-
Tell a friend
-
Topics
-
6
By Kuna kaviyalahan
தொடங்கப்பட்டது
-
Posts
-
By புங்கையூரன் · Posted
ஆழ்ந்த இரங்கல்கள்.......! -
By புங்கையூரன் · Posted
உண்மையிலேயே, உங்களுக்கு இந்தியா ஒரு பொருளாதாரப் பூனை மாதிரியாகவாவது தெரியவில்லையா,நாதம்? ஐ ஆம் ரியல்லி ஸாட்...!😗 -
By அக்னியஷ்த்ரா · Posted
அம்பிகா அன்ரி வடிவில் என்று சொல்லாமல் சொல்லுறீங்கோ .... அன்ரியோட பல்லு கொஞ்சம் எடுப்பாகவும் மூக்கு கொஞ்சம் புடைப்பாக இருப்பதாலும் நிச்சயம் தமிழ் மக்களுக்கு தீர்வு உறுதி -
By அக்னியஷ்த்ரா · Posted
இல்லாமல் என்ன அங்கே தமிழர்களையும், முஸ்லிம்களையும் திரத்தி விட்டு நாட்டை தனி சிங்கள நாடாகமாற்றுவோம் என்று கூச்சல் போடும் நாட்டுப்பற்றாளர்கள், எந்த ஐரோப்பிய நாடோ வளர்ந்த ஆசிய பசுபிக் (அவுஸ், நியூசி, சிங்கை,தென் கொரியா,ஜப்பான் ) நாடோ நிரந்தர குடியுரிமை அளிக்கிறது என்று அறிவித்தால் போதும் வரிசையில் துண்டை போட்டுக்கொண்டு முன்வரிசையில் நிற்பார்கள் , முகப்புத்தகத்தில் பார்க்கவில்லையா நந்தசேனவின் உத்தியோகபூர்வமற்ற ஊதுகுழல்கள் முக்கால்வாசி வெளிநாடுகளில் வெள்ளைகளின் ஜனநாயகத்தை சுவைத்துக்கொண்டு நாட்டை எரித்து விளையாடிக்கொண்டிருப்பதை -
சிங்கள ராணுவத்திலும், காவல்த்துறையிலும் பெருமளவில் தமிழ் இளைஞர்கள் இணைத்துக்கொள்ளப்படுவது முன்னர் நடந்திருக்கவில்லை. மிகக் குறைவான தமிழர்களே ராணுவத்தில் முன்னர் இருந்தனர். சுதந்திரம் பெற்ற காலத்தில் இலங்கை ராணுவத்தின் தளபதியாக ஒரு தமிழரான அன்டன் முத்துக்குமார் இருந்திருக்கிறார். அதன்பிறகு பிரிகேடியர் துரைராஜா என்பவர் மருத்துவப் பிரிவிற்குப் பொறுப்பாக 80 களின் இறுதிப்பகுதியில் இருந்திருக்கிறார். பின்னர் ஆயுதப் போராட்டம் முனைப்புப் பெற்றபின்னர் புலிகளுக்கெதிரான இயக்கங்களில் இருந்தவர்கள் ராணுவத்தின் துணைப்படையாக, உளவாளிகளாக செயற்பட்டு வந்தனர். ராசீக், புளொட் மோகன், டக்கிளஸ் போன்றவர்கள் இதற்குள் அடங்கும். ஆனால், ராணுவத்தில் தமிழ் இளைஞர்கள் ஆயிரக் கணக்கில் சேர்க்கப்பட்டது கருணாவின் பிரிவின் பின்னர்தான். அதிலும் குறிப்பாக இவர்கள் ஒன்றில் புலிகளின் முன்னாள்ப் போராளிகளாக இருந்தவர்கள் அல்லது கருணாவின் பிரிவின் பின்னால் அவரோடு இணைந்தவர்கள். கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையே நேரடியான மோதல் வலுத்தபோது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து கருணா சுமார் 2500 போராளிகளுடன் பிரிந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இவர்களில் ஏறத்தாள அனைவருமே ராணுவத்திலோ அல்லது பொலீஸிலோ சேர்க்கப்பட்டுள்ளதாக கருணா 2009 போர் முடிவுறும் தறுவாயில் கூறியிருந்தார். மாதுரு ஓயா பகுதியில் அமைந்திருந்த ராணுவத்தின் விசேட படைகளுக்கான முகாமிலிருந்தே கருணாவின் போராளிகளில் சுமார் 300 பேர்வரை தொப்பிகல காட்டுப்பகுதியில் செயற்பட்டு வந்ததாக கருணா கூறியிருக்கிறார். இவர்களை விடவும் இன்னும் 2,200 கருணா குழு போராளிகள் ராணுவத்தில் பல்வேறு படைப்பிரிவுகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தமிழ் இளைஞர்கள் கருணாவால் ராணுவத்தில் இணைக்கப்பட்டது வெறுமனே வேலைவாய்ப்பிற்காகத்தான் என்று கூறி ஒதுக்க முடியாது. 2009 இல் போர் நிறைவடைய முன்னர் இணைக்கப்பட்ட இவர்கள் அனைவருமே ஒரு காரணத்திற்காகத்தான் ராணுவத்திற்குள் உள்வாங்கப்பட்டார்கள், அது புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபடுத்த, தமிழர்களுக்கெதிரான போரில் தமிழர்களையே பயன்படுத்தி, சிங்கள இளைஞர்களின் இழப்புக்களைக் குறைத்துக்கொள்ள. ஆனால், யுத்தம் முடிவடைந்தபின்னர் ராணுவத்திலும், பொலீஸாரிலும் இணைக்கப்பட்டு வரும் தமிழர்களின் நிலை வேறானது. வேலைவாய்ப்பு, வறுமை போன்ற காரணங்களுக்காக இவர்கள் இணைக்கப்படுகிறார்கள். வன்னியில் போர் முடிந்த பின்னர் ராணுவச் சேவையில் பல தமிழ்ப் பெண்களை ராணுவம் சேர்த்தது. சிலர் மாயமான காரணங்களால் சுகயீனமுற்றிருந்தார்கள், பலர் ராணுவத்தை விட்டுத் தப்பியோட முயன்றிருந்தார்கள். சிங்கள ராணுவத்தில் தமிழர்கள் உள்வாங்கப்படுவது நிச்சயமாக தமிழினத்தின் இருப்பிற்கும், அபிலாஷைகளுக்கும் நேர் எதிரானது. இன்று இதனை ஆதரிக்கும் சிலர் என்னதான் காரணங்களை முன்வைத்தாலும், அவர்களின் அடிமனதிலும் இந்த எண்ணம் இருக்கும் என்பது திண்ணம். ஒரேயொரு உண்மை என்னவென்றால், போரின் பின்னரான எமது சமூகத்தின் நிலையும், வறுமையும், வேலைவாய்ப்பின்மையும் இளைஞர்களை சிங்கள ராணுவத்தில் சேர நிர்ப்பந்திக்கிறது. நாம் ஒரு சமூகமாக இவர்களுக்கான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தாதவரை இதனைத் தடுக்க முடியாதிருக்கும்.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.