Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

அரசியல் கைதிகளை விடுதலைசெய்யக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்


Recommended Posts

அரசியல் கைதிகளை விடுதலைசெய்யக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

 

 
 

 

அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி, கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செலகத்துக்கு முன்பாக தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

42575401_465832063905902_285716037013130

இதனால் குறித்தப் பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் நீர்த்தாரை வாகனங்களும் பாதுகாப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

42603568_528470044243345_527057063770482

இதனால் குறித்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

42651966_546601235775824_205100932809306

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்த பிக்குகள் மற்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

42666817_1400783843389103_36576586897471

DoFieV2VsAAGxtL.jpg

DoFigL9UYAAo80f.jpg

DoFikCjUwAANZ94.jpg

DoFiiKYVsAAX7G6.jpg

http://www.virakesari.lk/article/41276

Link to comment
Share on other sites

மன்னாரில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரத போராட்டம்

 

 

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும் இன்று காலை 10.30 மணியளவில்  மன்னார் மாவட்டச்  செயலகத்திற்கு முன்பாக அடையாள உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்றது.

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த அடையாள உண்ணாவிரத போராட்டமானது உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடன் நிறைவேற்றக் கோரியும், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடன் நீக்கக்கோரியும் குறித்த அடையாள உண்ணாவிரத போராட்டம் இடம் பெற்றது.

unnaviratham_photo__13_.jpg

அனுராதபுரம்  சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மதியரசன் சுலக்ஷன், இராசதுரை திருவருள், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், இராசாபல்லவன் தபோரூபன், இராசதுரை ஜெகன், சூரியகாந்தி ஜெயச்சந்திரன், கிளிநொச்சியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் சிவசீலன், வவுனியாவைச் சேர்ந்த தங்கவேல் நிமலன் ஆகிய 8 கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

unnaviratham_photo__8_.jpg

போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  அரசியல் கைதிகள்  உள்ளிட்ட ஏனைய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின்  விடுதலையை வலியுறுத்தி  வடக்கு, கிழக்கில் தொடர் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  கைதிகளை தமிழ் அரசியல் தலைமைகள்  உள்ளிட்ட அரச, அரசசார்பற்ற  நிறுவனங்களும் நேரடியாக சென்று  பார்வையிட்டு வருகின்றனர். 

unnaviratham_photo__2_.jpg

போராட்டத்தில் ஈடுபட்டுவரும்   அரசியல் கைதிகள்  உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அரசியல் கைதிகளின்  விடுதலை தொடர்பான போராட்டங்களும் அழுத்தங்களும்   கடுமையாக பிரயோகிக்கப்பட்டுள்ள நிலையில்,  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற   உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்று நேரடியாக சந்தித்தனர். 

unnaviratham_photo__7_.jpg

இந்த நிலையில், அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலை  மற்றும் பயங்கரவாத  தடைச்சட்ட நீங்கப்பட வேண்டும் போன்ற  கோரிக்கைகளை முன்வைத்து  மன்னாரில்  இந்த போராட்டம்  மேற்கொள்ளப்பட்டது. 

போராட்டத்தில் மன்னர் மாவட்ட பிரஜைகள் குழுவின் உறுப்பினர்கள், சர்வமத தலைவர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், மன்னார் நகரசபை தலைவர் மற்றும் நகரசபை உறுப்பினரகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

http://www.virakesari.lk/article/41277

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்னைப்பொறுத்தவரை சில துறைகளை(பொதுவாக சேவை சார்ந்த)  தேர்ந்தெடுக்க முன்பு சரியான தெளிவு இருக்க வேண்டும் என நினைப்பதுண்டு ஏனெனில் அவற்றிற்கான கேள்வி அதிகம், வழங்கல் குறைவு (உ+ம் doctors , nurse, social worker) .அதில் முழுமையான மனதோடு ஈடுபடாமல் மற்றவர்களின் வற்புறுத்தல், social statusற்காக தேர்ந்தெடுத்து இன்னொருவரின் இடத்தினை வீணாக்குவதால் சமுதாயத்திற்குத்தான் இழப்பு என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும் இதைப்பற்றி தெளிவுபடுத்தவேண்டியதும் அவசியம் என்பதால் இதில் நான் “ கோபம்” என்பதை விட .. விளங்கப்படுத்த வேண்டும் என்ற ஆதங்கமே இருப்பதை அவதானித்தேன்..   மேலும், இன்னொரு விடயம், இது ஒரு பொது ஊடகம், இங்கே எழுதும் எல்லோருக்கும் ஒரு சமுதாய கடமை உள்ளதை மனதில் வைத்து எழுதினால் நன்றாக இருக்கும் என நினைப்பதுண்டு,ஆனால் அது சாத்தியப்படுமா என்பதும் எனக்கு சந்தேகமே
    • ரிஷாட்டிற்கும் அவர் குடும்பத்துக்கும் சார்பாக (அதாவது இந்த சிறுமியின் குடும்பத்துக்கு எதிராக) வாதாடுவது தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகர்  K.V தவராசாவின் மனைவியாரான கெளரிசங்கரி தவராஜா ஆகும். ..கேட்டால் இது தொழில் ரீதியிலானது என்று சப்பைக் கட்டு கட்டவும் பலர் உள்ளனர். ஆனால் தொழிலில் தர்மம் என்றது கொஞ்சமாவது இருக்க வேண்டாமா?
    • இப்பொழுது அப்படி சிந்திக்கமாட்டார்கள் என நம்புவோமாக.. ஆனால் இம்முறையும் ஒலிம்பிக்கில் அல்ஜீரியா(Fethi Nourine ) மற்றும் சூடானை(  Mohamed Abdalrasool ) சேர்ந்த இரு Judo வீரர்கள், இஸ்ரேலிய Judo வீரரை எதிர்த்து போட்டியிட மறுத்து வெளியேறியதாக செய்தி உள்ளது..    https://www.google.com.au/amp/s/amp.theguardian.com/sport/2021/jul/24/algerian-judoka-sent-home-from-olympics-after-refusing-to-compete-against-israeli   https://www.google.com.au/amp/s/amp.theguardian.com/sport/2021/jul/26/judo-athlete-sudan-withdraws-before-israel    
    • நான் சொல்லியதில் "எனது" கோபத்தை யாராவது உணர்கிறீர்களா?   அப்படி இருந்தால், நாதமுனியும் "எனது" கோபம் என்று புரிவதில் நியாயம் இருக்கிறது.  நாதமுனியை தவிர்த்து இன்னொருவர் பதில் அளித்தாலே, இத பற்றி என்னால் தொடர முடியும்.  
    • நாதமுனி, நீங்கள் tony பிளேயர் இன் பின் என்பது  , நான் சொல்லிய உங்கள் மதியில் உருவாகி இருக்கும் "கட்டணம்,  பல்கழலை under graduate  செலவுகள் முழுவதையும் செலுத்தி விடுகிறது"   என்பதற்கு மேலும் வலு சேர்க்கிறது. அதன் ஆதாரம், உங்கள் மதியில்  இருந்தே, ஆரம்பத்தில் (கிருபன், டோனி Blair, 2010 வர முதல்) "எனது காசில் அல்லது கடனை வாங்கி படித்தேன்." "தனி அமைப்பான பல்கலைக்கழகங்களில், (அதாவது அரசுக்கு சொந்தமில்லாத), பயிலும் எனக்கு, பயில்விக்க, எங்கே வரிப்பணம் செலவாகிறது என்று விளக்க முடியுமா?"  அது அரச மானியம் அல்ல. தர்மஸ்தாபன status. இங்குள்ள secondary independant ஸ்கூல் அனைத்துக்கும் இதே ஸ்டேட்டஸ் தான். அதாவது, லாபத்துக்கு வரி இல்லை. ஆனால் லாபம் ஒரு அளவுக்கு மேல் போகாதவாறு, ஸ்காலர்ஷிப், பர்சரி கொடுத்து விட வேண்டும், என்ற நிபந்தனையுடன்"  "கட்டணம்,  பல்கழலை under graduate  செலவுகள் முழுவதையும் செலுத்தி விடுகிறது"  என்பதில் இருந்து உங்களால் விடு பட முடியவில்லை (வேறு புள்ளி விபரங்கள் தரப்பட்டும்,  அதில் எனது நண்பர்களுடன் அடைந்த  தனிப்பட்ட அவதான  குறைபாடுகளை நான் ஏற்றுக் கொண்டும், கோசானும் அந்த புள்ளி விபரத்தின் ball park ஆக சரியாக இருக்கிறது என்று அவரது வட்டத்தின் வழியாக அடைந்த தரவுகளை கொண்டு சொல்லியும்).    அதுவே, மறுபடியும் Tony Blair  ஐ நீங்களாவே கொண்டு வந்த போது, மறு படியும், உங்களை அறியாமலே  "1997ம் ஆண்டு டோனி ப்ளாயர் அரசின் பின்னர் தான், பல்கலைக்கழக இலவசக்கல்வி முறை ஒழிந்து, கட்டணம் செலுத்தும் முறை வந்தது."   குறிப்பாக, Tony Blair ஐ நீங்களாவே கொண்டு வந்ததே,  உங்களின்    "கட்டணம்,  பல்கழலை under graduate  செலவுகள் முழுவதையும் செலுத்தி விடுகிறது" மதி பிம்பத்தை (state of mind) தெளிவாக வெளிக்காட்டியது, நான் சந்தேகித்ததை மீள் உறுதிப்படுத்தியது.    மருவளமாக, Tony Blair ஐ  நீங்கள் கொண்டு வந்து இருக்க விட்டால், நீங்கள் சொல்லும் இப்பொது சொல்லும் விளக்கமும் ஓரளவு பொருந்தி வரும். Tony Blair இதில் முற்றுமுழுதான reference point  என்பதை (இப்போது கூட) நீங்கள் உணரவில்லை. நாதமுனி, மனித discrepancies ஐ திட்டமிட்டாலும் தடுக்க முடியாது.  இதுவே crime scene இல் கூட செய்த நபர்களை  எதோ ஓர் வழியில் தொடர்பு படுத்துவது (implicate). 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.