Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சரியான அரசியல் தலைமைத்துவமின்மையே அரசியலமைப்பு இழுத்தடிப்புக்கு காரணம்: சுமந்திரன்


Recommended Posts

சரியான அரசியல் தலைமைத்துவமின்மையே அரசியலமைப்பு இழுத்தடிப்புக்கு காரணம்: சுமந்திரன்

 

 

M.A.Sumanthriran-720x450.jpg

அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்ற போதும், ஜனாதிபதி அதற்கான சரியான அரசியல் தலைமைத்துவத்தை கொடுத்து நகர்த்தாமல் இருப்பதே இழுத்தடிப்பிற்கு காரணமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பொறுப்புக்கூறல் விடயத்திலும் இதே இழுத்தடிப்புக் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஐ.நா. பொதுச்சபையின் 73ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஆற்றிய உரை தொடர்பாக, எமது ஆதவன் செய்திச் சேவைக்கு இன்று (வியாழக்கிழமை) கருத்துத் தெரிவித்த சுமந்திரன் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் மற்றும் 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 34/1 என்ற தீர்மானம் இரண்டிற்கும் இலங்கை இணை அனுசரணை வழங்கியிருந்தது. அவற்றிலே, குற்றங்கள் தொடர்பாக சர்வதேச தலையீட்டுடன் நீதி விசாரணை இடம்பெறும் என்பதை இலங்கை ஏற்றுக்கொண்டது.

எனினும், சர்வதேச தலையீடு வேண்டாம் என்றும் உள்நாட்டிலேயே பிரச்சினையை தீர்த்துக்கொள்கின்றோம் என்றும் கூறியிருப்பதன் மூலம் இலங்கைக்கு மட்டுமன்றி, சர்வதேசத்திற்கு எழுத்துமூலமாக இரண்டு தடவைகள் வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி மீறியுள்ளாரென சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டுமென சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

http://athavannews.com/சரியான-அரசியல்-தலைமைத்து/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்துக்கே தலைமை இல்லை, இந்நிலையில் சிங்கள இனத்துக்குத் தலைமை தேடும் சுமந்திரன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.