Jump to content

மணல் கடத்தல்காரர்களால் ஆபத்தை எதிர்கொள்ளும் எழுதுமட்டுவாழ்

Recommended Posts

image_54181f8023.jpg

மணல் கடத்திச் செல்கின்ற டிப்பர் வாகனங்கள் எழுதுமட்டுவாழ் கிராமத்தின் உள்வீதிகளில் செல்வதால் தாம் ஆபத்தை எதிர்கொள்வதாக கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

கிராம அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் எழுதுமட்டுவாழ் பொது நோக்கு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றபோதே மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

ஏ9 பிரதான வீதியின் எழுதுமட்டுவாழ் சந்தியில் கடத்தல்களை தடுக்க பொலிஸ் காவலரண் ஒன்றை அமைத்துள்ளனர். இதனால் அனுமதியின்றி மணல் கடத்தி வருகின்ற டிப்பர் வாகனங்கள் கிராமத்தின் உள்வீதிகளூடாக வேகமாக செல்கின்றனர். இதன்காரணமாக கால்நடைகள் வாகனங்களில் மோதி இறப்பதோடு மக்களும் நடமாட அச்சப்படுகின்றனர். இது தொடர்பாக டிப்பர் சாரதிகளிடம் கேட்க முற்படுகின்றபோது அச்சுறுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அண்மையில் கூட மணல் கடத்தி வந்த டிப்பர் வாகனம் மின்சாரத் தூண்கள் மீது மோதியதில் 6 மின்கம்பங்கள் முறிந்து வீழ்ந்ததாகவும் குறிப்பிட்டனர். மணல் கடத்தல் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கினால் தமக்கு ஏதாவது அச்சுறுத்தல் நிகழலாம் எனவும் பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயத்தை கேட்டறிந்த வட மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன், உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் ஊடாக பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மணல்-கடத்தல்காரர்களால்-ஆபத்தை-எதிர்கொள்ளும்-எழுதுமட்டுவாழ்/71-222769

Link to comment
Share on other sites

எழுதுமட்டுவாழ் கிராமத்திலுள்ள பிள்ளைகள் 'அ' எழுதிப்படிக்க அவர்கள் மணலைக் கடத்தியிருப்பார்களோ...?? ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு  தட்டி கேட்டால் ரிப்பர் லொறி ஏற்றி கொலையே செய்து விடுவினம்.. எல்லா ஊர்களிலும் இவையள் அட்டகாசம் தாங்க முடியவில்லை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் ஆணிகட்டைகளை வீடுகள் குறைவான இடங்களில் போட்டு விட்டால் காணும் நாலு வாகன டையர் வெடிக்க ஒழுங்குக்கு வருவினம் போலிஸ் கையூட்டு வாங்குவதால் இதைதவிர வேறு வழி இல்லை .

Link to comment
Share on other sites

4 hours ago, பெருமாள் said:

பேசாமல் ஆணிகட்டைகளை வீடுகள் குறைவான இடங்களில் போட்டு விட்டால் காணும் நாலு வாகன டையர் வெடிக்க ஒழுங்குக்கு வருவினம் போலிஸ் கையூட்டு வாங்குவதால் இதைதவிர வேறு வழி இல்லை .

எங்கள் ஊரில் வேற்று ஆட்கள் மணல் ஏற்றமுடியாது எங்கள் ஊரவரே திரண்டு தடுத்து விடுவார்கள் .. எங்கள் ஊரவர் கூட பெமிற் இல்லாமல் மண் ஏற்றும் போது போலிஸ் பிடித்து உழவுஇயந்திரத்தை பறிமுதல் செய்துவிடுவார்கள். 50,000நீதிமன்றில் கட்டி தான் மீட்க முடியும். எல்லா இடமும் கையூட்டு கொடுப்பது நடைபெறவில்லை.அதற்காக கையூட்டு பெறவில்லை சரியாக இயங்குகிறார்கள் என சொல்லவில்லை..எல்லா இடத்திலும் கையூட்டு கொடுத்து அலுவல் பார்ப்பது முடியாத காரியம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, அபராஜிதன் said:

நீங்கள் அங்குள்ள போலிஸ் நல்லவங்கள் என்று சொல்ல வருகிறீர்களா கெட்டவர்கள் என்று சொல்கிறீர்களா ?

போலிஸ் போலிஸ் வேலையை பார்த்து இருந்தால் இந்த செய்தி வந்திருக்காது  என்பது என்னுடைய அபிப்பிராயம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/30/2018 at 1:43 PM, Paanch said:

எழுதுமட்டுவாழ் கிராமத்திலுள்ள பிள்ளைகள் 'அ' எழுதிப்படிக்க அவர்கள் மணலைக் கடத்தியிருப்பார்களோ...?? ?

எழுதுமட்டும் வாழ் என்பது மருவி எழுதுமட்டுவாழ் வந்தது என எமது முன்னோர்கள் கூறுவார்கள்.
நாகர்கோவில் மண் கடத்தலுக்கு நல்ல பாதை எழுதுமட்டுவாழ் தான். ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.