Jump to content

சுன்னாகத்தில் இருவர் கைது!!


Recommended Posts

சுன்னாகத்தில் இருவர் கைது!! – பயங்கர ஆயுதங்கள் பல மீட்பு!!

 

சுன்னாகத்தில் வாள்கள், கோடரிகள் போன்ற ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஒருவரிடம் இருந்து ஹெரொயினும் கைப்பற்றப்பட்டுள்ளது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

தகவலுக்கு ஒன்றுக்கு அமைய சுன்னாகம் பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. அங்கிருந்த மேலும் சிலர் தப்பியோடியுள்ளனர்.

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் மேலுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் வழங்கிய தகலுக்கு அமைய கொக்குவில் பகுதியில் உள்ள கோயில் ஒன்றுக்கு மேல் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள், கைக்கோடரிகள் மீட்கப்பட்டுள்ள என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

20180927_154308-750x430.jpg

https://newuthayan.com/story/16/சுன்னாகத்தில்-இருவர்-கைது-பயங்கர-ஆயுதங்கள்-பல-மீட்பு.html

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.