தோட்டையையும் இணைக்கும் அதிவிரைவு பாதைத்திட்டமும் பூர்த்தியடையும் தருவாயில் உள்ளது.

கடந்த ஒருவருடகாலப்பகுதியில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நட்புறவுப்பரிமாற்றங்க்ள தொடர்ச்சியாக விஸ்தரிக்கப்பட்டுவருவதை நாம் கண்ணுற்றுள்ளோம். முக்கியஸ்தர்கள் பலர் விஜயங்களை மேற்கொண்டுள்ளனர். இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் மக்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு மிகவும்முக்கியமானது. இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் சுற்றுலாப்பயணிகளில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலானவர்கள் சீனாவில் இருந்தே வருகின்றனர்.2017ல் 260 000 ஆயிரத்திற்கு மேற்பட்ட சீனர்கள் இலங்கைக்கு வந்தனர். 2018ல் இந்த எண்ணிக்கை 300000 ஆயிரத்தைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகமதிகமான இலங்கையர்கள் சீனாவிற்கு பயணிக்கின்றனர். இலங்கை மக்களுக்கான மிகவும் முக்கியமான வெளிநாட்டுக்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான நாடாக சீனா மாறியுள்ளது.”

http://athavannews.com/அனைத்து-இடையூறுகளையும்-த/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.