Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

’வடக்கு, கிழக்கு அதிகாரப் பகிர்வு வந்தால் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும்’


Recommended Posts

’வடக்கு, கிழக்கு அதிகாரப் பகிர்வு வந்தால் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும்’
 

image_645d90c606.jpgவடக்குக்கும் கிழக்குக்கும் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டால் மாத்திரமே, நாட்டைக் கட்டியெழுப்பலாம் என்று காணப்படும் கருத்தியல், தவறானது எனக் குறிப்பிட்ட அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அவ்வாறு நடந்தால், நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழ் மிரரின் சகோதரப் பத்திரிகையான டெய்லி மிரருக்கு வழங்கிய நேர்காணலிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

அதேபோல், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தால் தான், அபிவிருத்தியைக் கொண்டுவர முடியுமென்பதும், தவறான நோக்கமெனவும், அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டள்ள, அரசமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால், நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் என, அவர் இதன்போது எச்சரித்தார்.

நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்காக, மக்கள் விடுதலை முன்னணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதே, அரசமைப்பின் 20ஆவது இருத்தம் ஆகும்.

இது தொடர்பாகக் கேட்கப்பட்ட போது, "20ஆவது திருத்தம், நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு, வெளிப்படையாகவே பாதிப்பானது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டால், வட்டார அடிப்படையிலான, பழைய தேர்தல் முறைமை மீள அறிமுகப்படுத்தப்பட வேண்டும். நாட்டை ஸ்திரமற்றதாக ஆக்குவதற்கு, எவ்வித வாய்ப்புகளையும் வழங்கக்கூடாது" என, அமைச்சர் பதிலளித்தார்.

இதேவேளை, அரசமைப்பின் 19ஆவது திருத்தம் மூலமாக, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், இதற்குப் பின்னும் பறிப்பதற்கான அதிகாரங்கள் காணப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்

http://www.tamilmirror.lk/செய்திகள்/வடக்கு-கிழக்கு-அதிகாரப்-பகிர்வு-வந்தால்-ஸ்திரத்தன்மை-பாதிக்கப்படும்/175-222682

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள் Posted by eelamalar on May 24th, 2021 12:17 AM | செய்திகள் மனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ.. யாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது. ஆனால் விடுதலைப் புலிகள் மனிதநேய அடிப்படையில் தான் முஸ்லீம்களை யாழ் மண்ணில் இருந்து அனுப்பி வைத்தார்கள். அன்று என்ன நடந்தது தெரியுமா ?யாழ் செம்மா தெருவில் அமைந்துள்ள ஒஸ்மானியா கல்லூரிக்கு பின்னால், விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்று அமைந்திருந்தது. அங்கே சங்கிலியன் என்னும் போராளி ஒருவர் முஸ்லீம் வீடு ஒன்றில் வழமைக்கு மாறகாக சிலர் வந்து செல்வதை கண்டு சந்தேகமுற்றார். அவர் சென்று குறித்த வீட்டில் உள்ளவர்களை விசாரணைக்கு உட்படுத்தியவேளை அவர்கள் பெரும் பதற்றத்தோடு காணப்பட்டார்கள். இதனை அடுத்து புலிகளின் வேவுப்படை பிரிவு அங்கே சென்று விசாரணைகளை நடத்திக்கொண்டு இருக்க சோதனைப் பிரிவு சோதனைகளை நடத்த. வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் இருந்து பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட நிலையில் ஆயுதங்கள் மீட்க்கப்பட்டது.1990களில் யாழ்ப்பாணத்திற்கு பொருளாதாரத் தடை இருந்தது. அதாவது உணவுப் பொருட்களை மட்டுமே கொழும்பில் இருந்து யாழ் கொண்டு செல்ல முடியும். அந்த வேளைகளில் லாரி உரிமையாளர்களாக இருந்த பல முஸ்லீம்கள் கொடிகட்டிப் பறந்தார்கள். அதிலும் “முபீன்” என்னும் பெரும் செல்வந்தரிடம் 40க்கும் அதிகமான லாரிகள் இருந்தது. இவர் உணவு பொருட்களை யாழ் கொண்டு வரும் வேளை. சிங்கள அரசு கொடுத்துவிட்ட பெருந்தொகையான ஆயுதங்களையும் கொண்டு வந்து யாழில் பல முஸ்லீம்களிடம் கொடுத்து அதனை மறைவாக வைத்திருக்க சொல்லி இருந்தார். ஏன் எதற்கு என்று சொல்லவில்லை.இதனை கண்டறிந்த புலிகள் சகல வீடுகளையும் சோதனை போட்டு பெரும் தொகையான ஆயுதங்களை மீட்டார்கள். உடனே புலிகளின் மத்திய குழு கூடி ஒரு முடிவை எட்டினார்கள். அது அதிர்சியான முடிவு தான். யாழில் இருந்து முஸ்லீம்களை மனித நேயத்தோடு அனுப்பி வைப்பது. அவர்கள் தமது உடமைகளை எடுத்துச் செல்லலாம். வீடுகள், வியாபார நிலையங்கள் மற்றும் காணிகளை விடுதலைப் புலிகள் பாதுகாப்பார்கள். மீண்டும் வரும்போது கையளிக்கப்படும். இதுவே எட்டப்பட்ட முடிவு. அதனை சுட்டறிக்கையாக அச்சடித்து உடனே அனைத்து முஸ்லீம் மத தலைவர்களிடம் கொடுத்தார்கள். வழி அனுப்பி வைத்தார்கள்.நாங்கள் உயிரைக் கொடுத்து சிங்களவனிடம் இருந்து, எமக்கான உரிமை வேண்டும். தனி அரசு ஒன்று அமைந்தால் தான் தமிழர்கள் நிம்மாதியாக வாழ முடியும் என்று போராடுகிறோம். போராட்டத்தில் எங்களுக்கு உதவி செய்ய வேண்டாம். காட்டிக் கொடுத்தாலும் பரவாயில்லை. ஆனால் நீங்கள், ஆமி காரன் முன்னேறி வந்தால் , வந்த ஆமிக்காரனுக்கு ஆயுத சப்பிளை செய்ய ஆயுதங்களை இப்பவே தயார் செய்து வைத்திருக்கிறீகள். எங்கள் போராட்டத்தை அதள பாதாளத்தில் தள்ள பார்கிறீர்கள். உங்களில் நல்லவர் யார் ? கெட்டவர் யார் என்று நாம் விவாதிக்க வரவில்லை. எனவே நீங்கள் போரில் இறக்காமல் இருக்கவும். பாதுகாப்பாக இருக்கவுமே உங்களை நாம் அனுப்பி வைக்கிறோம் என்று மதிப்போடு கூறி மனித நேயத்தோடு அனுப்பி வைத்தார்கள் புலிகள்.இன்று யாழில் குண்டு வெடிக்கவில்லையே…. அன்று புலிகள் எடுத்த முடிவு. இன்று இதனை எத்தனை பேர் சரி என்று சொல்கிறார்கள். அன்று எதிர்த்தவர்கள் கூட இன்று மனம் மாறியுள்ளார்களே…
  • ஓஹோஹோஹோ மனிதர்களே......!  👍
  • வணக்கம் வாத்தியார்.......! அடிப்படை இன்றி கட்டிய மாளிகைகாத்துக்கு நிக்காதுஅழகாய் இருக்கும் காஞ்சிரை பழங்கள்சந்தையில் விக்காதுவிளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கைநிரந்தரம் ஆகாதுவிளக்கு இருந்தாலும் எண்ணெய் இல்லாமல்வெளிச்சம் கிடைக்காதுகண்ணை மூடும் பெருமைகளாலேதம்மை மறந்து வீரர்கள் போலேஓஹோஹோஹோ மனிதர்களேஓடுவது எங்கே சொல்லுங்கள்உண்மையை வாங்கிபொய்களை விற்றுஉருப்பட வாருங்கள்ஓஹோஹோஹோஒதிய மரங்கள் பெருத்து இருந்தாலும்உத்திரம் ஆகாதுஉருவத்தில் சிறியது கடுகானாலும்காரம் போகாதுபழிப்பதனாலே தெளிவுள்ள மனசுபாழ் பட்டு போகாதுபாதையை விட்டு விலகிய கால்கள்ஊர் போய் சேராதுகாற்றை கையில் பிடித்தவன் இல்லைதூற்றித்  தூற்றி வாழ்ந்தவன் இல்லை.....! ---ஓஹோஹோஹோ  மனிதர்களே---
  • இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் எதுக்கு உலகத்தையே சாட்சிக்கு கூப்புடுறீங்கள்......நீங்கள் எவ்வளவு நல்லவர் நீங்கள் சொன்னால் நம்பாமலா போகப்போறம்.......!   😂  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.