Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

குடி தண்­ணீர் விவ­கா­ரத்­தில் வடக்­கில் அர­சி­யல்- யாழ். மாந­கர முதல்­வர்!!


Recommended Posts

குடி தண்­ணீர் விவ­கா­ரத்­தில் வடக்­கில் அர­சி­யல்- யாழ். மாந­கர முதல்­வர்!!

 

 

வடக்கு மாகா­ணத்­தின் குடி தண்­ணீர் பிரச்­சி­னை­யில் அர­சி­யலே ஓடு­கின்­றது. இதை நான் பகி­ரங்­க­மா­கத் தெரி­விக்­கின்­றேன் என்று கூறி­னார் யாழ்ப்­பா­ணம் மாந­கர முத­ல­்வர் இம்­மா­னு­வேல் ஆர்னோல்ட்
தெரி­வித்­தார்.

பொதுப் பயன்­பா­டு­கள் ஆணைக்­கு­ழு­வின் மக்­கள் கருத்­துக்­க­ளை­யும் கேட்­ட­றி­யும் கலந்­து­ரை­யா­டல் நேற்று யாழ்ப்­பா­ணத்­தில் நடை­பெற்­றது. அதில் கலந்து கொண்டு கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்­தா­வது-,

எங்­க­ளுக்கு இருக்­கக் கூடிய பிரச்­சி­னை­களை நாங்­கள் எவ்­வாறு தீர்ப்­பது என்­பது பற்­றியே சிந்த வேண்­டுமே தவிர பிரச்­சி­னையை தொடந்­தும் பிரச்­சி­னை­யாக்­கிக் கொண்­டி­ருப்­ப­தில் பய­னில்லை. பிரச்­சி­னை­யைக் கூறு­கின்­ற­வர்­கள் அதைத் தடுப்­ப­தற்­கான வழி­மு­றை­க­ளை­யும் கூற­வேண்­டும். மாற்­றுத் திட்­டங்­களை முன்­வைக்க வேண்­டும். அப்­போ­து­தான் நாங்­கள் அதை நோக்­கிச் செல்ல முடி­யும்.

யாழ்ப்­பா­ணத்­தில் நிலத்­தடி நீர் மாசு­ப­டு­கி­றது என்­றால் அதற்கு என்ன கார­ணம், இன்று சட்ட அனு­ம­தி­யற்ற குழாய்க் கிண­று­கள் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது என்­றால் அதற்­கான அனு­ம­தி­களை யார் கொடு­கி­றார்­கள். இர­வோடு இர­வா­கச் சட்­ட­வி­ரோ­த­மா­கக் குழாய்க் கிணறு அமைக்­கி­றார்­கள்.

அத­னால் எமது நிலத்­தடி நன்­னீர் ஊற்­றுக்­கள் எல்­லாம் பாதிக்­கப்­பட்டு நன்­னீர்க் கிண­று­கள் எல்­லாம் உவர் நீராக மாறு­கின்­றன. இவற்றை யார் அனு­ம­திக்­கின்­ற­னர்?. மக்­க­ளும், தனி­யா­ரும் இணைந்து பணி­யாற்­று­வ­தன் மூலமே இப்­ப­டி­யான விட­யங்­ளைப் பாது­காக்க முடி­யும்.

இப்­போது எங்­க­ளு­டைய வாய்க்­கால்­க­ளிலே கழிவு நீர், மனி­தக் கழிவு நீர் என இரண்­டுமே கலந்து ஓடு­கின்­றது. ஒரு மாந­கர முதல்­வ­ராக நான் கூறக்­கூ­டி­யது எந்­திரி பார­தி­தா­சன் இங்கே இருக்­கி­றார் அவ­ரி­டம் பல திட்­டங்­கள் உள்­ளன. உட­ன­டி­யாக கழிவு நீரை வெளி­யேற்­றும் திட்­டம் ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தன் மூல­மா­கத்­தான் எமது நிலத்­தடி நரைப் பாது­காக்க முடி­யும். மழை­நீர் இப்­போது உள்ள வடி­கா­லிலே வழிது ஓட முடி­யும்.
மழை­நீ­ரைக் கட­லுக்­குள் செல்­ல­வி­டாது தடுத்து நிலத்­துக்­குள் செலுத்­தும் ஷபோது ஒரு ஐந்து ஆண்­டு­க­ளுக்­குப் பின்­னர் நாம் ஐம்­பது ஆண்­டு­க­ளக்கு முன்­னர் எங்­க­ளு­டைய நிலத்­தடி நீரை எவ்­வாறு பயன்­ப­டுத்­த­னோமோ அவ்­வாறு பயன்­ப­டுத்த முடி­யும்.

இர­ணை­மடு நீரை இங்கே கொண்டு வரு­வ­தாக இருந்­தால் ஒரு தேசி­யக் கொள்­கையை, ஒரு மாகா­ணத்­துக்­கு­ரிய கொள்­கையை உரு­வாக்க வேண்­டும். வெறு­மனே பேசிக்­கொண்­டி­ருப்­ப­தில் அர்த்­மில்லை. அங்கு இருப்­ப­வர்­க­ளைக் கொன்று இங்கு தண்­ணீர் குடிப்­ப­தற்கு யாரும் தயா­ரில்லை.

அந்­தத் திட்­டத்தை மறு­து்­தால் அதற்­கான மாற்று வழி என்ன வென்று கூற­வேண்­டும். னோல் அதைக்­கூட அர­சி­ய­லாக்கி இப்­போது பல வேலை­கள் நடக்­கின்­றன. இது ஒரு நீண்­ட­கா­லப் பிரச்­சினை. அனை­வ­ரும் ஒற்­று­மை­யாக பணி­யாற்­று­வ­தன் மூலமே எமது எதிர்­கா­லச் சந்­த­தி­யைக் கொல்­லா­மல், நலி­வுற்ற சந்­த­தி­க­ளாக மாற்­றாது இருக்­க­மு­டி­யும். இதற்கு அனை­வ­ரும் முன்­வர வேண்­டும்.-என்­றார்.

https://newuthayan.com/story/09/குடி-தண்­ணீர்-விவ­கா­ரத்­தில்-வடக்­கில்-அர­சி­யல்-யாழ்-மாந­கர-முதல்­வர்.html

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.