Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பன்னாட்டுப் பங்களிப்பை – அரசு நிராகரிக்க முடியாது!!


Recommended Posts

பன்னாட்டுப் பங்களிப்பை – அரசு நிராகரிக்க முடியாது!!

 

இலங்கை விவ­கா­ரத்­தில் பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் தலை­யீடு தேவை­யில்லை என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­விக்க முடி­யாது. பொறுப்­புக் கூறல் விவ­கா­ரத்­தில் பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் பங்கு எப்­ப­டி­யி­ருக்­க­வேண்­டும் என்று இலங்கை அரசே இணை அனு­ச­ரணை வழங்கி இரண்டு தீர்­மா­னங்­களை ஐ.நா. மன்­றத்­தில் நிறை­வேற்­றி­யி­ருக்­கின்­றது. அது பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு கொடுக்­கப்­பட்ட வாக்­கு­றுதி. அதி­லி­ருந்து இலங்கை அரசு ஒரு­போ­தும் பின்­வாங்க முடி­யாது.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புத் தெரி­வித்­துள்­ளது.

ஐ.நா. பொதுச் சபை­யின் 73ஆவது கூட்­டத் தொட­ரில் உரை­யாற்­றிய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, எமது பிரச்­சி­னை­களை நாங்­களே பார்த்­துக் கொள்­கின்­றோம். வெளி­நா­டு­கள் தலை­யி­டத் தேவை­யில்லை என்று கூறி­யி­ருந்­தார்.

இது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நிலைப்­பாடு பற்றி அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­த­தா­வது-,

ஐ.நா. பொதுச் சபை­யில் உரை­யாற்­று­வ­தற்கு முன்­னர் இலங்கை இரா­ணு­வத்­துக்கு பொது­மன்­னிப்பு வழங்­கு­வ­தற்­கான யோசனை முன்­வைக்­க­வுள்­ள­தாக அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தி­ருந்­தார். அதற்கு உட­ன­டி­யா­கவே நாங்­கள் எதிர்ப்பு வெளி­யிட்­டி­ருந்­தோம்.

இலங்­கைக்­கான ஐ.நா. வதி­வி­டப் பிர­தி­நிதி ஊடாக ஐ.நா. பொதுச் செய­ல­ருக்­கும் எங்­கள் எதிர்ப்பை பதிவு செய்­தி­ருந்­தோம். அரச தலை­வர் ஐ.நா. பொதுச் சபை­யில் நிகழ்த்­திய உரை­யில் இந்த விட­யத்தை முன்­வைக்­க­வில்லை என்­பதை அவ­தா­னிக்­கக் கூடி­ய­தாக இருந்­தது.

அவர் தன­து­ரை­யில் வெளி­நாட்­டுத் தலை­யீடு தேவை­யில்லை என்று குறிப்­பிட்­டி­ருந்­தார். வெளி­நாட்­டுத் தலை­யீட்டை நிரா­க­ரித்­தி­ருந்­தார். அதை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஒரு­போ­தும் ஏற்­றுக் கொள்­ளாது.

பொறுப்­புக்­கூ­றல் விவ­கா­ரத்­தில் பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் தலை­யீடு எப்­படி இருக்­க­வேண்­டும் என்று ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் 2015ஆம் ஆண்டு தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.

2017ஆம் ஆண்டு மீண்­டும் நிறை­வேற்­றப்­பட்­டது. இந்த இரண்டு தீர்­மா­னங்­க­ளுக்­கும் இலங்கை அரசு இணை­அ­னு­ச­ரணை வழங்­கி­யுள்­ளது. இது பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு கொடுக்­கப்­பட்ட வாக்­கு­றுதி. அதை மீறு­வதை ஏற்­றுக் கொள்ள முடி­யாது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு உள்­ளூர் அழுத்­தம் இருக்­கக் கூடும். அதற்­காக பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு கொடுத்த வாக்­கு­று­தி­யி­லி­ருந்து விலக முடி­யாது.

அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்சி தொடர்­பில் அவர் வழங்­கிய வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தால் 2016ஆம் ஆண்­டுக்­குள் அந்­தக் கரு­மம் முடி­வ­டைந்­தி­ருக்­கும். அது இந்­த­ளவு தூரத்­துக்கு இழுத்­த­டிக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டி­ய­தில்லை.

கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கு போதிய அர­சி­யல் துணிவு வேண்­டும். அர­சி­யல் தலை­மைத்­து­வத்தை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கொடுத்­தி­ருக்­க­வேண்­டும். இன்­னும் ஓராண்டு அவ­ருக்கு இருக்­கின்­றது. விட­யங்­களை இழுத்­த­டிக்­கா­மல் வழங்­கிய வாக்­கு­று­தி­களை அவர் நிறை­வேற்­ற­வேண்­டும் – என்­றார்.

https://newuthayan.com/story/09/பன்னாட்டுப்-பங்களிப்பை-அரசு-நிராகரிக்க-முடியாது.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.