Jump to content

அரசியல் கைதிகளை விடுதலைசெய்யக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்


Recommended Posts

அரசியல் கைதிகளை விடுதலைசெய்யக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

 

 
 

 

அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி, கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செலகத்துக்கு முன்பாக தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

42575401_465832063905902_285716037013130

இதனால் குறித்தப் பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் நீர்த்தாரை வாகனங்களும் பாதுகாப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

42603568_528470044243345_527057063770482

இதனால் குறித்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

42651966_546601235775824_205100932809306

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்த பிக்குகள் மற்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

42666817_1400783843389103_36576586897471

DoFieV2VsAAGxtL.jpg

DoFigL9UYAAo80f.jpg

DoFikCjUwAANZ94.jpg

DoFiiKYVsAAX7G6.jpg

http://www.virakesari.lk/article/41276

Link to comment
Share on other sites

மன்னாரில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரத போராட்டம்

 

 

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும் இன்று காலை 10.30 மணியளவில்  மன்னார் மாவட்டச்  செயலகத்திற்கு முன்பாக அடையாள உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்றது.

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த அடையாள உண்ணாவிரத போராட்டமானது உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடன் நிறைவேற்றக் கோரியும், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடன் நீக்கக்கோரியும் குறித்த அடையாள உண்ணாவிரத போராட்டம் இடம் பெற்றது.

unnaviratham_photo__13_.jpg

அனுராதபுரம்  சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மதியரசன் சுலக்ஷன், இராசதுரை திருவருள், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், இராசாபல்லவன் தபோரூபன், இராசதுரை ஜெகன், சூரியகாந்தி ஜெயச்சந்திரன், கிளிநொச்சியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் சிவசீலன், வவுனியாவைச் சேர்ந்த தங்கவேல் நிமலன் ஆகிய 8 கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

unnaviratham_photo__8_.jpg

போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  அரசியல் கைதிகள்  உள்ளிட்ட ஏனைய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின்  விடுதலையை வலியுறுத்தி  வடக்கு, கிழக்கில் தொடர் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  கைதிகளை தமிழ் அரசியல் தலைமைகள்  உள்ளிட்ட அரச, அரசசார்பற்ற  நிறுவனங்களும் நேரடியாக சென்று  பார்வையிட்டு வருகின்றனர். 

unnaviratham_photo__2_.jpg

போராட்டத்தில் ஈடுபட்டுவரும்   அரசியல் கைதிகள்  உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அரசியல் கைதிகளின்  விடுதலை தொடர்பான போராட்டங்களும் அழுத்தங்களும்   கடுமையாக பிரயோகிக்கப்பட்டுள்ள நிலையில்,  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற   உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்று நேரடியாக சந்தித்தனர். 

unnaviratham_photo__7_.jpg

இந்த நிலையில், அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலை  மற்றும் பயங்கரவாத  தடைச்சட்ட நீங்கப்பட வேண்டும் போன்ற  கோரிக்கைகளை முன்வைத்து  மன்னாரில்  இந்த போராட்டம்  மேற்கொள்ளப்பட்டது. 

போராட்டத்தில் மன்னர் மாவட்ட பிரஜைகள் குழுவின் உறுப்பினர்கள், சர்வமத தலைவர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், மன்னார் நகரசபை தலைவர் மற்றும் நகரசபை உறுப்பினரகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

http://www.virakesari.lk/article/41277

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.