Jump to content

தகாத உறவு கிரிமினல் குற்றமல்ல; ஆணுக்கு 5 ஆண்டுகள் தண்டனை வழங்கும் சட்டம் ரத்து: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு


Recommended Posts

தகாத உறவு கிரிமினல் குற்றமல்ல; ஆணுக்கு 5 ஆண்டுகள் தண்டனை வழங்கும் சட்டம் ரத்து: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

 
 
 
16-krishnadas-DGDD2SAF393jpgjpgjpg

வேறொருவர் மனைவியுடன் அவரது ஒப்புதலுடன் உடலுறவு கொள்ளும் தகாத உறவு சட்டப்படி குற்றமில்லை, எனவே தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுகிறது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

இந்திய தண்டனை சட்டத்தின் 497-ஆவது பிரிவு செல்லுபடியாகுமா என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தி்ல் நடந்து வந்தது. வேறொரு நபரின் மனைவி என்று தெரிந்திருந்தும், அந்த நபரின் சம்மதத்துடனோ, சம்மதம் இல்லாமலோ அப்பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது குற்றம் என இந்திய தண்டனைச் சட்டத்தின் 497-வது பிரிவு குற்றம் என சொல்கிறது. இந்த குற்றத்துக்கு 5 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

 

இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:

‘‘தகாத உறவு என்பது சட்டவிரோதம் அல்ல. இந்த சட்டத்தின்படி தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிப்பது என்பது ஏற்கத்தக்கதல்ல. இந்த தகாத உறவு யாரையும் தற்கொலைக்கு தூண்டாத வரையில் இதை குற்றமாக கருத முடியாது. மனைவி என்பவர் கணவனின் சொத்து அல்ல. ஒருவரது உடன்பாட்டுடன் நடக்கும் உடலறவை, பாலியல் பலாத்காரமாக கருத முடியாது.

இருவருர் விரும்பி உடலுறவில் ஈடுபடுவதை பாலியல் பாலத்காரமாக கருதுவதை ஏற்க முடியாது. எனவே தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கும் அரசியல் சட்டத்தின் 497வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது’’ என நீதிபதிகள் கூறினர்.

இந்த வழக்கு விசாரணை நடந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், திருமணம் என்ற பந்தத்தை வலுப்படுத்தவும், அதன் புனிதத்தை காக்கவுமே 150 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய சட்டம் கொண்டு வரப்பட்டதாக வாதாடினர். ஆனால் அவர்கள் வாதத்தை நீதிபதிகள் தற்போது நிராகரித்துள்ளனர்.

https://tamil.thehindu.com/india/article25055244.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

Link to comment
Share on other sites

'திருமணமான இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்வது கிரிமினல் குற்றமல்ல': உச்சநீதிமன்றம் தீர்ப்பு

'திருமணமான இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல'படத்தின் காப்புரிமைGETTY IMAGES

திருமணமான ஓர் ஆண் திருமணமான இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது கிரிமினல் குற்றம் அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதுவரை, பாதிக்கப்பட்ட கணவர் புகார் அளித்தால் அவரது மனைவியுடன் உறவில் இருந்த ஆணுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிலை இருந்தது.

'திருமணமான இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்வது கிரிமினல் குற்றமல்ல'படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதுபோன்ற உறவுகளில் ஈடுப்பட்டால் ஆண் பெண் ஆகிய இருவருமே குற்றம் செய்திருந்தாலும் ஆணுக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது என்ற அம்சத்தில் அடிப்படையில் குற்றவியல் தண்டனை சட்டப் பிரிவு 497-ஐ எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

இத்தாலியில் வசிக்கும் ஜோசஃப் ஷைன் என்ற வெளிநாடுவாழ் இந்தியர் 2017 டிசம்பரில் உச்ச நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு 497க்கு எதிராக பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கு மீதான தீர்ப்பை வழங்கியது.

இந்த வழக்கில், திருமணத்துக்கு வெளியே கொள்ளும் உறவை கிரிமினல் குற்றமாக கருத முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பில், "கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் சரிசமமாக பொருந்தும். பெண்ணுக்கான பாலியல் தன்னுரிமையில் சமரசம் செய்ய முடியாது."

"இது ஆணாதிக்க சமூகத்தின் வெளிபாடு. எந்த நிபந்தனையும் பெண்ணிற்கு மட்டும் விதிக்க முடியாது. ஆண் மட்டுமே தூண்டுதல் சக்தியாக இருப்பதாகவும் அதற்கு பெண் பலியாவதாகவும் கருத முடியாது," என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

இந்த பிரிவே அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் கூறி உள்ளனர்.

திருமணமான ஓர் ஆண் திருமணமான இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது கிரிமினல் குற்றம் அல்லபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

நீதிபதி சந்திரசூட் பெண்களை கணவரின் உடமையாக கருதுவது பெண்களின் உரிமையை சிதைக்கும் என தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி இந்து மல்ஹோத்ரா பாரபட்சமான இந்த சட்டப்பிரிவு சட்டத்தில் இடம்பெறக் கூடாது என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

"சுயமாக முடிவெடுக்கும் உரிமை பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், ஆண்களை மட்டுமே தண்டிக்கும் இந்த சட்ட நடைமுறையைப் பயன்படுத்தி, தனியுரிமையில் அரசு தலையிடும் வழக்கம் முடிவுக்கு வருகிறது," என அவர் தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.

வழக்கு பின்னணி

முன்னதாக இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு, 'அடல்ட்ரி' சட்டப்பிரிவில் மாற்றங்களைச் செய்தால் அது சட்டத்தை நீர்த்துப்போக செய்துவிடும், சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறி இருந்தது.

இதுபற்றி முன்னர் கருத்து கூறி இருந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கருணா நந்தி, "இந்த வழக்கின் முடிவு மேலும் பல வழக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். திருமண உறவில் பாலியல் பலாத்காரம், திருமணமான தம்பதிகளாக இருந்தாலும், இருவரின் சம்மதத்தோடுதான் பாலியல் உறவு கொள்ளவேண்டும்" என்று கூறி இருந்தார்.

"அதேபோல, சட்டப்பூர்வ வயது வந்த இருவர், தம்பதிகளாக இல்லாவிட்டாலும் பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொண்டால், அதற்கு குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படக்கூடாது" என்று கோரப்பட்டு இருந்தது.

இதுபோன்ற உறவுகளில் ஈடுப்பட்டால் ஆண் பெண் ஆகிய இருவருமே குற்றம் செய்திருந்தாலும் ஆணுக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது என்ற அம்சத்தில் அடிப்படையில் குற்றவியல் தண்டனை சட்டப் பிரிவு 497 - ஐ எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.படத்தின் காப்புரிமைGETTY IMAGES

1860ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வயது வந்தோர் சட்டம், சுமார் 157 ஆண்டு பழையது. இச்சட்டத்தின் கீழ், ஆண் ஒருவர், வேறொரு திருமணமான பெண்ணின் சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டிருந்தால், அந்த பெண்ணின் கணவர் இதுகுறித்து புகார் அளித்தால், முறையற்ற உறவு சட்டத்தின் கீழ், பாலியல் உறவு கொண்ட ஆண் குற்றவாளியாக கருதப்படுகிறார். குற்றம் உறுதி செய்யப்பட்டால் ஐந்தாண்டு சிறை தண்டனை அல்லது அபராதம், சில சமயங்களில் சிறை தண்டனையும் அபராதமும் சேர்த்து வழங்கப்படும்.

இப்போது இந்த தீர்ப்பு இதனை மாற்றி அமைத்துள்ளது.

https://www.bbc.com/tamil/india-45662990

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எனி திருமணமானவை.. சொந்த துணைகளுக்கு துரோகம் செய்து.. தகாத உறவு வைச்சிருந்தாலும்.. விவாகரத்துப் பெற முடியாது. அப்படியே.. அஜெட் பண்ணி வாழனும் என்றுறாரோ. 

ஒருவேளை நீதிபதி திருமணமானவர்களோடு.. தகாத உறவில் நட்டமுள்ளவர் போலும். ?

இது தான் கலி முத்தின காலம் என்பது போலும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி தென் அமெரிக்க நாடுகள் அழிந்தனவோ அப்படியே இந்திய பூச்சாண்டியும் இதன் பின்னால் இருக்கும் அரசியல் சூட்சுமத்துக்கு முன்னணி பத்திரிகைகளும் உடந்தை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலம் கள்ளத் தொடர்பு வைச்சிருந்த ஆண்களுக்கு மட்டும் தண்டனை ஜிடைச்சது?...பெண்களுக்கு தண்டனை இல்லை.?..இப்ப இரு பாலோருக்கும் தண்டனை இல்லையாம் ?

Link to comment
Share on other sites

இந்த சட்டத்தின் சாராம்சத்தை தான் தற்போது வந்த செக்கச் சிவந்த வானம் படத்தின் அரவிந்சாமி அதிதி பாலன் ஜோதிகாவின் உறவும் முன்பு வந்த மணிரத்தினத்தின் சிஸ்யப்பிள்ளைகளின் லட்சுமி குறும்படமும் சொல்கின்றது. இந்தியச் சிந்தனை முறை மேற்கத்திய கலாச்சாரத்தை விட ஒருபடி மேலாக செல்வதையே அடிப்படையாகக் கொண்டிருக்கும். அதே நேரம் தனது சமூக அடககுமுறைகளை நடமுறையில் வைத்திருக்கும். ஒருபக்கம் மேற்கத்திய நாகரீகத்துக்கு மேலாக செல்ல முனையும் வேளை மறுபக்கம் தீண்டாமையை நடமுறையில் வைத்திருக்கின்றது. வளர்ந்த நாடுகளில் குழந்தைகளுடன் கணவனைப் பிரிந்து வாழும் பெண்களுக்கு அரசாங்கம் உதவித் தொகை வழங்குகின்றது. இந்தியாவில் அவ்வாறான எதுவும் இல்லை. இச் சடடங்களால் பாதிக்கப்படப்போவது பெண்கள் தான். குறிப்பாக இளந்தாய்மார்கள். அதிக குடுமபப் பிரிவுகள் ஏறபடும். ஒருபக்கம் கற்பை வலியுறுதும் மரபுகளைக கொண்ட சமுதாயத்தில் அதற்கெதிரான சட்டங்களும் அதனுடாக ஆணாதிக்கத்தை சுதந்திரமாக்குதலும் பல சிக்கல்களை உருவாக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா... என்னும், நாடு... உலகத்திலேயே.... பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற,  கேவலம் கெட்ட  நாடு. 
வாய்க்கு... வாய்...... "பாரத  மாதா....  பிதா... கீ ... ஜே ய்..."  என்று,  கத்துவார்கள். ?
அவ்வளவும்.... கள்ளக்  கோஷ்டிகள்.  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவெல்லாம் இன்றைய காலத்துக்கு ஏற்றமாதிரி வாழ்ந்திட்டு சாகோணும் எண்டுதான் உங்கை கனபேர் கதைக்கினம். சாப்பாட்டு மாற்றம் உடை நடை மாற்றம் கலாச்சார கலப்புகள்.....ஏன் இப்ப எங்கடை கலியாணங்கள் எல்லாம் பழகிப்பாத்துட்டுத்தானே ஓம் இல்லை எண்டீனம். ஆறுமாதம் அங்கை இஞ்சை போய் கூடி குலாவிப்போட்டு ஒத்து வரேல்லை எண்டு சொல்லித்தானே ஆளையாள் மாறிக்கொண்டு போயினம்...:(

அப்பிடியிருக்கேக்கை........நீதிபதியும் நல்லாய் யோசிச்சுத்தான் தீர்ப்பு சொல்லியிருக்கிறார் போலை...:grin:

கலியாணத்துக்கு முதல் என்ன செய்தினமோ அதைத்தான் கலியாணத்துக்கு பிறகும் செய்வினம்......ருசி கண்ட பூனையள் எல்லோ....
இதுக்கை சட்டமும் தீர்ப்பும் வீண் அலசல்......மனிதன் தானக சிந்தித்து மாற/திருந்த வேண்டும். தண்டனைகள் ஒரு பொருட்டே இல்லை.:cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.