Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இலங்கை தலைவர்களை கொல்ல சதி செய்ததாக வழக்கு: இந்தியரை 3 மாதம் விசாரிக்க அனுமதி


Recommended Posts

இலங்கை தலைவர்களை கொல்ல சதி செய்ததாக வழக்கு: இந்தியரை 3 மாதம் விசாரிக்க அனுமதி

இலங்கை அரச தலைவர்களைக் கொலை செய்வதற்கான சூழ்ச்சி இருப்பதாக வெளியான தகவல் குறித்த விசாரணையின்போது கைது செய்யப்பட்ட இந்தியரை மூன்று மாதங்கள் வரை தடுத்து வைத்து விசாரிக்க இலங்கை பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

கைதான இந்தியருக்கு 3 மாதகால விசாரணை Image captionகைதான இந்தியர்.

கைது செய்யப்பட்ட இந்தியர், கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அக்டோபர் 23ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மனநல, உடல் ரீதியான நோய்கள் தொடர்பான மருத்துவப் பரிசோதனைக்கு அவரை முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அரச தலைவர்களை கொலை செய்வதற்கான சூழ்ச்சி இருப்பதாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவில் பிரதி போலீஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா பேசியிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரிக்க, போலீஸ் அதிகாரி நாலக்க டி சில்வாவை இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் குரல் மாதிரியொன்றை வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை நாலக்க டி சில்வாவிற்கும், இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கும் அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் அறிவித்தார்.

சிறிசேனபடத்தின் காப்புரிமைPMD

யார் இந்த இந்தியர்?

பெயர் மார்சிலி தாமஸ். இந்தியாவின் கேரளா, திருவனந்தாபுரம் என்ற முகவரியை கைதான இந்தியர் போலீசாருக்கு வழங்கியுள்ளார்.

இவர் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுற்றுலா விசாவில் இலங்கை வந்துள்ளார். இவரது சுற்றுலா விசா காலாவதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சரியான தகவல்கள் இல்லையென போலீஸ் பேச்சாளர் கூறினார்.

கைதான இந்தியர் குறித்து விசாரணை

இலங்கையின் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்களுக்கு இருக்கும் உயிர் அச்சுறுத்தல் தொடர்பான தகவல் தன்னிடம் இருப்பதாகக் கூறும் இந்தியர், இலங்கை போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக வெளியாகும் ஊடகச் செய்திகள் பற்றி தமக்கும் தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்தது.

இந்த விவகாரத்தை மிகவும் பாரதூரமானதாக கருதி, இலங்கை அதிகாரிகள் வழங்கிய குறைந்தபட்ச தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட நபரின் பின்னணி பற்றி விசாரணை நடத்துமாறு இந்திய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும், உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கோத்தபயபடத்தின் காப்புரிமைPMD

கைது செய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜை 2000ஆம் ஆண்டு முதல் மனநிலை பாதிக்கப்பட்டவர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

இந்தத் தகவலை இலங்கை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், அது சம்பந்தமாக முழு விசாரணையை நடத்த இந்திய உயர் ஸ்தானிகராலயம் உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

கைதான இந்தியர் குறித்த போலீஸ் செய்தி தொடர்பாளரின் கருத்து

''ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்டவர்களை கொலை செய்ய சூழ்ச்சி நடப்பதாக வெளியான தகவல்கள் குறித்து விசாரித்து வருகிறோம்.

இந்த விசாரணைகளில் இந்தியர் ஒருவரும் கைதுசெயப்பட்டுள்ளார். இந்த நபர் 2017ஆம ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு வந்துள்ளார்.

இலங்கை
  •  

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரை விசாரிக்கின்றனர். அவருக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது என்பதை அவர் தெளிவாக குறிப்பிடவில்லை.

இது குறித்து விரிவாக விசாரணை செய்ய வேண்டியுள்ளது. கொலை சதி தொடர்பில் எவ்வித முக்கியமான தகவல்களும் இந்தியப் பிரஜையிடமிருந்து இதுவரை கிடைக்கவில்லை.

நாமல் குமாரபடத்தின் காப்புரிமைLAHIRU HARSHANA Image captionநாமல் குமார

நாமல் குமார என்ற நபரே ஊடகங்களில் அரச தலைவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வெளியிட்டிருந்தார். இதனை அவதானித்துள்ள இந்தியப் பிரஜை, இதுகுறித்து கேட்கவே நாமல் குமாரவின் வீட்டிற்கு பலமுறை சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.'' என்றார் போலீஸ் பேச்சாளர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

கைது செய்யப்பட்டுள்ள இந்தியர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று சந்தேகிக்கக் கூடிய பல தகவல்களை வெளியிட்டுள்ளதாக நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தனர்.

கைதுசெய்யப்பட்ட இந்தியரை மூன்று மாதம் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை அறிவித்தனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-45669210

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஊர்க்கோவில் என்றால் எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும். உள்ளே அனுமதி இல்லாதவர்கள் வரவே மாட்டார்கள். ஆனால் பெரிய கோயில்களுக்கு, உதாரணம் வல்லிபுரக்கோவில், சாதாரண காலத்திலும், திருவிழாக் காலங்களிலும் பல பகுதிகளிலும் இருந்து வருவார்கள். அவர்களில் தாழ்த்தப்பட்டவர்களை எளிதில் அடையாளம் காண மேலாடை இல்லை என்பதை கட்டாயம் ஆக்கினார்கள். ஆனால் காரணங்களை ஆன்மீகத்தோடு தொடுத்துச் சொல்லும்போது சிறிய ஊர்க்கோவில்களும் கடைப்பிடிக்கின்றார்கள். சேர்ட் போன்ற மேலாடை பிற்காலத்தில்  வந்தபோது, அதை தாழ்த்தப்பட்ட மக்கள் அணியத் தடைவிதித்ததும், மேல் சாதியினர் நாகரீகத்தை பறை சாற்ற எல்லா இடமும் அணிந்திருந்தும் ஏன் கோவிலுக்கு மட்டும் அணியக்கூடாது என்று “மரபை” தொடர்கின்றார்கள்? இது சுத்தம், சுகாதாரத்திற்கும் எதிராக இருந்தும் அதற்கு அருட்கதிர் விஞ்ஞான விளக்கம் கொடுக்கின்றார்கள்!😂
    • சிவா சின்னப்பொடியர் மக்கள் மத்தியில் இல்லாத ஒரு பழக்கத்துக்கு பெரு விளக்கம் கொடுத்துள்ளார் போன்று தெரிகிறது. இன்னுமொரு படமும் உள்ளது, இணைக்க விரும்பவில்லை. தென்பகுதியில், போர்த்துக்கேயர் வந்த போது இருந்த நிலையை படமாக கீறி ஒரு போர்த்துக்கேயர் போட்டிருந்தார். அங்கே பெண்கள் கூட, மேலாடை இல்லாமல், இருப்பதாக படம் உள்ளது.  no comments!!!! நிழலி, குறித்து முன்னர் சொல்லி இருக்கிறேன். விசயம் இருந்தால் நிண்டு களமாடுவார்.... இல்லாவிடில் பிறகு வருவேன் என்பது போல போய் விடுவார். அலம்பறை பண்ணார். 😜😜 👍
    • மேலாடை என்றால் சால்வை, உத்தரீயம் என்பவையும் அடங்கும். ஏன் மேலாடை அணியக்கூடாது என்பதற்கு போலி ஆன்மீகக் காரணங்களும் உள்ளன. சாம்பிளுக்கு ஒன்று..   “ஆலய விக்கிரகங்கள் கருங்கல்லாலேயே வடிவமைக்கப்படுகிறது. கருங்கல்லுக்கு ஒலி,ஒளி அலைகளை எளிதில் தன்பால் ஈர்த்து, தேக்கிவைத்து வெளிப்படுத்தும் ஆற்றல் உண்டு (🤔🤔🤔). எனவே தான் மூலமூர்த்தங்கள் கருங்கற்களில் ஆகம,சிற்ப சாஸ்திர முறைப்படி வடிவமைக்கப்படுகின்றன. "ஓம்" என்ற பிரணவத்தோடு மந்திரங்களைச் சொல்லி, பலவகை அபிஷேகங்களை செய்யும்போது, மின்னூட்டக்கதிர்கள் வெளிப்படுகின்றன(🧐🧐🧐🧐). அம்மின்னூட்டக் கதிர்கள் நம்மீது படும்போது உடம்புக்கு ஆரோக்யத்தையும், மனதுக்கு அமைதியையும் தருவதாக அறிவியலாளர்கள் கூட ஒப்புக்கொண்டுள்ளனர். (🥸🥸🥸🥸) அபிஷேகங்களால் வெளிப்படும் மின்னூட்டக் கதிர்களைத் தேக்கி வைத்து வெளிப்படுத்தும்போது அவை நம் உடம்பின்மீது படவேண்டும். நாள்தோறும் 4,6 காலங்கள் எனத் தொடர்ந்து அபிஷேகங்கள் செய்யப்படுவதால் அந்த அருட்கதிர்கள் தொடர்ந்து வெளிப்பட்டுத் தரிசிக்கச் செல்கின்ற நம் உடம்பில் பட்டு உடம்புக்கு நலத்தையும் மனதுக்கு அமைதியையும் தொடர்ந்து தருகின்றன. இதற்காகவே அபிஷேகங்கள் பலவாக நாள்தோறும் செய்யப்படுகின்றன. இவ் அருட்கதிர்கள்-மின்னூட்டக்கதிர்கள் நம் உடம்பின் மீது படவேண்டும் என்பதற்காகவே கோயிலுக்குள் செல்லும்போது ஆண்கள் மேற் சட்டையின்றி செல்லவேண்டும் என்று நம் முன்னோர்கள் விதித்துள்ளனர்(🤩🤩🤩🤩). பெண்களுக்கு அவர்களின் உடலமைப்பு கருதி இதிலிருந்து விலக்களித்தனர்(☹️☹️☹️☹️). இஃது எல்லா கோயில்களுக்கும் பொருந்தும்.”   படுபாவியள் பெண்களுக்கும் அருட்கதிர்களை பாய விட்டிருந்தால், நான் கோயிலே கதியேன்று கிடந்திருப்பேனே!😜😜🤪🤪
    • நீங்கள் ஒரு தரவுக்காக அல்லது சாட்சியாக இதனை குறிப்பிட்டால்அது தவறான சுட்டுதலாக  இருக்கும் காரணம் அந்தந்த  கிராமங்களில் வாழ்பவர்கள்   ஒவ்வொருவரையும் ஒவ்வொருவரும் அறிந்த காலப்பகுதி  அது அந்த  நேரத்தில் மேலாடையை  களட்டித்தான்  ஆட்களை  அறிய வேண்டும் என்ற நிலை  இருந்திருக்க  வாய்ப்பில்லை  என்றே  நினைக்கின்றேன் உதாரணத்துக்கு எனது  ஊரில்  எல்லோரையம் எல்லோரும் அறிவர் அப்படி  இல்லாது விட்டாலும் வட்டாரத்தை சொன்னாலே போதும்???  
    • சாதியத்தின் அடிப்படையில், கோவிலுக்குள் விடுவதில்லை என்பதனை ஏற்றுக் கொள்கிறேன், அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், அதுக்கும் மேலாடைக்கும் தொடர்பு இல்லை என்பதே எனது கருத்து. மேலே ஒரு உறவு சொன்னது போல, தமிழர்கள் மத்தியில் மேலாடை அணியும் வழக்கம் இருக்கவில்லை. அது ஐரோப்பியர் காலத்தின் பின்னர் வந்தது.  அதையே தான், நிழலிக்கு சொன்னேன். 1495ல் வந்த முதல் ஐரோப்பியர் வாஸ்கோட காமாவை சந்தித்த (தமிழ்) சேர சமூரிய மன்னன் அரியணையில் வெறும் மேலுடன் வீற்று இருந்தார் என்றே அவரது குறிப்புகளில் உள்ளன.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.