Jump to content

பதின்ம வயது திருமணங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு : மாவட்ட சமூக பாதுகாப்புக்குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டு

Recommended Posts

17000.jpg

யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து குடும்பம் நடத்தும் தம் பதியரின் எண்ணிக்கை அதிகரி த்து வருகிறது. அதனைத் தடுக்க பதின்ம வயது தம்பதியர் அனைவருக்கும் எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ்ப்பாண மாவட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண மாவட்ட சமூகப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர்தலைமையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

யாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக பிரிவுகளையும் சேர்ந்த சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள், சிறுவர் நன்நடத்தை அலுவலர்கள், குடும்பநல உத்தியோக த்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோக த்தர்கள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதன்போது பிரதேச செயலக ரீதியாக சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புத் தொடர்பில் கூட்டத்தில் பங்கேற்ற தரப்பினரால் எடுத்துரைக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 வயதுக்கு ட்பட்ட பெண் பிள்ளைகளும் 18 வயதுக்குட் பட்ட ஆண் பிள்ளைகளும் இணைந்து வாழ் கின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கு சட்டத்தில் இடமில்லை. அத்துடன், பல்வேறு குடும்ப வன்முறைகளுக்கும் இந்தச் செயற்பாடு வழிவகுக்கின்றது என்று கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

யாழ்.மாவட்டத்திலுள்ள பிரதேச செயலர் பிரிவுகள் அனைத்திலும் பதின்ம வயதுத் திருமணங்கள் மற்றும் இணைந்து வாழ்கின்ற சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் உள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை பொலிஸார் முன்னெ டுத்து வருகின்றனர்.

பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து வாழ்கின்றவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். இருவரது பெற்றோர் இணக்கமாகச் சென்றாலும் குற்றமிழைத்த பதின்ம வயதினருக்கு எதி ராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலி ஸார் உறுதியளித்தனர்.             

http://www.valampurii.lk/valampurii/content.php?id=17000&ctype=news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதின்ம வயதில் இணைந்து வாழ்வதற்கு வருமானம் உள்ள தொழில் ஏதாவது செய்கின்றார்களா அல்லது பெற்றோரில், உறவினர்களில் தங்கியுள்ளார்களா?

சொந்தக் காலில் நிற்கமுடியாமல் இணைந்து வாழ்வது நீண்டநாட்களுக்கு நிலைக்காது. சமூக மாற்றங்களுக்குத் தகுந்தமுறையில் தேவையான தகவல்களை இளையோருக்கு பாடசாலை மட்டத்திலேயே கொடுக்கவேண்டும். பொலிஸ் மூலம் தீர்க்கமுடியாது.

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

வெளிநாட்டு பணத்தில் வாழ்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Jude said:

வெளிநாட்டு பணத்தில் வாழ்கிறார்கள்.

ஏன் நீங்கள் அவ்வாறானவர்களுக்கு பணம் அனுப்புகிறீர்களா?

Link to comment
Share on other sites

8 minutes ago, MEERA said:

ஏன் நீங்கள் அவ்வாறானவர்களுக்கு பணம் அனுப்புகிறீர்களா?

நான் மட்டும் தான் வெளிநாட்டில் இருக்கும் இலங்கையில் பிறந்தவரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Jude said:

இலங்கையே எனது பணத்தில் தான் ஓடுது என்று நினைக்க கூடிய நிலையில் நீங்கள் இருக்கும் போது ... 

அப்படியும் நினைப்பு இருக்கிறதா உங்களிடம்,

Link to comment
Share on other sites

Just now, MEERA said:

அப்படியும் நினைப்பு இருக்கிறதா உங்களிடம்,

கனவேதும் கண்டு குழம்பிப்போய் இருக்கிறீர்களா? பில் கெட்சுக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியாதவராக இருக்கிறீர்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Jude said:

கனவேதும் கண்டு குழம்பிப்போய் இருக்கிறீர்களா? பில் கெட்சுக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியாதவராக இருக்கிறீர்களே?

குழம்பியது தாங்கள், அதனால் தான் கருத்து திருத்தப்பட்டுள்ளது. அதுவும் நான் மேற்கோள் காட்டிய பிற்பாடு.

7 minutes ago, Jude said:

நான் மட்டும் தான் வெளிநாட்டில் இருக்கும் இலங்கையில் பிறந்தவரா?

ஏன் வெளிநாட்டிலிருக்கும் எல்லோரும் காசு அனுப்பிக் கொண்டிருக்கிறார்களா?

Link to comment
Share on other sites

1 minute ago, MEERA said:

குழம்பியது தாங்கள், அதனால் தான் கருத்து திருத்தப்பட்டுள்ளது. அதுவும் நான் மேற்கோள் காட்டிய பிற்பாடு.

குழப்பம் உங்கள் முதல் பதிலிலே தெரிகிறது, கடைசி பதிலில் தெளிவு பிறப்பது தெரிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Jude said:

குழப்பம் உங்கள் முதல் பதிலிலே தெரிகிறது, கடைசி பதிலில் தெளிவு பிறப்பது தெரிகிறது. 

நாய் காலை தூக்குவதற்கு போல, அங்கு நடக்கும் எல்லாவற்றிற்கும் புலம் பெயர் மக்களை குறை கூறுவதை முதலில் நிறுத்துங்கள். ஊகத்தில் ஒருபோதும் எழுதாதீர்கள்.

நாம் எப்போதும் தெளிவுடன், அது எனக்கும் தெரியும்.

இப்படியான சலாப்பல்கள் இனியும் வேண்டாம்

Link to comment
Share on other sites

4 minutes ago, MEERA said:

நாய் காலை தூக்குவதற்கு போல, அங்கு நடக்கும் எல்லாவற்றிற்கும் புலம் பெயர் மக்களை குறை கூறுவதை முதலில் நிறுத்துங்கள். ஊகத்தில் ஒருபோதும் எழுதாதீர்கள்.

எல்லாவற்றுக்கும் ஆதாரங்களை தேடி, புள்ளிவிபரங்களுடன் தான் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால், அதற்கு தேவையான நிதியும் நேரமும் பல்கலைக்கழக ஆய்வாளருக்கும் அரச அதிகாரிகளுக்கும் கிடைக்கிறது - இங்கே கருத்து எழுதும் எங்களுக்கு அல்ல. இந்த கருத்துக்களம் எங்கள் கருத்து பற்றியது. அதில் ஊகங்களும் அடக்கம். பதின்ம வயதினர் வருமானம் இல்லாமல் திருமணம் செய்து அங்கே வாழ்கிறார்கள். நாட்டின் பிரதமர் சொல்கிறார் பில்லியன் கணக்கில் எமது மக்கள் வெளிநாட்டு பணம் அங்கே அனுப்புகிறார்கள் என்று. ஆகவே இந்த பணத்தில் அந்த பதின்ம வயதினர் வாழ்கிறார்கள் என்று ஊகிப்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Jude said:

காகம் கறுப்பு ஆகவே கறுப்பு எல்லாம் காகம் என்பதாக உங்கள் வாதம் உள்ளது,

பதின்ம வயதிற்காரருக்கு பணம் அனுப்புவதற்கும் இணைந்து வாழும் பதின்ம வயதினருக்கு பணம் அனுப்புவதற்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பதின்ம வயதில் இணைந்து வாழ்வதற்கு வருமானம் உள்ள தொழில் ஏதாவது செய்கின்றார்களா அல்லது பெற்றோரில், உறவினர்களில் தங்கியுள்ளார்களா?

சொந்தக் காலில் நிற்கமுடியாமல் இணைந்து வாழ்வது நீண்டநாட்களுக்கு நிலைக்காது. சமூக மாற்றங்களுக்குத் தகுந்தமுறையில் தேவையான தகவல்களை இளையோருக்கு பாடசாலை மட்டத்திலேயே கொடுக்கவேண்டும். பொலிஸ் மூலம் தீர்க்கமுடியாது.

31 minutes ago, Jude said:

வெளிநாட்டு பணத்தில் வாழ்கிறார்கள்.

நானும் இதுபோன்ற ஒரு மனநிலையில்தான் இருந்தேன் சென்றமாதம் ஊருக்கு போகும்வரை....!அங்கு போனபிறகுதான் அங்குள்ள மாற்றங்களை ஓரளவு தெரிந்துகொள்ள முடிந்தது......!

பெரும்பாலும் நடுத்தரவர்கத்தில் பதின்மவயதுப்பிள்ளைகள் சராசரி 30, 000 ரூபாவுக்கு மேல் சம்பாதிக்கிறார்கள். ஒரு பெண்பிள்ளை அல்லது பையன்  பெற்றோர் மூலமாகவோ அன்றி சகோதரங்கள் மூலமாகவோ வங்கிக் கடனில் தான் விரும்பியவாறு இரண்டரை லட்ஷத்துக்கு ஒரு ஸ்கூட்டியோ அல்லது மோட்டார் சைக்கிளோ வாங்கி அதன் கடனை தனது சம்பாத்தியத்தில் கட்டுகிறார்கள்.முன்பு எனக்கு  ஒரு பழைய சைக்கிள் சொந்தமாக வாங்குவதே ஒரு கனவாக இருந்தது. ஆனால் இன்று நான்போன வீடெங்கும் (வீடுகள் சுமாராய்தான் இருக்கு) டூ வீலர்சும் / ஆட்டொவும்  முற்றத்தில் நிக்கிறது. ஆனால் எமது ( என்போன்ற முன்பு புலம் பெயர்ந்தவர்கள்) சகோதர சகோதரிகள் எங்களை இன்றும் அந்நாளைய மயக்கத்திலேயே வைத்திருக்கின்றார்கள். ஆனால் அவர்களின் பிள்ளைகள் வளர்ந்து நன்றாக சம்பாதிக்கிறவர்களாய் இருக்கிறார்கள். வெளியில் இருந்து வரும் பணம் பெரும்பாலும் அவர்களுக்கு ஒரு நன்கொடை மாதிரி. 

--- தெரிந்த ஆட்டொவில் அருகில் உள்ள இடத்துக்கு சென்றால் 200 ரூபாய் எடுக்கிறார்கள். தெரியாத வழியில் போன ஆடிடோவை மறித்து அதே இடத்துக்கு போனால் 150 ரூபாய் எடுக்கிறார்கள்....!

--- வீட்டுக்கு நவீன பாத்ரூம் கட்டுவது , தரைக்கு சலவைக்கல் பொருத்துவது போன்ற செலவினங்களுக்கு ......

--- வீடுகளில் நிகழும் விழாக்கள் போன்ற செலவுகளுக்கு வெளிநாட்டு பணம் அவர்களுக்கு தேவையாய் உள்ளது.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பில்லியன் கணக்கில் பணம் செல்கிறது ஆகவே அங்கு பொருளாதாரத்தில் துன்பப்படும் மக்கள் இல்லை என்றும் கூறலாம் அல்லவா?

Link to comment
Share on other sites

1 minute ago, MEERA said:

பதின்ம வயதிற்காரருக்கு பணம் அனுப்புவதற்கும் இணைந்து வாழும் பதின்ம வயதினருக்கு பணம் அனுப்புவதற்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது.

அப்படியா? குறைந்தது ஐந்து வித்தியாசங்களையாவது சொல்லுங்கள் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Jude said:

அப்படியா? குறைந்தது ஐந்து வித்தியாசங்களையாவது சொல்லுங்கள் பார்க்கலாம்.

உங்கள் அறிவு அவ்வளவே..... நன்றி வணக்கம்.

சுவியர் எழுதியதை ஆயிரம் தடவைகள் வாசியுங்கள் ! 

Link to comment
Share on other sites

3 minutes ago, MEERA said:

பில்லியன் கணக்கில் பணம் செல்கிறது ஆகவே அங்கு பொருளாதாரத்தில் துன்பப்படும் மக்கள் இல்லை என்றும் கூறலாம் அல்லவா?

இது நியாயமான வாதம். இப்படி சொல்வது தவறு தான்.

8 minutes ago, MEERA said:

பதின்ம வயதிற்காரருக்கு பணம் அனுப்புவதற்கும் இணைந்து வாழும் பதின்ம வயதினருக்கு பணம் அனுப்புவதற்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது.

நீங்கள் "நிறைய வித்தியாசம் உள்ளது" என்றீர்கள்.

4 minutes ago, Jude said:

அப்படியா? குறைந்தது ஐந்து வித்தியாசங்களையாவது சொல்லுங்கள் பார்க்கலாம்.

நான் வெறும் ஐந்து கேட்டேன்.

2 minutes ago, MEERA said:

உங்கள் அறிவு அவ்வளவே..... நன்றி வணக்கம்.

உடனேயே என்னுடைய அறிவை மட்டம் தட்டிவிட்டு ஓடப் பர்க்கிறேர்களே? நியாயமா? வெறும் ஐந்து தானே கேட்டேன்? ?

Link to comment
Share on other sites

22 minutes ago, suvy said:

நானும் இதுபோன்ற ஒரு மனநிலையில்தான் இருந்தேன் சென்றமாதம் ஊருக்கு போகும்வரை....!அங்கு போனபிறகுதான் அங்குள்ள மாற்றங்களை ஓரளவு தெரிந்துகொள்ள முடிந்தது......!

பெரும்பாலும் நடுத்தரவர்கத்தில் பதின்மவயதுப்பிள்ளைகள் சராசரி 30, 000 ரூபாவுக்கு மேல் சம்பாதிக்கிறார்கள்.

நானும் ஆண்டுக்கு இருமுறை அண்மையில் போய் வந்து இருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் வருமானம் உள்ளவர்கள் பதின்ம வயதினர் என்று எப்படி தெரியும்? - இருபது வயதுக்கு மேலானவர்கள் இல்லையா?. பதின்ம வயதினர் இந்த அளவுக்கு உழைத்து வாழும் அளவுக்கு வேலை வாய்ப்ப்புகள் அங்கு குறைவு என்றே நினைக்கிறேன்.. கணனித்துறை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வேலை செய்து நன்கு உழைப்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால் பெரும்பாலும் இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

நானும் ஒரு பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களைதான் சொல்கிறேன்.  நான் நின்றது ஒருமாதமளவில்....... பெரும்பாலும் எனது உறவினர்கள் அயலவர்களை வைத்துதான் சொல்கிறேன்.பல்கலைக்கழகங்களில் படிப்பவர்களை நான் சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிடும் துறையினர் சராசரி 40,000 க்கும் மேற்பட்ட வருமானம் உடையவர்கள்.... ! எனது வளவை துப்பரவாக்க இருவரை ஒரு நாளுக்கு மட்டும் பிடித்தேன்.(வேலைக்கு ஆட்கள் கிடைப்பது சிரமம்). அவர்களுக்கு தேனீர் சாப்பாட்டுடன் 3000 ரூபா. அதில் ஒருவர் இளையவர்......!

Link to comment
Share on other sites

32 minutes ago, suvy said:

(வேலைக்கு ஆட்கள் கிடைப்பது சிரமம்). அவர்களுக்கு தேனீர் சாப்பாட்டுடன் 3000 ரூபா. அதில் ஒருவர் இளையவர்......!

சுவி அவர்களே! சிறுவர்களை அதிலும் தமிழ் சிறுவர்களைக் கொல்வது சிறீலங்காவில் குற்றமில்லை. ஆனால் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் உங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் கவனம்..!! ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Paanch said:

சுவி அவர்களே! சிறுவர்களை அதிலும் தமிழ் சிறுவர்களைக் கொல்வது சிறீலங்காவில் குற்றமில்லை. ஆனால் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் உங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் கவனம்..!! ?

இளையவர் என்றால் முப்பது வயதுடையவராகவும் இருக்கலாம்.... மற்றவருக்கு நாப்பத்தைந்து வயது.....ஸ்....சப்பா.....!  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் கட்டி இனமாவது பெருகட்டும் அவளை கைவிடாமல் இருந்தால் சரி குழந்தைகளையும் சேர்த்து :unsure:

1 hour ago, suvy said:

.பல்கலைக்கழகங்களில் படிப்பவர்களை நான் சொல்லவில்லை. ...!

 இவர்கள் ஏதாவது அரச தொழில் அல்லது வெளிநாட்டை நோக்கியே காத்துக்கொண்டிருக்கிறார்கள் அண்மையில் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம் பண்ணிய பட்டதாரிகளை சொல்லலாம் வட கிழக்கில் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Radhika-Coomaraswamy_Mark-Garten_490628.jpg

ராதிகா குமாரசாமி... எங்கே...? இங்கை...  ஓடி வாங்கோ அக்கா.   
நீங்கள், நேசித்த, யாழ்ப்பாணத்தில்  என்ன நடக்குது என்று, பார்க்க  மாட்டீர்களா?  

புலிகள் காலத்தில்,  சிறுவர் போராளிகளுக்காக.....
உங்கள், சிவப்பு சொண்டை வைத்து... எத்தனை தரம்....  
ஐ.நா. சபையில்,   குய்யோ... குய்யோ.. என்று  கத்திநீர்கள்...
ஒரு நேர்மையான, சமூக  ஆர்வலம் கொண்ட பெண், நீங்கள் என்றால்... இப்போ  உங்கள் குரலை காட்டவும்..  ?

Link to comment
Share on other sites

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

கல்யாணம் கட்டி இனமாவது பெருகட்டும் அவளை கைவிடாமல் இருந்தால் சரி குழந்தைகளையும் சேர்த்து :unsure:

1. அவனை அவள் கைவிடலாமா? அது பற்றி    நீங்கள் எழுதவில்லையெ?
2. வாழ்க்கை செலவுக்கு வழி இல்லாமல் அவர்கள் திருடரானால், தற்கொலை செய்தால், முசுலிம் ஆனால், ஆமிக்கு வேலை செய்தால் சம்மதமா?
3. பதின்ம வயதில் செய்யாமல் இரெண்டு வருடம் தள்ளி திருமணம் செய்தால் இனம் பெருகாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

Radhika-Coomaraswamy_Mark-Garten_490628.jpg

ராதிகா குமாரசாமி... எங்கே...? இங்கை...  ஓடி வாங்கோ அக்கா.   
நீங்கள், நேசித்த, யாழ்ப்பாணத்தில்  என்ன நடக்குது என்று, பார்க்க  மாட்டீர்களா?  

புலிகள் காலத்தில்,  சிறுவர் போராளிகளுக்காக.....
உங்கள், சிவப்பு சொண்டை வைத்து... எத்தனை தரம்....  
ஐ.நா. சபையில்,   குய்யோ... குய்யோ.. என்று  கத்திநீர்கள்...
ஒரு நேர்மையான, சமூக  ஆர்வலம் கொண்ட பெண், நீங்கள் என்றால்... இப்போ  உங்கள் குரலை காட்டவும்..  ?

இதுக்கும் கள்ளுக்கடை பெயின்ட் ஆரோ பூசி விட்டு இருக்கிறாங்கள்  அதுசரி இளவயது திருமணம் பற்றி பொலிஸ் க்கு ஏன் கவலை முதலில் வால்வெட்டுகுழுவை அடக்கிற வேலையை பார்க்கட்டும் அதன்பின் இளவயது பற்றி யோசிக்கலாம் .

உண்மையில இளவயது திருமணம் மூலம் இனம் பெருகக்கூடாது எனும் கெட்ட எண்ணமே போலிசுக்கு .புலம்பெயர்வில்  இங்குதான் இரண்டாவது பிள்ளைக்கு பிறகு பத்து டாக்குத்தர் மார் ஒன்றாய் சேர்ந்து வெருட்டுவினம் நீங்கள் நெருங்கிய உறவில் கல்யாணம் மூன்றாவது கஷ்ட்டம் என்று இனி நிப்பாட்டுங்கோ என்று .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.