Jump to content

புதிய பக்கத்தைப் புரட்டியிருக்கும் மாலைதீவு


Recommended Posts

புதிய பக்கத்தைப் புரட்டியிருக்கும் மாலைதீவு

 

 
 

மாலைதீவில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் இடைக்கால முடிவுகள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுடனான நேரடிப் போட்டியில் கூட்டு எதிரணியின் வேட்பாளர் இப்ராஹிம் முஹமத் சோலீக்கு பெருவெற்றியைக் கொடுத்திருக்கின்றன. இறுதி முடிவுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும். நடைமுறைகளின் பிரகாரம் தற்போதைய அரசாங்கம் நவம்பர் 17 ஆம் திகதி ஆட்சிப் பொறுப்பைக் கையளிக்கும்.

 

maldives-election.jpg

ஆனால், மாலைதீவு மக்கள் மாற்றமொன்றை விரும்பியிருக்கிறார்கள் என்பதே உடனடியாகத் தெளிவாகத் தெரிகின்ற விடயமாகும்.வாக்காளர்களில் 58 சதவீதமானவர்கள் சோலீயை தெரிவுசெய்திருக்கிறார்கள்.அரசியல் சார்புகளுக்கு அப்பால் மாலைதீவு மக்கள் சகலரும் வெற்றிகரமாக தேர்தல் நடந்துமுடிந்திருப்பது குறித்து கொண்டாடவேண்டும்.

89.2 சதவீத வாக்காளர்கள் தேர்தலில் பங்கேற்றிருந்தமை தேர்தல் செயன்முறைகளின் நேர்மை குறித்து முன்னதாக நிலவிய அவநம்பிக்கையைப் பொய்யாக்கியிருக்கிறது.தேர்தலில் முன்னணி போட்டியாளர் என்று நோக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி முஹமத் நஷீட் " பயங்கரவாத குற்றவாளி " என்ற காரணத்தால் போட்டியிடமுடியாதவராக தகுதிநீக்கம் செய்யப்பட்டபோது எதிரணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டது.இவ் வருடம் பெப்ரவரியில் சதிமுயற்சியொன்றில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு முன்னாள் ஜனாதிபதி மௌமூன் அப்துல் கையூம் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்.

தேர்தலுக்கு முன்னதாக கூட தேர்தல் ஆணைக்குழு, நீதிமன்றங்கள் மற்றும் பாதுகாப்பு படைகளின் நடத்தைகள் தொடர்பில் ஐயுறவுகள் நிலவின.பிரதான எதிர்க்கட்சியான மாலைதீவு ஜனநாயக கட்சியின் தலைமைக்காரியாலயம் சோதனையிடப்பட்டது. சோலீ இந்தக் கட்சியையே சேர்ந்தவர். இறுதி நேரத்தில் வாக்குகள் எண்ணும் நடைமுறைகளிலும்  மாற்றம் செய்யப்பட்டதனால் ஞாயிற்றுக்கிழமைய வாக்களிப்பின்போது சில குழப்பங்கள் ஏற்பட்டன. இந்திய ஊடகவியலாளர்கள் உட்பட வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலருக்கு விசா மறுக்கப்பட்டது.

ஆனால், அதிர்ஷ்டவசமாக தேர்தலைப் பற்றிய பீதிகளை முடிவுகன் பொய்யாக்கிவிட்டன. தோல்வியை ஒப்புக்கொண்ட ஜனாதிபதி யாமீன், சோலியைச் சந்தித்ததையடுத்து சுமுகமான அதிகார மாற்றத்தை உறுதிசெய்வதாக சூளுரைத்திருக்கிறார்.

புதுடில்லியைப் பொறுத்தவரை, தேர்தல் முடிவுகள் பிரத்தியேகமாக மகிழ்ச்சிக்குரியவை. ஏனென்றால், பல வருடங்களாக பின்னோக்கிய திசையில் சென்றுகொண்டிருந்த மாலைதீவுடனான உறவுகளை திருத்தி மீளமைக்க இந்த தேர்தல் ஒரு சந்தர்ப்பத்தை இந்தியாவுக்கு வழங்கியிருக்கிறது. சீனாவுடன் யாமீன் கொண்டிருக்கும் நெருக்கமான புரிந்துணர்வின் விளைவாகவே மாலேக்கும் புதுடில்லிக்கும் இடையிலான உறவுகள் சீர்கேடடைந்தன என்று நம்பப்படுகிறது. சீனாவிடம் மாலைதீவு பெருமளவுக்கு கடன்களைப் பெற்றுள்ளது.

யாமீன் இவ்வருடம் பிரகடனம் செய்த அவசரகாலநிலையை இந்தியா கடுமையாகக் கண்டனம் செய்தது.அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாலைதீவில் பணிபுரியும் இந்தியர்களுக்கு விசாவைப் புதுப்பிக்க யாமீன் அரசாங்கம் மறுத்தது.இவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் புதிய  அரசாங்கம் பதவியேற்றதும் இந்த விவகாரத்தில் மாற்றம் ஏற்படும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மாலைதீவில் நிலைகொண்டுள்ள இந்திய கரையோரக் காவல்படை மற்றும் விமானப்படையினரின் எதிர்கால நிலை குறித்து இந்தியா இப்போது பேச்சுவார்த்தைகளைப் புதுப்பிக்கமுடியும்.ஜூன் மாதத்துக்குப் பிறகு இவர்களின் விசா புதுப்பிக்கப்படாமல் இழுபறிநிலையில் இருக்கிறது.

ஜனாதிபதி தேர்தலின் இடைக்கால முடிவுகளை விரைந்து வரவேற்றிருக்கும் இந்தியா மாலைதீவு ஜனநாயக  கட்சியையும் துணை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் பைசால் நசீமின் ஜம்ஹூரி கட்சியையும் பாராட்டியிருக்கிறது. மாலைதீவுடனான விவகாரங்களில் முன்னோக்கிச் செல்லவேண்டுமானால், புதுடில்லி அந்த நாட்டின் உள் அரசியலில் கட்சிசார்பு நிலை எடுப்பதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.பரந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நோக்குகையில் சீனாவுடன் கயிறிழுப்பில் ஈடுபடுவதை விடுத்து மாலைதீவின் ஸ்திரத்தன்மையிலும் அபிவிருத்தியிலும் இந்தியா பங்காளியாகவேண்டும்.

 

(The Hindu editorial on 25 September 2018 )

http://www.virakesari.lk/article/41252

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.