Jump to content

பொகவந்தலாவ கெம்பியன் மேற்பிரிவில் ஆலயங்கள் உடைக்கபட்டு கொள்ளை


Recommended Posts

பொகவந்தலாவ கெம்பியன் மேற்பிரிவில்  ஆலயங்கள் உடைக்கபட்டு கொள்ளை

 

 
 

 

பொகவந்தலாவ கெம்பியன் மேற்பிரிவு தோட்டபகுதியில் இரண்டு ஆலயங்கள் இனந்தெரியதாவர்களால் உடைக்கபட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

04.jpg

இக் கொள்ளை சம்பவம் இன்று அதிகாலையில் இடம் பெற்றதாக தெரிவித்துள்ளனர்.

01.jpg

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது; 

05.jpg

பொகந்தலாவ கெம்பியன் மேற்பிரிவு தோட்டபகுதியில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றும், ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் ஒன்றும் இவ்வாறு உடைக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

03.jpg

முருகன் ஆலயத்தில் இருந்து தங்க நகைகள் மற்றும் உண்டியலில் வைக்கபட்டிருந்த பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் இதேவேளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் உள்ள தங்க நகைகளையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

06.jpg

இன்று 06.30மணி அளவில்  கெம்பியன் மேற்பிரிவு தோட்டபகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குறித்த முருகன் ஆலயத்தின் ஊடாக சென்று கொண்டிருந்த வேலை முருகன் ஆலயத்தின் கதவுகள் திறந்த நிலையில் கானபட்டதென தெரிவித்துள்ளார்.07.jpg

இதனை தொடர்ந்து பொலிஸாருக்கு வழங்ப்பட்ட தகவலுக்கு அமைய பொலிஸ் மோப்பநாய் மற்றும் தடையவியல் பொலிஸார் ஆகியோர் வரவலைக்கபட்டு விசாரனைகள் ஆரம்பித்துள்ளதோடு இதுவரையிலும் சந்தேகநபர் எவரும் கைது செய்யபடவில்லையென பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.02.jpg

 எனினும் கெம்பியன் மேற்பிரிவு தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் இதற்கு  முன்பு மூன்று தடவைகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

http://www.virakesari.lk/article/41262

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • செந்தில்... நரிக்கு, ஐஸ் வைத்து... அமைச்சர் பதவிக்கு அத்திவாரம் போடுகிறார். 😁 🤣
  • நானும்.... இலங்கை ஜனாதிபதி தேர்தல் என்று... விழுந்தடித்து உள்ளுக்கு வந்து, செய்தியை வாசித்தால்... அது பிரேசில் ஜனாதிபதி தேர்தலாம். 😮 உங்களுக்கு எல்லாம்... மனச் சாட்சியே, இல்லையாப்பா.... 😂 🤣
  • ஜனாதிபதியின் செயலை மெச்சினார் செந்தில்     கொழும்பின் சில முக்கிய பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து செப்டெம்பர் 23 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானி வெளியிடப்பட்டது. வெளியிட்ட வர்த்தமானியை  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மீள் பெற்றமை வரவேற்கத்தக்கது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, பாராளுமன்ற கட்டடத் தொகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகள்  உயர்நீதிமன்றம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகையில், கடற்படை தலைமையகம், பொலிஸ் தலைமையகம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தலைமையகம் பிரதமர் அலுவலகம் அலரிமாளிகை மற்றும் அதனை அண்மித்த பகுதிகள்  பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படை தளபதிகளின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் ஆகிய பகுதிகள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தன. இதனால்,  இலங்கையில்  அசாதாரண நிலை இன்னும் காணப்படுவதாக சர்வதேச சமூகம் கருதுகின்றது. எனவே இவ்வர்த்தமானி பிரகடனப்படுத்தப்பட்டமையால் இலங்கையில் ஏற்பட்டுள்ள  பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சர்வதேச உதவிகள் கிடைப்பது தாமதமாகும். எனவே நாட்டின் நலன்கருதி சர்வதேச ரீதியான உறவுகளை வலுப்படுத்தும் முகமாக இந்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மீள் பெற்றிருந்தமை  வரவேற்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.   https://www.tamilmirror.lk/மலையகம்/ஜனதபதயன-சயல-மசசனர-சநதல/76-305187
  • 'உன் வாழ்க்கை முடிந்துவிட்டது' என சி.ஐ.டி.யினர் என்னை பயமுறுத்தினர் ; அவ்வாறான சூழலில் நம்பிக்கை அளித்தவர் கெளரி - ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் By T. SARANYA 03 OCT, 2022 | 11:14 AM (எம்.எப்.எம்.பஸீர்) 'உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில், போலியான குற்றச்சாட்டுக்களின் கீழ், சி.ஐ.டி.யினர் என்னை கைது செய்தனர்.  எனது வாழ்க்கை முடிந்துவிட்டதாக அவர்கள் அச்சுறுத்தினர். அவ்வாறான சூழலில் முதன் முதலில் எனக்கு நம்பிக்கை கொடுத்து, எனக்காக சட்ட போராட்டத்தை ஆரம்பித்தவரே அமரர் கெளரி சங்கரி தவராசா.' என மனித உரிமைகள் தொடர்பிலான  சிரேஷ்ட சட்டத்தரணியும், சர்வதேச மன்னிப்பு சபையால் அரசியல் கைதியாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளவருமான  ஹிஜாஸ்  ஹிஸ்புல்லாஹ்  உணர்வு பூர்வமாக தெரிவித்தார். சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின்  முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன் தினம் (1) வெள்ளவத்தை - குளோபல் டவர்ஸ் ஹோட்டலில் நடந்தது.    இதன்போது கெளரி சங்கரி தவராசாவின்  கணவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா எழுதிய ' கெளரி - நீதிக்கன குரல் ' எனும் புத்தகமும் வெளியிடப்பட்டது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய,  நீதியரசர் எஸ். துறை ராஜா, மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எம்.டி. மொஹம்மட் லபார், சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம், மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் நீதியரசர் ரோஹினி மாரசிங்க,  குளியாபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டிய உள்ளிட்ட நீதிபதிகள், ஜனாதிதி சட்டத்தரணி அனில் சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவின்  சேவை பெறுநர்களான  அரசியல் பிரமுகர்கள்,  என பலரும்  இதில் பங்கேற்றனர். இதன்போது அமரர் கெளரி சங்கரி தவராசா தொடர்பில் பலரும் தமது உணர்வு பூர்வமான விடயங்களை பகிர்ந்துகொண்டனர். இதன்போது, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் நடந்து ஒரு வருடத்துக்கு பின்னர், தமிழீழ விடுதலை புலிகலின் அன்டன் பாலசிங்கத்துடன் ஒப்பீடு செய்து, தேசிய தெளஹீத் ஜமாத்தின் அன்டன் பாலசிங்கம் எனக் கூறி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணி  ஹிஜாஸ்  ஹிஸ்புல்லாஹ் உணர்வு பூர்வமாக விடயங்களை பகிர்ந்துகொண்டார். இதன்போது அவர் தெரிவித்ததாவது, 'கெளரி தவராசா தொடர்பில் நான் அறிந்தளவு யாரும் அறிந்திருப்பார்களா என நான் நினைக்கவில்லை.  2020 ஏப்ரல் 20 ஆம் திகதி என்னை சி.ஐ.டி.யினர் கைது செய்தார்கள்.  எமக்கு நெருக்கமானவர்கள்,  தெரிந்தவர்கள் எம்மைவிட்டு விலகிய போது,  எனது குடும்பத்தாருக்கு சட்ட போராட்டத்துக்கான   போராட்டத்தை ஆரம்பித்தவர் கெளரி சங்கரி தவராசா.  குடும்பத்தாருடன் கூட பேச முடியாது நான் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அனைத்து தடைகளையும் தாண்டி, கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்து, சட்ட போராட்டத்துக்கு நம்பிக்கை அளித்தவர் அவர். கிட்டத்தட்ட எனது வாழ்க்கை முடிந்துவிட்டது என்றே சி.ஐ.டி.யினர் என்னை அச்சுறுத்தினர். தடுப்புக் காவலில் ஒன்றறை வருடம்,  வழக்கு விசாரணைக்கு 5 வருடம், தண்டனை 15 வருடம் என அவர்கள் என்னை பயமுறுத்தினர்.  அப்படியான நிலைமையில்,  குரலற்று இருந்த எனக்கு வாழ்க்கை குறித்து நம்பிக்கை அளித்து, சட்ட போராட்டத்தை ஆரம்பித்தவர் அமரர் கெளரி சங்கரி தவராசா.  அவரது இழப்பு பேரிழப்பாகும். ' என குறிப்பிட்டார். 'உன் வாழ்க்கை முடிந்துவிட்டது' என சி.ஐ.டி.யினர் என்னை பயமுறுத்தினர் ; அவ்வாறான சூழலில் நம்பிக்கை அளித்தவர் கெளரி - ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் | Virakesari.lk
  • ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு   உலகின் 4 ஆவது பெரிய ஜனநாயக நாடான பிரேஸிலில் ஜனாதிபதி தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தோ்தலில் ஆளும் வலதுசாரி மற்றும் இடதுசாரிகளுக்கு இடையே நிலவும் தீவிர போட்டியில் இடதுசாரிகளுக்கே வெற்றிவாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. பிரேஸிலின் உள்ளூா் நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. தோ்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் நடைபெறுவதால், தோ்தல் முடிவடைந்த சில மணி நேரங்களில் முடிவுகள் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஜனாதிபதி தோ்தலில் களமிறங்கியுள்ள 11 வேட்பாளா்களில், தற்போதயை அதிபரும் வலதுசாரியுமான ஜெயிா் போல்ஸொனரோவும், முன்னாள் ஜனாதிபதியும், இடதுசாரியுமான லுலா டி சில்வாவும் முதன்மை வேட்பாளா்களாக கருதப்படுகின்றனா். சனிக்கிழமை வெளியான தோ்தல் கருத்துக்கணிப்பு ஒன்றில், சில்வாவுக்கு ஆதரவாக 50 சதவீதத்துக்கு அதிகமானோரும், போல்ஸொனரோவுக்கு ஆதரவாக 36 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனா்.   https://tamil.adaderana.lk/news.php?nid=166247    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.