Jump to content

டக்ளஸின் பெயரைப் பயன்படுத்தி இந்தியக் கலைஞர்களுக்கு மிரட்டல்?


Recommended Posts

டக்ளஸின் பெயரைப் பயன்படுத்தி இந்தியக் கலைஞர்களுக்கு மிரட்டல்?

 

 

யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சிக்கு வரவிருந்த இந்திய இசைக் கலைஞர்கள் சிலர் தமக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் பெயரைப் பயன்படுத்தி மிரட்டல் விடப்பட்டது என்றும், தாம் அந்த இசை நிகழ்சிக்கு வரப் போவதில்லை என்றும் சமூக வலைத் தளங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தமக்குத் தெரியப்படுத்தாது சில நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்றும், நிகழ்வைப் பின்தள்ளி வைத்தனர் என்றும் தெரிவித்துள்ள இந்தியக் கலைஞர்கள், விமானப் பயணச் சீட்டுக்கான பணத்தையும் ஏற்பாட்டாளர்கள் தரவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

அவை தொடர்பில் கேட்டபோது ஏற்பாட்டாளர்கள் மிரட்டும் வகையில் உரையாடினர் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் பெயரைப் பயன்படுத்தி மிரட்டினர் என்றும் அந்த இந்தியக் கலைஞர்கள் முகநூலில் வெளியிட்டுள்ள காணாலியில் குறிப்பிட்டுள்ளனர்.

இது போன்ற காரணங்களால் தாம் இசை நிகழ்ச்சிக்கு வரப் போவதில்லை என்று முகநூலில் அவர்கள் வெளிட்டுள்ள காணாலிக் காட்சியில் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

 

https://newuthayan.com/story/13/டக்ளஸின்-பெயரைப்-பயன்படுத்தி-இந்தியக்-கலைஞர்களுக்கு-மிரட்டல்.html

Link to post
Share on other sites

இந்தியக் கலைஞர்களை அச்சுறுத்தவில்லை – நிகழ்வு ஏற்பாட்டாளர்கள்!!

 

இந்தியக் கலைஞர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் விடுக்கவில்லை. இசை நிகழ்ச்சிக்கு வருவதாகத் தெரிவித்த பாடகி குறிப்பிட்ட திகதிக்கு வராதமையே குழப்பங்களுக்குக் காரணம் என்று இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

அது தொடர்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கருத்துத் தெரிவித்தபோது அவ்வாறு அச்சுறுத்தல் விடுவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர்.

இசை நிகழ்வுக்கு வரவிருந்த பாடகி ஒருவர் வராததை அடுத்தே நிகழ்வு பிற்போடப்பட்டது. இசைக் கலைஞர்களால் பதிவு செய்யப்பட்டிருந்த விமானச் பணச் சீட்டில் இருந்த சிக்கல் காரணமாகவே பணம் வழங்குவதில் தடங்கல் நிலைமை காணப்படுகின்றது. அரசியல் வாதிகளின் பெயர்களைப் பயன்படுத்தி எந்த அச்சுறுத்தலும் விடுவிக்கப்படவில்லை என்று நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://newuthayan.com/story/15/இந்தியக்-கலைஞர்களை-அச்சுறுத்தவில்லை-நிகழ்வு-ஏற்பாட்டாளர்கள்.html

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உன்னிக்கிருஷ்ணனை டக்கிளஸ் நேரடியாகவே வெருட்டினவர் தானே. டக்கிளசின் கூலிகள் என்ன செய்யும். அதுவும் இளம் பெண் பாடகர்களை மிகக் கேவலமாக நடத்த முனைந்துள்ளனர். பாலியல் கூலி கேட்கப்பட்டதாவும் சமூக ஊடகங்களில் செய்திகள் உலாவுகின்றன.

டக்கிளஸ் கூட்டம்.. முழு ஈழத்தமிழினத்தையும் தலைகுனியச் செய்துள்ளது.. இதன் மூலம். 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • உண்மையிலேயே, உங்களுக்கு இந்தியா ஒரு பொருளாதாரப் பூனை மாதிரியாகவாவது தெரியவில்லையா,நாதம்? ஐ ஆம் ரியல்லி ஸாட்...!😗
  • அம்பிகா அன்ரி வடிவில் என்று சொல்லாமல் சொல்லுறீங்கோ .... அன்ரியோட பல்லு கொஞ்சம் எடுப்பாகவும் மூக்கு கொஞ்சம் புடைப்பாக இருப்பதாலும் நிச்சயம் தமிழ் மக்களுக்கு தீர்வு உறுதி   
  • இல்லாமல் என்ன  அங்கே தமிழர்களையும், முஸ்லிம்களையும் திரத்தி விட்டு நாட்டை தனி சிங்கள நாடாகமாற்றுவோம்  என்று கூச்சல் போடும் நாட்டுப்பற்றாளர்கள், எந்த ஐரோப்பிய நாடோ வளர்ந்த ஆசிய பசுபிக் (அவுஸ், நியூசி, சிங்கை,தென் கொரியா,ஜப்பான்  ) நாடோ நிரந்தர குடியுரிமை அளிக்கிறது என்று அறிவித்தால் போதும் வரிசையில் துண்டை போட்டுக்கொண்டு முன்வரிசையில் நிற்பார்கள் ,  முகப்புத்தகத்தில் பார்க்கவில்லையா நந்தசேனவின் உத்தியோகபூர்வமற்ற ஊதுகுழல்கள் முக்கால்வாசி வெளிநாடுகளில் வெள்ளைகளின் ஜனநாயகத்தை சுவைத்துக்கொண்டு நாட்டை எரித்து விளையாடிக்கொண்டிருப்பதை  
  • சிங்கள ராணுவத்திலும், காவல்த்துறையிலும் பெருமளவில் தமிழ் இளைஞர்கள் இணைத்துக்கொள்ளப்படுவது முன்னர் நடந்திருக்கவில்லை. மிகக் குறைவான தமிழர்களே ராணுவத்தில் முன்னர் இருந்தனர். சுதந்திரம் பெற்ற காலத்தில் இலங்கை ராணுவத்தின் தளபதியாக ஒரு தமிழரான அன்டன் முத்துக்குமார் இருந்திருக்கிறார். அதன்பிறகு பிரிகேடியர் துரைராஜா என்பவர் மருத்துவப் பிரிவிற்குப் பொறுப்பாக 80 களின் இறுதிப்பகுதியில் இருந்திருக்கிறார்.  பின்னர் ஆயுதப் போராட்டம் முனைப்புப் பெற்றபின்னர் புலிகளுக்கெதிரான இயக்கங்களில் இருந்தவர்கள் ராணுவத்தின் துணைப்படையாக, உளவாளிகளாக செயற்பட்டு வந்தனர். ராசீக், புளொட் மோகன், டக்கிளஸ் போன்றவர்கள் இதற்குள் அடங்கும்.  ஆனால், ராணுவத்தில் தமிழ் இளைஞர்கள் ஆயிரக் கணக்கில் சேர்க்கப்பட்டது கருணாவின் பிரிவின் பின்னர்தான். அதிலும் குறிப்பாக இவர்கள் ஒன்றில் புலிகளின் முன்னாள்ப் போராளிகளாக இருந்தவர்கள் அல்லது கருணாவின் பிரிவின் பின்னால் அவரோடு இணைந்தவர்கள். கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையே நேரடியான மோதல் வலுத்தபோது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து கருணா சுமார் 2500 போராளிகளுடன் பிரிந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இவர்களில் ஏறத்தாள அனைவருமே ராணுவத்திலோ அல்லது பொலீஸிலோ சேர்க்கப்பட்டுள்ளதாக கருணா 2009 போர் முடிவுறும் தறுவாயில் கூறியிருந்தார். மாதுரு ஓயா பகுதியில் அமைந்திருந்த ராணுவத்தின் விசேட படைகளுக்கான முகாமிலிருந்தே கருணாவின் போராளிகளில் சுமார் 300 பேர்வரை தொப்பிகல காட்டுப்பகுதியில் செயற்பட்டு வந்ததாக கருணா கூறியிருக்கிறார். இவர்களை விடவும் இன்னும் 2,200 கருணா குழு போராளிகள் ராணுவத்தில் பல்வேறு படைப்பிரிவுகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.  இவ்வாறு தமிழ் இளைஞர்கள் கருணாவால் ராணுவத்தில் இணைக்கப்பட்டது வெறுமனே வேலைவாய்ப்பிற்காகத்தான் என்று கூறி ஒதுக்க முடியாது. 2009 இல் போர் நிறைவடைய முன்னர் இணைக்கப்பட்ட இவர்கள் அனைவருமே ஒரு காரணத்திற்காகத்தான் ராணுவத்திற்குள் உள்வாங்கப்பட்டார்கள், அது புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபடுத்த, தமிழர்களுக்கெதிரான போரில் தமிழர்களையே பயன்படுத்தி, சிங்கள இளைஞர்களின் இழப்புக்களைக் குறைத்துக்கொள்ள.  ஆனால், யுத்தம் முடிவடைந்தபின்னர் ராணுவத்திலும், பொலீஸாரிலும் இணைக்கப்பட்டு வரும் தமிழர்களின் நிலை வேறானது. வேலைவாய்ப்பு, வறுமை போன்ற காரணங்களுக்காக இவர்கள் இணைக்கப்படுகிறார்கள். வன்னியில் போர் முடிந்த பின்னர் ராணுவச் சேவையில் பல தமிழ்ப் பெண்களை ராணுவம் சேர்த்தது. சிலர் மாயமான காரணங்களால் சுகயீனமுற்றிருந்தார்கள், பலர் ராணுவத்தை விட்டுத் தப்பியோட முயன்றிருந்தார்கள்.  சிங்கள ராணுவத்தில் தமிழர்கள் உள்வாங்கப்படுவது நிச்சயமாக தமிழினத்தின் இருப்பிற்கும், அபிலாஷைகளுக்கும் நேர் எதிரானது. இன்று இதனை ஆதரிக்கும் சிலர் என்னதான் காரணங்களை முன்வைத்தாலும், அவர்களின் அடிமனதிலும் இந்த எண்ணம் இருக்கும் என்பது திண்ணம். ஒரேயொரு உண்மை என்னவென்றால், போரின் பின்னரான எமது சமூகத்தின் நிலையும், வறுமையும், வேலைவாய்ப்பின்மையும் இளைஞர்களை சிங்கள ராணுவத்தில் சேர நிர்ப்பந்திக்கிறது. நாம் ஒரு சமூகமாக இவர்களுக்கான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தாதவரை இதனைத் தடுக்க முடியாதிருக்கும். 
  • 121 விபத்துக்கள், 14 மரணங்கள், அதுதான் சாராம்சம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.